கண்ணி வைக்கும் மானே!!!- 7

Sirajunisha

Well-Known Member
#1
1
அமிர்தனுடைய நம்பர்க்கு மிஸ்ட்டு கால் இருந்ததை பார்த்து முதலில் குழம்பியவளுக்கு பிறகு விஷயம் புரிந்தது...கட்டுக்கடங்காத கோபம் வர பல்லைக்கடித்து கோபத்தை அடக்கினாள்..

மதிய வேளை அமிர்தனை வீட்டிற்கு வருமாறு நாகேந்திரன் அழைத்திருந்தார்.. எனவே வீட்டிற்கு வந்தபோது ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தனர். புதிதாக நடுத்தர வயதிற்கு சற்று மேல் உள்ள கணவன் மனைவி இரண்டுபேர் அமர்ந்திருந்தனர்...

அமிர்தன் வருவதை கண்ட நாகேந்திரன்,

"வா அமிர்தன் " என்று வரவேற்றவர். அருகிலிருந்த புதிய நபரிடம் திரும்பி.. "இவர் தான் எங்களுடைய பெரிய பேரன் அமிர்தன் .. இலண்டனிலிருந்து வந்திருக்கிறார் னு சொன்னது இவரைத்தான் என்று அறிமுகப்படுத்தினார்..

"அமிர்தன்...இது நம் அசோக் உடைய வருங்கால மாமனார் புருஷோத்தமன் இவங்க மாமியார் பார்வதி " என்று அறிமுகப்படுத்தினார்...

இருவரும் வணக்கம் தெரிவிக்க..அமிர்தனும் அவர்கள் மாதிரியே கைகளை தூக்கி வணக்கம் சொன்னான்....

"நீங்க வந்த உடனே உங்களை வந்து பார்க்கனுமென்று ரொம்ப ஆவலாக இருந்தோம் தம்பி ..எதிர்பாராமல் ஒரு வேளை வந்துவிட்டது..அதனால் வர முடியவில்லை."..என்றார் புருஷோத்தமன்
2
"இட்ஸ் ஓ.கே அங்கிள்..நோ ப்ராப்ளம்" என்று விட்டு அமைதியாகி விட்டான்...

"அப்போது புருஷோத்தமனின் உதவியாளர் வந்து, "சார் அமைச்சர் லைனில் இருக்கிறார்" என்று கூற "இதோ பேசி விட்டு வருகிறேன் " என்று எழுந்து சென்றார்...

"அமிர்தன் யோசனையாக இவர் என்ன பிஸ்னஸ் பண்ணுகிறார் தாத்தா"? என்றான்..

இவர் நம்ம பகுதி M.L.A.பா. அப்படி இருந்தும் ரொம்ப நேர்மையானவர்.எளிமையானவர்.
சொந்த தொழில் விவசாயம். தன்னை ஒரு M.L.A என்று சொல்லிக்கிறதை விட விவசாயி ன்னு சொல்றதை தான் பெருமை படுவார்..

மக்களுக்கு ஓரு பிரச்சனை என்றால் எந்த நேரமாக இருந்தாலும் அவர் வீட்டு கதவை தட்டலாம்.நேரம் காலம் பார்க்காமல் உதவி செய்யக் கூடியவர்...

தரகர் மூலமாக எங்களுக்கு "தாரா " போட்டோ வந்த போது பெண்ணை ரொம்ப பிடித்து விட்டது ..பெண்ணை பார்க்க போன பொழுது கட் அண்ட் ரைட் ஆ சொல்லிவிட்டார்...

"நான் விவசாயி தாங்க..நீங்க ஒரு விவசாயியோட பெண்ணை தான் பார்க்க வந்திருக்கீங்க.. M.L.A பதவி மக்களுக்கு நல்லது பண்ணுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பு. அவ்வளவு தான்.. என் மகளை உங்க குடும்பத்திற்கு மருமகளாக அனுப்பி வைப்பதில் எனக்கு விரும்பப் தான்.
3
ஆனால் பிற்காலத்தில், "நான் M.L.A என்பதற்காக சட்டத்திற்கு எதிராகவோ மக்களுக்கு எதிராகவோ எந்த உதவியையும் என்னிடம் எதிர்பார்க்கக் கூடாது" ..என்று தெளிவாக கூறிவிட்டார்...

