கற்பூர முல்லை Episode 2

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 2

தேன்தமிழ் வேலை செய்வது காரின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி. கோவை நகரின் மிகப்பெரிய
கம்பெனிகளில் அதுவும் ஒன்று. இந்த கம்பெனியின் பெரிய முதலாளி வரதராஜன். அவருக்கு இரண்டு பிள்ளைகள். முதல் மகன் சுந்தர். பொறுப்பில் மிகவும் கெட்டிக்காரன். இரண்டாவது பெண். பெயர் பூஜா. ஆங்கில இலக்கியம் எடுத்து கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.


வெளிநாடு சென்று படித்து பட்டம் பெற்று திரும்பியவன் சுந்தர். திரும்பிய கையோடு திருமணத்தையும் நடத்தி முடித்து, கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வந்த கம்பெனியை முதுமையில் காரணமாக தற்போது தனது பெரிய மகனின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டார்.அவனும் தன் திறமையால் அதை முன்னணி நிறுவனமாக நடத்தி வந்தான்.



அன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் பணி கொஞ்சம் அதிகமாக இருந்தது தேன் தமிழுக்கு. அலுவலகத்தில் அவளுக்கு கீழ் பொறுப்பில் இருப்பவன் கைலாஷ். அவளை விட வயதில் சிறியவன். மிகவும் திறமையானவன். அவன் அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் செய்த சிறு தவறுகளை எல்லாம் சுட்டி காட்டி அவனை திறமையானவனாக மாற்றியதில் தமிழுக்கு பெரும் பங்கு உண்டு. இருவருக்குள்ளும் அழகான நட்பு இருந்தது.


அன்றைய நாளுக்கான அலுவல்களை கைலாஷிடம் சொல்லிக்கொண்டு இருந்த போது அவளுடைய செல்போன் சிணுங்கியது. உங்களின் ஆஸ்தான தோழியாக தான் இருக்கும் என்ற கைலாஷின் கூற்றோடு செல்போனை பார்த்தவளுக்கு அவன் சொன்ன மாதிரி அது தன்னுடைய தோழி காயத்ரியாக இருந்தது. இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். காயத்ரியின் அப்பா பெரிய செல்வந்தர். பணத்திற்காக பலர் அவளுடன் நட்பு பாராட்டினாலும் இவளின் எளிமை கண்டு இவளுடன் நட்பு கொண்டவள். இப்போதும் நெருங்கிய தோழிகளாகவே இருந்து வந்தனர். தற்போது அப்பாவின் தொழிலையே நிர்வகித்துக் கொண்டு இருக்கிறாள். காயத்ரிக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.


கைலாஷ் க்கு சொல்லி முடித்து விட்டு செல்போனை எடுத்து ஹலோ என்றாள். என்னடி, போன வாரம் சொன்னது மறந்திடுச்சா....? என்றாள். என்ன என்று யோசித்தவளுக்கு இன்று அவளின் மூன்று வயது பெண் குழந்தைக்கு அடுத்த வாரம் வரும் பிறந்த நாளிற்காக துணி எடுக்க இன்று செல்லலாம் என்று அவள் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அச்சோ.... மறந்தே போய்விட்டது. இன்னைக்கு ஈவினிங் போலாமா.....? என்று கேட்டாள். சரி என்று சொன்னதும் இணைப்பை துண்டித்து விட்டு அலுவல்களை பார்க்க தொடங்கினாள்.


தேன் தமிழுக்கு காயத்ரி, கைலாஷ், அலுவலகம் இதை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது. காயத்ரி யை அலுவலகத்தில் அனைவருக்கும் தெரியும். அடிக்கடி வந்து செல்வாள். இப்படி ஒரு இணைபிரியா தோழிகளா....? என்று அலுவலகமே வியந்த நாட்களும் உண்டு.


