கண்டேன் ஒரு கடிதம்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"காதல் பாடல் கேட்கையிலே
கடிதப் பாடல் ஒன்று கேட்டேன் ஒலிபெருக்கியிலே
உள்ளம் நெகிழ்ந்தது அதில்
ஒளிந்திருந்த வார்த்தைகளிலே"


"வேதனையை வார்த்தையில் வடித்து
வாய் மொழி திறந்து பாடிய பாடல்
செவி வந்து அடைகையிலே
சிலிர்த்து போனேனே சின்னப்பொன்னின் குரலில்"


"வறுமை வாட்டிடத்தான்
கொடுமை பட்டிடத்தான்
கொஞ்சமாய் முன்னேறிட
படிக்க வைத்திடலாம் நாம் பெற்ற
பச்சைக்கிளியை என
பாய்ந்து உழைக்கிறாள்
ஒரு பத்தினித்தாய்"


"பாத்திரம் விற்றாள்
படிக்க வைத்திடத்தான்
பட்டினி கிடந்தாள்
பணம் இல்லாததால்"


"விடுதியிலே
விக்கித்து தவிக்கும்
விளையாட்டு பிள்ளை தான்
வேதனையோடு தன் மனம் சொல்லிட
சொல்லிய செய்தி கேட்டு சுக்குநூறாய் ஆனது
என் இதயம்
அவளின் கடிதத்தின் வார்த்தைகளில்"


"பேனாவிற்கும்,புத்தகத்திற்க்கும்
பெரும்பாடாய் அவள் நிலை இருக்க
நிதம் போடும் சட்டையில்
நூறு ஓட்டை இருக்க
தவிக்கும் மனதை
தன் கடிதத்தில் அவள் கொட்ட
தடுமாறி நின்றேன் நான்"


"விடுதி சோற்றில்
புழு இருக்க
அதை விட்டால் வேறு இல்லை எனும்
நிலை இருக்க
அன்னை அவளை
ஆயிரம் பத்திரம் தான் சொல்கிறாள்
அன்பினால் அந்த ஆனந்த பைரவி"


"கீழே தரையில்
கருநாகம்
மேலே கூரையில்
மேற்கே மழை கூடினால்
மொத்தமாய் நனைந்திடுவாள்
அன்னை என
சாக்கு போட்டு சாகமால் வாழ
வழி சொல்ல
அவள் கடிதம் கண்டு
கணத்த மனம் அதை
கடந்திடும் வழி தான்
காணவில்லை நான்"


"கண்டிட்ட ஒரு கடிதம்
வறுமையின் வலி சொன்னது
அது வடிந்திடும் வழி அதனை
காலம் சொல்லுமோ?"
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
கடிதம் வடிவில் பாடல் வரிகள் :

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன் உருப்படியா படிக்கிறேன்
யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்!

பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு பாத்திரத்த வித்தீங்களே!
எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
அம்மா எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
புஸ்தகநோட்டு வாங்க பணம் அனுப்புறேன்னு சொன்னீங்களே!
பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா....
அம்மா பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா...

புஸ்தகநோட்டு வாங்கலைன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
வாங்கிக் கொடுத்த பேனாவும் உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......
கிழிஞ்ச சட்டைக்காரியின்னு கிண்டலாத்தான் பேசுறாங்க
ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்
அம்மா ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்

தோட்டக்காரய்யா வீட்டுல பழைய சட்டை தருவதா சொன்னீங்களே!
வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
நீங்க வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
விடுதி சோறு புழுவுன்னு வீதியில கொட்டுறாங்க
நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......

கீழாண்ட செவத்தோரம் மறந்தும் போகாதம்மா
கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
அம்மா கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
மேலாண்ட கூரைமேல சாக்கு கிழிச்சுப் போடுங்கம்மா
மேற்கத்தி மழை அடிச்சுதுன்னா இருக்கும் இடம் நனைஞ்சுடும்

பாத்திரம் தேய்ச்ச கையெல்லாம் காயமுன்னு சொன்னாங்க!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்துவும் போட்டுக்கம்மா!
இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்
கோடீஸ்வரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top