ஒரு குரல் போலவே நீ எனக்குள்ளே 2

Advertisement

Akila Mugilan

Writers Team
Tamil Novel Writer
ஒரு குரல் போலவே நீ எனக்குள்ளே 2:

மாலை வீட்டிற்குள் நுழையும் போதே வீட்டின் தனிமை ஷ்ரத்தாவை அச்சுறுத்தியது. இருந்தாலும் அண்ணாவும் பாவம் எத்தனை வருஷம் அவன் தனியா இருப்பாங்க கொஞ்சம் நாளைக்கு அம்மா ,அப்பா கூட இருக்கட்டும்.எனக்கு தான் எப்பவும் என் பேபி இருக்காளே .பேபி தூங்கி எழுறதுக்குள்ள எல்லா வேலையும் முடிக்கணும். ஃபர்ஸ்ட் அரவிந்த் க்கு கால் பண்ணனும்.

சொல்லு மா ,உன் போன்க்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நான் கிளையண்ட் க்கு அனுப்பிட்டேன் .எல்லாம் பக்காவா இருக்கு .நீ பேபி கூட இரு எதாச்சும் ஹெல்ப் வேணும்னா உடனே கால் பண்ணு ..
ஓகே அரவிந்த். .எனக்கு உங்களை தவிர இங்க யாரும் தெரியாது சோ உங்களுக்கு தான் கால் பண்ணுவேன்.அப்புறம் நான் செலக்ட் பண்ண பொண்ணுக்கு நீங்க ஏன் இன்னும் அப்பாயின்மெண்ட் அணுப்பல,ஆக்சுவலி ஷ்ரத்தா அந்த பொண்ணுக்கு இப்பதான் கல்யாணம் ஆகி இருக்கு ,அதனால் என்ன ஏன் அரவிந்த் கல்யாணம் ஆகிட்டா பொண்ணுங்களுக்கு ஜாப் தர மாட்டிங்களா?நீங்க மட்டும் இல்ல நிறைய கம்பெனி யில் கல்யாணம் ஆகிட்ட பொண்ணுங்க ஒழுங்கா வொர்க் பண்ண மாட்டாங்கனு நினைக்கிறீங்க , ஒரு கல்யாணம் ஆன பொண்ணு வேலை க்க்கு வரதே எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா ,வீட்ல இருக்க எல்லாரையும் எந்த பிராப்ளமும் இல்லாம பார்த்துக்கணும்.உங்க பிராப்ளம் என்ன அவங்க எக்ஸ்டெண்ட் பண்ணி வொர்க் பண்ண முடியாது அதான பட் அவங்க எக்ஸ்டெண்ட் பண்ண அவசியமே இல்லாமல் வொர்க் டைம் வேஸ்ட் பண்ணாம முடிச்சு குடுபாங்க.
ஒரு எம்பிளாய் ஆபீஸில் எவ்வளவு நேரம் இருக்காங்கன்னு பார்க்காதீங்க .எப்படி வொர்க் பண்றாங்கனு பாருங்க.அம்மா தாயே நாளைக்கே அப்பாயின்மெண்ட் அனுப்பிடுறேன் ,என்னை மன்னிச்சிடு
ஷ்ரத்தா அப்புறம் இன்னொன்னு .ஹரீஷ் கால் பண்ணான் ,

அரவிந்த் நீங்க எத பத்தி பேச போரிங்கனு எனக்கு தெரியும் . ப்ளீஸ் நான் ரொம்ப அடிபட்டுடேன்.எனக்கு சுத்தமா தெம்பு இல்ல . விட்ருங்க. பாய்,குட் நைட்..

மம்மா..என் அரு குட்டி எழுந்திட்டிங்களா..இங்க வாங்க செல்லம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கார்ட்டூன் பார்க்கலாம் .

பாத்தி காதும் எங்க ..செல்லம் பாட்டி பேபி க்கு குக்கி வாங்க பாய் போயிருக்காங்க .. ஹ்ம்ம் சரி மம்மா..என்ன இவ அமைதியா போறா பின்னாடி எதாச்சும் ப்ளான் வச்சுறுகாளோ..
ஃபர்ஸ்ட் இவ தூங்குற டைம் மாத்தணும்.8 க்கு எழுந்து நைட் 12 மணிக்கு தூங்குறா..

நாளைக்கு ரகு அண்ணாவ பிக் பண்ண இரயில்வே ஸ்டேஷன் போகனும்.அவங்க வந்துட்டா அப்புறம் எதுக்கும் பயப்பட வேண்டாம்.


மறுநாள் காலை 6 மணிக்கே காலிங் பெல் சத்தம் கேட்டது ..நம்ம வீட்டுக்கு யாரு இவ்வளவு காலையிலே வர போறாங்க,ரகு அண்ணா டிரெயின் கூட 8 கு தான வரும்.

கதவை திறந்ததும் ரகு அண்ணா ,ராதா அம்மாஆ . போன் பண்ண வேண்டியது தான?சரி உள்ள வாங்க ஃபர்ஸ்ட் .