"தாரா பார்க்க லெட்ஷணமா நல்ல பெண்ணாக தெரிவதால் பேசலாம் என்பதற்காக போன நாங்க.. புருஷோத்தமனின் நேர்மையை பார்த்து அன்றைக்கே நிச்சய தேதி கல்யாணதேதி எல்லாம் பேசி முடித்துவிட்டு வந்தோம்" என்றார் நாகேந்திரன்.. அனைத்தையும் அமிர்தன் கேட்டுக் கொண்டான்...

மதிய உணவை புருஷோத்தமன் தம்பதியர் அங்கேயே முடித்துவிட்டு கிளம்பினர்...

........,........,...

மாலைப்பொழுதில் மோனி அலுவலகத்தில் தனது வேலையை முடித்துவிட்டு ஹாஸ்டல் நோக்கி தனது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள்.

ஸ்கூட்டியில் செல்லும் பொழுது எப்பொழுதும் வேகமாகவே செல்வாள்.. அவள் அணிந்திருந்த ஷால் காற்றில் பறக்க அதை சரிசெய்யும் பொருட்டு வலது கையால் மட்டும் ஒட்டியபடி ஷாலினை சுற்ற, கவனத்தை அதில் வைத்திருந்தாள் வழியில் இருந்த பள்ளத்தை கவனிக்க வில்லை.

ஸ்கூட்டி வேகமாக பள்ளத்தில் இறங்கி ஏற மோனியின் பேலன்ஸ் தவறி ஹேன்ட்பேர் சற்றே திசைதிரும்பி பக்கவாட்டி நடந்து சென்று கொண்டிருந்த இளைஞன்.
4
மேல் மோதிவிட்டாள். அந்த இளைஞன் இதை சற்றும் எதிர்பாராததால், மோதிய வேகத்தில் கீழே விழுந்து விட அவன் கையில் இருந்த காகிதங்கள் மழைநீர் தேங்கி நின்ற சேற்று நீரில் அப்படியே விழுந்துவிட்டது..

போதாத குறைக்கு கீழே விழுந்ததில் காலில் எதுவோ குத்தி இரத்தம் வர ஆரம்பித்தது. கைகளில் சிராய்ப்பு, கீழே விழுந்ததில் அவமானம்" என்று எல்லாம் ஒன்று சேர இடித்தவரை திட்டுவதற்காக கோபமாக எழுந்தான்...

அவன் பேசுவதற்கு முன்னே, மோனி முந்திக் கொண்டாள்..
"சாரி சார்..சாரி சார்.. பேலன்ஸ் மிஸ் ஆயிடுச்சு சார்.. சாரி சார்."என்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள் ...

"என்ன சாரி சார்..கவனம் வண்டி ஓட்டுவதில் இருந்தால் எப்படி அடுத்தவர்கள் மேல் மோதும் அளவிற்கு பேலன்ஸ் மிஸ் ஆகும்?" என்று கோபமாக பேசினான்...

"அதற்குள் வண்டியிலிருந்து இறங்கி ஸ்டாண்ட் போட்டவள்.. அவனுடைய காலில் இரத்தம் வருவதை கண்டவள்..."சார் உங்க காலில் இரத்தம் வருது சார்" என்றவள் தனது கைகுட்டையால் அவனது காலில் வழியும் இரத்தத்தை துடைக்க போனாள்..

