காதலில் கரைந்திட வா - 41

Chittijayaram

Well-Known Member
#21
Barbie yosikardum correct Dan, aarav ku ellam puriyudu erundalum Barbie kuri vechitamga adu Dan careful ah parthukuran, aarav super pa, semaya plan panran, jail la ye mudichitan, Anna nayum mativittan super aarav, next epi la Barbie family enter avamgala man, nice epi mam, happy reading wait for next update thanks.
 

Saroja

Well-Known Member
#23
ஆரவ் சரியான கிரிமினல் அழகா திட்டம் போட்டு காய் நகர்த்துகிறான்
 
#28
ஆரவ் வார்த்தைகளில் ஆடிப்போய் இருந்த பார்பிக்கு அவன் தன்னை தூக்கியது பெரிய பெட்டில் கிடத்தியது எதுவுமே நினைவில் பதியவில்லை. அவனோ சிறிதும் சலனமின்றி அவள் இடையை இறுக்கி அணைத்தபடி படுத்து மீண்டும் உறங்கிப்போக, அடிக்கடி அவளின் மெல்லிய விசும்பல் சத்தம் மட்டும் அந்த அறையில் ஒலித்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறை அவள் சத்தம் வரும்போதும், ஆரவ் மெதுவாக அவள் தோள்களை தட்டி கொடுத்து தலைகோதி உறங்க செய்தானே தவிர தப்பி தவறி கூட ஒரு வார்த்தை பேசவில்லை. அவளுக்கும் அவன் குரலை கேட்க துளியும் விருப்பமில்லை.

காலை ஏழு மணிக்கு ஆரவ் கண் விழித்ததும் அழுதழுது வீங்கிப்போய் இருந்த அவள் கண்களை முத்தமிட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளை கை வளைவில் இருந்து மெதுவாக இறக்கி வைத்து விட்டு எழுந்தான். காலைக்கடன்களை முடித்து வந்தவனுக்கு காபி, பிரட் டோஸ்ட் அனைத்தும் அறைக்கே வந்து சேர்ந்திருந்தது. தனக்கு ஒரு கப் காபியை எடுத்துக்கொண்டு, அவற்றை ரோலிங் டீ டேபிளில் வைத்து பார்பியின் பக்கம் வைத்துவிட்டு, பெட்டை சுற்றி நடந்து கொண்டே அவளை பார்த்தபடி பருகினான். அவன் அவளின் தலைப்பக்கமாய் வந்ததும் அவளிடம் அசைவு தெரிந்தது. விளையாட்டாய் அவள் தன் அறையில் முதன் முதலில் செய்ய போவதை வேடிக்கை பார்க்க, கட்டிலின் உதவியால் குனிந்து ஒளிந்து கொண்டான்.

'தல வலி பின்னுது, அம்மா... இது என்ன இடம்?' பார்வை நன்கு தெளிந்ததும் நடந்ததெல்லாம் நினைவு வர மீண்டும் விசும்பலோடு அவனை தேடி பார்வையை சுழற்றினாள். அறைக்குள் அவனில்லை என்றதும் அழுகையை கட்டுப்பாடின்றி விடுவிக்க பின்னாலிருந்த ஆரவ் இதயத்தில் ஊசி குத்தும் உணர்வு தோன்றி மறைந்தது. எவ்வளவு சமாதானம் செய்தாலும் ஏற்க மாட்டேன் என்பவளை என்ன செய்வதென புரியாமல் குழம்பித்தான் போனான்.

