என் மன்னவன் நீ தானே டா....32(இறுதி அத்தியாயம்)

Advertisement

Ambal

Well-Known Member
கதை முடிஞ்சிடுச்சி பிரண்ட்ஸ்...இது என்னோட முதல் முயற்சி.இந்த வாய்ப்பு தந்த மல்லிகா மேடமுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள்...கதைக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...கதையோட நிறைகுறைகளை கூறுங்கள் தோழிகளே...சீக்கிரம் வேறு ஒரு கதையோட பார்க்கலாம்...





என் மன்னவன் நீ தானே டா...32(இறுதி அத்தியாம்)

அந்த மண்டபம் முழுவதும் அலங்கார விளக்குளால் ஒளிர்ந்தது.வருண் வெட்ஸ் வர்ஷினி.ஆம் வருணுக்கும் வர்ஷிக்கும் திருமணம்.கிருஷ்ணனின் திருமணத்தில் வர்ஷியை பார்த்தவன் அவளின் படிப்பு முடியும் வரை அமைதிகாத்தான்.அவளது படிப்பு முடியவும் தன் பெற்றோரிடம் கூறி பெண் கேட்டுவிட்டான் வருண்.கிருஷ்ணனுக்கு வருணை நன்கு தெரியும் என்பதால் அவனுக்கு இதில் மகிழ்ச்சி தான் இருந்தும் மற்றவர்களுக்கு பிடிக்கவேண்டுமே என்று நினைத்தவன்,

அனைவரிடம் விஷயத்தைக் கூறினான் அவர்களுக்கும் வருணனையும் அவனது குடும்பத்தையும் பிடித்துவிட அவர்களும் சரி என்று விட்டனர்.ஆனால் வர்ஷி தான் இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் திருமணம் என்று தீர்மானமாக கூறிவிட்டாள்.அவளுக்கு தன் தமக்கை போல தானும் வேலை செய்யவேண்டும் என்று பிடிவாதமாக கூறிவிட கிருஷ்ணனுக்கும் அவள் கூறுவது சரியெனபட அவ்வாறே செய்யலாம் என்றான்.இதில் தவித்து போனது வருண் தான் அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் கிருஷ்ணனை திட்டிக்கொண்டே இருப்பான் அவனோ இது எதையும் காதில் வாங்க மாட்டான். ஒருவழியாக இரு வருடம் முடிந்து திருமண நாளும் வந்தது.இதோ தன்னவளின் வருகைக்காக மணமேடையில் காத்துக்கொண்டிருந்தான் வருண் கிருஷ்ணன் தான் அவனை கிண்டல் செய்துகொண்டிருந்தான்,

"மாப்புள...ரொம்ப வழியுதுடா...தொடச்சுக்க..."என்றவனை முறைத்த வருண்.

"போடா அங்கிட்டு..."என்றான் கடுப்பாக.

"டேய் நீ முதல்ல ஐயர் சொல்ரத செய் வர்ஷி வருவா..."என்றான்.

"டேய் நீ உன் கல்யாணத்தில வழிஞ்சதவிட இது கம்மி தான்..."என்று கூறவம் தன் திருமணத்தை நினைத்து பார்த்தவன் கண்கள் தானாக தன் மனைவியிடம் சென்றது.மேடையின் ஓரத்தில் தன் நிறைமாத வயிற்றுடன் அழகு ஓவியமாக அமர்ந்து தன் பெரிய மகனுக்கு உணவு ஊட்டிக்கொணடிருந்தாள் அவனது மனையாள்.கிருஷ்ணன்,திவ்யா தம்பதிக்கு ஒரு வயது மகன் உள்ளான்.பெயர் ஆதிரன்.கிருஷ்ணன் தான் இந்த பெயர் வைத்தது வலிமையானவனாக இருப்பான் என்று.அவனும் உருவத்தில் தந்தையை போல் இருந்தாலும் குணத்தில் தன் கொள்ளு தாத்தா ராம் மோகன் போல மூளைக்காரன்.எதிலும் பொறுமை புத்திசாலி தனமும் ஒருங்கே இருந்தது அவனிடம்.வீட்டின் செல்லம் முக்கியமாக தன் சித்திக்கு.எதுவோ உந்த இவனை பார்த்த திவ்யா என்ன என்றாள் பார்வையால் அவளது விழி அசைவில் மயங்கியவன் அவளையே பார்த்துக்கொண்டு இருக்க.

"போதும் மச்சா..மண்டபமே மிதக்குது..."என்று நக்கல் அடித்தான் வருண்.

"மிதக்குதுனா படகு வச்சுக்க டா..."என்றான் பார்வையை திருப்பாமலே.முத்திடிச்சு என்று நினைத்தவன் எங்க நம்ம ஆள காணும் என்று பார்க்கும் நேரம் பட்டுபுடைவையில் தேவதை போல் வந்தாள் வர்ஷி அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் வருண்.அவனை தோளில் ஒரு தட்டு தட்டி நடப்புக்கு கொண்டு வந்த கிருஷ்ணன்,

"டேய் வாழ் நாள் முழுக்க பார்க்கதான் போற...முதல்ல இங்க கவனி..."என்று ஐயர் பக்கம் அவன் தலையை திருப்பினான்.

