காதலில் உள்ளங்கள் கரைந்ததே - ஒன்பது

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Friends i come with the next update and thank for your comments on previous update and give your super comments on this update also tell the negative or any other comments and one more request any spelling mistake is there in the update means forgive for that and tell to me also friends . happy to read.......................................


உள்ளம் – ஒன்பது

அபை அம்மு சொல்லவதை கேட்கலாம் என்ற முடிவிற்கு வர அவளிடம் நான் என்ன செய்ய வேண்டும் வினா எழுப்ப

அவன் செய்ய வேண்டியவைகளை கூறினாள். அதை கேட்ட அபை இல்லை என்னால் இதுபோல் முடியாது. வேற எதாவது கூர் செய்கிறேன். எனக்கு இது ஒன்றே வேண்டும் முடிவை உன்னிடமே விடுகிறேன் உனது மாமாவின் கௌரவமா இல்லை உயிரா என்பதை நீயே முடியு செய்து கொள் என்றதோடு அழைப்பை துண்டித்தாள்

அபை மிகவும் குழப்பமான மனநிலையில் இருந்தான் என்ன செய்வது இதில் இருந்து மாமாவை எப்படி காப்பது என்றே அவனுக்கு புரியவில்லை இதுவரை நடந்தது அம்முவின் அழைப்பு அனைத்தும் ஒரு பெரும் தாக்கத்தை அவனுள் ஏற்படுத்தியது. அவனின் எண்ணங்களோ நிச்சியம் அவள் சொன்னத்தை செய்வாள் என கூர இதை யோசிக்க யோசிக்க மூச்சு முட்டுவது போல் இருக்க வெளியில் கார்டனில் சிறிது நேரம் இருக்கலாம் என்று எண்ணி அங்கே வர அங்கு வர்சினியும் யாதவும் பேசிகொண்டிருக்க அவர்களை நோக்கி சென்றவனின் காதுகளில் அவர்கள் பேசிகொண்டது விழுந்தது

வர்ஷா இந்த நேரத்தில் இங்கே எதற்கு உட்கார்ந்து அழுதுகொண்டு இருக்க யாரவது பார்த்தால் என்ன ஆகறது எழுந்து உள்ள வா

எனக்கு ரொம்ப பயமா இருக்கு யாதவ் என்ன செய்வது என்றே தெரியவில்லை அந்த கடவுளுக்கு கூட என்மேல் இறக்கம் இல்லை இருந்திருந்தால் இந்த கல்யாணத்தை நிறுத்தியிருப்பார்.

இந்த வார்த்தைகளை கேட்ட அபை அதிர்ச்சியடைய அப்படியே சில கணங்கள் உறைந்துவிட்டான் பின் தன்னை நிலைபடுத்தி கொண்டு அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தான்

என்னுடைய காதலுக்கு கூட கடவுளின் மனம் இறங்கவில்லையே

யாதவ் “என்னும் ஒருமுறை உன்னுடைய காதல் என்றாய் என்ன செய்வேன் என எனக்கே தெரியாது. அவரின் பெயர், ஊர் எதும் தெரியாது. நீயே இரண்டே முறை மட்டுமே பார்த்திருக்க இந்த லச்சனத்தில் காதல் வேறு நீ இதை அன்று சொல்லும்போதே எனக்கு மிகுந்த கோவம் வந்தது அப்போதிருந்த நிலைமையில் நானும் உன்னை சமாளிக்க கடவுளிடம் விடு என்றேன்”

ஆனால் அதையே நீ தீவிரமாக எடுத்துகொண்டு இருக்கிறாய் பேசாமல் உன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு அண்ணாவையே திருமணம் செய்துகொள் அவர் உன்னை நன்கு பார்த்துகொள்வர்

என்னால் முடியாது யாதவ் என்னுடைய காதல் எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் அத்தானை திருமணம் செய்துகொள்ள என்னால் முடியாது. நாளை மட்டும் அவர்க்கும் எனக்கும் திருமணம் நடந்தால் இருவரது வாழ்வுமே வீனாகும். நான் அவர்க்கு ஏற்ற இணை இல்லை

முட்டாள் தனமாக பேசாதே. இரண்டுபேரில் ஒருவர் விட்டு கொடுத்து சென்றால் எப்படி இருவர் வாழ்க்கையும் கெடும்.

