ஏரிக்கரை 3

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
￰மின்னல் மின்னும்பொழுது அம்மாவை கட்டி அணைக்கும் குழந்தைக்கு தெரிந்திருக்கிறது அம்மா அதைவிட பெரிய சக்தி என்று"

ஏரிக்கரை3 :

தன் கையில் இருந்த கோப்பில் ஆழ்ந்திருந்த அரசுவின் முன் இருந்த டேபிளில அதே போல் வேறு சில கோப்புகள் இருந்தன , அவை எல்லாம் அந்த ஏரிக்கரையை சார்ந்த கேஸ் கட்டுகள் . அவை அனைத்தையும் நிதனாமாய் மிக கவனமாய் படித்தவன் சேரில் இருந்து எழுந்து அவ்வறையில் ஜன்னலோரமாய் இருந்த ஒரு வெள்ளை போர்டில் இவ்வளவு நேரம் படித்ததில் தனக்கு முக்கியமாய் தோன்றியதை எல்லாம் எழுத ஆரம்பித்தான் .

1.காலை
2.ஏரிக்கரை
3.பிணம்
4.பெண்
5.உடல் காயம்
6.தற்கொலை

வரிசையாக அவன் எழுதும்பொழுதே அவ்வறையினுள் நுழைந்த மற்றொருவன் இவனிடம் , பாஸ் எதுனா கண்டுபிடிச்சிங்களா இல்லையா மணி 12 ஆகுது பாஸ் இன்னும் கொஞ்ச நேரம் ஆனா எனக்கு கண்ணு வேர்க்க ஆரம்பிச்சிடும் சொல்லிட்டேன் .... எனக்கு ரொம்ப பசிக்குது பாஸ் என்றது முகில் அரசுவின் உடன் வேலைசெய்பவன் மற்றும் நெருங்கிய நண்பன் .

அரசு , டேய் எரும.. முக்கியமா யோசிக்கும்போதுதான் குறுக்க வருவியா ??..எவ்ளோ குழப்பமான கேஸ் உனக்கு சோறு முக்கியமா ??....

முகில் , ஆமா பின்ன சோறு அதானே எல்லாம் ...சத்தமா சொல்ல ஆரம்பிச்சது அரசுவின் முறைப்பில் கடைசில வெறும் காத்துதான் வந்தது .

சிறிதுநேரம் அமைதியா இருந்தவன் ....அரசுஅந்த போர்டில் எழுத்திர்கிறத பார்த்துட்டு,

ஆமா பாஸ் நம்ப போலீஸ்காரங்களில் தான் யாரோ அந்த கொலைகாரனுக்கு ஹெல்ப் பண்றங்களோ என கேட்டான் .

அரசு , ஏன்டா ஏன் அப்டி சொல்ற ...

முகில், பின்ன என்ன பாஸ் நீங்களே பாருங்க ...6 கேஸ் ஐயும் படிச்சிட்டு தான இத எழுதுனீங்க ....இது அவங்களோட விசாரணையிலயே தெரிஞ்சிருக்கும்ல... இவ்ளோ விசயங்கள் ஒத்துப்போகும் போது அவங்க எப்படி இத தற்கொலைனு முடிவுபண்ணாங்க ..

அரசு , ம்ம்ம் சரி தான் ...ஆனா முகில் நானுமே இந்த கேஸ்களை தனி தனியா ஹேண்டில் பண்ணிருந்தா தற்கொலைனு தான் முடிவு பன்னிருபேன் .

முகில் , பாஸ் என்ன இப்டி சொல்றிங்க .

அரசு , பின்ன என்னடா இந்த கேஸ்ல ஒத்துப்போற விஷயம்னா அது அந்த ஏரி மட்டும் தான் மத்தபடி 5 கேஸ்குமே எந்த சம்பந்தமும் இல்ல . இது எல்லாம் நம்ப வரத்துக்குமுன்னாடி வந்த 4 கேஸ் ...இது இப்போ கடைசியா நம்மளுக்கு கிடைச்ச பிணத்தின் டீடெயில்ஸ் . மிஸஸ்.சுஜித்ரா சுரேந்தர் ....இவங்க முக்கிய விஐபி வீட்டு பெண் .....அவங்க வீட்ல இருக்கவங்க இந்த கேஸ முடிக்க தான் பாக்குறாங்க ...இப்படி எல்லாமே ஏதோ ஒரு ரீசன் இருக்கு .. எல்லா பெண்கள் வீட்லயும் பிரச்சனைகள் இருந்துருக்கலாம் அதுல அவங்க குடும்பத்துல இருக்கவங்களே இது தற்கொலைதான்னு நினைச்சிருக்கலாம.அதுக்கேத்த மாதிரி காரணங்களும் சரியாவே இருக்கு .

