"கண்ணி வைக்கும் மானே"!!!- 8

Sirajunisha

Well-Known Member
#1
1
நேற்று இரவு வீடியோ காலில் பேசியது பற்றி மேற்கொண்டு எதையும் ஆர்னியிடம் கேட்டுக் கொள்ளவில்லை "மோனி".... ஆர்னி பேசியதை வைத்தே அது அவளது மேலதிகாரி என்பதும் புரிந்திருந்தது...

இன்று அலுவலகத்தில்......

ஆர்னி பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள்.. முக்கிய ஒப்பந்தம் ஒன்று இன்று கையெழுத்தாக உள்ளது. இது அவர்களின் தொழில் வளர்ச்சியில் இன்னொரு மைல் கல் என்றே சொல்லலாம்.

இதுவரை தங்களது ஆடைகளை ஏற்றுமதி மட்டுமே செய்து கொண்டிருந்தவர்கள்...தங்களது பிராண்ட் நேமை உலக மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகின்றனர்.

தற்போது விற்பனை உள்நாட்டில் மட்டுமல்லாது உலக சந்தையில் மற்ற நாடுகளோடு போட்டி போடும். விற்பனையில் இவர்களுக்கென்று இனி தனி அடையாளம்..

ஏற்றுமதி மட்டுமே செய்துவிட்டு, அங்கு தங்களது ஆடைகள் என்ன பெயரில் என்ன விலையில் எப்படி அடையாளப்படுத்தப்படுகின்றது.. அங்கு தங்களது ஆடைக்களுக்கான தேவை எவ்வளவு என்பது பற்றி எல்லாம் ..இதுவரை ஆராய்ந்ததில்லை...

ஆனால் அமிர்தன் வந்ததிலிருந்து அதைபற்றிய விவரங்களை தான் சேகரித்து கொண்டிருந்தான்..
2
அதற்கான தகவல்கள் திரட்டுவது கடினமாகத்தான் இருந்தது.. ஆனால் இன்றைய இன்டர் நெட் அனைத்தும் சாத்தியமே.. அமிர்தனும் அதை சாத்தியப்படுத்தினான்...

முதலில் உலக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கும், பிராண்ட் நேம் பதிவு செய்வதற்கும் அதை விளம்பரப்படுத்துவதற்கும் ஆலோசனைக்களை வழங்குதல் மற்றும் வழிநடத்துவருக்கு புரிதல் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது..

அமிர்தன் இதற்கான ஆரம்பக்கட்ட நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டான். அடுத்தக்கட்டத்தினை இன்று ஒப்பந்தம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் அசோக் அதை கொண்டு செல்வான்..

ஒப்பந்தம் இன்று கையெழுத்தாவதால் அவர்களை வரவேற்பது முதல் கையெழுத்தாகி அவர்கள் விருந்து முடித்து அனுப்புவது வரை உள்ள வேலைகள் அனைத்தும் விக்ரம், ஆர்னி இன்னும் சில நபர்களுக்கென்று கொடுக்கப்பட்டிருந்தது...

அனைவரும் வந்துவிட்டனர்.. அந்நிறுவனத்தின் சார்பாக நான்கு பேர் வந்திருந்தனர்... இங்கு அமிர்தன், அசோக், ஜெயராமன், நாகேந்திரன் ஆகியோர் இருந்தனர். மீட்டிங் ரூமில் கலந்தாலோசனை ஆரம்பித்தது ..
3
அங்கு மீட்டிங் ரூமில் சம்மந்தப்பட்ட நபரை தவிர வேறு ஆட்களை அனுமதிக்க வில்லை.. இரு தரப்பினரும் தங்களுக்கான சந்தேகங்கள் அதற்கான பரஸ்பர விளக்கங்களை கேட்டு தெளிந்து கொண்டனர்.. "டீ பிரேக்" கிற்காக நேரம் ஓதுக்கப்பட்டது..

நாகேந்திரன் , ஜெயராமன் இருவரும் எழுந்து வெளியில் சென்றிருக்க.. அமிர்தன், அசோக் மற்றும் வெளிநாட்டவர்களும் ஏதோ விவரங்களை சரிபார்த்தபடி அமர்ந்திருந்தனர்..

