கற்பூர முல்லை Episode 7

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
அனைவரும் பவித்ரா வின் அறையில் இருந்தார்கள். அகிலன் மற்றும் தமிழ் வெளியே இருந்தார்கள். இருவருக்கும் இடையே மௌனம் இருந்தது. அதை கலைத்து வாய் மொழி பேசினாள் தமிழ் .


இரவு எவ்வளவு நேரம் ஆகுமோ...? என்பதால் டிரைவரையும் காரை கொண்டு போய் வீட்டில் விட்டு செல்லுமாறு கூறிவிட்டாள் தமிழ். இனி டாக்சி பிடித்து தான் செல்ல வேண்டும். அதனால், சரி..... ரொம்ப நேரமாகிவிட்டது. நான் போகிறேன் என்றாள் தமிழ். இல்லை வாருங்கள் சாப்பிட்டு விட்டு போகலாம் என்றான். அவள் மறுக்கவே மிகவும் வேண்டி கேட்டுக் கொண்டான். அதனால் சரி என்றாள். இருவரும் ஹாஸ்பிடல் கேன்டீன் நோக்கி நடந்தார்கள்.

அங்கு முன்பக்கம் போடப்பட்டு இருந்த மேஜையில் எதிரெதிரே அமர்ந்தனர். சர்வர் வந்ததும் உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டான். என்ன இருக்கு என்று அவள் கேட்டதும் இட்லி, தோசை மட்டும் இருக்கிறது மற்றவை எல்லாம் தீர்ந்து விட்டது என்றான். இட்லி மட்டும் ஆர்டர் செய்தாள். அவனும் அதையே ஆர்டர் செய்தான்.

இதற்கிடையே தமிழை பற்றி விசாரித்தான் அகிலன். அவளும் எல்லாவற்றையும் கூறினாள். பிறகு அகிலன் தன்னை பற்றி கூறினான். அவன் போலீஸ் என்றதும் ஒரு போலீஸ் ஆபிஸசரால் இவ்வளவு மென்மையாக கூட நடந்து கொள்ள முடியுமா.... என எண்ணினாள். அவன் குடும்பம் பற்றியும் கூறினான். ஆர்டர் செய்தது வந்ததும் சாப்பிட்டு முடித்தார்கள். பில் தொகையை தமிழே கொடுக்க முன்வந்த போது அகிலன் மறுத்து தானே கொடுத்தான்.


சாப்பிட்டு வெளியில் வந்ததும் எப்படி போவீங்க தமிழ்.....? என்றான். நேரம் ஆகிவிட்டதால் டிரைவரை வீட்டுக்கு அனுப்பி விட்டேன் இனி டாக்ஸி பிடித்து தான் செல்ல வேண்டும் என்றான். முன்பின் தெரியாத ஊரில் இந்த இரவு நேரத்தில் டாக்ஸியில் செல்வது நல்லதல்ல என்றான். அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்ததும் சற்று தயங்கினாள். ஆனாலும் மறுத்தாள். என் மேல் நம்பிக்கை இல்லையா தமிழ் ....? என்று ஒருமையில் கேட்டான். அப்படி இல்லை என்றாள். பிறகென்ன தயக்கம் வாருங்கள் நான் டிராப் செய்கிறேன் என்றான். பவித்ரா அவன் நம்பரை அண்ணா என்று சேவ் செய்திருந்தது, டாக்டர் அவனிடம் பேசிய விதம் எல்லாவற்றையும் யோசித்து பார்த்து சரி என்றாள். பிறகு அவனுடன் வண்டியில் கிளம்பினாள்.

இவள் அட்ரஸ் சொன்னவுடன் கரெக்டாக டிராப் செய்தான். இறங்கியவுடன் தேங்கஸ் என்றாள். நான் தான் தேங்கஸ் சொல்ல வேண்டும் கூட்டி வந்து சேர்த்தது மட்டுமல்லாது இவ்வளவு நேரம் கூடவே இருந்தது ஹெல்ப் பண்ணியதற்கு. இதற்கெல்லாம் என் நண்பன் தான் நன்றி சொல்ல வேண்டும் அதற்கு பதில் நான் சொல்கிறேன் என்றான். நன்றி எல்லாம் வேண்டாம் என்று தன்னடக்கமாக சொல்லிவிட்டு நான் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றாள். அவள் போன பின்பும் சற்று நேரம் அவள் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் மறைந்த பின்பே கிளம்பினான்.

