ஏலக்காய் நகரம் - குட்டி காஷ்மீர் - போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்)

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஹாய்...

தேனி மாவட்டம் யாரெல்லாம் இருக்கீங்க... வந்து கை கொடுங்க... என்னோட ஊர் பெருமை.. சீக்கிரமே வந்து சொல்றேன்
அப்படியே.... அந்த ஏலக்கா செடிய போட்டோ எடுத்து அனுப்புங்க சிஸ்.... அது செடியா... மரமா... கொடியான்னு பார்க்கணும்
 

Joher

Well-Known Member
ஹாய் ஹாய்...

தேனி மாவட்டம் யாரெல்லாம் இருக்கீங்க... வந்து கை கொடுங்க... என்னோட ஊர் பெருமை.. சீக்கிரமே வந்து சொல்றேன்

கடை போடாமல் விளம்பரம் பண்ணி அப்புறம் தான் கடையை ஆரம்பிப்பீங்களா?????:D:D:D

கடையை ஓபன் பண்ணுங்க பாஸ்..........

இங்கே காஷ்மீரில் நல்ல ஏலக்காய் விற்கப்படும்.......:p:p:p:p:p

நான் உங்க ஊர் பக்கம் கொடைக்கானல் வந்திருக்கிறேன்.........
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
கடை போடாமல் விளம்பரம் பண்ணி அப்புறம் தான் கடையை ஆரம்பிப்பீங்களா?????:D:D:D

கடையை ஓபன் பண்ணுங்க பாஸ்..........

இங்கே காஷ்மீரில் நல்ல ஏலக்காய் விற்கப்படும்.......:p:p:p:p:p

நான் உங்க ஊர் பக்கம் கொடைக்கானல் வந்திருக்கிறேன்.........

haa haa neenga irukkeengale jo...

கண்டிப்பா எங்க ஊரு ஏலக்காய் நகரம் தான்.... எங்க ஊர்ல இருக்க காலேஜ் பேரு ஏல விவசாயிகள் சங்க கல்லூரி ( CPA college)...

அப்புறம் குட்டி காஷ்மீர் சொன்னது , நம்ம நேரு மாமா அதாங்க ஜவகர்லால் நேரு இங்க வந்திருந்தப்போ இந்த சிறப்பு பேர் எங்க ஊருக்கு வச்சாராம்
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
போடிநாயக்கனூர்.... சுத்தி மலைப்பகுதி தான்... அடிவாரம் தான் எங்க ஊர்.. விவசாயம் தான் வாழ்வாதாரம்... தமிழக கேரளா எல்லை.. நிறைய படங்கள்ல இப்போ பார்க்க முடியும்..

முன்னாடி பாரதிராஜா படங்கள் நிறைய இங்க எடுத்திருக்காங்க... பாரதிராஜான்னு சொல்லவும் தான் நியாபகம் வருது... பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து எல்லாம் எங்க மாவட்ட ஆட்கள் தான்..

இயக்குனர் பாலா ஆரம்பிச்சு இன்னும் இன்னும் நிறைய திரைத்துறை பிரபலங்கள் இங்க இருந்து.. திரைத்துறை மட்டுமில்லை.. அரசியலும் கூட.... காமராசர் அய்யாவே கொஞ்ச நாள் எங்க ஊர்ல ஒரு கடைல வேலைப் பார்த்தார்னு சொல்வாங்க..

போடைய்யநாயக்கனூர் - அப்படிங்கற பெயர் மருவி போடிநாயக்கனூர் ஆகிடுச்சு.. ஜமீன் ஆட்சி..

அரண்மனை கூட இருக்கு..

"இளங்காத்து வீசுதே..." இந்த பாட்டு நியாபகம் இருக்குங்களா.... அந்த இளங்காத்து எங்க ஊர்ல தான் வீசுச்சு.. ஹா ஹா இங்கதான் எடுத்தாங்க..

இப்படி இன்னும் இன்னும் சொல்லிட்டே போகலாம்... ஒவ்வொன்னா சொல்றேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top