அவசரமாக காலினை நகர்த்திக் கொண்டவன், "நல்லா மோதி இரத்தம் வர வைத்துவிட்டு"..
5
"இப்போ ஹெல்ப் பண்ண வர்றீங்களா"? என்று சீரியவன்...டிராபிக் போலீஸ் இவர்களை நோக்கி வருவதை கண்டவன், " சரி சரி எனக்கு ஒன்றுமில்லை.. சீக்கிரம் கிளம்புங்க போலீஸ் வேறு வருகிறார்.. வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க ..கிளம்புங்க" என்று அவசரபடுத்தினான்..

"பரவாயில்லை ..உங்க காலில் இரத்தம் வந்து கொண்டே இருக்கு பாருங்க " என்று அவன் காயத்தின் மீதே மோனி கவனமாக இருக்க...

கோபம் உச்சி வரை தலைக்கேற, "அதான் நான் பார்த்துக்கிறேன் அப்படிங்கிறல்ல கிளம்பு டீ முதல்ல" என்று பாம்பாக சீற,..

"அவனுடைய "டீ" என்ற அழைப்பில் அதிர்ந்து மோனி நிமிர்ந்து அவனை பார்க்க"..."சரியாக காவலரும் அந்நேரம் அவர்களை வந்தடைந்தார்...

"ஏம்மா என்ன பிரச்சனை இங்க"? என்றார் காவலர்...

"ஒன்றுமில்லை சார்.. நான் தான் பின்னாடி இவங்க ஸ்கூட்டி வந்ததை கவனிக்காமல் ரோட் பக்கமா திரும்பிட்டேன்..தப்பு என் மேல்தான் சார்" என்றவன்... "நீ வண்டியை எடுத்துக் கொண்டு போம்மா" என்று மோனியை பார்த்து சாதாரணமாக சொல்லுவது போல் குரல் இருந்தாலும்...முகபாவனையில் "போ" என்ற கட்டளையே இருந்தது..


6
"நீ சும்மா இருப்பா" என்றவர்..இங்க நடந்ததை நானும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.. நீ தானம்மா அந்த பையன் மேல மோதின.. லைசன்ஸ் வச்சிருக்கியா? இன்சூரன்ஸ் மற்ற பேப்பர்ஸ் எல்லாம் எடு" என்றார் மோனியை..

"ஒழுங்காக போன்னு சொன்னால் போனியா"? இப்போ பாரு " என்று மனதினுள் முணுமுணுத்த படி நின்றான்...

"சார் ..என் மேல் தான் தப்பு " என்றபடி அவர் கேட்ட தகவல்களை கொடுத்தாள்...

"ஏன் தம்பி ..கையில் நீங்க என்ன பேப்பர் வைத்திருந்தீங்க முக்கியமானதா? என்ன பேப்பர் அது"? என்றார் அவளுடைய தகவல்களை சரிபார்த்துக் கொண்டே..

"அது நான் I.A.S எக்ஸாம் எழுதப் போறேன் சார்.அதற்கான பிரிமிலரி எக்ஸாம் க்கு நோட்ஸ் எழுதியிருந்த பேப்பர் சார்" என்றான் பாவமாக...

"அடடா, என்று வருத்தப்பட்டவர்... பாரும்மா நீ கவனமா போகததால் அந்த பையனோட முக்கிய நோட்ஸ் எல்லாம் இப்படி வீணாபோச்சு".. என்று கண்டித்தவர்..

"உன் பெயர் என்ன தம்பி "? என்றார்..

"வருண் சார் " என்றான் ..

"என்னம்மா கோர்ட் போய் ஃபைன் கட்டுறியா"? இல்லஆஆஆ என்று இழுக்க...

"ம்க்கும்" என்றான் வருண் முகத்தை திருப்பியபடி...

"அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்தவள்..
 

Sirajunisha

Well-Known Member
#2
7
"நான் கோர்ட்லேயே ஃபைன் கட்டிவிடுகிறேன் சார்.. கமிஷ்னரோட பெண்ணாக இருந்து கொண்டு சட்டத்தை மதிக்கவில்லையென்றால் எப்படி "என்றவளை...

வருணும், டிராபிக் போலீஸும் அதிர்ச்சியாக பார்த்தனர்...

