கருவறை சொந்தம் - புக் ரிலீஸ்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
19. ஆர்த்தி டியரின் மூதாட்டி

மருந்துச் சீட்டுடன் பணம் தொலைந்தது தெரியாமல் பஸ்ஸில் ஏறிய ஒரு மூதாட்டியைப் பற்றிய சிறுகதை நல்லவேளையாக பயணச்சீட்டு வாங்குமுன் பாட்டி இறங்கவேண்டிய இடமும் வந்துவிட்டது

செக்கிங்குக்கும் ஆள் வரலை

அப்பாடா பாட்டியும் தப்பித்தார்

கண்டக்டரும் தப்பித்து விட்டார்

காதலென்னும் ஆல விதை நாவல்

20. HANA RAVIN ஹனா ராவின் டியரின் காதல்

ஒரு ஆணோ பெண்ணோ ஒரே பாலரிடம் எப்படி காதல் வரும்?

ஒரு ஆண் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துக்க முடியும்

ஒரு பெண் ஆணைத்தான் கல்யாணம் செய்துக்க முடியும்

செய்யணும்=ங்கிற பழைய கலாச்சாரத்தில் மட்டுமே எனக்கு நம்பிக்கை இருக்கு

இந்த காலகட்டத்தில் நடக்கும் இந்த மாதிரியான கண்றாவிகள் எனக்கு பிடிப்பதில்லை

சாரி நான் கொஞ்சம் பழமையான ஆளு ஹனா ராவின் டியர்

ஒரு குழந்தைக்கு பேச்சு வரும்பொழுது அம்மாவை அம்மா-ன்னு கூப்பிட்டுவிட்டு வயதான பின்னர் மாற்றி அம்மாவை மாமி or அத்தை என்று அழைப்பதில்லை எப்பொழுதுமே வாயால் தான் சாப்பிடுகிறோம்

அதை ஏன் மாற்ற நினைக்கிறீர்கள் என் இனியத் தோழிகளே

Jaa Sha டியரின் ஒரு குட்டி மொக்க கதை

இந்த சிறுகதைக்கு பேர் இல்லையாப்பா?

ஹா ஹா ஹா

இதுவும் ஒரு ஜாலியான தமாஷான சிறுகதை

தான் பார்த்த ஹிந்தி சினிமாவில் வருவது போல வெள்ளைக்கார போலீஸ்ஸிடமிருந்து தப்பிக்க பர்ஸை மறந்துவிட்டு வந்து மனைவியுடன் ரொமான்ஸ் பண்ண நினைத்த குமாருக்கு சுமார் மூஞ்சி குமாராப்பா? செம பலுப்பு

பொஞ்சாதி குமுதா பர்ஸை மறக்காம கொண்டு வந்து மச்சானுக்கு வைச்சுட்டா ஆப்பு

Minni @ மிரு டியரின் கன்னத்தில் முத்தமிட்டாள்



அருமையான சிறுகதை

குழந்தைப்பேறு கிடைக்கப் பெறாதவர்கள் அதனால் துவண்டு போகாமல் அனாதை ஆசிரமத்திலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிக்கும் தேவேந்திரனின் எண்ணமும் முடிவும் மிகவும் அருமை

ஆராதனாவுக்கு அருமையான பரிசு அவளுடைய தத்துக்குழந்தை ஊஹூம் இனி அவளோட சொந்தக் குழந்தை பேசும் தெய்வம் கொடுத்த பரிசு முத்தம் ஆராவுக்கு குழந்தை கன்னத்தில் முத்தமிட்டாள்



சஞ்சனாரிஷி டியரின் இரயில் (சிந்தனையின்) பயணம்



சிந்தனையின் பயணமா

உண்மையிலேயே இந்த சிறுகதை ஒரு நல்ல சிந்தனையின் பயணம்தான் சஞ்சனாரிஷி டியர்

தங்களுடைய குழந்தைக்கு பிடிவாதம் ஜாஸ்திங்கிறதை பிடிவாதம்ங்கிற கெட்ட பழக்கத்தை என்னமோ பாரினில் படித்து பட்டம் வாங்கின ரேஞ்சுக்கு கொண்டாடுகிறார்கள்

இது ரொம்பவே தப்பு

அடுத்தவருக்கு உதவி செய்யணும்ங்கிற அடுத்த மனிதரையும் மதிக்கணும்ங்கிற நல்ல நல்ல பண்புகளை ஈவு இரக்கம் பிறருக்கு உதுவுதல் போன்ற நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தந்து நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே எம் ஜி ஆர் பாடின மாதிரி குழந்தைகளை நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் ங்கிற நல்ல மெசேஜ் கொடுத்த இளம் எழுத்தாளர் சஞ்சனாரிஷிக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top