"பொறாமை டா...உனக்கு..."என்றவன் பின் சம்பிராதாயங்களில் கவனமானான்.அனைவரின் ஆசியுடனும் மங்கள நாணை வர்ஷியின் கழுத்தில் பூட்டினான் வருண்.

கலைவாணிக்கு மகிழ்ச்சி தாளவில்லை தன் இரு மகள்களின் வாழ்க்கையும் நல்ல முறையில் அமைந்ததில்.யார் கண்ணும் படக்கூடாது என்று கடவுளிடம் பிராத்தனை செய்துக்கொண்டார்.அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து வர்ஷியை புகுந்த வீடு அனுப்பிவிட்டு வந்தனர் கிருஷ்ணன் தம்பதியினர்.சோர்வாக தெரிந்த மனைவியை படுக்க சொன்னவன் தன் தோளில் உறங்கும் மகனை தொட்டிலில் போட்டுவிட்டு.தன்னை சுத்த படுத்த சென்றான்.அதற்குள் திவ்யா தன் பட்டு புடைவை நகைகளை அதன் இடத்தில் வைத்துக்கொண்டு இருந்தாள்.சுத்தபடுத்திக் கொண்டு வந்தவன் அவளிடம் வந்து,

"உன்ன எந்த வேலையும் செய்யாதனு தான சொன்னேன்..."என்றான் அவளை கைகளில் அள்ளிக்கொண்டு.

"ப்ச்...கிருஷ்ணா...இது எல்லாம் எடுத்து வைக்குறேன் வேறு ஒண்ணுமில்ல..."என்று தன் கைகளில் உள்ள நகைகளை காட்டினாள்.அதை வாங்கி மேஜை மேல் வைத்தான்.

"நான் எல்லாத்தையும் எடுத்து வைக்குறேன் நீ உட்காரு..."என்று கூறிவிட்டு அனைத்தையும் வைத்தவன்.சமையல் அறை சென்று சுடுநீர் எடுத்துவந்து,

"கால காட்டு...எப்படி வீங்கியிருக்கு பாரு..."என்று கூறி அவளது பாதங்களை மென்மையாக நீவி விட்டான்.

அவனது கைகள் தந்த சுகத்தில் அவளும் கண் அயர்ந்தாள்.அவளை நன்றாக படுக்க வைத்தவன் அவளையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.இவள் மட்டும் தன் வாழ்க்கையில் வரவில்லை என்றால் நினைத்து பார்க்கவே முடியவில்லை கிருஷ்ணனுக்கு என்ன தான் வெளியில் அவன் தன்னை சந்தோஷமாக காட்டிக்கொண்டாலும் மனதின் ஓரத்தில் தனக்கு என்று யாரும் இல்லை என்ற எண்ணம் இருக்க தான் செய்தது ஆனால் அவன் அதை வெளிக் காட்டிக்கொண்டது இல்லை.எப்பொழுது தாரணி அவனது வாழ்க்கையில் வந்தாளோ அன்றில் இருந்து அவனக்கு அனைத்தும் அவள் ஆகி போனாள்.அவளது சிறுபிள்ளை தனங்கள் அனைத்தும் கிருஷ்ணனிடம் தான் வெளியில் அதே மிடுக்குடன் தான் இருப்பாள்.அவளது இந்த குணம் தான் கிருஷ்ணனை மிகவும் கவர்ந்தது எனலாம்.

வாழ்க்கை தெளிந்த நீர்ரோடை போல சென்றது கிருஷ்ணன் திவ்யா தம்பதியருக்கு.அவர்களது சந்தோஷத்தை மேலும் கூட்டும் வகையாக அவர்களுக்கு கிடைத்த அடுத்த பரிசு ஆதிரை.கிருஷ்ணன்,திவ்யாவின் மகள்.உருவில் திவ்யாவைக் கொண்டு இருந்தாலும் குணத்தில் கிருஷ்ணனின் மறுஉருவம்.சேட்டைகளின் அரசி.கலைவாணிக்கு தான் அவளை கவனிப்பது பெரும்பாடாகி போனது.தவறு செய்தாலும் தந்தையை போல மயக்கும் வித்தையை கற்றுவைத்திருந்தாள் கிருஷ்ணனின் செல்ல மகள்.அவளது சிரிப்பில் மயங்காதோர் இல்லை என்று கூறலாம்.

ஐந்து வருடங்கள் கழித்து...

"ஏய் ஓடாத நில்லு...அடி வாங்க போற ஆதி..."என்று தன் மகளின் பின்னே ஓடிக்கொண்டிருந்தாள் திவ்யா.கலைவாணியோ,

"அவ உன்கிட்ட என்னக்கி அடங்கியிருக்கா...மாப்பிள்ளைக் கிட்ட கொடுத்துட்டு நீ கிளம்புற வழிய பாரு..."என்றார்.

"வர்ஷிக்கு போன் பண்ணிங்கலா...எங்க இருக்கா..."என்றாள் திவ்யா.

