கற்பூர முல்லை Episode 5

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 5

அன்று சனிக்கிழமை. தமிழ், துணிகளை எல்லாம் பேக் செய்து கொண்டிருந்தாள். காயத்ரியும் உடனிருந்தாள். அவள் சென்னை செல்வதால் அவளுக்கு மட்டும் அன்று விடுமுறை. இன்று இரவு 10 மணிக்கு அவளுக்கு ரயில். சுந்தரே ஆன்லைனில் டிக்கெட் புக் செய்திருந்தான். கைலாஷ் ம் சுந்தரும் இரவு நேராக ரயில் நிலையம் வருவதாக கூறியிருந்தார்கள்.
காயூவிற்கு கவலை இருக்க தான் செய்தது இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

அங்கே போயிட்டா ஒரு குஷி தான் அப்போது மேடம் க்கு என்னையெல்லாம் ஞாபகம் இருக்குமா.......? என காயூ கிண்டலாக கேட்டாள். நான் மட்டும் தான் அங்கே போகிறேன் என்னுடைய நினைவு, இந்த வீடு எல்லாம் இங்கேயே தான் இருக்க போகுது அதையெல்லாம் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ.... என்றாள்.


வீட்டை அவள் காலி செய்யவில்லை தான் இங்கு வந்தால் தங்குவதற்கு இருக்கட்டும் என விட்டு வைத்திருந்தாள். அதனால் வெறும் துணிகள், சர்டிபிகேட், மற்றும் அவளுடைய டைரிகள் இதை மட்டுமே எடுத்து வைத்திருந்தாள். இரவு வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு கிளம்ப யத்தனிக்கும் போது கரெக்டாக கைலாஷ் ம் வந்து விட்டான். நீ நேராக ஸ்டேஷனுக்கு வருவதாக சொல்லி இருந்தாயே...... என்ன இந்த பக்கம்? என்று காயத்ரி வினவினாள். ஒன்றுமில்லை சும்மா தான் எனக் கூறிவிட்டு கைலாஷ் அமைதியாக இருந்தான்.


அவனுக்கும் தமிழ் சென்னை செல்வது பிடிக்கவில்லை தான். அக்கா என்று கூப்பிடவில்லையே தவிர உடன் பிறவா சகோதரி என்று நினைத்தே பழகினான். காயத்ரி எப்படியும் சுந்தரிடம் பேசி தமிழ் இங்கிருக்க வழி செய்வாள் என நினைத்தான். அதுவும் தோல்வியில் முடிந்து விடவே இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான். அவன் முகவாட்டத்தை கண்டு காயத்ரி தான் அவனை தேற்றினாள். ஒருவழியாக மூவரும் கிளம்பினர்.


தேன்தமிழ் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லி கொண்டு புறப்பட்டாள். இவர்கள் இருவரும் காரில் செல்ல கைலாஷ் பைக்கில் பின் தொடர்ந்தான். மூவரும் ரயில் நிலையத்தை அடைந்தார்கள். அங்கே சுந்தர் இவர்களுக்காக காத்திருந்தான்.


இன்னும் ரயில் வரவில்லை. பத்து நிமிடம் இருந்தது. நேரம் செல்ல செல்ல காயத்ரிக்கு கண்களில் நிறைந்து இருந்தது. ஆனாலும் கொஞ்சம் கட்டு படுத்தி கொண்டாள். இது தமிழுக்கும் புரிந்தது. ஆனால் என்ன செய்வது வேறு வழியில்லை எனும் பட்சத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.


எல்லாம் சரிபார்த்து எடுத்துக் கொண்டீர்களா.....? என சுந்தர் கேட்டான். எல்லாம் எடுத்தாகி விட்டது என்று தமிழ் கூறினாள். நீங்கள் அங்கே சென்றதும் தீபக் வீட்டிலேயே தங்கி கொள்ளலாம். அவன் குடும்பத்துடன் இருப்பதால் உங்களுக்கு பிரச்சினை ஏதும் இராது. நீங்கள் அங்கு சென்றதும் உங்களுக்கு கம்பெனி நிர்வாகத்தின் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு அவன் குடும்பத்தோடு பாரின் சென்று விடுவான் என்று கூறினான். இவர்கள் பேசிக் கொண்டிருக்கவே ரயிலும் வந்து விட்டது.


