ஒரு பத்தி கதை - நாட்டாம .. தீர்ப்ப மாத்து [சிலருக்கு மட்டுமாவது]

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாசலில் காரை நிறுத்த கூறி, அந்த பிரபலமான மனிதரும் அவர் குடும்பமும் காரிலிருந்து உதிர்ந்தது. எப்பொழுதும் வழமையாய் வரும் பாதுகாப்பு காவலர்கள் இருவர், இவர்களுக்கு பத்தடி பின்னால் .. அவர்களின் போலீஸ் சீருடையை தவிர்த்து, அக்குடும்பத்திற்கு காவலாய் வந்தனர். சட்டென வந்த ஒரு இரு சக்கர வாகனம், அந்த பிரபலத்தின் மனைவியின் கழுத்தில் இருந்த சங்கிலியை, மின்னலென பறித்து விரைய..... அவர் சத்தம் கேட்டு காவலர்கள் ஓடிவர... கூட்டமும் கூடியது. அருகே வந்த ஒருவன், "இந்தாங்க, அவங்க வண்டிய ஃபாலோ பண்ணிட்டு போங்க", என்று அவரது ஆக்டிவா-வினைத் தர.. காவலர்களோ... திரு திரு... அந்த பிரபலம் பொறுமையிழந்து , "யோவ் என்னய்யா ஆச்சு? ஏன் முழிக்கிறீங்க? போய் அந்த திருட்டுப்பசங்கள புடிக்க வேண்டியதுதான?", எனவும்... "முடியாது சார், கார்ல வந்ததால நாங்க ஹெல்மெட் போட்டுட்டு வரல. ஹெல்மெட் இல்லாம போனா, வண்டிய வாங்கி வச்சுக்க சொல்லி நீங்கதான் இன்னிக்கு ஆர்டர் போட்டிங்க, ஹெல்மெட் இல்லாம போற போலீஸ் மேலயும் கேஸ் பதிவு பண்ண சொல்லி கமிஷனரும் ஆர்டர் போட்டிருக்கார். நாங்க எப்டி சார் போறது?"

"அட ராமா!!!", என்றவாறு தலையில் அடித்துப் புலம்பினார். அந்த மேதகு நீதிபதி..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

P.S.:: கதையில் வரும் தீர்ப்பு/உத்தரவு.. தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது.

சிலருக்கு விதிவிலக்கு அளிப்பது நல்லது, என்பது எனது விண்ணப்பம்.

ஆதரவுக்கு நன்றி நட்புக்களே..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top