ஏதோ ஒன்று சொல்ல நினைத்தேன்

Advertisement

KP JAY

Well-Known Member
Thank you all for your encouraging response. I posted this same story in kindle and no one read that :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:… since i am new to all these online platform dont know many things. I dont even know if my story is visible to others in kindle. Someone please search my name in kindle and tell me if you could spot my story. Once again thank you very much for your feedback. I have one more short story written long time back. Will edit and post it on saturday.
 

KAVIBHARATHI

Well-Known Member
இசைவாணி. அசைவன்றி ஜன்னல் வழியே ஆகாயத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.

ஜே.கே ஒரு அறிவாளி.

ஜே.கே ஒரு படிப்பாளி.

ஜே.கே ஒரு சொம்பு.

ஜே.கேக்கு உப்புமா சுத்தமாகப்பிடிக்காது. மறந்து கூட செஞ்சுடாத.

ஜே.கே ரொம்ப அமைதியானவன்.

ஜே.கே ரொம்ப பொருமையானவன்.

ஜே.கே ஒரு அது.

ஜே.கே ஒரு இது…

ஜே.கே என்ற ஜெய்கிருஷ்ணா. ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இஸ்ரோவில் மிக முக்கியமான விஞ்ஞானி. மொத்தத்தில் இந்த நாட்டின் சொத்து.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இசைவாணியை மனம் முடித்தவன்.
அதுவும் முதல் நாள் ஒரு பெண்ணுக்கு நிச்சயம் மோதிரம் போட்டு அடுத்த நாள் இசையின் கழுத்தில் தாலி கட்டிய புண்ணியவான். பெண் மாறிவிட்டது என்பதாவது அவனுக்கு தெரியுமா என்பதே இன்றுவரை இசைக்கு பதில் தெரியாத கேள்வி.

பெரியம்மா பெண் திருமணத்திற்கு வந்து தலைகாட்டிவிட்டு போக நினைத்தவளை மணப்பெண்ஆக்கி அவனுக்கு மனைவி ஆக்கி இந்த பெங்களூரு குவாட்டர்ஸில் கொண்டுவந்து அடைத்துவிட்டனர்.

கூடவே அவனும் இருக்கிறான் தான். இவளுக்கு தான் கூட ஒரு ஆள் இருப்பது போல் தோன்றவில்லை.

காலையில் எழுவான். அவசரமாக கிளம்புவான். அதைவிட அவசரமாக உண்பான். தட்டில் என்ன விழுகிறது என்று கூடப் பார்க்க மாட்டான். அவள் மதியத்திற்கும் கட்டி கொடுப்பாள். இரவு எட்டு மணிபோல வருவான். அவனுக்கு மதியம் கொடுத்த சாப்பாட்டு டப்பா கழுவி சுத்தமாக இருக்கும்.

இரவும் உண்பான். அடுத்து மடிகணிணியுடன் அமர்ந்துகொள்வான். அவள் சமையலறை ஒதுங்க வைத்துவிட்டு வந்து படுத்துவிடுவாள். அவன் எப்பொழுது உறங்குகிறான் எங்கு உறங்குகிறான் எதுவும் அவளுக்குத் தெரியாது.

வீட்டிற்கு தேவையானதும் அவள் தான் சென்று வாங்குகிறாள்.

இந்த இரண்டு மாத்த்தில் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன்.

அவளுக்கு இதற்கு மேல் பொருமை இல்லை. அவனுக்கு தன்னுடைய கோபத்தைக் காட்ட வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தாள். உடனே தோன்றியது உப்புமா. இந்த நான்கு நாட்களாக உப்புமா மட்டுமே செய்கிறாள். அதையே மதியத்திற்கும் கட்டிக்கொடுக்கிறாள். அதையும் அந்த மங்குனி விஞ்ஞானி உண்கிறான். சின்ன முகசுழிப்பு கூட இன்றி.