ரயில் வந்ததும் கைலாஷே அனைத்தையும் எடுத்து வைத்தான். அவளுக்கு பிடித்தமான ஜன்னல் சீட்டே கிடைத்து இருந்தது. நால்வரின் நிலையும் வேறாக இருந்தது.


சுந்தர் அனைத்தையும் சொல்லி முடிந்த திருப்தியில் இருந்தான். காயத்ரிக்கு சொல்ல முடியா துக்கம் தொண்டையை அடைத்தது. கைலாஷ் நிலையோ வருத்தம் இருந்தாலும் வெளிக்காட்டாமல் மௌனமாக நின்றான். தமிழுக்கு சென்னை புதிது. இதற்கு முன் பின் சென்றதில்லை. தெரியா ஊருக்கு பயணம் அதுவும் தனியே...


கைலாஷ் எல்லாம் எடுத்து வைத்த பின் தமிழ் சென்று சீட்டில் அமர்ந்தாள். மூவரும் வெளியே நின்றிருந்தனர். ரயில் கிளம்ப தயாரானது. காயூவிற்கு பேச்சே வரவில்லை. பத்திரமாக போ.... சென்றதும் போன் பண்ணு..... இதுவே மூவரின் மொழியாக இருந்தது. அனைத்திற்கும் சரி என்றாள். ரயில் கிளம்பி விட்டது.


தமிழிற்கு தன் வாழ்க்கை எங்கோ முகமறியா மனிதர்களிடத்தில் கூட்டி செல்வது போன்ற உணர்வு. தான் பிறந்து வளர்ந்த நகரை விட்டு வேறு இடம் செல்வோம் என்று துளியும் நினைத்ததில்லை. இன்று அதுவே உண்மையாகிப் போனது. நினைவுகளுக்குள் தன்னை தொலைத்தவளை மீட்டெடுக்க செய்தது எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்த அம்மாவின் கையில் இருந்த குழந்தையின் அழுகுரல்.


இவளுக்கு எதிரே இருந்த ஜன்னல் சீட்டில் ஒரு வயதான பெண்மணி உட்கார்திருந்தார். அந்த பெண்மணியை ஒட்டியவாறே ஒரு கூட்டுக் குடும்பம் அமர்ந்து இருந்தது. அந்த குடும்பத்தின் குழந்தைதான் தனக்கு ஜன்னல் சீட்டு வேண்டும் என்று அடம் பிடித்து கொண்டிருந்தது. அவர்களும் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தார்கள். உடனே தமிழ் அக்குழந்தையை வாங்கி மடியில் அமர்த்தி கொண்டாள். உடனே குழந்தை அழுகையை நிறுத்தி கொண்டது. அவளுக்கும் குழந்தைகள் மிக பிடிக்கும் என்பதால் வேடிக்கை காட்டி கொண்டே வந்தாள். குழந்தைகள் தன்னையறியாது தூங்கி இருந்தது. குழந்தையை குடுக்க நினைத்த போது அதன் அம்மா எடுத்தால் எழுந்து விடுவாள் அதனால் நீங்களே வைத்திருங்கள் என்று சொன்னார்கள். அவளுக்கும் அது பிடித்து இருந்தது. குழந்தையை மடியில் வைத்தவாறே அவளும் உறங்கினாள்.


சென்னை சென்றடைய இன்னும் சற்று நேரமே இருந்தது. பனியின் குளிர்ச்சியாய் சில்லென்ற காற்று முகத்தில் பட கண் விழித்துக் தமிழ். குழந்தை இன்னும் எழவில்லை. குழந்தையின் தாய் குழந்தையை பெற்று கொள்ள, தமிழ் தன் உடமைகளை சரி பார்த்து கொண்டாள். ஸ்டேஷனில் இறங்கியவுடன் தீபக் கார் அனுப்புவதாக கூறியிருந்தான். அதற்கு முன்னரே தமிழ் அலுவலக விஷயமாக தீபக்கிடம் பேசி இருக்கிறாள். ஆனால் நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை.