ஆர்னி மற்றும் விக்ரம் கையில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் டிரேயுடன் உள்ளே வந்தனர்.. "டீ" கப்பை ஆர்னி ஒவ்வொருவருக்காக வைத்துக் கொண்டே வர, பின்னால் விக்ரம் ஸ்நாக்ஸ் ஐ வைத்தான்..

வெளிநாட்டவர்களில் மூன்று பேர் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் ஒருவன் மட்டும் இளைஞனாக இருந்தான்.. அதுவரை வேலையில் மூழ்கி இருந்தவர்கள் "டீ" வரவே சற்று தங்களை ரிலாக்ஸ் செய்தனர்..

ஆர்னி "டீ" கப் ஐ அந்த இளைஞனின் டேபிளில் வைக்க முயல அதனை நன்றி என கூறி கைகளிலேயே வாங்கிக் கொண்டான்.. " நன்றி" கூறும்பொழுது ஆர்னி யை நிமிர்ந்து பார்த்தவன்...அவளது அமைதியான அழகை கண்டு, "யூ லுக் சோ க்யூட்" என்று சிரித்தபடி பாராட்டினான்...

4
"ஆர்னி " முதலில் திகைத்தாலும் அதனை வெளிக்காட்டாது மெல்லிய புன்னகையுடன் தலையசைத்து நகர்ந்து விட்டாள்.. அடுத்து அமிர்தனுக்கு "டீ" கப் வைத்துவிட்டு நிமிர்ந்தவள் அவனின் முறைப்பில் சற்றே திடுக்கிட்டாலும் கண்டு கொள்ளாது போல் விட்டு விட்டாள்...

நல்லபடியாக மீட்டிங் முடித்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது.. இரு தரப்பினரும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர். அவர்களுக்கு மதிய உணவை அங்கேயே வரவழைத்திருந்தனர்..

நம் நாட்டின் வழக்கப்படி அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அவை காரமில்லாத அசைவ மற்றும் சைவ உணவுகளே.. வாழை இலையின் அனைவரும் அமர்ந்திருக்க, ஆர்னி மற்றும் இன்னொரு பெண் உணவு பரிமாறினர்...

அவர்களுக்கு பரிமாறப்படும் உணவு மற்றும் அவை இங்குள்ள மக்களால் எந்தளவு விரும்பப்படுகின்றது என்பதை எல்லாம் அசோக் கூறினான்..

அனைவரும் சாப்பிட்டு எழுந்து பின்னர், உணவு முறை மற்றும் அவர்கள் அன்பாக பரிமாறியதை வெகுவாக பாராட்டினர்..

உணவு முடித்து ஒவ்வொரு வரவாக வெளியே செல்ல கடைசியாக அமிர்தனும் அந்த வெளிநாட்டு இளைஞனும் ஏதோ பேசிக் கொண்டிருக்க.. "ஆர்னி" அங்கிருந்து வெளியே செல்ல நகர, இதை கவனித்த அமிர்தன்..
5
"ஆனி டார்லிங்" என்று அழைத்தான் அமிர்தன் ...

அமிர்தனுடைய "டார்லிங்" என்ற அழைப்பில் அதிர்ச்சியாகி அவனை திரும்பிப் பார்த்தாள்...

"வெளியில் வெயிட் பண்ணு டார்லிங்.. இப்போ வந்து விடுகிறேன் " என்று சிரித்தபடி கூறியவனை...

நேராகவே முறைத்துவிட்டு வேகமாக அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்..

ஒப்பந்தம் நல்லபடியாக முடிந்து மகிழ்ச்சியுடன் வெளிநாட்டினரை அனுப்பி வைத்தனர். அசோக் அவர்கள் தங்கும் ஹோட்டல் வரை விட சென்றிருந்தான்..

அமிர்தன் மகிழ்ச்சியான மனநிலையில் அவனுடைய இருக்கையில் அமர்ந்திருந்தான்..ஏதோ தோன்ற, "ஆர்னிக்கு அழைத்தவன்" அவளை உள்ளே வருமாறு கூறினான்..

ஆர்னி சில நிமிடத்திலேயே கோபமாக அவன் முன் நின்றவள்.. அவன் பேசுவதற்கு முன்பே...