நான்கு நாட்களாக இந்த கூத்து நடக்கிறது. இன்று ஐந்தாம் நாள். வெள்ளிக்கிழமை. இன்றும் உப்புமா தான். அவனும் உண்டுவிட்டான். ஆபிஸிற்கு கிளம்பிக்கொண்டிருக்கிறான். இவள் தான் இன்னும் நொந்துபோய் வெட்டவெளியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

ஆனால் இன்று ஒரு அதிசயம் நடந்தது.

வாணி…

அவன் தான் அழைத்தான்.

முதல் முறையாக அவன் அவளிடம் பேசுகிறான்.

முதல் முறையாக அவன் குரலைக் கேட்கிறாள்.

முதல் முறையாக தான் வாணி என்று அழைக்கப்படுகிறாள்.

என்ன ஒரு மேன்லி வாய்ஸ். அவள் ஆச்சரியமாக அவனைத் திரும்பிப்பார்த்தாள். வழக்கம் போல் ஃபார்மல் உடையில் கம்பீரமாக அவளுக்கு சற்று பின்னால் நின்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் திரும்பியதும், இன்னிக்கு ஈவ்னிங் ஒரு வெட்டிங் ஆனிவர்சரி ஃபங்சன் இருக்கு. ஃபேமிலியோட வரணும்னு கேட்டுகிட்டாங்க. நீயும் வரியா என்று கேட்டான்.

அவள் சரி என்று தலை ஆட்டினால்.

அப்போ ஒரு ஆறு மணிக்கு கிளம்பிடு என்றான்.

அவ்வளவு தான். சென்றுவிட்டான்.

இவளுக்கு மறுபடியும் கோபம் உச்சிக்கு ஏறியது. என்ன உடை உடுத்துவது. எளிமையாகவா கிராண்டாகவா. இவன் அழைத்து செல்வானா அல்லது அவளே செல்ல வேண்டுமா. எதுவும் கூறாமல் சென்றுவிட்டான்.

தானாகவே ஒரு முடிவெடுத்து ஒரு எல்லோ கலர் லெகங்காப் போட்டுக்கொண்டாள்.

தலை வாரிக்கொண்டிருக்கும் போது அவசரமாக வந்தான். இவளைப் பா்ர்த்து கிளம்பிட்டியா. ஒரு டென் மினிட்ஸ் என்று கூறி அவனும் வேகமாக கிளம்பினான். அவனிடம் எல்லோ கலர் டிரஸ் எதுவும் இல்லை. அதனால் அவள் அருகில் நின்றால் மேட்ச் ஆவது போல் ஒரு உடையைப் போட்டுக்கொண்டான்.

அவள் தலை சீவி முடித்து முகத்துக்கு க்ரீம் போட்டுக்கொண்டிருந்தால்.

அவன் மொபைல் பார்த்துக்கொண்டே எப்படி போகலாம் என்றான். போக வேண்டய தூரம் மிகவும் குறைவு எனபதால் கார் அல்லது பைக் எதில் போகலாம் என்ற அர்த்தத்தில் கேட்டான்.

அவள் அவன் கேட்டதை ஒரு இனுக்கு கூட மதிக்காமல் தன் முக அலங்காரத்தில் மும்முரமாக இருந்தாள்.

வாணிஇஇஇ….

ம்ம்ம்…

எப்படி போகலாம்னு கேட்டேன்.

மிகவும் விட்டேத்தியாக, வழக்கம் போல தான் என்றாள்.

புரியல. வழக்கம் போலன்னா???

வழக்கம் போல நீங்க என்ன அம்போனு விட்டுட்டு போங்க. நான் என் ஸ்கூட்டில வந்துக்கிறேன் என்றாள்.

கோபமா இருக்கியா என்றான்…

அவள் அவனை முறைத்துப்பார்த்தாள்…

ஏன் இப்படி பார்க்கிற. இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்?

ம்ம்ம்… எதையாச்சும் எடுத்து உங்க மண்டையைப் பொளக்கனும் போல வெறி வருது. நான் ஏன் கொலை கேசுல உள்ள போகனும்னு பேசாம இருக்கேன்.

ஏன்? நான் ஏதாச்சும் தப்பு பண்ணிட்டனா?