ஆஸ்பத்திரிக்கு சென்று சேர்ந்ததும் அப்பொழுது தான் இந்த உலகத்திற்கு வந்தவன் போல் பவிக்கு ஹெல்ப் பண்ணிய அந்த பெண் எங்கே.....? என்று கேட்டான். பரவாயில்லை இப்பொழுதாவது நினைவு வந்ததே..... என்று கிண்டலடித்தான் அகிலன். இல்லை அகில், சந்தோஷத்தில் அந்த பெண்ணை மறந்தே விட்டேன் என்றான். பரவாயில்லை என் நண்பன் செய்ய வேண்டியதை நானே செய்து விட்டேன் என்றான். நீதான் என் ஆருயிர் தோழன் என்று அணைத்து கொண்டான். அந்த பெண்ணிடம் போன் நம்பர் வாங்கினாயா என்று கேட்டான் குமார். ஏன் மறுபடியும் ஏதாவது உதவி தேவைபடுகிறதா......? என்று காமெடியாக கேட்டான். இல்லைடா நம் வீட்டிற்கு ஒரு மதிய உணவுக்கு வர சொல்லலாம் என்று தான் கேட்டேன் என்றான். அதற்கென்ன...? அப்படியே செய்துவிடலாம் என்றான்.

வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக குளித்துவிட்டு படுக்கையில் வீழ்ந்தாள் தமிழ். இன்று ஏனோ மனம் நிறைவாக இருந்தது. அவளுக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்ததால் இன்னைக்கு நடந்தவற்றை டைரியில் பதிவேற்றினாள்.

அடுத்த சில நாட்களில் சொன்னது போலவே தமிழை சாப்பிட அழைக்குமாறு
குமார் அகிலனிடம் கூறினான். என்னிடம் நம்பர் இல்லை நேரில் தான் போக வேண்டும் என்று கூறினான். என்னடா.... நிஜமாகவே நம்பர் இல்லையா.... என்று நம்பாமல் கேட்டான். இல்லைடா முன்பின் அறிமுகம் இல்லாத ஆணிடம் எந்த பெண் நம்பர் தருவாள்.....? என கேட்டான். அதுவும் கரெக்ட் தான் சரி நீ நேரிலேயே சென்று சொல்லிவிட்டு வந்திரு என்றான். சரி நாளை ஆபிஸிலேயே சென்று பார்த்து விட்டு விஷயத்தை சொல்லி வருகிறேன் என்றான்.


ஆனால் அடுத்த நாள் வேலை காரணமாக போக முடியவில்லை. அதற்கு அடுத்த நாள் அவள் அன்றைக்கு கூறிய விவரங்களை வைத்து ஆபிஸை தேடி சென்றான். வெளியே செக்யூரிட்டியிடம் விசாரித்து கொண்டு உள்ளே நுழைந்தான். ரிசப்ஸனில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தமிழை பார்க்க வேண்டும் என்று கூறினான் உடனே நாக்கை கடித்து கொண்டு தமிழ் மேடமை பார்க்க வேண்டும் என்றான்.ப்ளிஸ் வெயிட் சார் என்றாள். சரி என்று அமர்ந்தான். ஏன் இப்படி தன்னையே மறந்து அவளை ஒருமையில் அழைக்கிறோம் என்று தெரியவில்லை என்று மனதில் நினைத்தான்.


இரண்டொரு நிமிடங்களில் ரிசப்ஸன் பெண், சார்.... நீங்கள் இப்போது உள்ளே போகலாம் என்றாள். தேங்க்யூ என்று சொல்லிவிட்டு, சென்று அவளின் அறைக்கதவை தட்டினான். எஸ் கம் இன் என்று அவள் சொல்லவும் உள் நுழைந்தான்.

அன்று புடவையில் இருந்தவள் இன்று மஞ்சள் கலரில் பூ போட்ட காட்டன் சுடிதாரில் இருந்தாள். புல் ஹேண்ட் வைத்து தைத்து ஒன்சைடாக ஷால் போட்டு இருந்தாள். அது அவளின் நிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. தமிழ் அவ்வளவு நிறம் கிடையாது மாநிறத்தை விட கொஞ்சம் கூடுதலான சிவப்பு நிறம். அதைவிட கூடுதலாய் கேசம். அது அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

லேப்டாப் ல் ஏதோ பார்த்துக்கொண்டு இருந்தவள் இவனை பார்த்ததும் மகிழ்ச்சியாகி வாங்க சார்..... உட்காருங்கள் என்றாள். அவனும் அமர்ந்தான். எப்படி இருக்கீங்க தமிழ்.... ? என்றான். ஓ.. ..சூப்பர் நீங்கள் எப்படி இருக்கீங்க.....? என்றாள். மிக்க நலம் என்றான் அவன். அப்புறம் உங்கள் நண்பர், அவரின் மனைவி குழந்தை எல்லாம் நலமா....? என கேட்டாள். அனைவரும் நலம் என்றான்.