"என்ன சார் நினைத்துக் கொண்டு இருக்கீங்க "? "டார்லிங் " னு கூப்பிடுறீங்க.. உங்க பொறுக்கித்தனத்தை எல்லாம் என்னிடம் காமிக்காதிங்க"? என்று வார்த்தைகளை விட்டு விட்டாள்...

அவளது பேச்சை கேட்டவன், கோபத்தின் உச்சியில் வேகமாக இருக்கையிலிருந்து எழுந்ததில் சுழல் இருக்கையானது பின்னே நகர்ந்து சென்றது...
 

Sirajunisha

Well-Known Member
#2
6
ஆர்னியின் அருகில் ரௌத்திரமான முகத்துடன் நெருங்க, கண்களில் பயந்துடன் அவளறியாமல் இரண்டடி பின் வாங்கினாள்.

"டார்லிங் கூப்பிட்டால்... உடனே பொறுக்கியா? நான் அப்படி உன்னை கூப்பிடலன அடுத்து "ஹனி டார்லிங் " இன்னைக்கு என் கூட டைம் செபெண்ட் பண்றியான்னு கேட்டிருப்பான்".. "அப்போ பரவாயில்லையா"? "அது என்ன அவன் சோ க்யூட் அப்படிங்கிறான்.. நீனும் அவன பார்த்து இளிக்கிற?".

"இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்கனும்"? அப்புறம் என்ன சொன்ன?" "என்னை பார்த்தா உனக்கு பொறுக்கி மாதிரி இருக்கா"? "பொறுக்கி என்ன பண்ணுவான்னு தெரியுமா "? என்று பேசிக் கொண்டே அவளை நெருங்கி நடக்க, எச்சிலை விழுங்கியபடி பின்னால் அடி வைத்து நடந்து சென்றவள், சுவர் இடிக்க மேற்கொண்டு போக முடியாமல் பயத்துடன் அப்படியே நின்றுவிட்டாள்.

"ஆர்னி சுவற்றில் ஒட்டி நின்றதும் எதிர்பாராது ஆர்னியின் இரு கைவிரல்களையும் தனது விரல்களுக்குள் கோர்த்துக் கொண்டவன், அவள் சுதாரிக்கும் முன் அவளுடைய கைகளுடன் இணைத்தபடி சுவற்றில் இருபக்கமும் கைகளை அழுத்தி நகர விடாமல் செய்தான்..

"ஆர்னி, பயத்தின் உச்சத்தில் இப்போ என்னை விட போறீங்களா? இல்லையா"? என சீற..
7
அமிர்தன் மிகவும் நெருங்கி நின்றபடி , விழியகலாமல் ஆர்னியை பார்த்தபடி நின்றான்...

அமிர்தன் அப்படி அவளை பார்த்துக் கொண்டிருப்பது.. அவனின் நெருக்கம், அவனிடமிருந்து வரும் வாசனை எல்லாம் சேர்ந்து வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் ஒரு குறுகுறுப்பையும், மனதினுள் படபடப்பையும் ஒரு சேர ஆர்னிக்குள் தோற்றுவித்தது...

"அந்த உணர்வை ஒரளவிற்கு மேல் தாங்க முடியாதவள் கோப முகமுடியிட்டு, "இப்போ நீங்க நகரலன்னா...நா...நா.. நான் கத்தி எல்லோரையும் கூப்பிடுவேன் "? என்றாள் படபடப்பாக...

"எந்த அசைவும் இல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ,"அவள் கத்துவேன் " என்றதும்...

"சரி கத்து " என்றானே தவிர கொஞ்சம் கூட அவளை நகர விடவில்லை...

அதற்கு மேல் பொறுமையில்லாது,
"ஹெல்ப்" என்று சொல்ல வாய் திறந்தவளுக்கு வார்த்தை வெளி வரவில்லை.. அதற்குள் அவள் இதழோடு இதழ் பொருத்தியிருந்தான் அமிர்தன் ...

அதிர்ச்சியில் விழிவிரித்தவள் அவனிடமிருந்து விலக முயல, அவளால் அசையகூட முடியவில்லை ..

ஒரு கட்டத்தில் அவளறியாமல் அவன் மீதிருந்த ஈர்ப்பு அவளை தன்னை மறந்து சில நொடிகள் அவனுடன் ஒன்றச் செய்தது..
8
அமிர்தனும் ஆர்னியும் சில நொடிகளாவது தங்களை மறந்திருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆர்னியின் பெண்மை விழித்துக் கொள்ள, அமிர்தனின் இலகிய நிலையில் தனது முழுபலத்தையும் பயன்படுத்தி அவனை விலக்கியிருந்தாள்..

