கண்ணனின் ராஸ லீலை

#1
"கண்ணனின் ராஸ லீலை"

கண்ணனின் லீலைகள் கணக்கற்றவை
ஒவ்வொரு நிலைகளிலும் நிறைய தத்துவங்கள்
அவற்றில் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது கண்ணனுடைய ராச லீலை

பிருந்தாவனத்தில் பூரண நிலவு ஒளியில் குழல் இசைத்து தன் மீது பிரேமை கொண்ட கோபிகைகளை வரவழைத்து பரம ஆனந்தம் அளித்த லீலைதான் ராச லீலை.

மகான்களின் பல குறிப்புகளை படித்தும் கேட்டும் ரசித்தும் என் உள்ளத்தில் எழுந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்

இந்த உலகம் பூராவும் அனைத்து ஜீவன்களுமே கோபிகைகள் தான் கண்ணன் மட்டுமே ஒரே பரம புருஷன்
உணர்வுப்பூர்வமாக (கான்சியஸ்) அவரவரும் தன்னுடைய ஆழ்மனதில் அனுபவிக்க கூடியதுதான் பரப்பிரம்மம் எனும் நாம ரூப மற்ற பேரானந்தம்
இதைதான் ஆத்மா உயிர் என்று சொல்கிறார்கள்
அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளது
இதற்கு போக்கு வரவு கிடையாது
இந்த அதிஷ்டானத்தில்தான் மனசு என்னும் எண்ண கூட்டங்கள் தனித்தனி ஜீவன்களாக உருவமாக பிரதிபலிக்கின்றது

திருப்பதி பெருமாள் கோவிலுக்குச் சென்றால் .... உள்ளே நெருங்க நெருங்க நமக்கு முன்னுள்ள தலைகளுக்கு இடையில் இடையில் தெரிவானா என்று பார்த்துக் கொண்டே போவோம்
நம்முடைய உள்ளத்திலும் எண்ண கூட்டங்களுக்கு இடையில் இடையில் கவனித்துப் பார்த்தால் பேரமைதியான பேரானந்த உணர்வை அனுபவிக்கலாம்
ஆசாபாசங்கள் நிறைந்த எண்ண கூட்டங்கள்தான் மனசு.
மகான்கள் இந்த உலகில் ஆசாபாசங்களுக்கு மயங்காமல்
மனசை வென்று இதை உணர்ந்தனர்

கலியுகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுகமாக இதை உணர்த்தவே கண்ணன் இடையனாக அவதரித்தான்.
தன்னிடம் பிரேமை கொண்ட கோபிகைகளுக்கு அந்தப் பேரானந்த உணர்வை உணர்த்தி அருளினான்.

ராச லீலையில் ஒவ்வொரு கோபிகைகளுக்கும் இடையே இடையில் கண்ணன் இருப்பதை பார்த்திருப்பீர்கள்
அத்தனை பேருமே தன்னுடன் மட்டுமே கண்ணன் இருப்பதாகத்தான் உணர்ந்தார்கள்
ஒவ்வொரு கோபிகையும் ஒரு எண்ணம்
ஒவ்வொருவருக்கு இடையிலும் இடையனான கண்ணன்
காரணம் அவர்கள் அனைவருமே ராமாவதாரத்தில் காட்டில் தபஸ் செய்த முனிவர்கள் என்று சொல்வார்கள்
அந்த முனிவர்கள் ராமன் வனவாசம் வந்த பொழுது ராமரின் வடிவழகில் மெய்மறந்து ஆலிங்கனம் செய்து கொள்ள எண்ணியதால் அதை கண்ணனாய் பிறந்து நிறைவேற்றியதாக புராணம்.

இதை உணர்த்தத்தான் ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணன் தன்னுடைய ஜென்மாஷ்டமியில் எழுந்தருளுகின்றான்.
இந்த அகிலம் பூராவும் நிறைந்துள்ள பரப் பிரம்மமே கண்ணன்
மனசுதான் அதை உணர்வதற்கு தடை
அந்த மனசும் மாயா ரூப கண்ணன்தான்
இது அவனுக்கு ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
அது போல.. மனசை வைத்துத்தான் அந்த ஆனந்த நிலையை அடைய முடியும்
கலியுகத்தில் மனசை வெல்வது மிக கடினம்
அதனால்தான் அந்த மனசை கண்ணனிடமே வைத்து விட்டால் அவனிடமே பிரேமை கொண்டு விட்டால் ... மிக சுலபமாக பேரானந்த உணர்வை அனுபவிக்கலாம்

கலியுகத்தில் சம்சாரத்தில் உழன்று தவிக்கும் நம்மைப் போன்றவர்களுக்காகவே பரிபூரண சரணாகதி உடைய பிரேமையினால் மட்டுமே தன்னை அடைய முடியும் என்பதை காட்டவே துவாபரயுகத்தில் இடையனாய் அவதரித்து ராச லீலை புரிந்து அனுக்ரஹித்தான்.

யார் எந்த நிலையில் எப்படி பிறந்தாலும் எப்படி இருந்தாலும் இந்த ஒரு பிரேமையினாலேயே கண்ணனை அடைவதில் எந்த தடையுமில்லை என்பதை காட்டவே பலவித பக்தர்களின் கதைகள்
ஜனகராஜன் குசேலர் சபரி ததிபாண்டன் பிராமண ஸ்திரீகள் ஆசிரியர் இடைச்சிகள்.....

நம்முடைய பிறப்பு வளர்ப்பு செயல்கள் சூழ்நிலைகள் எத்தனை பாதகமாக எப்படி இருந்தாலும் கண்ணனிடம் நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரேமை வைத்து விட்டால் அவனை அடைவது சத்தியம்.
கண்ணனும் முருகனும் கணபதியும் சிவனும் அம்பாளும் மற்றும் எந்த தெய்வமானாலும் அனைவருமே ஒரே பரப்பிரம்ம சொரூபம்தான் என மனதில் கொண்டு சிரத்தையுடன் நம்பிக்கையுடன் சரணாகதி பாவமாக பக்தி செய்ய வேண்டும்

இப்படி நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் தைல தாரை போல பார்ப்பதில் கேட்பதில் படிப்பதில் கண்ணனையே
அனைத்திலும் எண்ண பழகிவிட்டால்
போகப் போக மனம் மாறிவிடும்

நாம் சிரத்தை நம்பிக்கை எனும் ஒரு அடி எடுத்து வைத்தால் கண்ணன் அனுக்கிரகம் எனும் பத்தடி வைத்து நம்மிடம் வந்து விடுவான்
இதை அனுபவபூர்வமாக உணரலாம்.

படித்ததில் பிடித்தது
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes