கடி.. கடி...

SahiMahi

Well-Known Member
#1
*யார் சிந்தனையிலோ உதித்த சிறந்ந தத்துவங்கள்...*

பருப்புல ஒசந்தது முந்திரி

பதவில ஒசந்தது மந்திரி !

*தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம்*.

*ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது.*

பல்லுல கல்லு பட்டாலும் கல்லுல பல்லு பட்டாலும் damage என்னவோ பல்லுக்கு தான்.

*வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!*

ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு.

*குக்கர் விசிலடிச்சு பஸ்சு போகாது.*

*கண்டக்டர் விசிலடிச்சு சோறு வேகாது?*

காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

*பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் சரி. அது தியேட்டரில் ரிலீஸ் ஆகாது.*

நீங்க எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும், மகா வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்சாலும் கரெண்ட் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது.

*சாலைய பார்த்தா சமத்து. சேலைய பார்த்தா விபத்து.*

Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..

*ஓடுற எலி வாலை புடிச்சா நீ 'கிங்'கு. ஆனா தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு....*

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?

*கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா, சத்தம் போட்டா கொலுசு வருமா ?*

டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டி தான் சாம்பாதிக்கிறாங்க. அதனால அவங்களை வெட்டி வேலை செய்யறாங்கன்னு சொல்ல முடியுமோ...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement