காதலில் உள்ளங்கள் கரைந்ததே - எட்டு

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Thanks for your last update friends today i come with next update read and tell your wonderful comments or any correction is needed to write. it will helpful for me friends.............. happy to read,,,,,,,,,,,,,,,,

உள்ளம் – 8

A&A இண்டஸ்ட்ரீஸ் சென்னை என பெயர் பொறிக்கப்பட்ட அந்த பிரமாண்டமான ஐந்து மாடி கட்டிடத்தின் முன்னே கருப்பு நிற பென்ஸ் கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய அர்ஜுன் வேக நடையுடன் உள்ளே நுழைந்தான்.

உள்ளே சென்றவன் அபி எங்கே என கேட்க அவர்கள் மீட்டிங் அறையில் இருப்பதாக சொல்லவும் அங்கே விரைந்தான் அவன் உள்ளே செல்ல அம்மு சென்னை கிளையின் தற்போதைய நிலை, வளர்ச்சி, மேம்படுத்த வேண்டியவை குறித்து அங்குள்ளவர்களிடம் பேசிகொண்டிருந்தாள்

அர்ஜுன் இதை எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை வந்தவன் நேராக உள்ளே நுழைந்து அம்மு நீ என்ன செய்கிறாய் என உனக்கு தெரியுதா கேட்க அம்மு அங்கிருந்தவர்களை செல்லுமாறு கூறி தன்னுடைய அறையை நோக்கி சென்றாள்

அவளின் பின்னே அர்ஜுனும் செல்ல இவர்களை தொடர்ந்து ராஜன் அங்கிளும் உள்ளே நுழைந்தார் அம்மு நீ என்ன செய்கிறாய் என்றே எனக்கு புரியவில்லை வந்த வேலையை பார்க்காமல் கம்பனிக்கு வந்து நீ தான் M.D என்று சொல்லாமல் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாகவும் இங்கு நடக்கும் செல்படுகளை கவனிக்க மேலிடத்தில் இருந்து அனுப்பி உள்ளதாகவும் ஊரியுல்லாய் என்னையும் இங்கு ஒரு மருத்துவமனையில் சேரும்படி கூறினாய் அதோடு புது மருத்துவமனை தொடங்க இடம் பார்க்க வேறு கூறி இடத்தை முடியும் செய்து தற்போது அங்கே கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது

எதை மனதில் வைத்துகொண்டு இது எல்லாம் செய்கிறாய் என படபடக்க ராஜன் “அர்ஜுன் முதலில் அமைதியாக அமரு இந்த தண்ணீரை முதலில் குடி”

அபிதா “அச்சு நாம் இங்குள்ள ரவீந்தரின் கம்பனி ஷேர் எல்லாம் நம்முடைய கம்பனியில் சேர்த்தி இருக்கிறோம் அந்த ரவீந்தர் சும்மா இருக்க மாட்டார் அனைத்தையும் விசாரித்திருப்பார் அவரின் கவனத்தை திசை திருப்பவே நான் இங்கு M.D யாக இல்லாமல் சாதாரண ஊழியராக என்னை காட்டிக்கொண்டேன் அதோடு இங்கு நடப்பவைகளை கண்காணிக்க வேண்டும் மற்ற இடத்தில் உள்ள கிளைகளை விட இங்கு தொழில் மந்தமாக உள்ளது அதையும் பார்க்க வேண்டும் அதற்கு என்னை நான் ஒரு சாதாரண ஊழியராக கட்டிகொண்டேன்

நமது மருத்துவமனை டெல்லியில் மட்டுமே உள்ளது விரிவு படுத்த வேண்டும் அதற்கு முதல் வேலையாக நாம் இங்கும் போதே அந்த வேலைகளை பார்த்து விட்டால் ஒரே வேளையில் நாம் வந்த வேலையும் முடிந்த மாதிரி ஆச்சு அதோடு இங்கே கிளையை தொடங்கின மாதிரியும் ஆச்சு”

மற்றதை பிறகு பேசலாம் என்று அம்மு கண் கட்ட அதை புரிந்து கொண்ட அர்ஜுனும் சரி அம்மு நீ உன் வேலைகளை முடித்து வா நான் அதுவரை காத்திருக்கிறேன்

இதுவரை இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த அங்கிள் சரி அர்ஜுன்,அம்மு நான் கிளம்புகிறேன் மற்றதை நாளை பார்த்து கொள்ளலாம்