இதுவரை ஒருவித மயக்க நிலையில் நின்றிருந்தவன், தீடீரென ஆர்னி விலகினாலும் அந்த உணர்விலிருந்து வெளிவர முடியாமல் அவளை பார்த்தப்படியே நின்றான்..

கோபமாக அவனை பார்த்தவள், பேசத் தொடங்கிய பின்னர் தான் சுயஉணர்விற்கே அமிர்தன் முழுதாக வந்தான்..

தலை லேசாக கலைந்து, முகம் ரோஜா நிறத்தில் சிவந்து இதழ்கள் வெளிறி, கண்கள் கலங்கிய நிலையில் பேசத் தொடங்கினாள்...

"நான் உங்களை பொறுக்கியான்னு தான் கேட்டேன்?"... "நீங்க உங்க செயல் மூலமா பொறுக்கித்தான்னு நிருபிச்சுட்டீங்க".. என்று கோபமாக அவனை பார்த்து பேசியவள்...

"காலங்காலமாக பெண்களிடம் உடம்பு பலத்தை காட்டி ஜெயிக்க நினைக்கிறது தானே.. உங்களை போன்ற ஆண்களின் புத்தி " என்றுவிட்டு புறங்கையால் உதட்டை துடைத்தபடி அமிர்தன் அறையிலிருந்து வெளியேறினாள்...

அமிர்தன் அவள் போவதை இமைசிமிட்டாது வெறித்துப் பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான்..
9
நேராக மேனேஜரை சென்று பார்த்தவள், "சார் எனக்கு ரொம்ப தலைவலியாக இருக்கு.. எனக்கு பர்மிஸன் கொடுங்க சார்..நான் ஹாஸ்டல் போகனும்.. என்னால் முடியவில்லை சார்" என்றாள் ஆர்னி...

அவளது முகமும் வாடித் தெரியவும்..இதுவரை இம்மாதிரி விடுப்பு கேட்டதில்லை என்பதாலும், விடுப்பு அளித்தார்...

நேராக ஹாஸ்டல் வந்து தனது படுக்கையில் அமர்ந்தவள், தன் கையிலிருந்த பேக் ஐ தூக்கி வீசினாள்.. முழங்காலை கட்டிக்கொண்டு தலையை அதில் கவிழ்த்து படி அழுது கொண்டிருந்தாள்..

அமிர்தன் அவளிடம் அத்துமீறி நடந்து கொண்டான் என்பதற்காக எல்லாம் அழவில்லை.. அவனிடம் மயங்கி நின்றதை நினைத்து தான் அழுது கொண்டிருக்கிறாள். தான் எதற்காக இங்கு வேலைக்கு வந்தது. தன்னை நம்பி இருப்பவர்களை மறந்து விட்டு இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பொழுது அழுகை அதிகரித்தது..

அனிச்சை செயலாக கட்டைவிரலை வாயருகே கொண்டு சென்றவள்.. அமிர்தன் முத்தமிட்டது நினைவு வர டக்கென்று கையை கீழிறக்கிக் கொண்டாள்...

எப்பொழுது அவனித்தில் கோபத்தை மட்டுமே கண்டவளால், அவனுடைய இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ..
10
அதற்குமேல் தான் சிறிது நேரமானாலும் அவனுடன் ஒன்றியது அனைத்தையும் நினைத்து நினைத்து அழுதவள் ஒரு கட்டத்தில் அப்படியே கட்டிலில் படுத்து தூங்கிவிட்டாள்...

மாலைப்பொழுதில் ஹாஸ்டல் வந்த மோனி, ஆர்னி உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமாக இருந்தது.. இந்த நேரத்தில் தூங்க மாட்டாளே? என்று யோசித்தபடியே அருகில் சென்று பார்க்க.. அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள் ஆர்னி...

குழந்தை போல் தூங்கும் அவளை எழுப்ப மனமில்லாது அப்படியே விட்டுவிட்டாள்.. நன்றாக தூங்கி எழுந்த ஆர்னி ரிஃப்ரெஷ் செய்து விட்டு வந்து அமர்ந்தாள்..