"மோனியின் அப்பா வை பற்றி தெரிந்ததும்..சரிம்மா பார்த்து போங்க" என்றவர்.. வருணிடம் திரும்பி, "ரோட்டில் போகும் பொழுது பார்த்து போப்பா " என்று இலவச ஆலோசனை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்...

வருண் அங்கிருந்து நகர முயல, "சாரி வருண் சார்" என்றவள்.."அய்யோ என்றபடி அவசர அவசரமாக எதையோ தேடினாள் "...

"என்னாச்சு " என்றான் எரிச்சலாக..

"என்னோட ஹேண்ட் பேக் காணும் சார் " .."அதில் முக்கியமான கார்ட் எல்லாம் இருந்தது சார் " என்றாள் பதட்டமாக...

"என்ன கலர் பேக் " என்றவனிடம்...

"மெரூன் கலர் சார் " என்றபடி சுற்றிமுற்றியும் தேட கிடைக்கவில்லை..

"சார் ..கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்" என வருணிடம் பேசியபடியே தேடியவள்...

"உங்க செல்போன் அந்த ஹேண்ட் பேக் ல இருக்கா"?.. என்றான் வருண்..

"இருக்கு சார் " என்றவளிடம்.."நம்பர் சொல்லுங்க " என்றவனிடம்

"தனது செல்போன் என்னை கூற வருண் டயல் செய்ய, ரிங் போனது..

8
"ரிங் போகுது... என்றவன் சுற்றிலும் தேட எங்கேயும் கிடைக்கவில்லை..

மோனி, ஸ்கூட்டியின் சீட்டை தூக்க அழகாக படுத்திருந்தது அவளுடைய பேக்... "பேக் இருக்கு சார்" என்றபடி வெளியில் எடுக்க ரிங் டோன் நன்றாகவே கேட்டது...

"நான் ஆளான தாமரை...
ரொம்ப நாளாக தூங்கல.. என்று பாட்டு ஹேண்ட் பேக்கினுள் ஒலித்துக் கொண்டிருந்தது...

"மோனியை , வருண் "இந்த பாட்டை இவ தெரிந்து வைத்திருக்காளா? இல்லை தெரியாமல் வைத்திருக்காளா? என்று யோசனையாக பார்க்க...

ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவள்.. வருண் யோசனையாக அவளை பார்ப்பதை கண்டு,

"அப்படி பார்க்காதீங்க மாமா.. வெட்கமா இருக்கு " என்ற சினிமா பாணியில் சொன்னவள் வருண் ஐ பார்த்து கண்ணடித்து விட்டு வண்டியில் சிட்டாக பறந்து விட்டாள்...

வருண் தான் திகைத்து அப்படியே நின்று விட்டான்.. (இருங்க இருங்க ... இப்போ என்ன நடந்துச்சு... சீட்டிற்கு அடியிலேயே வைத்துக் கொண்டு எதற்கு தேட வைத்தாள்... ஆஹா ஆஆஆ... பயபுள்ள போன் நம்பர் வாங்கிடுச்சோ?...)....

சிரித்தபடியே அறையினுள் வரும் மோனியை பார்த்த ஆர்னி ...

9
" என்ன மோனி, இவ்வளவு சந்தோஷமா வர்ர? ஏதாவது குட் நியூஸ் ஆஆ"? என்றாள் ஆர்னி...

"குட் நியூஸ் இல்லை ஆனால் காமெடியான நியூஸ்" என்றவள் வழியில் நடந்தவற்றை கூறினாள்...

"என்னோட ரிங் டோன் கேட்டதும் என்னை யோசனையா பார்த்தான் பாரு.. " அப்படி பார்க்காதீங்க மாமா வெட்கமா இருக்கு" சொல்லிட்டு எஸ் ஆகிட்டேன் " என்றவளை...

"அடிப்பாவி.. நீயா இப்படி பண்ண ..என்னால் நம்பவே முடியவில்லை " என்றாள் ஆர்னி ஆச்சரியமாக...

