காதலில் உள்ளங்கள் கரைந்ததே - 10

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Hai friends i come with the next update and thank you for your comments last update also read this update tell your wonderful comments and mistakes i am eagerly waiting for your comments and enjoy to read....................

உள்ளம் – 10

வர்ஷா என்னுடைய விருப்பமுடன் இந்த திருமணம் நடந்தது கூற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அவள் சொல்வதை கேட்டு என்ன ரவி நீயே இப்படி பிள்ளைகளின் விருப்பத்தை கேட்காமல் முடிவு செய்யலாமா நமது தொழில் வட்டாரத்தில் உனக்கு எவ்வளவு பெரிய பேர் இருக்கு அதை நீயே உன்னுடைய செயலால் கெடுத்து கொள்ளாதே பிள்ளைகளின் சந்தோசம் தானே முக்கியம் அதை விட்டு நீயாக ஒரு முடிவெடுத்து அவர்களிடம் திணித்தால் இப்படிதான் நடக்கும் என்க

ரவியின் வக்கீல் மற்றும் நண்பருமான சுரேன் ரவியின் அருகில் சென்று ரவி முதலில் இவர்களை வீட்டிற்கு அழைத்து செல் மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம். இல்லை என்றால் தேவையில்லாத பிரச்சனை மட்டுமே உருவாகும் குடும்ப விசியம் வெளியில் தெரிவது நல்லது இல்லை எது செய்வது என்றாலும் வீட்டில் பேசி முடிவு செய்யலாம் என்றிட

சுரேன் சொல்வது ரவிக்கும் சரியானதாக பட அவர் லக்ஷ்மியிடம் அவர்களை முதலில் வீட்டிற்கு கிளம்ப சொல் மற்றதை அங்கு பேசிக்கொள்ளலாம் என்றார் அதை கேட்டு பாட்டி, சுமலா இருவரும் ரவி அண்ணா என்க இருவரிடமும் பார்வையை செலுத்தி ஒன்றும் பேச வேண்டாம் தலை அசைக்க தங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் அந்த கடுப்புடனே அவர்களுடன் செல்ல தயாராகினர்,

இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த அம்மு, அச்சு இருவரும் அமைதியாக சென்று காரில் அமர அபைக்கு இவர்கள் அமைதி இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறார் என்ற பயத்தை தர வர்ஷாகோ நடந்ததை அவள் கண்களாலே நம்பமுடியாமல் அடிகடி அர்ஜுனின் புறம் பார்வையை செலுத்தினால் இப்பொழுது வரை அவளால் இங்கு நடந்ததை நிஜம் என நம்புவதற்கு முடியவில்லை எந்த காதல் இனி தன் வாழ்வில் கிடையாது என்று நினைத்தாலோ அது இப்போது கைசேர்ந்தது அவளின் மகிழ்ச்சியை வானளவு உயர்த்தியது ஆனால் அவளுக்கு தோன்றவில்லை எப்படி அர்ஜுன் இங்கு வந்தான் எதனால் தன்னுடைய கழுத்தில் தாலியை கட்டினான். ஒரு வேலை மகிழ்ச்சியின் உச்சத்தில் அவள் இருந்ததால் இதை பற்றி அவள் யோசிக்க வில்லையோ எண்ணமோ

யாதவிற்கு வர்ஷா சொல் கேட்டு அதிர்ச்சியே பின் அவனின் மூலை வேகமாக செயல்பட ஒருவேளை வர்ஷா காதலிப்பதாக சொன்னது இவரா இருக்குமோ என்ற சந்தேகத்துடன் அவர்களை நோக்க வர்ஷாவின் முகத்தில் இருந்த சந்தோசம் பொலிவு அதனை உறுதி செய்தது ஆனால் அவனின் மனதில் என்னுமொரு கேள்வியும் எழுந்தது வர்ஷா சொல்வது படி பார்த்தல் இவர்க்கு வர்சாவை யார் என்றே தெரியாது பிறகு எப்படி இவர் இங்கு வந்தார் எதற்காக வர்ஷாவின் கழுத்தில் தாலி கட்டினார் தோன்ற அதற்குள் அனைவரும் கிளம்ப அவனும் அவர்களுடன் சென்றான்

மணமக்கள் இருவரும் ஒரு காரிலும் மற்றவர்கள் பின் இரு கார்களிலும் ஏற மணமக்களின் காரை யாதவ் ஓட்ட யாதவ் காரினுள் ஏறினான் கார் புறப்படவும் அபை தன் பார்வையை அம்மு மீது செலுத்தினான் அவன் பார்ப்பதை உணர்ந்த அம்மு என்ன என்பதை புருவம் உயர்த்த அதன் அழகில் அபையின் கண்கள் அவளை விட்டு திருப்ப முடியவில்லை அம்மு அவன் முன் சொடக்கிட தெளிந்தவன் தனது பார்வையை திருப்பிகொண்டான்.

