காதலா? சாபமா? teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஐந்து பேர் கதையை தொடருமாறு சொல்லி இருந்தீங்க, ரெண்டு பேர்தான் உறவும் பிரிவும் உன்னாலே முடிந்த பிறகு தொடருமாறு கேட்டுகிட்டீங்க, so ஈத் அன்னைக்கி முதல் அத்தியாயம் வரும். நீங்க எதிர்பார்த்த மாதிரி கதை இருக்குமா? பார்க்கலாம்.:giggle::giggle:

download (1).jpg

சென்னை ECR ரோடு. நேரம் இரவு மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த ரங்களேர் ஜீப் அதி வேகமாக சென்று கொண்டிருந்தது. வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தது வெற்றி எனும் வெற்றிமாறன்.


ஆறடியில் அளவான தேகம்தான். மாநிறத்தில் சின்ன கண்களோடு, மீசை கூட அடர்த்தியாக, கொஞ்சம் சுருட்டை முடி. சிரித்தால் அழகாக இருப்பான். ஆனால் அவனோ அழுத்தக்காரனாக இருந்தான். முகத்தில் எப்பொழுதும் ஒருவித இறுக்கம் இருந்தது. சிரிப்பை தொலைத்த முகம். சிரிக்க பிடிக்கவில்லையோ? காரணம் தெரியவில்லை.

"டேய் வெற்றி மெதுவா போடா... இவ்வளவு கோபம் ஆகாது" அருகில் அமர்ந்திருந்த மணிமாறன் கூற,

"நீ தானே என்ன பார்க்கணும்னு வந்த, நான் இப்படித்தான். பார்த்திட்ட இல்ல. இனி வராத" என்றவன் வேகத்தை குறைக்கவே இல்லை.

அவனை எவ்வாறு சம்மதிக்க வைப்பது என்று மணிமாறன் சிந்தித்தவாறே பாதையை கவனிக்க, குரைத்தவாறே பாதை நடுவில் நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது.

"டேய் வெற்றி வெற்றி பார்த்து" மணிமாறன் கத்தும் பொழுதே ஜீப் நாயை மோதி விடக் கூடாது என்று இடது புறம் திருப்ப, வண்டி எதோ ஒரு கல்லில் ஏறி, இறங்க வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மூன்று தடவை உருண்டு, கவிழ்ந்து தூரப்போய் பெரிய சத்தத்தோடு தன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது.

கடலலையின் சத்தம் காற்றில் கலந்து மெதுவாக வீசிக்கொண்டிருக்க, வண்டிக்குள் இருமல் சத்தம் மட்டும் கேட்டது. சாலையின் மின்விளக்கு வெளிச்சத்தில் இருமுவது வெற்றியா? மாறனா? என்று தெரியவில்லை. பார்ப்பதற்கு இருவரும் ஒரே மாதிரிதான் இருந்தனர். வெற்றி சாம்பல் நிறத்தில் சட்டையும் கருப்பு ஜீன்சும் போட்டிருக்க, மாறன் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்ட்டும் போட்டிருந்தான். இரத்த வெள்ளத்தில் இருந்ததனால் இருளில் போட்டிருந்த துணியை கொண்டு யார் வெற்றி? யார் மாறன்? என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.

எவ்வளவு நேரம் இருவரும் விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தார்கள் தெரியவில்லை. யார் முதலில் பார்த்தார்கள்? யார் அம்பியூலன்சை அழைத்தது? யார் காவல்துறைக்கு தகவல் சொன்னது எதுவும் தெரியாது.

விடிந்தும், விடியா காலை பொழுதில் அந்த இடமே பரபரப்பராகி இருவரும் அம்பியூலன்சில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த நேரத்தில் வாகன நெரிசல் இல்லாததால் வண்டி மருத்துமனையை சீக்கிரம் அடைந்து விட, வெற்றியும், மாறனும் உடனடியாக, தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரின் உடைகளும் கலையப்பட்டு, உடைமைகளும் பத்திரப்படுத்தப்பட்டு வீட்டுக்கும் தகவல் அனுப்பட்டதிருந்தது.

images.jpg

"மாறா... ஐயோ... என் மாறனுக்கு என்ன ஆச்சு..." அந்த மருத்துவமனையே அலறும்படி கத்தியவாறு உள்ளே நுழைந்தாள் லதா.

"லதா கொஞ்சம் அமைதியா இருமா...” லதாவின் தந்தை தர்மதுரை மகளை ஆறுதல் படுத்த முயன்றவாறே வர, மருத்துவமனையில் கதறல் குரல்களை கேட்டுப் பழகிய பூபதிக்கு அப்பெண்ணின் குரல் மிகவும் பரீட்சயமாக சட்டென்று திரும்பிப் பார்த்தார்.

"எனக்கு இவர் வேண்டாம். வேண்டவே வேண்டாம். நான் இவரோடு வாழ விரும்பல. என்ன உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க அப்பா..." அவள் குரல் அது. அவரின் மனைவியின் குரல். பல வருடங்கள் கழித்து மனைவியை கண்டத்தில் மேலும் அதிர்ந்து நின்றார் பூபதி பாண்டியன்.

அழுதவாறே வந்த லதா கணவனை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருகணம் பழைய நினைவுகள் மின்னல் போல் ஓடி மறைய தந்தையின் கையை இறுக பற்றிக்கொண்டவள் அப்பொழுதுதான் மாமனாரும் அங்கு நிற்பதை கவனித்தாள்.


அவளுக்கோ ஒரே குழப்பம். விபத்து நடந்தது மணிமாறனுக்கு என்றல்லவா தகவல் வந்தது. இவர் இங்கே என்ன செய்கின்றார். அப்போ? அவன் அவள் பெற்ற மற்ற குழந்தை என்ன ஆனான்?" சட்டென்று கணவனை பார்த்தவள் கண்களாளேயே பதில் வேண்டி நின்றாள்.

ஆனால் பூபதி பாண்டியனுக்கு மனைவியின் தாய்பாசமும், பரிதவிப்பும், கண்களுக்கு தெரியவில்லை. பல வருடங்கள் கழித்து காணும் மனைவியை கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தார்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "காதலா
சாபமா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
பஸ்மிலா டியர்

பூபதி பாண்டியன் டாக்டரா?
பூபதியை லதா ஏன் பிரிந்தார்?
பூபதி என்ன கோக்குமாக்கு செய்தார்?
மணிமாறன் லதாவிடம்ன்னா பூபதியிடம் வளர்ந்த வெற்றிமாறன்தான் விபத்து உண்டாக்கினானா?
இரண்டு பேருக்கும் ஒண்ணும் பிரச்சினையில்லையே
 

Saroja

Well-Known Member
மனைவிய பார்த்து பூபதி
கண்ண நிறைக்கிறாறா
நல்லா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top