பார்பிக்கு நேரம் ஆக ஆக மனதின் குமுறல்களால் அழுகை கூடியதே தவிர குறையவில்லை, 'உனக்கு கொஞ்சம் கூட தோணவே இல்லைல ஆரவ், நீ செஞ்சது தப்புன்னு. அதைவிட மோசம், அதுக்கு பிறகும் எதுவும் பண்ணாத மாதிரி என்கூட சகஜமா பேசி பழகி இருக்கியேடா. இது வெளியில தெரிஞ்சா என்ன ஆகும்? இவ்வளவு நடந்திருக்கு உனக்கு எதுவும் தெரியலயான்னு கேக்குறவங்ககிட்ட, நான் நடந்த உண்மைய சொன்னா யாராவது என்னை நம்புவாங்களா? பிரியங்கா மாதிரி ஆளுங்க என்னத்தான தப்பா நினைப்பாங்க? இப்பவும் என்னை போக விடமாட்டேன்னு இப்டி உயிர வாங்குறியேடா... கல்யாணம் பண்ணாம ஒரு பெரிய செலபிரிட்டியோட எத்தன நாள் வெளி உலகத்துக்கு தெரியாம என்னால ஒளிஞ்சு வாழ முடியும். ஒருவேள ஏதாவது ஒரு சந்தர்பத்துல என் முகம் வெளி உலகத்துக்கு தெரிஞ்சா, என்னை தெரிஞ்சவங்க எல்லாருக்கும் நான் இவன் கூட இருக்குறது தெரிஞ்சிடுமே... அதுக்கு பிறகு என் குடும்பத்து ஆளுங்களோட நிலமை என்ன ஆகும்? போறவங்க வர்றவங்க எல்லாம் நான் ஏன் கல்யாணம் பண்ணாம இவன் கூட இருக்குறேன்னு கேள்வி கேட்டா என் தாத்தாவோட நிலமை.... ஐயோ... என்னால அவங்க ஏன் இந்த அசிங்கத்த எல்லாம் அனுபவிக்கனும்? இதுக்கெல்லாம் காரணம் நான்தான், அதுனால தண்டனையும் எனக்கு கிடைக்கிறதுதான் சரி. நான் உயிரோட இருக்குற வரைக்கும் என்னால எல்லாருக்கும் கஷ்டம் இருந்துகிட்டே இருக்கும்...' என நினைத்தவள் தன் அருகில் இருந்த டீ ட்ரேயில் பிரட் டோஸ்ட்டும், அதனுடன் கத்தியும் இருப்பதை கண்டாள். கத்தியில் குத்தி கொள்ள கூர் முனை இல்லாவிட்டாலும் நறுக்கும் பாகம் கையை கிழிக்குமளவு நன்றாகவே இருந்தது. அழுது கொண்டே இடது கையில் நரம்புகளுக்கு நேராக வைத்து அழுத்தி பார்த்தவள், அழுத்தம் கொடுத்து கிழிக்க முயலும் நொடியில் பின்னாலிருந்த ஆரவ் பாய்ந்து வந்து கத்தியை லாவகமாக பிடுங்கி தூரமாக வீசி எறிந்தான். அவனை அங்கு எதிர்பாராததால் அவளும் சற்றே தடுமாறிவிட கையில் எந்த காயமும் ஏற்படவில்லை.

ஆரவ் அவள் முன்னால் வந்து கோபமாய், "என்ன பண்ண பாத்த பார்பி?இதுக்காகவா நான் என் தலைமேல அத்தன கஷ்டத்தையும் தூக்கி வச்சிருக்கேன்..." என சீறினான்.

"ஆரவ் என்னோட குடும்பத்துக்கு நான் தப்பான பொண்ணுனு தெரியிறத விட செத்துட்டேன் தெரியிறது பெட்டர். இப்ப வேணும்னா நீ காப்பாத்தி இருக்கலாம், ஆனா எப்பவும் நீ என் பக்கத்துலயே நின்னு காப்பாத்திட்டு இருக்க முடியாது, சாகுறதுக்கு நிறைய வழி இருக்குது ஆரவ்."

"அடிச்சிடுவேன் பார்பி, முதல்ல பிரச்சனை வந்தா பயந்து ஒளியாம அத எதிர்த்து நின்னு பேஸ் பண்ண கத்துக்கோ. அதுக்கப்புறம் சந்தோஷமான வாழ்க்கை தானா உருவாகும்."