அபையின் மனதில் முதன் முதலில் தந்து செய்கையின் முலம் கால் பதித்தாள். அபையின் மனதோ ஏன்டா அவளே மிரட்டி திட்டம் திட்டி உன்னை தாலி கட்ட வைத்திருக்கிறாள் அதோடு என்னும் என்ன செய்ய கத்திருக்கால் என்றே தெரியவில்லை இந்த நிலைமையில் நீ அவளை சைட் அடிக்கிறாயா இதை மட்டும் அவள் உணர்ந்தால் உனக்கு ஆபத்து என எச்சரித்தது

மண்டபத்தில் புறப்பட்டதிலிருந்து காரில் அமைதியே நீடிக்க அம்மு மட்டும் அர்ஜுனை முறைத்து கொண்டே வந்தாள் அதை அபையும்,யாதவும் நன்கு உணர்ந்தனர்

காரினுள் அமைதியை பொருட்படுத்தாது இன்னும் வீடு சேர ஒருமணி நேரம் ஆகும் என்பதால் பாடலை ஒழிக்க விட்டான் யாதவ் ஏற்கனவே அம்முவின் முறைப்பினால் படபடப்புடன் இருந்த அர்ஜுன் யாதவ் பாட்டை ஒலிக்க விட கோவம் கொண்டவன் அந்த கொபத்தினுடனே இப்ப பாட்டை நிறுத்த போறியா இல்லை நான் அதை உடைக்கவா காத்த இவனின் வார்த்தைகளில் தெறித்த கோவத்தில் யாதவ் பாடலை நிறுத்தினான் என்றால் வர்ஷாவிற்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது அவளின் நடுக்கத்தை கண்ட அர்ஜுனின் கோவம் அதிகரிக்க

வர்சாவை நோக்கி நான் ஒன்றும் உன்னை கடித்து தின்றுவிட மாட்டேன் அதற்க்கு இப்பொழுது நடுங்குகிறாய் அதே கோவத்தோடு கத்த வர்சாவிர்க்கு அழுகை வந்துவிட்டது அவள் அழ இன்னும் கொவம்கொண்டன் அர்ஜுன் அடுத்து அவன் வாய்திறக்க என்ன அம்மு அவனை பார்த்த பார்வையில் அமைதி கொண்டான் அதோடு அம்முவை கெஞ்சும் பார்வையும் பார்த்து வைக்க

அர்ஜுனின் பார்வையில் இருந்த கெஞ்சல் அவன் தனக்காகவே வர்ஷாவின் கழுத்தில் தாலியை கட்டினான் என்ற உண்மை அவனின் அன்பில் அவனுடைய செயலால் மட்டுப்பட்டது இருந்தும் தனக்காக அவன் தன்னுடைய வாழ்க்கையை கேள்விகுரியக்கியது அம்முவிற்கு பிடிக்கவில்லை

அர்ஜுனும் பொறுத்து பொறுத்து பார்த்தான் அம்மு பேசுவாள் என ஆனால் அவள் பேசாதது அவனுக்கு ஒருமாதிரி கவலையை கொடுக்க அவனே அம்முவிடம் பேசலானான்

அபை,யாதவ்,வர்ஷா மூவருக்கும் தான் அம்முவுடன் பேசுவது புரியகூடாது என்று ஹிந்தியில் பேச தொடங்கினான்

அர்ஜுன் “அம்மு இப்ப எதுக்கு என் மேல் கோவமாக இருக்கிறாய்”

அம்மு “நீ செய்ததற்கு கொவபடாமல் என்ன செய்ய சொல்கிறாய் எதற்கு அச்சு இப்படி செய்தாய் அத்தைக்கு உன்னுடைய திருமணத்தை பற்றி கனவு இருக்கும் தானே அதை நீ கெடுத்து விட்டாயே”

அர்ஜுன் “அம்மாவின் கனவு பற்றி கவலை கொள்கிறாயா இல்லை என்னுடைய வாழ்க்கையை பற்றி எண்ணுகிறாயா அப்படி நீ அம்மாவின் கனவை பற்றி கவலை கொள்கிறாய் என்றால் நானும் உன்னிடம் ஒன்றை கேட்கிறேன் அம்மாவிற்கு என்னை விட நீயே செல்ல மகள் அவர்களுக்கு உன்னுடைய திருமணத்தை பற்றியும் கனவு இருக்கும் தானே”