மோனி தனது பேக்கில் துணிகளை எடுத்து வைத்திருப்பதை கண்டு ," என்ன டிரஸ் எல்லாம் எடுத்து வைத்திருக்கா? ஊருக்கு போறாளா"? என்று யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் ...

அப்போது வெளியில் சென்றிருந்த மோனி உள்ளே வர, ஆர்னி எழுந்துவிட்டதை கண்டு, "ஆர்னி எழுந்துட்டியா?.. நல்ல வேளை" என்றவள் ..

"நான் அவசரமாக ஊருக்கு போகிறேன் ஆர்னி.. என்னுடைய தாத்தா ரொம்ப சீரியசாக இருக்கிறாராம்.. என்னை பார்க்கணுமென்று சொல்றாங்களாம்".. "அப்பா போன் போட்டாங்க".." அதான் உடனே கிளம்பனும்" என்று பொருள்களை
11
அங்கும் இங்கும் அலைந்து எடுத்து வைத்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள்..

"ஊருக்கு போறியா? எப்போ வருவ"? என்றாள் அதிர்ச்சியாக.. இதையே நேற்று மோனி சொல்லியிருந்தால்.. " அப்படியா.. சரி, "பார்த்து பத்திரமாக போய் வா" என்று சொல்லியிருப்பாள்.. ஆனால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் ஆர்னி யால் அப்படி சொல்ல இயலவில்லை...

வேறு வழியில்லாது, மோனி ஊருக்கு செல்வதை தடுத்து நிறுத்த வழியில்லாது மௌனமாக வழியனுப்பி வைத்தாள்...

..............................................

இரவு உணவை முடித்துவிட்டு அமிர்தன் இங்கு வெட்ட வெளியை பார்த்தபடி பால்கனியில் நின்றிருந்தான். அவன் மனக்கண்ணில் இன்று நடந்த சம்பவமே திரும்ப திரும்ப வந்தது ..

முதலில் அமிர்தனுக்கு ஆர்னியை முத்தமிட வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை.. அவள் சொன்ன " பொறுக்கி" வார்த்தைக்காக அவளை மிரட்டும் விதமாகத்தான் அவள் கைகளை கோர்த்தபடி நிற்க செய்தது...

ஆனால் அதற்கு மேலாக அவளுக்கு வெகு அருகில் நின்றவனுக்கு, அவளது கண்களின் மருண்ட பார்வையும், அவளுக்கே உரித்தான மணமும், நடுங்கும் இதழ்களும் அமிர்தனை தன்னிலை இழக்கச் செய்து விட்டது..
 

Sirajunisha

Well-Known Member
#3
12
அமிர்தன் தன்னை மீறி முத்தமிட்டிருந்தான்.. அதன் பிறகு ஆர்னி தன்னை பிடித்து தள்ளும் வரை ஏன் அதன்பிறகும் கூட அவன் சுயத்தில் இல்லை...

ஆர்னியின் கலங்கிய கண்களும் அழுகையோடு இணைந்த குரலுமே அவனை தன்னிலை உணரச் செய்தது... கடைசியாக அவள் கூறிய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றான்...

"ஏன் ஆனி என்னை பார்த்து அப்படி சொன்ன.. நான் அப்படிப்பட்டவன் இல்லை".. என்று திரும்ப திரும்ப ஆர்னியிடம் மனதிற்குள் பேசிக் கொண்டிருக்கிறானே தவிர ...

அமிர்தனால் , ஆர்னியை தவிர வேறு பெண்ணிடத்தில் இதுவரை இப்படி நடந்து கொண்டது இல்லை , மற்றவர்களின் அழைப்பிற்கு இணங்கியதும் இல்லை என்பதை உணர தவறிவிட்டான்...

அது ஆர்னியிடம் மட்டுமேயான அமிர்தனின் அத்துமீறல்.. அவளிடம் மட்டுமேயான அவனின் தேவை.. ஒரு வேளை தன் மனதை நன்கு உணர்ந்திருந்தால் ஆர்னி பேசும்பொழுதே, "இது ஆணின் அத்துமீறல் இல்லை நான் விரும்பும் பெண்ணிடம் எனக்கு இருக்கும் அதிகப்படியான உரிமை" என்று கூறியிருப்பானோ?" ....