மனதோடு சேர்த்து அவள் தன் கண்களையும் காதுகளையும் மூடி கொள்ள அவன் பேசியதெல்லாம் விழலுக்கிளைத்த நீர்தான். பார்பி விடாமல் அழுது கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன், "அழுறதால எதுவும் மாறாது பார்பி, நீ உன் குடும்பத்த காப்பாத்தனும்னு நினைச்சா ஒழுங்கா நான் சொல்றத கேளு. ஒருவேள நீ செத்துட்டா உன் குடும்பத்தில இருக்குற ஒருத்தரையும் நான் சும்மா விடமாட்டேன்."

கோபமாய், "ஆரவ்....."

"நான் இதுவரைக்கும் உனக்காக செலவு செஞ்ச பணத்த எல்லாம் அவங்க கிட்ட கேட்டு கேஸ் போடுவேன்."

அதிர்ச்சியாய், "ஆரவ்...."

"நிச்சயமா அவங்களால திருப்பி குடுக்க முடியாதுனு எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும். மொத்தமா அத்தன பேரையும் தூக்கிட்டு வந்து இதே வீட்ல வேலைக்காரங்களா ஆக்கிடுவேன்."

உதட்டசைவை தவிர அவளிடமிருந்து வார்த்தை வரவில்லை..

"உனக்கு பிறகு உன் குடும்பத்துல இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்கள்ல, அதிலயும் அந்த சின்ன பொண்ணுக்கு பதினாறு வயசுதான் ஆகுதுல்ல...." எனும்முன்,

அவன் சட்டையை கொத்தாக பிடித்து, "பொறுக்கி ராஸ்கல்... என்ன வார்த்தை சொல்லிட்டடா?... அவ என்னோட தங்கச்சி மட்டும் இல்ல, பொறந்ததுல இருந்து நான் என் கையால தூக்கி வளர்த்த என் குழந்தைடா... அவளப்போய்..... நீ.... " அவள் கதறல் சில நிமிடங்கள் அறை முழுதும் விடாமல் எதிரொலித்தது. அழுகை மட்டுபட்டதும் ஆரவ் வாஞ்சையாய் தலை தடவி, "தீயின்னு சொன்னா அது சுட்ராது, அது மாதிரிதான் நான் சொன்னதும். பட் நீ நான் சொல்றத கேக்குறதா இருந்தா, நான் அவங்க யாரையும் எந்த டிஸ்டர்பும் பண்ண மாட்டேன்."

முழுதாய் உடைந்து போயிருந்தவள் குரலே குழறி, "கேக்குறேன், நீ என்ன சொன்னாலும் கேக்குறேன், ஆனா கல்யாணம் மட்டும் வேண்டாம்டா ப்ளீஸ். உன்ன கெஞ்சி கேக்குறேன் என்ன விட்ரு ஆரவ்..."
Interesting
 

Latest profile posts

hi hi hi friends.... vanthuten... koottukkul oru pattampoochchi-18 update potuten dears...

dear friends....
cordially solicit your gracious presence on this beatuiful occassion.....

regards,
susi weds -----

padichutu sollunga friends...
hi friends "UUK" and "KD" link wrk aaguthu padichuttu cmnts sollunga
கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே

ஏ விடிய சொல்லி கூவுன்னு
சேவல் குழம்பில கொதிக்கிறதே

என் மாமா என் மாமா
என் மூச்சாலே முட்டித்தள்ளாதே

நுனி நாக்கால பொட்டு வச்சா தட்டி தள்ளாதே

என் மாமா காதோரம் மூச்சுப்பாட

சூடேறும் கம்மாக்கெடை
சம்வ்ரிதா அடுத்த அப்டேட் போட்டாச்சு பிரின்ட்ஸ்.
hi friends ,,,,some pblm in this site so new link tmw sure ah tharen ok sis and soory friends ok "UUK"11 and "KD" 2ND ud kandipaa tmw thare frinds ok

Sponsored

Recent Updates