"ஹா...ஹா.. ஹா.."..

"சரி எதற்கு பேக் காணும்னு சொல்லி தேட விட்டே அதை சொல்லு முதலில் " என்றாள் ஆர்னி கராராக...

"நான் மோதினதில் எக்ஸாமிற்கு பிரிபேர் பண்ணி வைத்திருந்த நோட்ஸ் எல்லாம் தண்ணியில் விழுந்துடுச்சு..."எவ்வளவோ கஷ்டப்பட்டு பிரிப்பேர் பண்ணியிருப்பாங்க?"..

"எனக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ் அகாடமி கோச்சர் இருக்காங்க .. அவங்களிடம் நோட்ஸ் வாங்கி கொடுக்கலாமென்று நினைத்தேன்.அதற்கு அவரோட கான்டாக்ட் நம்பர் வேணுமில்ல அதற்காகத்தான்".. கேட்டா உங்க ஹெல்ப் தேவையில்லை சொல்லிவிட்டாங்க என்றால்?" என்ன பண்றது.. அதனால் தான் அப்படி நம்பர் வாங்கினேன்" என்றாள் மோனி..
10
"ம்ம்ம்.. ஏதோ நல்லது நடந்தால் சரிதான் " என்றாள் ஆர்னி விஷமமாக ..

"ஏய் "... என்று மோனி ஒரு விரல் நீட்டி எச்சரிக்க.. அங்கு சிரிப்பலை பரவியது...

இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் படுக்கைக்கு செல்ல, ஆர்னி முழுபோர்வையும் தலையோடு சேர்த்து போர்த்திக் கொண்டு தூங்கி விட்டாள்..

மோனிக்கு சில தகவல்கள் தேவைப்பட்டதால் ஆன் லைன் மூலமாக செல்போனில் தேடிக் கொண்டிருந்தாள்...

தனது செல்போனில் சார்ஜ் இல்லாததால் ஆர்னியின் போனை பயன்படுத்திக் கொண்டிருந்தாள்..

அப்போது Lusu என்று சேமித்து வைக்கப்பட்டிருந்த எண்ணிலிருந்து வீடியோ கால் வந்தது...

"என்ன வீடியோ கால் வருது? எடுக்கலாமா? வேண்டாமா? " என்று யோசித்தவள்.."." சரி, யாரென்று தான் பார்ப்போமே " என்று ஆன் செய்து விட்டாள்...

திரையில் ஒருவரின் உருவம் மற்றவர்க்கு தெரிந்ததும்.. ஒருவரையொருவர் சந்தேகமாக பார்த்துக் கொண்டனர்...

"இது ஆனி போன் தானே?" என்றான் அமிர்தன் ...

"ஆமாம் "...என்றாள் மோனி..

"அதை ஏன் நீங்க வைத்திருக்கீங்க"?.. "நீங்க யாரு"? "ஆனி எங்கே"? என்று சந்தேகப்பட்டு வரிசையாக கேள்வி கேட்டான் அமிர்தன் ..

11
"முதலில் நீங்க யாரென்று சொல்லுங்க?" என்றாள் மோனியும் விடாமல் ...

"அது ஆனிக்கு தெரியும்..உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை".."நான் ஆனி இடம் பேசணும்.முக்கியமான விசயம்".."அவங்க போனை நீங்க பயன்படுத்திக் கொண்டு இருக்கீங்க "? "நீங்க யாரென்று முதலில் சொல்லுங்க"? என்றான் வெடுக்கென்று..

"என்ன இப்படி பேசுகிறார்".. என்று திகைத்தவள்.. "நான் ஆர்னியோட பிரண்ட்" என்றாள் மோனி அமிர்தனின் ஆளுமையின் பேச்சில் அவளறியாமல்..

"ஓஓ.. என்றவன்.. ஆனி யிடம் போனை கொடுங்க" என்றான் அமிர்தன் ...

"ஆர்னி தூங்கிறா சார்" ...