முகில், பாஸ் இப்போ என்ன சொல்ல வர்றிங்க இது எல்லாம் தற்கொலை தானா ???

அரசு , டேய் இது தற்கொலைனா நம்ப கிட்ட ஏன் கேஸ் வருது .

முகில் , அதுவா எங்க வந்திச்சி நீங்கதான் வான்டடா போய் வாங்கிட்டு வந்திங்க.

அவனை முறைத்த அரசு, இது எல்லாமே தற்கொலைனு தெரிஞ்சாலும் அடுத்தடுத்து ஒரே இடத்துல நடந்தது தான் இப்போகொலையா இருக்குமோனு சந்தேகத்தை தூண்டுது....இப்போ நம்ப வேலை இந்த 5 பேர் வீட்லயும் திரும்ப நல்லா விசாரிக்கிறது ....நீ என்ன பண்ற நாளைக்கு இவங்க ஐந்து பேர் வீட்டுக்கும் போய் விசாரிக்கிற ...

முகில், பாஸ் இது அநியாயம் என்ன மட்டும் தனியா அனுப்புறிங்க ...

அரசு , டேய் எனக்கு வேற வேல இருக்கு டா ......லாஸ்ட் ஆ கிடைச்ச மிஸஸ்.சுஜித்ரா சுரேந்தரோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கணும் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு அதுல . சோ நீ மட்டும் தான் போற சொதப்பாம விசாரிச்சிட்டு வா ...

இவன் சொன்னதை கேட்டு முகத்தை தூக்கிவச்சிக்கிட்ட முகிலை பார்த்து ...ஓ நீ சோகமா இருக்கியா சரி அப்போ சாப்பிட மாட்ட ......எனக்கு பசிக்குது நான் போய் சாப்பிட போறேன்.

துரோகி பாஸ் ...நில்லுங்க நான் எப்போ சோகமா இருந்தேன் ..எனக்கு சோறு தான் முக்கியம் சோகமா
முக்கியம் ....இந்தா வந்துட்டேன் .

..........................................................................................

மறுநாள் அரசு சொன்னது போல் தன்னிடம் உள்ள லிஸ்ட்டில் கடைசியாய் இருந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றான் முகில் . அது ஒரு விஐபியின் வீடு, வீட்டிற்குள் நுழைவதற்க்கே பல போராட்டங்கள் . உள்ளே சென்றவனுக்கு முதலில் அகப்பட்டது அங்கு ஹாலில் மாட்டி இருந்த புகைப்படம் . கணவன்- மனைவி தன் கையில் குழந்தை வைத்திருப்பது போல் இருந்தது அப்புகைப்படத்தில் மூவரின் முகத்திலும் மகிழ்ச்சி அப்பட்டமாய் வெளிப்பட்டது . அப் புகைப்படத்தில் இருந்த பெண்ணின் முகத்தை கண்டவன் ஏதோ தோன்ற தன் கையிலுள்ள பைலை பார்த்தான் ... அதில் அப்பெண்ணின் புகைப்படமே இருந்ததில் அவன் விசாரிக்க வந்தது அப்பெண்ணின் தற்கொலை
பற்றியே என அறிந்து இப் புகைப்படத்தில் இத்தனை சந்தோஷமாக இருப்பவர்களுக்கு அப்படி என்ன நேர்ந்திருக்கும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என அவனது சிந்தனை சென்றது . அவன் மூளை சிந்தித்து கொண்டிருந்தாலும் அவனது கண்கள் அவ்வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து . அப்பொழுது அங்கு தன் வயதிற்கு மிஞ்சிய அலங்காரத்துடன் வந்த பெண்மணி தன்னுடன் வந்து கொண்டிருந்த அவரின் பிஏ போன்றவரிடம், நான் சொன்னது மாதிரி எல்லாம் செஞ்சிட்டிங்களா ?? தம்பி கிட்ட எதுவும் சொல்லல தானே ... இன்னைக்கு எல்லாம் ரெடியா இருக்கணும் புரிஞ்சுதா எதுவும் தப்பாகிடக் கூடாது என சொல்லிக் கொண்டே வந்தவர் இவனைக் கண்டு,
சொல்லுங்க...நீங்க தான் உள்ளவிட மாட்டேன்னு சொன்னபிறகும் பார்க்கணும்னு அடம்பிடிச்சவரா ?? என்ன வேணும்?? எதாவது டொனேஷன் ஆஹ்? அவரது குரலில் இகழ்ச்சி வழிந்தது .

mrs .சுசித்ரா சுரேந்தர் என சொல்ல ஆரம்பித்தவனிடம் ...

