எழுந்து வா இளைஞனே

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"பட்டம் பெற்ற
நீ
படுத்திருக்கலாகுமோ?"


"வேலையில்லை என
வீதிமுனையில்
வீற்றிருப்பாயோ?"


"வீறுகொண்டு எழு
என்னுடைய பூமியிலே
என் மொழி கற்றவன்
ஒதுங்கி நிற்க
வேறொருவன்
வந்து
வீற்றிருக்கலாகுமோ
வேலையிலே என"


"வெட்டிக்களையெடு
வேண்டாதவரையெல்லாம்
வெற்றி தான் பெறு
விடாமுயற்சினால்"


"ஏசியின் குளுமையில்
இடம் தேடாதே
மண்ணில் பயிர் செய்யும்
தொழில் விடாதே"


"விஞ்ஞானி
நீ என்பதை விட
விவசாயியாய் இருந்து பார்
வியந்து பார்க்கும் உலகம்
உன்னை"


"எழுந்து வா இளைஞனே
நலிந்து போன
விவசாயம் நலம் பெற
நாசமான நாடு தான்
வளம் பெற
எழுந்து வா"


"ஏழ்மையின் நிறம்
அறிந்த இளைஞனே
அரசியலாட்சியிலும்
உன் அரும்பெரும்
பங்கு வந்ததெனில்
வைகையில்
தெர்மாகோலாவது
மிதக்காமல் இருக்கும்
இளைஞனே"


"எழுந்து வா இளைஞனே
எட்டையபுரத்தான்
சொன்னது போல
மோதி மிதித்து விடு
இளைஞனே"


"உன் எழுச்சி
நாட்டின் வளர்ச்சி"


"உன் சிந்தனை
உன் ஆக்கம்
உன் ஊக்கம்
எல்லாம் உரமாகும்
அதனால்
ஒரு மாற்றம் இங்கு
உருவாகும்
எழுந்து வா
இளைஞனே"
 
Advertisement

New Episodes