ஆஆ… உங்க லைஃப்லயே ஒரு பெரிய தப்பு நடந்துச்சு. அதையே நீங்க இன்னும் கண்டுகிட்டிங்களான்னு தெரியல. போங்க… என் வாய கிளராதிங்க. அப்புறம் நான் எதாச்சும் சொல்லிடுவேன். கத்திவிட்டு மறுபடியும் தன் முக அலங்காரத்தைத் தொடர்ந்தாள்.

சில நொடிகள் அமைதியாக சென்றது. என்ன ஒன்னும் சத்தமே காணோம் என்று நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவன் அவளையே அழுத்தமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் நிமிர்ந்ததும்,

தெரியும். முதல் நாள் நான் மோதிரம் போட்டப் பெண்ணும் அடுத்த நாள் நான் தாலி கட்டியப் பெண்ணும் வேற வேறன்னு தெரியும்.

தெரியுமா? நான் நீங்க தாலி கட்டின நிமிஷத்துல இருந்து உங்க கூட தான் இருந்தேன். ஏன. பொண்ணு மாறுச்சுன்னு நீங்க யாரையும் கேட்ட மாதிரித் தெரியலையே.

அத அப்புறம் பேசலாம். இப்போ கிளம்பு.

கிளம்பி மஞ்சள் கிழங்காக வெளியில் வந்தாள்.

அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தான். இவளுக்கு கால்கள் தள்ளாடத் தொடங்கியது. என்ன இப்படி பார்க்கிறார்.

நீ லிப்ஸ்டிக் போட்டுக்க மறந்துட்ட.

இல்ல. நான் லிப்ஸ்டிக் எப்போவும் போட மாட்டேன்.

வேகமாக அருகில் வந்து அவள் கன்னங்களை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டான். அவன் கண்களுக்குள் ஒரு வெறி ஏறி இருந்தது.

ஏன் போடமாட்ட???

அது கெமிக்கல். சாப்பிடும் போது உள்ள போய்டும்னு போடமாட்டேன்.

ம்ம்ம். ஐ லவ் யூ பேபி. ஐ லவ் யூ சோ மச் என்று உணர்ச்சிப் பொங்க கூறி அவள் இதழ்களை இறுகப்பற்றினான்.

அவளுக்கு அதிர்ச்சி ஆச்சர்யம். கண்டிப்பாக இதையெல்லாம் இன்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. என்ன ஆனது இவருக்கு என்று நினைத்தாள்.

அவனுக்கு லிப்ஸ்டிக் பிடிக்காது. அத போட்டுகிட்டா எப்படி கிஸ் பண்ணுவது என்பது அவனுடைய தலையாயப் பிரச்சனை. தன் மனைவியை எப்பொழுதும் லிப்ஸ்டிக் போடவிடக்கூடாது என்று என்றோ அவன் கல்லூரிப்படிக்கும் காலத்தில் நினைத்துக்கொண்டது. அது தானாகவே நிறைவேறியதில் மிகவும் குஷி ஆகிவிட்டான்.

அவன் நீண்ட நேரம் நடத்திய ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது.

அவளை விடுவித்து அவனே அவள் முகத்தை சீர் படுத்தினான். நேரமாச்சு வா போகலாம் என்று அவள் கை பிடித்து அழைத்து சென்றான்.

காரில் தான் அழைத்துச் சென்றான்.

அமைதியாகவே பயணம் தொடர்ந்தது.

நிச்சயம் நடந்துட்டு இருக்கப்ப துறு துறுன்னு ஒரு பொண்ணு அவ அம்மாகிட்ட எதுக்கோ மூஞ்சிய சுருக்கி சண்டை போட்டுட்டு இருந்தா. நானும் அவ சண்டைய என்ன மறந்து ரொம்ப நேரம் பார்த்திட்டு இருந்தேன். அவளுக்கும் புரிந்தது அவன் தன்னைத்தான் சொல்கிறான் என்று. அவள் தான் அப்போவே வீட்டுக்குப் போகலாம் என்று அன்னையிடம் மல்லுகட்டிக்கொண்டிருந்தாள். அன்னை அடுத்த தாள் திருமணம் முடிந்து தான் போகணும் இல்லனா உங்க அப்பா திட்டுவார் என்று கூறி அவளை அடக்கி வைத்தார். அப்பொழுது தான் அவன் அவளைப் பார்த்திருக்கிறான்.