ஒருவர் மற்றவரை நினைத்தபடியே அன்று விடிகாலையில் தான் இருவரும் தூக்கத்தை தழுவினர்...

13
இன்றோடு ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது அமிர்தனும் ஆர்னியும் நேருக்கு நேராக சந்தித்து..

இன்னும் சொல்லப்போனால் ஆர்னி , அமிர்தன் இருப்பது தெரிந்தால் அங்கு செல்லாமல் தவிர்த்து வந்தாள் என்பதே உண்மை.. அமிர்தனும் அதே மன நிலையில் இருந்ததால் அவளது ஒதுக்கத்தை உணரவில்லை.. ஆனால் எல்லாவற்றிக்கும் முடிவு என்ற ஒன்று வந்துதானே ஆக வேண்டும்...

அசோக் அன்று அமிர்தனை காண இளம் பெண் ஒருவருத்தியுடன் வந்திருந்தான்.. அவன் வந்த அரைமணி நேரம் கழித்து " உள்ளே வருமாறு" அசோக்கிடமிருந்து அழைப்பு வந்தது...

அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு, அமிர்தனும் அவளை எந்த அலுவலகப் பணிக்கும் அழைக்கவில்லை.. ஆர்னியும் அங்கு செல்லவில்லை.. இன்று "அசோக்" அழைத்ததால் வேறு வழியில்லாமல் சென்றாள்..

அனுமதி கேட்டு உள்ளே சென்றவளுக்கு, ஏதோ பேசி சிரித்தபடி இருந்த அமிர்தனின் கண்டு மனம் தடுமாற அதை வெளிக்காட்டாமல் சாதாரணம் போல் காட்டி "அசோக் " முன்பு நின்று அவனிடம் மட்டும் "குட் மார்னிங்" சார் என்று கூறியபடி நின்றாள் ...

"வாங்க ஆர்னி ".. இவங்க ரேணுகா என்று அருகிலிருந்த பெண்ணை அறிமுகப்படுத்தினான்..
14
"ஹலோ ஐ அம் ஆர்னி " என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்..

"ஹாய் " என்று ரேணுகா கூற..பரஸ்பரம் கைகுலுக்கி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்...

"ஆர்னி, அடுத்தவாரம் வீட்டில் நடக்க போகிற அப்பா அம்மாவுடைய 25 வது வெட்டிங் ஆனிவர்சரியை இவங்க தான் ஆர்கனஸ் பண்றாங்க".. "சோ அதற்கு தேவையான டெக்ரேஷனிலிருந்து புட் ஐட்டம் பிரிபேர் பண்ணுவது கெஸ்ட் வரவேற்பது முதல் வழியனுப்புவது வரை இவங்க பார்த்துப்பாங்க"...

"இப்போ எதுக்கு உங்களை கூப்பிட்டேன் என்றால் இவங்களோட அசிஸ்டென்ட் இன்னைக்கு வரலையாம்.. நம்ம கெஸ்ட்க்கு அனுப்ப வேண்டிய இன்விடேஷன் அண்ட் அட்ரஸ் அவங்களிடம் இருக்கு.. அந்த அட்ரஸ்ஸை இன்விடேஷன் ல ஃபில் அப் கொடுங்கறீங்களான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன் " என்றான் அசோக் ...

" ஓ ஸ்யூர் " சார் என்றாள் ஆர்னியும்..

ரேணுகாவும் ஆர்னிக்கு நன்றி கூறினாள்...
இங்கேயே உட்கார்ந்து அட்ரஸ் ஐ ஃபில் அப் பண்ணிவிடுவோம் என்ற ரேணுகா.. டிரைவரை அழைத்து இன்விடேஷனை எடுத்து வரச் சொன்னாள்..

அசோக் சிறிது நேரத்திலேயே விடைபெற்று சென்று விட்டான்..

15
அமிர்தன் தனது லேப்டாப்பிலேயே மூழ்கி விட ஆர்னியும் ரேணுகாவும் அழைப்பிதழில் எழுத ஆரம்பித்தனர்...

"ஏன் ரேணுகா.. இப்படி எழுதுவதை விட அட்ரஸ் ஐ பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டினால் இன்னும் வேலை ஈசி தானே " என்றாள் ஆர்னி..