அர்ஜுன் அவனுக்காகவே அம்மு கவலை கொள்கிறாள் என்பதை அறிந்து கொண்டான் எனவே அம்முவை சமாளிக்கும் விதமாக அவ்வாறு கூறினான்

அம்முவிற்கு தன்னுடைய எண்ணத்தை அவன் உணர்ந்து கொண்டான் என்பதை உணர்ந்தாள் அதனால் அவளும் நேரடியாக அவனிடம் “உன்னுடைய வாழ்க்கையை நீயே இப்படி மற்றிவிட்டாயே ஏன் அர்ஜுன் எனக்காக தானே” அதை அவள் சொல்லி முடிக்கவும் அவளின் கண்களின் ஓரம் கண்ணிர்த்துளிகள் மின்னியது

அர்ஜுனிற்கு அம்முவின் கண்ணீர் கவலையை கொடுத்தது அம்மு எதற்கும் அழுத்து கிடையாது அவள் முதன் மதலில் அழுதது நந்தினியின் மரணத்தின் போதே எந்த பிரச்சனை என்றாலும் கலங்காமல் அதை தீர்க்கமுடன் எதிர்கொண்டு பிரச்சனையே ஒன்றுமில்லாமல் செய்து விடுவாள் தற்போது அவளின் கண்ணீர் அர்ஜுனின் மேல் அவள் வைத்துள்ள பாசத்தை உணர்த்த அதை உணர்ந்து கொண்ட அர்ஜுனின் கண்களும் கலங்கியது

தன்னை சரிபடுத்தி கொண்ட அர்ஜுன் “அம்மு என்னை பாருமா நீ மட்டும் அங்கே எப்படி தனியாக செல்வாய் அவர்களுடன் உன்னை விட்டு விட்டு நான் என்ன செய்ய ஒவ்வொரு நிமிடமும் அத்தைக்கு நடந்தது போல் உனக்கும் நடந்துவிட்டால் என்ன செய்வது கவலையுடனே இருக்க வேண்டும் இப்பொழுது அந்த வீட்டில் என்ன நடந்தாலும் நானும் உனக்கு துணை நிற்பேன்

அத்தை எனக்கும் அம்மாவிற்கும் வாழ்க்கை கொடுத்தவர்கள் அவர்களை துன்ப படுத்த ஒருத்தரையும் நான் சும்மா விடமாட்டேன்”

எனகாக என்னுடைய வாழ்க்கைகாக இவ்வளவு கலக்கம் கொள்கிறாயே நானும் உன்னுடைய வாழ்க்கையை பற்றி கவலை கொள்வேன் என உனக்கு தோன்றவில்லையா

அர்ஜுன் சொல்வத்தை கேட்ட அம்முவிற்கு அவன் தன் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து பெருமிதமிமும் ஆனத்த கண்ணீருமே வந்தது அதோடு அவள் அர்ஜுனின் தோல் சாய்ந்து கொண்டாள் அர்ஜுனும் அவளை சமாதனம் செய்த்த படியே வந்தான்

இவர்களின் உரையாடல் காரில் இருந்தவர்களுக்கு புரியவில்லை என்றாலும் அவர்களின் கண்ணீர் இருவரின் பாச பிணைப்பை சொன்னது

அபைக்கு தன்னிடம் போனில் அவ்வளவு கம்பீரமாகவும், தெளிவாகவும் பேசிய பெண்தான இது என்றே தோன்றியது

மணமக்கள் வருவற்கு முன்பாகவே வீட்டை அடைந்தனர் ரவியின் குடும்பத்தினர் ரவி “சுமலாவிடம் உன்னுடைய மனதில் கோவம் இருந்தும் சரி அதை ஒதுக்கி தள்ளிவிட்டு உன்னுடைய மகனிற்கும், மருமகளிர்க்கும் நீதான் ஆர்த்தி எடுத்து உள்ளே அழைக்க வேண்டும் என்றிட சுமலாவால் அண்ணனின் பேச்சை மீற முடியாமல் சரி என்றாள்”

அதே போல் லக்ஷ்மியிடம் ரவி நீதான் நமது பெண்ணையும்,அவளின் கணவனையும் ஆர்த்தி எடுத்து வீட்டினுள்ளே அழைக்க வேண்டும் என்றிட லக்ஷ்மியும் சரி என தையசைத்தாள்