சுஜித்ராவா அப்படியெல்லாம் யாரும் இங்க இல்ல என அவசரமாக சொல்லி அத்துடன் பேசி முடித்ததை போல் அவ்விடத்திலிருந்து விலக,

அதில் கோபமான முகில் தன் பாக்கெட்டில் இருந்த id யை எடுத்து காட்டி ஐம் இன்ஸ்பெக்டர் முகில் from சிஐடி ....மிஸஸ். சுஜித்ரா சுரேந்தர் கேஸ் விஷயமா விசாரிக்க வந்திருக்கேன் .

அதைக் கேட்டு சற்று அதிர்ச்சி அடைந்தது போல் இருந்தவர் அவனிடம் , அதான் அவ தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துபோய்ட்டாளே இப்போ என்னத்த விசாரிக்க வந்திங்க .

முகில் ,தற்பொழுது தான் சுஜித்ரானு யாரும் இல்லன்னு சொன்னீங்க இப்போ அவர் தற்கொலை பண்ணிகிட்டார்னு சொல்றீங்க என்ன என்ன நடக்குது ஒழுங்கா உண்மையை சொல்றீங்களா இல்ல விசாரிக்கிற விதத்துல விசாரிக்க வேண்டுமா...

அவனின் தோரணையிலும் பேச்சிலும் பயந்து விசாரணைக்கு ஒத்துக்கொண்டு ,.

சொல்லுங்க என்ன சொல்லணும் இன்னும் என்ன விசாரிக்கணும் உங்களுக்கு ....

முகில் , Mrs. சுஜித்ரா சுரேந்தர் -அ உங்களுக்கு தெரியுமா??

அவர் , ம்ம்ம் ...அவதான் முன்னாடி
என் பையனுக்கு மனைவியா இருந்தா.

இதைக் கேட்ட முகில் என்னது மனைவியாக இருந்தாங்களா என்னடா இந்தம்மா ஏதோ பதவில இருந்த மாதிரி சொல்றாங்க என மனதில் நினைத்து ....

மிஸஸ். சுஜித்ரா சுரேந்தர் தற்கொலைக்கான காரணம் என்ன ?? அது தற்கொலைனு நீங்க எப்படி சொல்றிங்க ??

அவர், அத ஏன் கேக்குறிங்க ...நான் அன்னைக்கே என் புள்ளைகிட்ட சொன்னேன் இவ வேணாம்டா னு .....கல்யாணம்னா அது இவ கூடதான்னு அடம்புடிச்சி கட்டிகிட்டான் . பாதகத்திமவ மகராசியா எங்க குடும்பத்தை சரிச்சிட்டா .....முதல்ல பெத்த புள்ளைய தொலைச்சா ...அப்றம் யாரை பத்தியும் கவலை படமா அந்த ஏரில குதிச்சி செத்துபோய்ட்டா....

அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்தவன் என்ன குழந்தைய காணோமா ?? என்னாச்சி போலீஸ்ல சொன்னிங்களா இல்லையா ??

ம்ம்க்கும் எங்க ...நம்ப கவுரவத்துக்கு போலீஸ் லாம் வேணாம்னு நான் சொன்னதை மீறி எம்புள்ள போலீஸ் ல சொல்லிபுட்டான் . ஆனா அவங்களும் ஒன்னும் கண்டுபிடிக்கல .....அது நடந்த ஒரு வாரத்துலயே இந்த பாதகத்தி உசுர விட்டுட்டா ....இதுக்கப்றம் அந்த புள்ளைய கண்டுபிடிச்சி என்ன ஆவ போகுது . நான் என் புள்ளைக்கு வேற கல்யாணம் பண்ணிவைக்க போறேன் ...அதுனால இந்த விசாரணை அது இதுனுலாம் வீட்டுப்பக்கம் வராதீங்க என சொல்லியவர் திமிராக உள்ளே சென்றுவிட்டார் .

அவர் சொல்லியதை கேட்டு ..சேய் , இந்த பொம்பளகூடலாம் இருந்தா தற்கொலை பண்ணிக்காம எப்படி இருப்பாங்க ..எல்லாம் பணம் இருக்குற திமிர் என நினைத்தவன் அக்குழந்தையை பற்றி யோசிக்க தவறவில்லை .

-------------------------------------------
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top