கற்பூர முல்லை Episode 9

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 9

அழகாய் அம்சமாய் கிளம்பினான் அகிலன் தமிழின் ஆபிஸிற்கு. காலை உணவை முடித்துக் கொண்டு விசிலடித்தவாறே கிளம்பியவனை ஆச்சர்யமாக பார்த்தாள் ராசாத்தி அக்கா. இன்னைக்கு செம ஜாலி மூடில் இருக்கற போல என்று கேட்டாள். இன்னும் எவ்வளவு நாள் தான் உங்கள் கைமணத்தில் சாப்பிடுவது.......? வேறு ஒரு ஆளை ரெடி பண்ண வேண்டாமா......? என்றான். அக்காவிடம் கூட சொல்லாமல் ரெடி பண்ணிட்டியா.....? என்றாள். அப்படியெல்லாம் இல்லை அக்கா ஈவினிங் வந்து உங்களிடம் மாமாவிடம் தம்பி தங்கைகளிடம் செல்லலாம் என்று இருந்தேன் என்றான். இருக்கட்டும் இருக்கட்டும் என்றாள். சரி அக்கா வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

வண்டியை நேராக தமிழின் ஆபிஸிற்கு விட்டான். வரவேற்பில் இருந்த பெண்ணிடம் விசாரித்து விட்டு அவள் அறைக்குள் அனுமதி கேட்டு விட்டு நுழைந்தான். அவனை பார்த்ததும் என்ன பேசுவது எனதெரியாமல் விழித்தாள். குட்மார்னிங் மேடம் என்றான் கூலாக.... அவள் எதுவும் பேசவில்லை. எங்கோ பார்த்தபடி இருந்தாள். ஏன் இந்த கோபம்? தவறு செய்து இருந்தால் தானே கண்ணை பார்த்து பேச தயங்க வேண்டும். நேற்று நடந்ததில் எதுவுமே தவறில்லை என்றான். இப்பொழுது அவனை நேராக பார்த்தாள்.

சரி, கோபம் தீர்ந்து விட்டது இப்போது என்ன...? என்றாள். சமாதானம் செய்யவே வந்தேன் என்றான் அவன். அதான் செய்தாகிவிட்டதே பிறகென்ன..... என்றாள். கூடவே இன்னொரு ரெக்வெஸ்ட் என்றான். என்ன என்பது போல பார்த்தாள். வரும் சன்டே எங்கள் வீட்டிற்கும் வரவேண்டும் என்றான். மறுபடியும் முதல் இருந்தா.....? என்று கூறினாள். உங்களிடம் முதலில் பிரெண்ட் ஆனது நான்தான் அதனால் நியாயப்படி எங்கள் வீட்டிற்கு தான் வந்து இருக்க வேண்டும் என்றான். இது என்ன புது தொந்தரவு என்று மனதில் நினைத்தாள் ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் உள்மனம் போக வேண்டும் என்று சொல்லியது. ஆனாலும் யோசித்து சொல்கிறேன் என்றாள்.

சரி, உங்கள் விருப்பம் ஆனால் கண்டிப்பாக வர வேண்டும் என்றான். கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் .

அவன் அறிமுகம் ஆனதில் இருந்து அவள் மனதில் எண்ணற்ற மாற்றங்கள். அது அவளுக்கே புரியாமல் இருந்தது. இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வேலையை பார்க்க துவங்கினாள்.

இரவு வீட்டிற்கு சென்றதும் அனைவரும் அவனுக்காக காத்திருந்தது உணர்ந்தான் அகிலன். ராசாத்தி அக்கா அனைவரிடமும் சொல்லிவிட்டார்கள் போலும் என்று நினைத்தான். வந்தவனை உள்ளே செல்ல விடாமல் வழிமறித்து அமர செய்தனர்.

என்ன அண்ணா...... அண்ணியை நீயே செலக்ட் செய்துட்ட போல...... என்றாள் தங்கை திவ்யா. அவன் அடுத்து என்ன சொல்லுவான் என்பதை கேட்க ராசாத்தி அக்காவும் ஆர்வமாக இருந்தார். இதற்கு மேல் சாமாளிக்க முடியாது என்று தமிழை சந்தித்தது முதல் அன்று நடந்தது வரை அனைத்தையும் கூறினான். அவளை வீட்டிற்கு அழைத்ததையும் கூறினான். அவன் கூறியது அனைவருக்கும் சந்தோஷமே..... இதை தகுந்த நேரத்தில் அப்பா அம்மாவிடம் கூற வேண்டும் என்று கூறினான்.