நான் யார பார்க்கிறேன்னு அம்மாவும் என்ன பார்த்து கேட்டாங்க.

யாரும்மா அந்த பொண்ணு?

எனக்கும் தெரியலடா இரு விசாரிச்சிட்டு வரேன்னு சொல்லி உங்க அம்மாகிட்ட பேசிட்டு வந்து சொன்னாங்க அது உன் மாமனாரோட தம்பி பொண்ணுடா. உனக்கு மச்சினி முறை ஆகனும் என்றார்.

ரொம்ப க்யூட் மச்சினிம்மான்னு ரசிச்சு சொன்னேன்.

என் அம்மாவுக்கு புரிஞ்சிருக்கும் உன்ன எனக்குப் பிடிச்சிருக்குன்னு.

அடுத்த நாள் மணப்பெண் அலங்காரத்துல நீ என் பக்கத்துல வந்து உட்க்கார்ந்த. எனக்கு ஒரு செகண்ட் மூச்சு அடைத்தது. என் அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். அவங்களும் என்னப் பார்த்து சந்தோசமா சிரிச்சாங்க.

நான் உன் அக்காவுக்கு மோதிரம் போட்ட பொழுது எனக்குள்ள எந்த ஒரு உணர்வும் இல்ல. ஆனா நான் உனக்கு தாலி கட்டுறப்போ ரொம்ப சந்தோசமா தான் தாலி கட்டினேன்.

அதற்குள் அவர்கள் வர வேண்டிய இடம் வந்துவிட்டது.

கார் பார்க் பண்ணிவிட்டு , வா என்று அவள் கையை மறுபடியும் பிடித்துக்கொண்டான். அதன் பிறகு சான்ஸ் கிடைத்தபோது எல்லாம் அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.

ஏன் ப்ப்ளிக் ப்ளேஸ்ல இப்படிப் பண்ணுறிங்க? பல்லை கடித்துக் கொண்டு மெதுவாக்க் கேட்டாள்.

அவனும் அவள் காதோரம் குனிந்து ப்ப்ளிக் ப்ளேஸ்ல என்னால இவ்ளோதான் பண்ண முடியும் என்று கூறி அவளை அதிர வைத்தான்.

அம்மாடி… என்ன இது? அப்போ வீட்ல இருந்தா? அவள் மனதிற்குள் தான் கேட்டுக்கொண்டாள்.

அத இன்னிக்கு நைட் தெரியும் என்றான் அவள் எண்ணப்போக்கை யூகித்து.

மறுபடியும் அதிர்ந்தாள். அவன் அவளை சீண்டலாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் இன்னிக்கு ஷாக் இதோட போதும் என்று வேறுபக்கம் திரும்பினாள்.

அவனும் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே வேறுபக்கம் திரும்பினான். திரும்பியவன் உடனே ஷாக் ஆனான்.

ஈஈ என்று அவன் ஜூனியர் திலீப் அத்தனைப் பற்களையும் காட்டிக் கொண்டு நின்றான்.

என்னங்க சீனியர் உங்களுக்கு கல்யாணம் முடிந்து ரெண்டு மாசமாச்சு. இன்னும் இதெல்லாம் முடியலையா? இங்க இருங்குற சிங்கிள் பசங்க எல்லாம் பாவம் சீனியர் கொஞ்சம் எங்க பக்கமும் பாருங்க பாஸ் என்று அவன் காதை கடித்தான்.

டேய் ஒன்றும் இல்லைடா. சும்மா பேசிகிட்டு இருந்தோம். வா என் வைஃப் கிட்ட இன்டரோ குடுக்குறேன்.

வாணி. இவன் என் ஜூனியர் திலீப்.

ஹாய் சிஸ் என்றான்.

அவளும் உடனே ஹாய் ப்ரோ என்றாள்.