அவர் சென்றதும் சில நிமிடம் அமைதி நீடிக்க அர்ஜுன் “அம்மு நீ சொல்வது எல்லாம் ஓகே அனால் இன்னும் இரண்டு தினங்களே உள்ளது திருமணத்திற்கு நாம் இதுவரை எந்த முயற்சியும் எடுக்க வில்லை நீ மனதில் எண்ணியுள்ளாய் இதில் அன்று அபைக்கு போன் செய்து வாழ்த்து வேறு சொல்லிருக்க”

அச்சு எதற்கு இவ்ளோ டென்சன் கண்டிப்பாக நான் உன்னிடம் கூறிய படியே அனைத்தும் நடக்கும் நான் அன்று போன் செய்தவுடன் நான் யார் என்பதை எண்ணி குழப்பத்தில் இருப்பான் அதோடு நம்மை பற்றி ஏதேனும் விவரம் கிடைக்குமா என்ற முயற்சியில் இருப்பான்

அடுத்த தாக்குதலை உடனே கொடுத்து விட்டால் சுதாரித்து கொள்வார்கள் எப்பொழுதும் ஒரு தாக்குதலை நடத்திய பின் அமைதி காக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே அவர்கள் இது எதோ தானாக நடந்தது என்று ஒதுக்கிவிட்டு கவனமின்றி இருப்பார் அந்த வேளையில் நாம் நம்முடைய அடுத்த அடுத்த தாக்குதலை நடத்த வேண்டும் இடைவேளை விட்டு இரண்டாம் முறை செய்கையில் தொடர்ந்து நம்முடைய செய்கைகளை செய்ய வேண்டும் நடுவில் சிறிது இடைவேளை விட்டாலும் எதிராளி சுதாரித்து கொள்வார்கள்

அம்மு எனக்கு இப்பொழுது புரிகிறது உன்னை ஏன் எல்லோரும் பிஸ்னஸ் குயின் என்று சொல்கிறார்கள் என உன்னை எதிர்ப்பவர்களை கச்சிதமாக திட்டம் வகுத்து வீழ்த்தி விடுகிறாய். இப்போது என்ன திட்டம் வகுத்து வைத்திருக்கிறாய் அடியேன் செல்படுத்த காத்திருக்கிறேன் பணிவு போல் பாவனையுடன் செய்து கட்ட அம்மு தன்னை மீறி சிரித்தாள்

அவள் சிரிப்பதை வாஞ்சையுடன் பார்த்த அச்சு மனதில் “என்னுடைய அம்மு இப்பொழுது போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அத்தை அதற்கு நீங்களே பொறுப்பு நந்தினியை நினைத்து வேண்டிகொண்டான்”

அம்மு சிரிப்பதை நிறுத்தி தனது அடுத்த திட்டத்தை அவனிடம் கூறி அதை அப்பொழுதே செயல் படுத்த தொடங்கினாள்

___________________________________________________________________________________

ரவீந்தரின் மாளிகையில் சுமலா அபையிடம் இன்றும் நீ மருத்துவமனை சென்றே ஆகா வேண்டுமா இன்னும் இரு தினங்களே உள்ளது வீட்டில் இருப்பதற்கு என்ன கேட்டு கொண்டிருக்க இல்லை இல்லை கத்தி கொண்டிருக்க அதை எதையும் காதில் வாங்காது அவன் பாட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தான்

அவனிடம் பதில் வராததை கண்டு கோவம் கொண்ட சுமலா மனதினுள் என்னும் இரெண்டே நாட்கள் பின் இந்த வீட்டிற்கு நானே மகராணி நான் வைத்ததே சட்டம் அதன் பின் உன்னை பார்த்து கொள்கிறேன் கருவிகொண்டு அங்கிருந்து நகர்ந்தார்

அவர் கிளம்பவும் அபையும் மருத்துவமனை நோக்கி தனது காரில் புறப்பட்டான் அவனுடைய கைகள் எப்பொழுதும் போல் வண்டியை ஓட்ட எண்ணமோ ஒரு வாரத்திற்கு முன்பு வந்த அழைப்பை பற்றியே இருந்தது. அந்த பெண்ணின் குரல் தன்னுள் ஏதோவொரு உணர்வை தோற்றுவிப்பதாக எண்ணினான்