டிரெயின் சீக்கிரம் வந்துடுச்சு பாப்பா அதான் எங்களுக்கு வீடு தெரியும்ன்னு வந்துட்டோம் .நீ எப்படி இருக்க பாப்பா ,சின்ன பாப்பா எப்படி இருக்காங்க,

இரண்டு பேரும் சூப்பரா இருக்கோம் ரகு அண்ணா .

சரி நான் காபி போட்டுட்டு வர்றேன் .நீங்க உட்காருங்க.

பாப்பா எப்பயுமே நான் தான் உங்களுக்கு வேலை செய்வேன் .நீங்க எங்க இருக்குன்னு சொல்லுங்க . பரவாயில்லை ராதாம்மா .இப்ப மட்டும் நான் போடுறேன் .

ஏன் ராதா கண்ணுலாம் கலங்கிருக்கு?என்னால முடியல ,எப்படிலாம் வளர்த்தோம் ,இப்ப பாப்பா எப்படி நிக்குது பாருங்க .அம்மா இறந்த பிறகு பாப்பா வாழ்க்கை ல எவ்வளவு பிரச்சினை .சரி கண்ணை துடை பாப்பா பார்த்து கஷ்டபடும்.

மம்மாஆ ஆ ஆ,நீங்க குடிங்க பேபி எழுந்துட்டா நான் தூக்கிட்டு வர்றேன் .

பேபி .. மம்மா இங்க தான் இருக்கேன் ..வாங்க வெளிய போகலாம் ..ராதா பாட்டி வந்திருக்காங்க பேபி ய பார்க்க .

ராதாம்மா இங்க பாருங்க பேபி..பாப்பா வளந்துட்டாங்க..பேபி பாட்டி சொல்லு ..பாத்தி ..நீங்களும் சின்ன வயசுல இப்படி தான் பேசுவிங்க ட,நா, லாம் வராது. ஆனா பாப்பா க்கு யாரோட ஜாடை ..

அது பார்க்க அவங்க அப்பா மாதிரி ..இதை சொல்லும்போதே உள்ளுக்குள் ஏதோ ஒன்று நொறுங்கியது.

ச்ச ,இப்ப ஏன் அவன பத்தி யோசிக்கணும்,எனக்கு யாரும் வேணாம் .அவளின் முகத்தை வைத்தே இருவருக்கும் புரிந்தது அவளின் மனநிலை , பேச்சை மாற்றும் பொருட்டு ,இந்த பில் எல்லாம் போனதும் உங்க கிட்ட குடுக்க சொல்லி கண்ணன் சொல்லி அனுப்பினான். ஹாஸ்பிடல் ஒருதடவை வந்து உங்களை பார்க்க சொன்னான் .அது உங்க ஹாஸ்பிடல் மா என்ன தான் மத்தவங்க பார்துக்கிட்டாலும் நீங்க பார்த்துக்குற மாதிரி வருமா , எவ்வளவு பேருக்கு நீங்க வேலை குடுக்குறிங்க ,நீங்க போய் இப்போ வேலைக்கு போரிங்க..

விடுங்க ரகு அண்ணா ,எனக்கு இப்படி இருக்க தான் புடிச்சிருக்கு.

சென்னை :
இன்னைக்கு உங்க பையன் கிட்ட நான் பேசணும்,அவனை இன்னைக்காச்சும் சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லுங்க அட்லீஸ்ட் ஒரு 10 மணிக்காச்சும் வர சொல்லுங்க,என்னவோ அவன் எனக்கு மட்டும் தான் பையன் மாதிரி பேசுற என்று ராகவன் - மாதங்கி தம்பதியினர் சண்டை இட்டு கொண்டிருந்தனர்.

அவங்க பேசுறது நம்ப ஹீரோ வ பத்தி தான் .அர்ஜுன் ,6 அடி உயரம்,ஹீரோ மாதிரியான தோற்றம்,அர்ஜுன் குருப் ஆப் கம்பெனியின் M.D அது மட்டும் இல்லாமல் ஒரு சக்செஸ்ஃபுல் திரைப்பட இயக்குனர்.

அர்ஜுன் தினமும் வீட்டுக்கு வர டைம் 2 ,அப்படி முன்னாடியே வீட்டுக்கு வந்தாலும் அவன் கூட யாரும் பேச போறது கிடையாது.கூட பிறந்தவர்கள் ஒட்டி பிறந்த ஒரு அக்கா ரோஷ்ணி (5 நிமிடம் முன்னாடி ),ஒரு தங்கை ரோஹிணி .

அப்பா காலிங்..என்ன ஆச்சு பா ,எதாச்சும் பிராப்ளம் ஆ?

ஏன் அர்ஜுன் எடுத்ததும் இப்படி கேட்கிற ..இல்ல பா இந்த டைம் ல பண்ண மாட்டிங்களே அதான் கேட்டேன் .ஒன்னும் இல்ல அர்ஜுன் ..இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வர்றியா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ..சரி ப்பா வறேன்.

போன் வைத்ததும் என்ன சொன்னான் உங்க பையன் ..வர்றேன் சொன்னான் .நீ எதுக்கு இப்ப அவன் கிட்ட பேசணும் சொல்ற ..

அர்ஜுன் கிட்ட அவன் கல்யாணம் பத்தி பேச போறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top