ம்ம்ம செம சிஸ். எப்படி எங்க சீனியர் என்றான்.

உங்க சீனியர் தானே… ஒரு யுனீக் அண்ட் ரேர் பீஸ். அப்டியே தூக்கிட்டுப்போய் மியூசியத்துல வச்சுடலாம் என்றாள்.

ஓ மை காட். சிஸ். நாங்க ஆஃபிஸ்ல பேசறது எல்லாம் நீங்க ஒட்டு கேட்டிங்களா.

டேய என்னடா என்னைய பத்தி இப்படி எல்லாம் பேசிக்கிறிங்களா என்று தன் ஜூனியரிடம் கோபம் போல் காட்டினான்.

நோ சீனியர். ஓப்பனா டேமேஜ் பண்ற உங்க வைஃப்ப விட்டுட்டு எப்போவாச்சும் பின்னாடி பேசுற எங்ககிட்ட இப்டி கோபம் காட்டக் கூடாது.

அது ஒன்னும் இல்ல ப்ரோ. நார்மல் ஹியூமன் திங்க் அலைக். அதான் உங்களுக்கு வந்த அதே ஃபீல் எனக்கும் வந்திருக்கு.

போதும் உங்க ரெண்டு பேரோட இண்ட்ரோ செஷ்ஸன் முடிஞ்சது. டேய் நீ கிளம்புடா.

ஓகே சிஸ். பை.

ஓகே ப்ரோ. நாம அப்புறம் பேசலாம். பை என்றாள்.

ஷூயூர் சிஸ். சீ யூ என்று சென்றுவிட்டான்.

ஜேகே அவளை முறைத்தான். இன்னிக்கு வீட்டுக்கு வாடி உன்ன வச்சிக்கிறேன் என்று விஷம்மாக்கூறினான்.

ஆத்தி. நம்ம க்ரைம் ரேட் கூடிட்டே போகுது போலயே.

அன்று பொழுது அவளுக்கு இனிமையாக சென்றது. அவன் உடன் வேலை செய்பவர்கள் அனைவரும் அவன் மீது மிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது அவளுக்குப் புரிந்தது.

இரவு உணவு முடித்துவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அவன் சீண்டல் பார்வை அவளைத் தொடர்ந்தது. கிளம்பும் போதே வீட்டுக்குப் போகலாமா என்று கண்ணில் விஷமத்துடன் கேட்டான். அவளுக்கு அப்பொழுது இருந்தே நடுங்கத் தொடங்கியது.

இப்புழுது காரிலும் அவன் சீண்டல் தொடர்ந்தது.

இது சரி வராது என்று அவள் பேச தொடங்கினாள்.

நீங்க பிடிச்சு தானே கல்யாணம் பண்ணீங்க. அப்புறம் ஏன் ஒரு நாள் கூட எங்கிட்ட பேசல?

கல்யாணத்து அன்னிக்கே உன்கிட்ட பேச நினைச்சேன். பட் நீ கோபமா இருந்த. நீ கொஞ்சம் செட்டில் ஆகட்டும்னு நினைச்சேன்.

இப்போ மட்டும் உங்களுக்கு தெரிஞ்சிடுச்சா நான் செட்டில் ஆகிட்டேன்னு.

ம்ம்ம. ஆரம்பத்துல கோபமா இருந்த. அப்புறம் நீயாவே சமைக்க தொடங்கின. நீ இந்த வாழ்க்கைய ஏத்துக்கத் தொடங்கிட்டன்னு நினைச்சேன்.
எனக்கும் சேர்த்து சமைச்ச. சோ என் மேல கோபம் இல்லனு நினைச்சேன். பட் நீ எனக்கு லன்ச் எல்லாம் கட்டி குடுத்தப்போதான் தெரிஞ்சது. நீ என்னையும் ஏத்துகிட்டன்னு.

அடப்பாவி மனுஷா. அப்போ ஏன் இத்தனை நாள் பேசல.