அவள் பேச்சு மிரட்டல் தோணியாக இருந்தும் ஏன் மனதில் ஒரு பரவசத்தை தோற்றுவிக்கிறது சிந்திக்க அவனின் எண்ணத்தின் நாயகியே செல்போன் முலம் அவனை அழைத்தால்

அவனுடைய கைபேசி அதிர அதில் நினைவிற்கு வந்தவன் யார் என பார்க்க அன்று வந்தது போலவே பிரைவேட் நம்பர் காட்ட ஒரு நிமிடம் அமைத்தி காத்து பின் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்

அபை அழைப்பை ஏற்றதும் எதிர் புறம் “டாக்டர். அபைசரண் நிச்சியம் எல்லாம் நன்றாக முடிந்ததா இன்னும் இரண்டே தினத்தில் திருமணமாமே ஆனால் பாருங்கள் அந்த திருமணத்தை நடத்தவிட என் மனம் இடம் கொடுக்கவில்லை” கூறியவுடன் அவனையும் அறியாமல் வண்டியை சடன் பிரேக் போட்டு நடு ரோட்டில் நிறுத்த பின்னால் வந்தவர்கள் அவனை திட்டிக்கொண்டே சென்றனர்

அதன் பின்பு காரை எடுத்து கொண்டே அவளிடம் ஏய் என்ன நீ பேசுவதை ஏதும் சொல்லாமல் கேட்டு கொண்டிருந்தாள் என்ன வேண்டுமானாலும் பேசுவாயா உன்னால் ஒன்றும் செய்ய இயலாது நான் இருக்கும் வரை

நீ அந்த வீட்டில் இருக்கும் போதே உன்னுடைய மாமாவை மருத்துவமனை அனுப்பியது நான் அவருடைய தொழிலில் கிட்டத்தட்ட பாதியை வாங்கிவிட்டேன் தெரியுமா வேண்டும் என்றால் உன்னுடைய மாமாவிடமே பிறகு கேட்டுகொள் நான் சொல்வது உண்மையா பொய்யா என்றுவிட்டு இப்பொழுது நான் சொல்வதை கேள் நான் நிச்சியமாக இந்த திருமணத்தை நடக்க விடமாட்டேன்

உன்னுடைய மாமாவை அனைவர் முன்னும் தலைகுனியும் செய்வேன் உனக்கு உன் மாமா மீது அதித அன்பு அல்லவா அதனால் இந்த காரியத்தை உன்னை கொண்டே செய்ய போகிறேன்

அபை “என் மாமாவை தலைகுனிய வைக்கும் செயலை நானே எப்படி செய்வேன் என நினைக்கிறாய் பைத்தியம் மாதிரி உளறாமல் வேறு எதாவது உருப்படியான வேலை இருந்தால் அதை செய்”

எதிர் புறம் நகையொளி கேட்கவும் கோவம் கொண்டவன் இப்பொழுது எதற்கு சிரிக்கிற உண்மையாவே நீ பைத்தியமா

அவள் “வார்த்தையை பார்த்து உபயோகிங்கள் ஏனென்றால் பிற்காலத்தில் வறுத்த பட வேண்டிருக்கும் நீயே நிச்சியம் நான் என்ன சொல்கிறேனோ அதை செய்வாய் இல்லை நான் செய்ய வைப்பேன் என அந்த அழைப்பு முடிந்தது”

அபைக்கு அந்த பேச்சில் இருந்த உறுதி வார்த்தைகளின் தாக்கம் அவனுள் சன்சலத்தை ஏற்படுத்தியது அறிவு கண்டிப்பாக அவள் சொன்னதை செய்வாள் கூறியது மனமோ அப்படி ஏதும் நடக்க கூடாது என்றும் ஆனால் ஒருவகையில் இந்த திருமணம் நின்றால் விடுதலை என்றும் எண்ணியது தந்து எண்ணங்களை ஒதுக்கி மருத்தவமனை நோக்கி சென்றான்

அன்று இரவே அபை தனது மாமாவிடமே கேட்டுவிடலாம் அவள் சொன்னது உண்மையா பொய்யா அதை தெரிந்து கொண்டு என்ன செய்யலாம் முடிவெடுப்போம் எண்ணி அவரை காண அலுவலக அறைக்கு செல்ல அங்கே ரவி தனது வக்கீல் மற்றும் நண்பனான சுரேந்திரனுடன் அலைபேசியில் பேசிகொண்டிருக்க அவர் பேசி முடித்ததும் கேட்கலாம் எண்ணி வெளியே காத்திருக்க உள்ளே அவர் பேசியது இவன் காதிலும் விழுந்தது