இதற்கிடையில் தமிழின் கம்பெனிக்கு ஒரு பாரின் ஆர்டர் வந்திருந்தது. அவள் நிர்வாகத்திற்கு வந்த பிறகு கிடைக்கும் முதல் ஆர்டர் இதுவாகும். இதை அவள்
ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அப்போது தான் அவளின் திறமையை நிரூபிக்க முடியும். உடனே ஹரியை அழைத்து போட்டி கம்பெனிகளின் விவரம் கேட்டாள்.

எந்த டெண்டராக இருந்தாலும் சந்திரா குருப் ஆஃப் கம்பெனி தான் அதிகம் அதை எடுத்துக் கொள்ளும்.எவ்வளவு குறைவாக விலையை கோட் செய்தாலும் அதை விட கம்மியாக கோட் செய்பவள். அதன் நிர்வாகி சந்திரா மிகவும் கர்வம் பிடித்தவள். அவர்களின் தயாரிப்புகள் தரம் குறைவாக இருந்தாலும் அதை அதிக விலைக்கு சந்தை படுத்துவதே இலக்காக கொண்டிருப்பவள். வேலையாட்களை அடிமைகள் போல் நடத்துபவள். இந்த விவரங்களை எல்லாம் ஹரி கூறினான்.

இந்த டெண்டரை வேலையாட்களிடம் விட வேண்டாம் தானே கோட் செய்து அனுப்புவதாக கூறினாள் தமிழ். பிறகு எல்லா விவரங்களையும் கேட்டறிந்து இந்த டெண்டரை அவளே அனுப்பினாள்.

இந்த தடவை அந்த ஆர்டர் அவளுக்கே கிடைத்தது. தன்னுடைய ஆபிஸிலேயே யாரோ உளவு வேலை பார்ப்பதாக தோன்றியது. இருந்தும் இதை அப்பொழுது அவள் வெளியே காட்டிக் கொள்ள வில்லை.

எப்பொழுதும் போல் அன்பும் தனக்கான வேலைகளில் மும்முரமாக இருந்தாள் தமிழ். யாரோ நிற்பது போல் நிழலாடவே நிமிர்ந்து பார்த்தாள். அனுமதியின்றி ஒருத்தி உள்ளே வந்து நின்றிருந்தாள். பார்த்ததுமே தெரிந்தது மிகவும் திமிர் பிடித்தவள் என்று. யார் வேண்டும்....? என்ற தமிழின் கேள்விக்கு திமிராக பதில் வந்தது.

உன்னால் என் கம்பெனியின் மார்க்கெட் சரிந்து விட்டது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆர்டரை தட்டி பறித்தது நீ..... என்றாள்.

ஓ.... நீ தான் சந்திரா குருப் ஆஃப் கம்பெனியின் ஓனர் சந்திராவா......? கொஞ்சம் திமிர் ஓவராக தான் இருக்கும் போல என்றாள்.

என் திமிரின் அளவை நீ சோதிக்க வேண்டியதில்லை என்றாள்.

ஆமாம்.... ஆமாம்.... அதான் பார்த்தாலே தெரிகிறதே..... பின்பு எதற்காக சோதிப்பது என்றாள்.

தேவையில்லாமல் பேசுகிறாய் என்றாள் சந்திரா.

நான் பேசுவது தேவையில்லை என்றால் பின்பு எதற்காக என்னிடம் வந்தாய்.....?என்றாள்.

உனக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்றாள்.

முதலில் அந்த நல்ல பாடத்தை நீ படி என்றாள்.

உன்னை......... பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்றாள் சந்திரா.

அப்புறம் ஏன் இங்கே நிற்கிறாய்...? என்று பதிலுரைத்தாள் தமிழ்.

என்ன சொல்வது என்று தெரியாமல் ஆவேசமாக கிளம்பியவளை கேலியான சிரிப்போடு பார்த்து கொண்டிருந்தாள் தமிழ்.

அடுத்த நாளே இவளை பற்றிய தகவல்களை எல்லாம் சேமித்து தர சொல்லி ஹரிக்கு உத்தரவு பிறப்பித்தாள்.
அவள் சொன்ன அடுத்த ஓரிரு நாளில் கொண்டு வந்து சேர்த்தான் ஹரி.


மலரும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top