அது. எனக்கு உன் கோபத்தப் பார்க்கனும்டி. அத பார்த்து தானே உன்கிட்ட விழுந்தேன். அடுத்த நாள் நம்ம கல்யாணம் முடிஞ்சதும் அங்க அங்க எல்லாரும் பேசெனத கேட்டேன். உன் அக்கா வேற ஒரு பையன லவ் பண்ணிருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டேன். அவங்க அந்த பையனோட போய்ட்டாங்கன்னு தெரிஞ்சிகிட்டேன். என அம்மாவுக்கு என்னோட மனசு புரிஞ்சிருக்கணும். என் கெஸ் கரெக்ட்டுன்னா எங்க அம்மா தான் உன்ன பண்ணு கேட்டுருக்கணும்.

ஆமாம். பெரியம்மா வீட்டிலேயே அடுத்து ஒரு பெண் இருக்க அவர் இவளைத்தான் பெண் கேட்டார். தன் பெற்றோரிடம் தனியாக சென்று பேசிவிட்டு வந்தார். அதன் பறகு தான் அவள் பெறலறோர் அவளை வற்புறுத்தி இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்தனர்.

எல்லாம் சரி. இப்போ மட்டும் ஏன் பேசினிங்க. நான் தான்இன்னும் உங்ககிட்ட கோபப்படலையே…

ஹா ஹா ஹா… கோபம் இல்லையா உனக்கு. அப்போ ஒரு வாரமா நீ செஞ்ச உப்புமாக்கு என்ன அர்த்தம்.


ஸ்ஸ்ஸ். உங்களுக்குப் புரிஞ்சதா.

புரிஞ்சதாவா? உன்னோட கோபம் என் மொத்த டிபார்ட்மெண்ட்டுக்குமே புரிஞ்சிடுச்சு. ஆபீஸ் முழுக்க நீ என் மொத்த மானத்தையும் வாங்கிட்ட.

அதற்குள் அவன் வீடும் வந்துவிட்டது.

அய்யயோ வீடு வந்துடுச்சே என்று மனதிற்குள் அலரினாள்.

சாவி குடுங்க நான் டோர் ஓப்பன் பண்றேன். நீங்க கார் பார்க் பண்ணிட்டு வாங்க என்றாள் நல்ல பிள்ளை போல். அவன் வருவதற்குள் எங்காவது ஒழிந்துகொள்ள நினைத்தால்.

என்ன அவசரம் நானே வந்து திறக்கிறேன் என்று அவளை ஆழ்ந்து பார்த்து கூறினான். உன்னைய எனக்கு தெரியாதா என்ற அர்த்தம் இருந்தது அவன் பார்வையில்.

அவள் பேசாமல் இறங்கி சென்று கதவருகில் பதுமைப் போல் நின்றாள்.

அவனும் வந்து அவளைப் பார்த்துக்கொண்டே கதவைத்திறந்தான்.

திறந்ததும் உள்ளே ஓடி ஷூ ராக்கில் அவள் செருப்பை கலட்டி வத்தாள். அன்று பார்த்து பெல்ட் மாடல் ஷீல்ஸ் போட்டிருந்தாள்.

அவள் கழட்டி வைத்துவிட்டு வேகமாகத் திரும்ப அவன் நெஞ்சில் மோதி நின்றாள்.

அவன் அவளை சுவரோடு வைத்து சிறை செய்து அவளைப் பார்த்துக்கெண்டே தன்னுடைய ஷூக்களை கழட்டி வைத்தான்.

அடுத்து அவளை அப்படியேத் தூக்கினான்.

இனிமேல் நீ உப்புமா செஞ்சா நான் என்ன செய்வேன்னு இப்போ தெரிஞ்சிக்கோ என்று கூறி அவளை பெட்ரூமிற்குள் தூக்கிச்சென்றான். அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறையாக இருக்க அவனிடம் மொத்தமாக சிக்கிக் கொண்டால்.

போதும். தண்டனை குடுத்துட்டே இருப்பிங்களா? விடுங்க ப்ளீஸ்.