மணமக்களின் கார் ரவியின் வீட்டை அடைய அனைவரும் காரிலிருந்து இறங்கினார். இறங்கினவர்களை அங்கேயே நிற்க சொன்ன தேவி உள்ளே நோக்கி குரல் கொடுக்க சுமலா மற்றும் லக்ஷ்மி கைகளில் ஆரத்தி தட்டுகளுடன் வர அதை கண்ட அம்முவிற்கு கோவம் கட்டுகடங்காமல் வந்தது தனது அம்மாவின் வாழ்க்கையை கெடுத்தவர்கள் கைகளால் ஆரத்தி எடுத்து தன் வாழ்கையை தொடங்குவதா எண்ணம் தொன்றியது அர்ஜுனுக்கும் தனது அத்தையின் வாழ்க்கையை பங்கு போட்ட இவர்களின் கைகளில் ஆர்த்தி இட்டு கொள்வதா என்றிருக்க சுமலாவும்,லக்ஷ்மியும் ஆரத்தியுடன் இவர்களை நெருங்கி ஆர்த்தி சுற்ற தொடங்க அம்முவின் கோவம் எல்லை கடந்து அந்த ஆரத்தி தட்டை தட்டிவிட்டாள் அதிலிருந்த ஆர்த்தி தெறித்து கிழே கொட்டியது

அந்த ஆர்த்தியின் மீது கால் வைத்து உள்ளே நுழைந்தாள் அவள் ஆர்த்தியை தட்டிவிட்டதும் அபை ஒருநொடி அதிர்ந்தாலும் அதன் பின் இதை நான் எதிர்பாத்திருக்க வேண்டும் என தன்னை தானே சமன் செய்து கொண்டான் பின் அவள் வீட்டினுள் செல்வது தெரிய தவிப்புடன் அவளை நோக்க அவளோ அவளே அறியாமல் வலது கால் எடுத்து வைத்து உள்ளே சென்றாள்

அதை பார்த்த அபையின் மனம் இதுவரை இருந்த தவிப்பு மாரி அமைதி கொண்டது. அம்மு ஆர்த்தி தட்டை தட்டிவிட்டு செல்ல அர்ஜுனும் அங்கே நிற்கிறது அம்முவின் பின்னே அந்த வீட்டினுள் நுழைந்தான்

நுழைந்தவன் கண்களில் அங்கே போட பட்டிருந்த சோபாவில் கொவமுடன் அமர்ந்திருந்த அம்மு தெரிய அவளிடம் சென்று அவளின் கைகளை பிடித்து அமைதி காக்குமாறு கூறினான்

அம்மு தட்டை தட்டிவிட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தாலும் அம்முவும்,அச்சுவும் உள்ளே சென்றதும் அவர்களின் பின்னே வந்தனர் அனைவரும்

சுமலா கோவத்துடன் ஏய் என்ன திமிரா போன போகுது என்று ஆர்த்தி எடுத்தால் அதை தட்டி விடுகிறாய். அண்ணா நான் இதற்கு தான் முன்பே நான் செய்ய மாட்டேன் என கூறினேன் நீங்கள் உன்னுடைய மருமகளுக்கு நீயே செய்ய வேண்டும் என்றீர்கள் இப்பொழுது என்ன நடந்தது என்று பார்த்திர்கள் தானே

இவர்கள் பேச்சை எதையும் காதில் வாங்காமல் அம்மு அர்ஜுனிடம் பேக் எங்கே என வினவ அவனோ அம்முவிற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வந்திருக்க அதை அவளிடம் கொடுத்தான். அதை வாங்கி கொண்ட அம்முவோ அபையிடம் அறை எங்கே வினவ அவனோ மேல்நோக்கி கை காட்ட அங்கிருந்தவர்களையும் அவர்களின் பேச்சையும் கவனிக்காது அபை கூறிய அறைக்கு சென்று ஜீன்ஸ்,குர்த்தி அணிந்து அபை காலையில் கட்டிய மஞ்சள் தாலி கழுத்தில் மிளிர தன்னுடைய கம்பனிக்கு செல்ல தயார் நிலையில் வந்தாள்.

வந்தவள் அர்ஜுனை நோக்கி அச்சு என்க அவனும் அங்கிருந்த ஒரு அறையில் சென்று உடை மாற்றி வர இருவரும் தங்கள் வேலைகளை பார்க்க புறப்பட்டு சென்றனர்.