"அப்படித்தான் ஆர்னி வைத்திருந்தேன்.. என்னோட அசிஸ்ட்டெண்ட் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு ,பத்திரமாக வைக்கிறேன்னு எங்கேயோ மறந்து வைத்து விட்டான்.. நான் திட்டுவேன்னு பயந்துட்டு வரவில்லை...நல்ல வேளை இது எனக்கு இவங்க கொடுத்த ஒரிஜினல்.. டைம் வேற இல்லை இன்னைக்குள்ளே அனுப்பியாகனும்" என்றபடி மும்மரமாக எழுத ஆரம்பித்தாள்...

ஆர்னியும் மேற்கொண்டு பேசவில்லை. ரொம்ப நேரமாக எழுதிக் கொண்டிருந்தவள் கழுத்து வலி வர சற்றே நிமிர்ந்த போதுதான் அருகில் ரேணுகா இல்லை என்பதே தெரிந்தது.

ரேணுகா , ஆர்னிக்கு முதுகுகாட்டியபடி நிற்க.. அமிர்தன் ரேணுகாவிற்கு எதிராக ஆர்னி பார்ப்பது போல் நின்று 'டீ' பருகியபடி ஏதோ பேசி சிரித்தபடி நின்றிருந்தனர்.ஆர்னிக்கும் 'டீ', அவளருகில் வைக்கப்பட்டிருந்தது.

"டீ" யை எடுத்து பருகிய ஆர்னி பாதியை மட்டும் குடித்துவிட்டு மீதியை அமிர்தன் கவனிக்கும் விதமாக டைல்ஸ் தரையில் ஊற்றினாள்.

16
அமிர்தன் பேச்சை நிறுத்திவிட்டு, ஆர்னியை கவனிக்க.. அடுத்து "டீ" கப் ஐ சற்றே உயரே தூக்கி போட , மேலே வேகமாக சென்ற வேகத்திற்கு கீழே வந்து விழுந்து நொறுங்கியது..

சத்தம் கேட்டு திரும்பிய ரேணுகா, திடுக்கிட்டு திரும்பி அங்கே கிடந்த "டீ" கப் ஐ கண்டு அவசரமாக அங்கே வர,

"டீ" கப் வைக்கும் பொழுது சொல்லக்கூடாதா ரேணுகா?.. இன்னும் கொஞ்சம் தள்ளியிருந்திருந்தால் "டீ" அவ்வளவும் இன்விடேஷனில் கொட்டி எல்லாமே வீணாகியிருக்கும்" என்றாள் ஆர்னி..

"அச்சச்சோ என்று பதறி அதன்பிறகு எழுத ஆரம்பித்த ரேணுகா எழுந்திருக்கவே இல்லை. வேலை நடக்கவில்லை என்றால் பெயர் கெட்டுவிடுமே..

ரேணுகா, வேலையில் மூழ்கிவிட்டதை ஓரக்கண்ணால் பார்த்து தெரிந்துக் கொண்ட ஆர்னி, இப்போது நன்றாகவே நிமிர்ந்து அமிர்தனை பார்த்து நக்கல் சிரிப்பொன்றை சிந்தியவள் பின்பு அமிர்தனை முறைத்து விட்டு வேலையை தொடர்ந்தாள்...

அதுவரை அவளது செயலை புரியாது பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஆர்னியின் நக்கல் சிரிப்பும் அவளது முறைப்பும் எதையோ உணர்த்த முயல்வது போல் தோன்ற உதட்டில் உறைந்த புன்சிரிப்புடன் குறுகுறுவென ஆர்னி யை பார்த்தபடி நின்றிருந்தான் "அமிர்தன் "..
 

Sirajunisha

Well-Known Member
#4
ஹாய் மக்களே,
நான் அடுத்த Ud யோடு வந்துட்டேன். போன Ud க்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என்று நன்றிகள்...


கதையை படிங்க கருத்தை சொல்லுங்க..

Waiting for ur comments makkaley ..
 

Latest profile posts

hiii friends... manjal vaanam konjam megam episode 2 posted.. read and share ur comments.. :) :)
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! 12 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என் கூட பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.
Innaiku my hero athul entry kodupara @mithrabarani ka
@ShanviSaran
முடிந்தால் இன்று Update குடுங்க சகோ..பிளீஸ்...

Sponsored