அது எப்படி. ஒரு வாரம் ஃபுல்லா உப்புமா சாப்டுருக்கேன். பதிலுக்கு நானும் உனக்கு ஒரு வாரம் தண்டனைக் குடுக்கனும்ல…

ஒரு வாரமா?? நான் தாங்க மாட்டேன். விடுங்க என்று கெஞ்சி கொஞ்சி தான் அவனிடம் இருந்து விடுதலைப் பெற்றாள்.

ஒரு வழியாக இவர்களுன் சண்டை முடிவுக்கு வந்தது. அவன் தன்னை பிடித்து தான் திருமணம் செய்தான் என்று தெரிந்த பொழுதே அவளால் அதற்கு மேல் அவள் கோபத்தைப் பிட்டித்து வைக்க முடியவில்லை.

ஆனால் இவளுடைய கோபம் தானே அவனுடைய ரொம்பபெரிய என்டர்டெயின்மென்ட். அதனால் முடிந்த அளவுக்கு அவளை வெறி ஏற்றி எப்பொழுதும் அவள் கோபம் அணையாமல் பார்த்துக்கொள்வான்.

அவளும் அவனிடம் மல்லுகட்டி முடியாத பொழுது லன்ச் பாக்ஸில் உப்புமா அடைத்துக்கொடுத்துவிடுவாள்.

ஆபீஸிலும் அன்று எல்லோரும் அவனை ஓட்டி எடுத்துவிடுவார்கள்.
அவனும் அன்று வீட்டிற்கு சீக்கிரம் வந்து விடிய விடிய தண்டனைக் கொடுப்பான்.

அன்றும் உப்புமா கட்டிக் கொடுத்திருந்தாள். ஆனால் அன்று அவர்களுக்குள் சண்டை எதுவும் இல்லை. கேடி.

அவன் முகம் வெட்கத்தில் குப்பென்று சிவந்தது. திலிப் அவன் அருகில் அமர்ந்து அவன் முகத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் உப்புமாவையும் கவனித்தான். அவன் வெட்கத்தையும் கவனித்தான்.

ஒரு நமுட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

டேய் இங்க என்னடா பார்வை. ஒழுங்கா சாப்பிடுடா என்று மிரட்டினான்.

ஆங். சரி என்று கூறி நல்லப் பிள்ளையாக உண்ணத்தொடங்கினான்.
ஆனால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டான்.

அன்று ஈவ்னிங் அவன் போதாத காலம் எல்லோரையும் மீட்டிங் ரூமிற்குள் அழைத்து போர்டில் அவர்களின் ப்ராஜெக்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணிவிட்டு ஓகே கைஸ் மீதி நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம். இன்னிக்கு நான் சீக்கிரம் போகணும் என்றான். எல்லோரும் எழுந்து போகாமல் அவனை ஒரு நமுட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

என்ன என்றி கேட்டான். ஒரு பெண் கேட்டது.

அந்த உப்புமாக்கு அதான் அர்த்தமா பாஸ் என்று.

இவனுக்கு மறுபடியும் குப்பென்று முகம் சிவந்தது. சின்ன சிரிப்புடன் தலை கோதி கொண்டான். அத்தனை மொபைல் கேமராக்கலும் அவன் வெட்கத்தை கிளிக்குக் கொண்டது.

அன்றும் வீட்டிற்கு சென்று ஏண்டி இப்படி என் மானத்த வாங்குற என்று கூறி அவளை ஒரு வழி செய்தான்.

அவன் வெட்கப் பட்ட ஃபோட்டோ அவளுக்கு வாட்ஸ்அப்பில் வர அதை லாமினேட் செய்து பெட்ரூமில் வைத்துக் கொஞ்சிக்கொண்டால். ஆனால் இப்பொழுது எல்லாம் உப்புமா கட்டிக் கொடுப்பதை விட்டுவிட்டாள். ஆனால் வீட்டில் செய்து கொடுத்து அவனிடம் சுகமாக சிக்கிக்கொள்வாள்.


சுபம்
SUPER STORY KP :love::love::love::love: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Geetha sen

Well-Known Member
உப்புமா குள்ள இப்படி ஒரு ரகசியமா. நல்லா கண்டு பிடித்து வைத்திருக்கான் கேடி விஞ்ஞானி :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top