அம்மு கிழிறங்கி வந்ததும் பேச்சுக்கள் தடைபட்டன அதன் பின் அவர்கள் கிளம்பி செல்லும் வரை அங்கே அமைதி நிலவியது அவர்கள் சென்றவுடன் பாட்டி அபை உன் பொண்டாட்டி ஒருத்தரையும் மதிக்க மாட்டேன் என்கிறாள் அவள் இப்படி இருந்தால் நான் குடும்பத்திற்கு ஒத்துவராது அவளிடம் சொல்லிவை அவள் இங்கு இருக்க வேண்டும் என்றால் அனைவரையும் மதித்து அனுசரித்து செல்லவேண்டும்

ரவிக்கும் அம்மு,அச்சு இருவரின் செயல்கள் மறுபாடகவே தெரிந்தன அதை பற்றி பிறகு பார்த்து கொள்ளலாம் என்றுவிட்டு அபையிடம் “அபை உன் மனைவியின் பெற்றோர் யார் அவர்களிடம் பேச வேண்டும் அல்லவா என்னதான் திருமணம் முடிந்து இருந்தாலும் அவர்களுக்கு நாம் முறையாக சொல்ல வேண்டும் வர்ஷா நீயும் உன்னுடைய கணவனின் பெற்றோரை பற்றி சொல் அவர்களிடமும் பேசிவிடுகிறேன்”

ரவி சொல்லவதை கேட்ட அபைக்கு எனக்கு அவளின் பெயரே தெரியாது இதில் நான் எங்கிருந்து பெற்றோரை பற்றி சொல்ல நினைத்து அவர்கள் இப்பொழுது வெளிஊர் சென்றிருப்பதாகவும் அவர்கள் வந்தவுடன் தானே அழைத்து வருவதாகவும் கூறினான்

வர்ஷா என்ன கூறுவது தெரியாமல் விழிக்க அவளை காப்பாற்றும் விதமாக என் மனைவியின் அண்ணன் வர்ஷாவின் கணவன் என்றும் கூறி அப்போதைக்கு அந்த பிரச்சனைக்கு முடிவை கொண்டுவந்தான்

அலுவலகத்தினுள் நுழைந்த அம்முவை அனைவரும் வித்தியாசமாக நோக்க அவர்கள் தன்னுடைய கழுத்தில் உள்ள தாலியை பார்த்தே இப்படி தன்னையே பார்க்கிறார்கள் என அறிந்தும் ஒன்றும் பேசாமல் இன்று ஏற்பாடு செய்திருந்த மீட்டிங் சென்றாள்

அவள் மீட்டிங் முடித்து வெளிய வரவும் ராஜன் அங்கிள் விசியம் கேள்விபட்டு அவளை காணவரும் சரியாக இருந்தது

அம்மு “அங்கிள் என்ன விசியம் நிங்கள் இன்று கோவை செல்வதாக சொன்னீர்கள் இப்பொழுது என்னை காண வந்து உள்ளீர்கள்”

அங்கிள் “அம்மு எத்தனை முறை சொன்னேன் வேண்டாம் வேண்டாம் என அப்பொழுது சரி என்றுவிட்டு நீ நினைத்ததையே நடத்தியுள்ளாய் இதில் உன்னுடைய வாழ்க்கையே அடங்கியுள்ளது திருமணம் ஒன்றும் விளையாட்டு காரியம் அல்ல வேண்டாம் என்றால் விலகுவதற்கு, இதில் உன்னோடு அர்ஜுனும் சேர்ந்து செயல்பட்டுவுள்ளான்”

அங்கிள் நானும் திருமணம் விளையாட்டு காரியம் அல்ல அன்பதை அறிவேன்,அர்ஜுனும் நன்கு அறிவான் எனக்கும்,அர்ஜுனுக்கும் ரவியும் அவரின் அம்மா,தங்கை,இரண்டாம் மனைவி மீதே பகை அவர்களின் பிள்ளைகளின் மீது அல்ல ஆனாலும் பெற்றோர் செய்த வினையின் பயன்களை பிள்ளைகளும் சிறிது காலம் அனுபவித்து ஆகவேண்டும் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய இயலாது

அம்மு சொன்னதை கேட்ட அங்கிளுக்கு இதற்கு மேல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை அதனால் அம்முவின் தலையை பரிவுடன் தடவி பார்த்துகொள் அம்மு நான் எப்பொழுதும் உனக்கு துணையாக இருப்பேன் என்பதை மட்டும் மறந்துவிடாதே என அம்முவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்

உள்ளம் கரையும்..................................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top