என்ன சார் இந்த பக்கம்...? ஏதாவது கேஸ் விஷயமாகவா....? என்றாள். இல்லை உங்களை தான் பார்க்க வந்தேன் என்றான்.
என்னைப் பார்க்கவா...? என்ன விஷயம் என்றாள். என் உடன் பிறவா சகோதரியும் அவள் கணவனும் உங்களை விருந்துக்கு அழைத்து இருக்கிறார்கள் அதற்கு கூப்பிடவே இங்கு வந்தேன் என்றான். விருந்தா......ஏதாவது விசேஷமா....? என்றாள். இல்லை உங்களுக்காக மட்டுமே இந்த விருந்து என்றான். அன்றைக்கு சிறு நன்றி கூட சொல்லவில்லையாம் அதனால் இப்படி ஒரு ஏற்பாடு என்றான். அதனால் என்ன சார் பரவாயில்லை இது சிறு உதவி தானே.... என்றாள். அதனால் விருந்தெல்லாம் வேண்டாம் என்றாள். இல்லையில்லை நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும் என்றான். அவரே விட்டாலும் நீங்கள் விட மாட்டீர்கள் போல என்றாள். அவன் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தான்.

சரி வருகிறேன். எப்போது? என்றாள். வரும் ஞாயிறு அன்று என்றான். சரி. கண்டிப்பாக வருகிறேன் உங்கள் நண்பரிடம் கூறி விடுங்கள் என்றாள். ஓ.கே நான் வந்த வேலூர் முடிந்தது. கிளம்புகிறேன் என்றான். இருங்கள் இப்பொழுது தான் முதல் முறையாக ஆபிஸ் வந்திருக்கிறீர்கள் ஏதாவது சாப்பிட்டு விட்டே செல்ல வேண்டும் என்றாள். சரி காப்பி மட்டும் போதும் என்று செல்லவே காப்பியை வரவழைத்தாள்.

அதற்கிடையே மேனேஜரை கூப்பிட்டு சில வேலைகளை கொடுத்தாள். அந்த சமயத்தில் அவள் அறியா வண்ணம் அவளை ரசித்தான். பின்பு தான் ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று நினைத்து காப்பாய் குடித்து முடித்தான். பிறகு நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு அவளின் நம்பரை கேட்டான். அவள் சந்தேகமாக பார்க்கவே குமாரின் வீட்டு அட்ரஸ் அனுப்புவதற்கு என்றான். போலிஸையே சந்தேகப்படாதீர்கள் மேடம் என்று கூறினான். அவள் நம்பர் குடுத்ததும் பை சொல்லிவிட்டு கிளம்பினான்.

இரவு வீட்டிற்கு சென்றதும் சமையல்காரம்மா செய்த டிபனை சாப்பிட்டாள். அந்த அம்மா போனதும் காயூவிற்கு போன் செய்தாள். தினமும் இரவு காயூவிற்கும் கால் செய்வது வழக்கம். இல்லையென்றால் சண்டை போட்டு விடுவாள் அவள். இன்று நடந்தவற்றையெல்லாம் அப்படியே கூறினாள். ஹெல்ப் பண்ணியதற்கு நன்றி சொல்லலாம் ஆனால் விருந்தெல்லாம் ஓவராக இருக்கிறதே என்றாள். சரி, போவதாக இருந்தால் பார்த்து பத்திரமாக போய் வா. என்றாள். பின்பு ஆபிஸ் விஷயமாக சிறிது பேசிவிட்டு குட் நைட் சொல்லி போனை துண்டித்தார்கள்.

பிறகு வாட்ஸ் ஆப் பார்த்து கொண்டிருந்தாள். அதில் ஒரு புதிய எண்ணிலிருந்து அட்ரஸ் வந்திருந்தது. கீழே அகிலன். திஸ் இஸ் மை நம்பர் என்று போட்டிருந்தது. அதை தவிர ஒரு வார்த்தை கூட அதிகமாக போட வில்லை. இதுவே அவன் மேல் மரியாதையை வரவழைத்து இருந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜீவிதா ராம் பிரபு டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Epadi potathum reply pandringa
லஞ்ச் ஒர்க் முடிச்சுட்டு வந்ததும் உங்களுடைய அப்டேட் பார்த்தேன்
உடனே ரிப்ளை பண்ணினேன், ஜீவிதா டியர்
ஆனால் இன்னும் கொஞ்சம் வேலை இருந்ததால் இப்போத்தான் அப்டேட் படிக்க முடிஞ்சது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top