அலைபேசியில் ரவி “நண்பனிடம் கம்பனியின் பங்குகளை வாங்கியதோடு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக கூறி கொண்டிருக்க எதிர்பக்கமோ எந்த விதத்தில் தொல்லை கொடுப்பதாக கேட்கப்பட பழைய கணக்குகளை கேட்பதாகவும் வேண்டும் என்றே இழுத்தடிப்பதாகவும் கூறினார்

வக்கீல் “ரவி அதை ஒன்றும் செய்ய முடியாது அவர்கள் வெளியில் உள்ள அனைத்து பங்குகளையும் வாங்கி உள்ளதால் நீ அவர்களுக்கு அவர்கள் தொழில் சம்மந்தமாக கேட்பதற்கு பதில் கொடுக்க வேண்டும். அதோடு உன்னிடம் ஒரு முக்கியமான விசியத்தை சொல்லவே இப்பொழுது தொடர்பு கொண்டேன். அது என்ன வென்றால் நீ உன்னுடைய கம்பனி ப்ராஜெக்ட் நிலம் வாங்கினாய் தானே அதை அந்த இடத்தின் உரிமையாளரை மிரட்டி வாங்கி உள்ளதாக உன் மீது புகார் கொடுத்து உள்ளார் எப்படியும் நாளை உனக்கு அது சம்மந்தமாக நோட்டிஸ் வரும் நீ ஒன்றும் கவலை படதே அதை நான் பார்த்து கொள்கிறேன்”

வக்கீல் சொல்வதை கேட்ட ரவி “என்ன சுரேன் சொல்ற அந்த இடத்தை முறையாக எல்லாம் பேசி வாங்கினேன் இப்போது எதற்கு அவரை மிரட்டி வாங்கியதாக புகார் கொடுத்திருக்கிறார்.

எனக்கு எண்ணமோ யாரோ என்னை அழிக்கும் நோக்கத்தில் இதையெல்லாம் செய்கிறார்கள் தோன்றுகிறது, ஆனால் ஒன்றுதான் புரியவில்லை கம்பனியின் பங்குகளை வாங்கி உள்ளவர்களை பற்றி விசாரித்தேன் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனம் வங்கியுள்ளது அவர்கள் என்னை அழிக்க வாய்ப்பு குறைவு அப்படியெனில் யார் செய்வது”

ரவி நீ இப்போ உனது பெண்ணின் திருமணத்தில் மட்டும் கவனம் செலுத்து மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம். ரவியும் அவர் கூறியது சரியே என்று முடிவுக்கு வந்தார்

இதை அத்தனையும் கேட்டு கொண்டிருந்த அபை சத்தம் வராமல் திரும்பி சென்றான். தனது அறையை அடைந்தவன் “அந்த பெண் சொன்னது போய் இல்லை ஆனால் இவளுக்கும் மாமாவிற்கும் என்ன பகை எதற்காக இவ்வாறு செய்கிறாள் சிந்திக்க அவன் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. இவற்றை யோசித்து கொண்டே உறங்கிபோனான்”

மறுநாள் காலைபொழுது ஆழகாக விடிய ரவியின் வீட்டில் உள்ள ஒவ்வொருவர் மனதிலும் பல்வேறு எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தது இருந்தும் திருமண வீட்டிற்கான கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் நலுங்கு வைப்பது, மெகந்தி போடுவது, ஆடல் பாடல் என களைகட்டி இருந்தது

அபையின் மனது இன்று நிச்சியம் அவள் தன்னை தொடர்பு கொள்வாள் கூறியது.அதனால் நிமிடத்திற்கு ஒருமுறை அவன் போனையே பார்த்து கொண்டிருந்தான்

அவன் போனையே பார்ப்பதை கவனித்த யாதவ் “அண்ணா முக்கியமான கால் வருமா போனையே பார்த்து கொண்டு இருக்கீங்க”

இல்லை என ஒருவாறு சமாளித்து அந்த நாள் முழுவதும் மனதில் ஒருவித பதற்றத்துடனே இருந்தான் அவன் எதிர் பார்த்தவாறு அன்று காலை முதல் மாலை வரை எந்தவித அழைப்பும் வரவில்லை இன்னும் ஒரு இரவே உள்ளது திருமணத்திற்கு நிச்சயம் எதோ நடக்கும் முளை அறிவுறித்தியது அந்த பதற்றத்துடனே அறையில் குறுக்கும் நெடுக்குமாக அலைய அவன் நாள் எல்லாம் எதிர்பார்த்த அழைப்பு வந்தது.