அப்படி இல்லை யாதவ் என்னுடைய குணத்திற்கும் அத்தானுடைய குணத்திற்கும் பொருந்தாது, நான் அவர் எது சொன்னாலும் சரி சரி என்றுதான் சொல்வேன் இதுவே வாழ்க்கையில் மிக விரைவில் சலுப்பு தட்டிவிடும் அதோடு மனதில் ஒருவரை வைத்து கொண்டு இன்னொருவருடன் என்னால் வாழ இயலாது

இதை அனைத்தையும் கேட்ட அபை ஒரு முடிவுடன் உறங்க சென்றான்

அதிகாலை பொழுது ரமியமாக உதயமாக காலை 10 மணிக்கு முகுர்த்தம் என்றாலும் அனைவரும் அந்த புலராத பொழுதிலே மண்டபத்திற்கு விரைந்தனர்

மண்டபத்தின் நுழைவாயிலில் தங்க நிற எழுத்துகாளால் அபைசரம் வேட்ஸ் வர்ஷநந்தினி பொரிக்கபட்டு இருக்க அதை பார்த்த ஒவ்வொருத்தர் மனதிலும் பல்வேறு எண்ணங்கள் தோன்றியது

பாட்டியின் மனதிலோ இன்னும் எல்லாம் என்னுடைய கையில் உள்ளது நான் சொன்னதால் தான் இந்த திருமணம் நடைபெறுகிறது என்ற எண்ணம் தோன்ற சுமளாவின் மனதிலோ இந்த திருமணம் மட்டும் முடிந்துவிட்டால் நானே அனைத்திற்கும் ராணி என்று தோன்ற, லக்ஷ்மிக்கு இந்த திருமணத்தை நினைத்தாலே அயர்ச்சி தோன்றியது. ரவியின் மனதில் இந்த திருமணம் நல்ல படியாக முடிந்து எனது பெண் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற வேண்டுதல் இருந்தது.

வெற்றி,யாதவ் மனதில் இருவரும் நன்றாக, செழிப்பாக வாழவேண்டும் என்றும் வர்ஷா மனதில் எப்படியாவது இந்த திருமணம் நின்று விடாதா என்றும் அபையின் மனதில் எப்படி தான் நினைத்தை செய்து முடிக்க போகிறோம் என்றும் தோன்றியது இருந்தும் அனைவரும் தங்கள் மனதில் தோன்றியதை வெளிகாட்டி கொள்ளாமல் அமைதியாகவே இருந்தனர்.

முகுர்த்த நேரம் நெருங்க நெருங்க வர்ஷாவின் மனதில் பயம் தொற்றிகொண்டது. கடவுளிடம் இந்த திருமணம் நடந்தது என்றால் நான் என்னுடைய உயிரை மாய்த்துகொல்வேன் ஒருவரை மனதில் வைத்துகொண்டு என்னால் இன்னொருவருக்கு மனைவியாக வாழ முடியது என்றாள்.

முகுர்த்த நேரம் நெருங்க மண்டையில் அபையும்,வர்சாவும் அமர்ந்திருக்க நடக்கபோகும் அனைத்தையும் காண முதல் வரிசையில் அம்முவும்[அபிதா], அர்ஜுனும் அமர்ந்திருந்தனர்.

அபையின் மனதில் படபடப்பு உருவாக இருந்தும் அதை ஒதுக்கி தான் செய்ய போகும் செயலுக்காக தன்னை தயார் படுத்திகொண்டிருந்தான். முகுர்த்த நேரம் நெருங்கி அய்யர் தாலியெடுத்து அபையின் கையில் கொடுக்க அதை வங்கியவனோ வர்ஷாவின் கழுத்தில் கட்டாமல் எழுந்து முதல் வரிசையில் அமர்ந்து இருந்த அபிதாவின் கழுத்தில் கட்டினான் இது அனைத்தும் நிமிடத்தில் நடந்து முடிய அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்க

டேய் என்ன செய்கிறாய் என மணமேடையில் இருந்து யாதவின் குரல் கேட்டு அனைவரும் அதில் சுயநினைவு பெற்ற அனைவரும் அவனை நோக்க அங்கு அர்ஜுனோ வர்ஷாவின் கழுத்தில் தாலியை கட்டிகொண்டிருந்தான் வர்ஷாவோ கண்கள் இமைக்காமல் அவனையே நோக்கி கொண்டிருந்தாள்

அவனின் செயலில் ஒரு கணம் அதிர்ந்த அம்மு தன்னுடைய முகத்தில் அதை காட்டாமல் மறைந்து கொண்டாள்.