"பரவாயில்லை எழுப்புங்க"? என்றான் அமிர்தன் ..

"அமிர்தனிடம் மோனியால் கோபத்தை காட்ட முடியவில்லை .. ஏனென்றால் அவனுடைய நம்பரை பதிவு செய்து செய்து வைத்திருக்கிறாள்..எனவே நாம் எதுவும் தவறாக பேசிவிடக் கூடாது " என்று நினைத்தவள்..

"ஒரு நிமிசம் சார்" என்றவள் செல்போனை கையில் வைத்தபடியே, ஆர்னி போர்த்தியிருந்த போர்வையை முகத்திலிருந்து விலக்கினாள்..

"ஆர்னி யின் முகத்திலிருந்து போர்வையை விலக்கியவள் அதிர்ச்சியாகி விட்டாள்...

வாயில் கட்டைவிரலை வைத்து சப்பியபடியே தூங்கி இருப்பாள் போலும் ...

12
வாயிலிருந்து லேசாக சரிந்து இருந்தது.. ஆர்னி நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்...

"அடிப்பாவி இதற்குத்தான் தினமும் போர்வையை தலைவரை போர்த்திக் கொண்டு தூங்குகிறாயா"? என்று திட்டியவள்..."போன் இன்னும் வீடியோ காலில் தான் இருக்கிறது.. அமிர்தனும் இதை பார்த்துக் கொண்டிருப்பான் " என்று யோசிக்க மறந்து விட்டாள்...

"ஆர்னி, ஆர்னி" என்று எழுப்ப...தூக்கத்திலிருந்த மெல்ல கண் விழித்தவளின் ... முன் "மோனி" செல்போனை காட்ட, அதில் தெரிந்த அமிர்தனை பார்த்து.. " நான் லீவ் லெட்டர் கொடுத்துவிட்டேன் சார் " என்று உளறிக் கொட்ட..

மோனி தலையில் அடித்துக்கொண்டாள் என்றாள், அமிர்தன் அவளது ஒப்பனையில்லா அழகையும், அவளது குழந்தை தனத்தையும் கண்டு ரசித்தான்...

ஆர்னி கண்ணை திறந்து திறந்து மூட, "சரி நீங்க தூங்குங்க" என்றதும் தலையாட்டி விட்டு படுத்துவிட்டாள்...

மோனியிடம், நான் காலையில் ஆனியிடம் பேசிக் கொள்கிறேன் என்று வைத்து விட்டான்...

தலைக்கடியில் இருகைகளை வைத்தபடி மல்லாக்க படுத்திருந்த அமிர்தனின் சிந்தனையில் ஆர்னியின் முகமே வந்து வந்து போனது..

13
"ஸோ ஸ்வீட், எவ்வளவு அழகா இருக்க..நீ பண்ற ஒவ்வொரு எக்ஸ்பிரசனும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... நீ என் கூடவே இலண்டன் வந்துவிடேன்... நான் உன்னை ரொம்ப நல்லா பார்த்துக் கொள்வேன்"... என்று மௌன சிரிப்பில் மனதோடு அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்...

"மன்னவன் தன் மனதில் உள்ளதை அறிவானோ"?...
 

Sirajunisha

Well-Known Member
#3
ஹாய் மக்களே,
நான் அடுத்த Ud யோடு வந்துட்டேன். போன Ud க்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என்று நன்றிகள்...


கதையை படிங்க கருத்தை சொல்லுங்க..

Waiting for ur comments makkaley ..
 

Latest profile posts

Sorna santhanakumar sis waiting for ur update
விட்டு செல்லாதே கண்மணியே அடுத்த வாரத்தில் இருந்து தொடரும் ஃப்ரெண்ட்ஸ்.....எக்ஸாம் and ஹெல்த் problemனால இந்த லேட்...மன்னிக்கனும் தோழமைகளே !
hiii friends... manjal vaanam konjam megam episode 2 posted.. read and share ur comments.. :) :)
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! 12 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என் கூட பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.

Sponsored