பொழுது புலர்ந்து ரயில் சென்னை சென்றடைந்தது. ரயில் நின்றதும் தமிழ்
இறங்கினாள்.மக்கள் கூட்டம் சற்று நெரிசலாகவே இருந்தது. பலவிதமான மக்கள், வியாபாரிகள் எல்லாவற்றையும் கடந்து பிளாட் பாரத்தையும் கடந்து வெளியில் வந்ததும் திபக் கிற்கு போன் செய்யலாம் என்று இருந்தாள். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் தீபக் கே எதிரில் வந்து இருந்தான். ஹாய்..... தமிழ் எப்படி இருக்கீங்க....? என்றான். நல்லா இருக்கேன் மிஸ்டர் தீபக், நீங்க எப்படி இருக்கீங்க....? என்றாள். ஓ.......சூப்பர்...என்றான். மற்றவை வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம் என்று கூறவே இருவரும் காரில் ஏறி தீபக் வீட்டிற்கு சென்றனர்.



தீபக் ன் குடும்பம் மிகவும் சிறியது. தீபக், அவனின் காதல் மனைவி சான்வி. அவர்களின் குழந்தை பார்கவி என மூவர் மட்டுமே. இருவரின் பெற்றோர்களும் வெளிநாட்டில் செட்டிலானதால் இவர்களும் செல்ல தீர்மானித்தனர். அதன் பொருட்டே தமிழ் இங்கு வந்தது.


தமிழ் காரில் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். சிறிது நேரத்திலேயே தீபக் வீடு வந்திருந்தது. காரிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்ததும் தீபக் மனைவி சான்வி எதிர்பட்டாள். தமிழை பார்த்ததும் அன்புடன் நலம் விசாரித்தாள். கூடவே அவளின் குழந்தையையும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.


தமிழ் இங்கு உங்களுக்கு ரூம் இருக்கிறது நாங்கள் இருக்கும் வரை நீங்கள் அதை யூஸ் செய்து கொள்ளலாம். நாங்கள் சென்றவுடன் இந்த வீடே உங்களுடையதுதான். இந்த நீங்கள் விரும்பும் போது எங்களிடம் ஒப்புவித்தால் போதும் என்றான். நாங்கள் சென்ற பிறகு உங்களுக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகளை செய்ய ஓர் பெண்ணை நியமித்து இருக்கிறேன் அவங்க பார்த்துகுவாங்க என்றான்.


நீங்கள் இப்போது பிரெஷ் ஆகி விட்டு வாருங்கள் இருவரும் சேர்ந்தே ஆபிஸ் செல்லலாம் என்றான். அவளும் சரியென்று ரூமிற்குள் சென்றாள். வீட்டை போலவே ரூமும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. குளித்து உடைமாற்றி அழகான காட்டன் புடவையில் வந்தாள். அதற்குள் சான்வி காலை உணவை ரெடி பண்ணி இருந்தாள்.


தீபக், தமிழ் இருவரும் பேசிக்கொண்டே உணவு உண்டனர். சான்வியின் கை பக்குவம் நன்றாக இருந்தது. அவளே இருவருக்கும் பரிமாறினாள். பின்னர் இருவரும் அலுவலகம் சென்றனர்.


சென்றதும் முதல் வேலையாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான் தீபக். பிறகு வேலை சம்பந்தமாக அனைத்தையும் சொன்னான். மேனேஜர் ஹரி யை அழைத்து கணக்கு விவரங்களை எடுத்து செல்லுமாறு கூறினான். அதையெல்லாம் ஆராய்ந்து பார்த்த போது திபக் மேல் இன்னும் மரியாதை கூடியது. அவ்வளவு சிறப்பாக நிர்வாகத்தை நடந்தி இருந்தான். ஆச்சரியப்பட்டு அவனிடம் கேட்டே விட்டாள். எப்படி இவ்வளவு கரெக்டாக மெயின்டென் பண்ண முடிந்தது என்று...? கற்றுக் கொண்டால் மிகவும் சுலபம் தமிழ் என்றான். இவர் அளவுக்கு சிறப்பாக செய்வோமா......? என்று தமிழ் மலைத்தே விட்டாள்.

அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது சென்று சேர்ந்ததும் போன் பண்ணு.... என்று சொன்னவர்கள் யாருக்குமே இவ்வளவு நேரமாகியும் போன் செய்ய வில்லை என்று.... இதை திபக்கிடம் கூறியபோது நான் அப்பொழுதே சொல்லிவிட்டேன் தமிழ்
என்றான். ஏற்கனவே அங்கு போனால் எங்களையெல்லாம் மறந்து விடுவாய் என்று கிண்டலடித்துக் கொண்டு இருந்தாள் இப்பொழுது செம கோபமாக இருப்பாள் என்று தோன்றியது.உடனே போன் செய்து சமாதான படுத்தலானாள்.




தொடரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top