மொத்த குடும்பத்திற்கும் இது அதிர்ச்சியளித்தாலும் முதலில் அதிலிருத்து வெளிவந்த ரவி அபையை நோக்கி எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய எவ்வளவு நாளாக கத்துகொண்டிருந்தாய் நீ அவளின் வளர்ப்பு தானே பின் நீ வேறு எப்படி இருப்பாய் உன்னிடம் நான் இதை எதிர்பாத்திருக்க வேண்டும் என்றார்

லஷ்மியோ உனக்கு நாங்கள் என்ன பாவம் செய்தோம் என் பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டாயே என்றுவிட்டு வர்ஷாவை நோக்கி வா மா நாம் போகலாம் கூப்பிட இதுவரை ஒரு மோனநிலையில் இருந்த வர்ஷா அம்மாவின் சொல் கேட்டு அர்ஜுனை நோக்க அவனோ அவளின் கைகளை இருக்க பற்றிகொண்டு இவள் இப்பொழுது என்னுடைய மனைவி உங்கள் பெண் இல்லை நீங்கள் கூப்பிட்ட உடனே வருவதற்கு

அவன் வார்த்தையை கேட்டு அபைக்கும், யாதவிற்கும் கோவம் வர அவனை நோக்கி பாய இருந்த அபையின் கைகளை அம்மு பிடித்து கொண்டு கண்களால் எச்சரிக்க ஆனால் யாதவோ விரைந்து அர்ஜுனின் சட்டையை பிடிக்க இருவர்க்கும் கைகலப்பு ஆனது

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இவர்கள் இருவரையும் விளக்கி என்ன ரவி உன்னுடைய வீட்டு திருமணத்திற்கு வந்து வாழ்த்தி செல்லலாம் என்றால் நீ பார்த்த மாப்பிளை வேறு ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறான் அதுதான் போகட்டும் என்றால் உன்னுடைய மகளின் கழுத்தில் வேறு ஒருவர் தாலிகட்டியுள்ளான், நீ அவர்களின் முடிவை கேட்டு பின் தானே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாய் இல்லை நீயே முடிவு செய்து ஏற்ப்பாடு செய்துவிட்டாயா

ரவியால் ஒன்றும் பேச முடியவில்லை இன்னும் ஒருவரோ நடந்தது நடந்து விட்டது இனி ஆகவேண்டியதை பாருங்கள் என்றார். இங்கு நடந்த அனைத்தயும் கண்ட பாட்டி, சுமளாவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை அனைத்தும் தங்கள் வசம் என நினைத்து இருக்க இந்த எதிர்பாரா நிகழ்வில் அடுத்து என்ன செய்வது தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர். அடுத்து ஆவதை பாருங்கள் என்றவுடன் நிலைமையின் தன்மை உணர வாய் திறந்தார் சுமலா

சுமலா “என்ன ஆவதை பார்ப்பது எங்கள் வீட்டு பிள்ளைகளை இருவரும் ஏமாற்றி இவ்வாறு செய்துவுள்ளனர் இவர்களின் மீது போலீசில் புகார் கொடுப்பது மட்டுமே இனி செய்வதற்கு உண்டு என்றுவிட்டு தன் அண்ணனை நோக்கி அண்ணா நீங்கள் போலீசை வரவையுங்கள் இவர்களை அவர்கள் வந்து பார்த்து கொள்ளட்டும்”

இதுவரை நடந்தது அனைத்தையும் ஒருவித கர்வ பார்வையில் பார்த்து கொண்டிருக்க சுமலா சொன்னதை கேட்டதும் அபையை நோக்கி இதை நீதான் சமாளிக்க வேண்டும் இல்லையெனில் நான் சொன்னதை நிகழ்த்தி காட்டுவேன் என்ற பார்வை பார்க்க நிலைமையின் தீவிரம் உணர்ந்த அபை “என்னை யாரும் ஏமாற்றவில்லை நானும் இவளும் காதலிக்கிறோம் திடீர் என மாமாவின் உடல் நிலை சரியில்லாமல் போனதும் அவர் என்னிடம் வர்ஷாவை மணந்து கொள்ள சொன்னார் என்னை வளர்த்தவர் என்பதால் அவர் கேட்ட போதும் அந்த நிலையில் என்னால் மறுக்க முடியவில்லை