சொன்னது போலவே ஈவினிங் அலுவலகத்திற்கே வந்துவிட்டாள் காயத்ரி குழந்தையோடு. கைலாஷ், பார்த்துவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டான். குழந்தையிடம் விளையாடிக் கொண்டே இன்று எங்கே விஜயம்? என்று கேட்டான்.
கேட்டவனிடம் பதில் சொல்லிக் கொண்டே அவனது டேபிளிலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தாள்.
அதற்குள் தமிழும் வந்து விடவே இருவரும் கிளம்பும்போது நானும் வருகிறேன் என்று அவர்களிடம் கிளம்பினான். நீ எதற்கு எங்கே என்று கேட்ட காயத்ரியிடம் நானும் என் கேர்ள் பிரெண்ட் க்கு டிரஸ் வாங்க என்று விளையாட்டாக கூறினான். மாமா..... அது யாரு என்று கேட்டாள் காயத்ரியின் குழந்தை மோனிஷா. அதுவா குட்டி மாமா க்கு இனிமேல் வரபோற கேர்ள் பிரெண்ட் க்கு என்று கூறினான். சரி என்று மூவரும் கிளம்பினர். மோனிஷா கைலாஷ் உடன் பைக்கில் வருகிறேன் என்று அடம் பிடித்தாள். உடனே கைலாஷ் குழந்தையை பைக்கில் ஏற்றிக் கொண்டான்.தோழிகள் இருவரும் காயத்ரியின் காரில் ஏறிக் கொண்டார்கள். வாடிக்கையாக எந்த கடைக்கு போவார்கள் என்று தெரியவே கைலாஷ் அந்த கடைக்கு வண்டியை செலுத்தினான்.


நகரின் மிகப்பெரிய கடை அது. தோழிகள் இருவரும் முன் செல்ல குழந்தையை தூக்கிக் கொண்டு கைலாஷ் பின்னே சென்றான். குழந்தைகள் செக்ஸன் க்கு சென்றார்கள். நிறைய பார்த்து விட்டு கடைசியில் ரோஜா வண்ண நிறத்தில் இருந்த கவுன் ஒன்றை தேர்வு செய்தார்கள். அடுத்து புடவை பிரிவிற்கு சென்றனர். அங்கே காயத்ரி இருவருக்கும் புடவைகளை அவளே செலக்ட் செய்தாள். தமிழ் வேண்டாம் என்றும் மறுத்தும் அவள் விடவில்லை. அவளுக்கு மஞ்சள் நிற மயிலிறகு டிசைன் போட்ட புடவை, தமிழுக்கு இளம் பச்சை நிறத்தில் இருந்த பூ போட்ட புடவையை செலக்ட் செய்தாள்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த கைலாஷ் உங்க பிரெண்ட் க்கு மட்டும் தான் டிரெஸ் எடுப்பீங்களா எனக்கு இல்லையா என்றான். இல்லாமல் என்ன? என்ன வேண்டுமோ எடுத்துக்கோ என்றாள் காயத்ரி. பிறகு அவனே செலக்ட் செய்து ஒரு ஷர்ட் எடுத்தான். எல்லாவற்றையும் சேர்த்து பில் போட காயத்ரி பணம் கொடுத்தாள். பிறகு கடைக்கு வெளியே வந்தார்கள்.

அனைவருக்கும் நல்ல பசி. அங்கே பக்கத்தில் இருந்த ஹோட்டல் க்கு சென்று சாப்பிட அமர்ந்தார்கள். குழந்தை பூரி, மசால் தோசை கேட்டாள். பெரியவர்கள் அனைவரும் இட்லி தோசை என்று ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டதும் மூவரும் காரில் ஏற கைலாஷ் வண்டியில் ஏறினான்.

பிறகு தமிழ் வீட்டிற்கு கூப்பிடவே கைலாஷ், காயத்ரி இருவரும் வந்தனர். வீட்டிற்கு வந்ததும் மூவருக்கும் பால் சூடு செய்து கொடுத்தாள். பால் குடித்ததும் இருவரும் கிளம்பினர். தூக்க கலக்கத்தில் இருந்த மோனிஷாவை கைலாஷ் தூக்கி கொண்டு வந்து காரில் படுக்க வைத்தான். பின்பு தமிழிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.


கதவை தாழிட்டு விட்டு உள்ளே வந்து சாமான்களை எல்லாம் ஒழுங்கு செய்து, சேலையை கலைந்து விட்டு நைட்டிக்கு மாறி படுக்கையில் விழுந்தாள் தமிழ். அன்றைய நாளின் நிகழ்வுகள் நிழலாட அவளை அறியாமலேயே உறக்கம் கொண்டாள்.





தொடரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top