அதை ஏற்று காதில் வைத்த உடன் எதிர்புறம் “டாக்டர்,அபைசரண் என்னுடைய அழைப்பிற்காக காத்து கொண்டு இருந்தீர்கள் போல. இதையே உங்களிடம் நான் எதிர்பார்த்தேன்”

அபை “உனக்கு என்ன வேண்டும் நீ தானே நிலத்தை கொடுத்தவரை துண்டிவிட்டு புகார் கொடுத்தது”

டாக்டர் புத்திசாலி தான் போல “நானாக அவரை புகார் கொடுக்க சொல்லவில்லை நான் செய்தது ஒன்றே ஒன்று மட்டுமே என்ன என்றால் அவருடைய நிலத்தின் மதிப்பிற்கு ஈடாக இரண்டு மடங்கு பணம் தருவதாக”

நீ ஏன் இவற்றை எல்லாம் செய்கிறாய் உனக்கும் மாமாவிற்கும் என்ன பகை

உனது மாமாவின் மீது பகை என்பதை விட அவரை அழிக்கவேண்டும் என்ற வெறி என்றே கூரலாம். ஆனா பாரு ஒரே அடியாக அழைத்துவிட்டால் அவர்க்கு தாம் எங்கே தவறினோம் தெரியாது அதனால் கொஞ்சம் கொஞ்சமாக செய்கிறேன். சரி விடு அது எதற்கு உனக்கு நீ நான் சொல்வதை மட்டுமே செய்யவேண்டும்

செய்ய முடியாது என்றால் என்ன செய்வாய்

நான் இவ்வளவு செய்யுமோதே தெரியவில்லை அடுத்து எது வேண்டுமானாலும் செய்வேன் என்று. உனக்கு இன்னும் ஒன்றையும் சொல்கிறேன் உன்னுடைய மாமாவின் கம்பனியில் 60 சதவிகிதம் பங்குகளை நான் வாங்கிவிட்டேன் இது இன்னும் உன் மாமாவிற்கு கூட தெரியாது முதலில் உன்னிடம் மட்டுமே சொல்கிறேன்

ஏய் என்ன சொல்ற நீ “வேர்கணவே நீ வாங்கியது போக மீதம் மாமா,லஷ்மி,வர்ஷன் பெயரில் இருந்தது அதை எவ்வாறு வாங்க முடியும் எனக்கு தெரியது என்று போய் உரைக்காதே”

இதுவரை நான் உன்னிடம் போய் சொல்லி உள்ளேனா அதுபோல் இதுவும் உண்மை உன் அருமை மாமாவின் மகன் இருக்கனே அவனே அவன் பெயரில் இருக்கும் அனைத்து பங்குகள்,சொத்து மொத்தத்தையும் எனக்கு எழுதி கொடுத்து விட்டான். நான் இப்போது நினைத்தால் உனது மாமாவை கம்பனியில் இருந்து வெளியேற்றிட முடியும் நான் அதை செய்ய கூடாது என்றால் நான் சொல்வதை நீ செய்தே ஆகவேண்டும்.

அபைக்கு தெரியும் அந்த கம்பனி தனது மாமாவிற்கு எவ்வளவு முக்கியம் என்று அதிலிருந்து அவரை வெளியேற்றினால் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது அவர் உடல் இப்போது இருக்கும் நிலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் அவள் என்னதான் சொல்கிறாள் கேட்கலாம் என்ற முடிவிற்கு வந்தான்.

உள்ளம் கரையும்..........................
 

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ் அபிதா
திட்டமிட்டு அருமையாக காய் நகர்த்துகிறாள்
ரவீந்திரனின் பெண்தானே
மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேண்டாமே
ஹா ஹா ஹா
அப்பாவுக்குக் கூடத் தெரியாமல் தன்னுடையதை வர்ஷன் அம்முவுக்கு கொடுத்துட்டானா?
அபிதா அபை சரணை என்ன செய்ய சொல்லப் போகிறாள்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top