அவருக்கு உறுதி அளித்துவிட்டாலும் என்னுடைய மனதில் இருந்து இவளை விளக்க முடியவில்லை இந்த நிலையில் நான் வர்ஷாவை மணந்தால் இருவர் வாழ்க்கையும் கெட்டுபோகும் அதனாலே நான் காதலித்த இவளையே மணந்துகொண்டேன் என்று அம்மு போட்ட திட்டத்தின் படி அவள் கூறியவாறு சொல்லிவிட்டான்

இதை கேட்ட அங்கிருந்தவர்கள் ரவி நீயே முடிவெடுத்து இப்படி செய்தது தவறு அவர்களை ஏற்று வாழ்த்து என்றார்

தங்களின் முதல் திட்டம் தோல்வியடைய அடுத்ததை கையிலெடுத்தனர் இவன்தான் இப்படி ஆனால் எங்கள் வீட்டு பெண் ஒன்றும் அறியாதவள் அவளை ஏமாற்றியே இவன் இவ்வாறு செய்துள்ளான் எங்க அங்கிருந்தவர்களில் ஒருவர் வர்ஷாவிடமே “மா இவன் உனக்கு விருப்பமில்லாமல் தாலி கட்டி உள்ளானா வினவ” அர்ஜுனிற்கு மனதில் ஒரு பயம் எழுந்தது எங்கே ஆமாம் என்று விடுவாளோ அதன் பிறகு அம்மு போட்ட அனைத்து திட்டங்களும் வீணாகிவிடுமே என்று நினைக்க அபையும்,யாதவும் அவள் நிச்சியம் ஆமாம் என்றே கூறுவாள் அதன் பின் இவனை வைத்து நன்றாக செய்துவிடலாம் நினைக்க சுமலா இவள் எப்படியும் எவனையும் விரும்பி இருக்க மாட்டாள் அதனால் ஆமாம் என்றே சொல்வாள் அப்பொழுது தனது அடுத்த திட்டத்தை செயல் படுத்தலாம் என நினைக்க

அம்மு மட்டுமே அர்ஜுன் தாலிகட்டும் போது வர்ஷாவின் முகத்தில் வந்து போன அதிர்ச்சி பின் ஆச்சர்யம், மகிழ்ச்சி உணர்வுகளை கவனித்தாள் எனவே அவளின் பதில் நிச்சயம் தங்களுக்கு சாதகமான பதிலையே சொல்வாள் என கருதி அடுத்து நடக்க போவதையும் வர்ஷாவின் மனதையும் உள்வாங்க சாதரணமாக பார்த்து கொண்டிருந்தாள்

அம்முவை பார்த்த அர்ஜுனிற்கு அவளின் அமைதி செய்தி உரைக்க மனதில் தோன்றிய சஞ்சலத்தை அகற்றி என்ன ஆனாலும் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணினான்

அனைவரும் வர்ஷாவின் பதிலுக்காக காத்திருக்க அனைவரையும் பார்த்த வர்ஷா பின் தனது பார்வையை அர்ஜுனின் மீது நிலைக்க செய்து என்னை யாரும் ஏமாற்றி தாலிகட்ட வில்லை என்னுடைய விருப்பத்தின் பெயரிலே இந்த திருமணம் நடந்தது என்றாள்

அவளின் சொல் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்

உள்ளம் கரையும்...............................
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நளினி ஸ்ரீ. p டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நான் நினைத்த மாதிரியே அபிதாவை அபை சரண் கல்யாணம் செய்துட்டான்
வர்ஷாவுக்கும் அர்ஜூனுக்கும் மேரேஜ் ஆகிடுச்சு
சூப்பர் சூப்பர், நளினி டியர்
சுமலாவுக்கும் அவளோட ஆத்தாளுக்கும் நல்ல மூக்கறுப்பு
அபிதா சூப்பர் பெண்
அப்படியே ரவீந்திரனின் சரியான
வாரிசாக இருக்கிறாள்
இனி அடுத்து என்ன நடக்கும்ன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்க,
நளினி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top