"அவ நேரா பங்ஷனுக்கு வந்திடுவா...நீங்க கிளம்புங்க..."என்றார் தன் பேரப்பிள்ளையின் தலைவாரியபடி.

"என்ன என்ன இங்க பிரச்சனை..."என்றபடி வீட்டில் நுழைந்தான் கிருஷ்ணன்.அவனைக் கண்டவுடன்,

"அப்பா..."என்று தாவிக்கொண்டு சென்றாள் மகள்.அவளை பூ போல அள்ளியவன்.

"என்னடா குட்டிமா...இன்னும் டிரஸ் போடல..."என்று மகளிடம் பேசினாலும் கண்கள் என்வோ முறைத்துக்கொண்டிருக்கும் மனைவி மேல் தான்.பின் அவளும் என்ன தான் செய்வாள் இன்று தங்கள் துறையில் சிறந்து விளங்கியதற்கான விருது இவர்கள் கார்மெண்ட்ஸ்க்கு கிடைத்துள்ளது அதற்கான விழாவுக்கு தான் அனைவரும் தயார் ஆய்கின்றனர்.இவன் என்னவென்றால் கார்மெண்ட்ஸில் முக்கிய வேலை என்று சென்றுவிட்டு தற்பொழுது தான் நுழைகிறான்.அவனை முறைத்துவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டாள் திவ்யா.

"அச்சோ...குட்டிமா அம்மா கோபமா இருக்கா..."என்றான் தன் மகளிடம்.அவளும் தன் தந்தையை போல சைகை செய்து சிரித்தது.அவளது சிரிப்பில் மயங்கியவன்,

"பட்டூ..."என்று உச்சி முகர்ந்துவிட்டு தன் மனைவியை சமாதானபடுத்த சென்றான்.

திவ்யாவோ அறையில் தனக்கு தேவையான புடவை அதற்கு தகுந்த அணிகலன்களை எடுத்து வைத்தவள் குளிக்க சென்றாள்.அவள் திரும்பி வரும் போது தன் உடையின் மேல் ஒரு கவர் இருக்கவும் அதை பிரித்து பார்த்தாள் அதில் பேபி பிங்க் நிறத்தில் குழந்தை கிருஷ்ணன் உருவம் போட்ட பட்டு புடவை அழகாய் இருந்தது.அதை வருடி பார்த்துக்கொண்டு இருக்கும் நேரம் அவளது காதில்,

"பிடிச்சிருக்கா..."என்று கிசுகிசுத்தான் கிருஷ்ணன்.

"ம்ம்.."என்று கூறிவிட்டு அவன் புறம் திரும்பியவள் இமைக்க மறந்தாள்.அவளது மன்னவனோ நீள நிறக்கோர்ட் சூட்டில் அவனது மயக்கும் புன்னகையுடன் இவளை பார்த்து கண்சிமிட்டினான்.அதில் மேலும் மயங்கியவள் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க.தன்னவளின் பார்வை உணர்ந்தவன்,

"மேடம் என்ன சைட் அடிச்சது போதும் கிளம்புங்க...நானும் என் பொண்ணும் கிளம்பியாச்சு..."என்றான்.ஆதிரையும் ஆகாய நிற கவுனில் குட்டி தேவதையாகவே தெரிந்தாள்.

"என்ன அதிசயம் சார் கோர்ட் சூட்டெல்லாம் போட்டு இருக்கீங்க...என்ன ஸ்பெஷல்.."என்றாள் நக்கலாக.எப்போதும் அவள் அணிய சொன்னால் எனக்கு அதெல்லாம் நல்லா இருக்காது என்று கூறுபவன் இன்று அவனனே அணிந்து வரவும் கேட்டாள்.

"இன்னக்கி என்னோட பொண்டாட்டி ஆவார்டு வாங்க போறாள்ல அதான் ஸ்பெஷல்..."என்று கண்ணடித்தான்.அவனை முறைத்தவள் அவன் கொடுத்த புடவை அணிந்து வந்தாள்.கிருஷ்ணன் அவளையே இமைக்காமல் பார்த்தான்,

"என்ன சொல்லிட்டு இப்ப நீ என்ன செய்யுர..."என்றாள்.அவளை நெருங்கி அவளது இடையில் கை கோர்த்து மேலும் தன்னிடம் நெருக்கியவன்,

"தருமா...இப்ப எல்லாம் என்ன நீ கண்டுக்கவே மாட்டிங்குர..."என்றான் கிசுகிசுப்பாக கூறியவனது இதழ்களோ அவளது மேனியில் ஊர்வலம் வந்தது.அவனது செய்கையில்மனமயங்க நின்றவளை,

"அம்மா.."என்ற மகனின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவள்.கிருஷ்னை தள்ளிவிட்டு ஓடி போனாள்.அவளது செய்கையில் மென்னகை படர அவளின் பின்னே சென்றான் கிருஷ்ணன்.

விழாவில் வர்ஷி,வருண் அவர்களது மகள் பிருந்தா வந்திருந்தனர்.அவர்களை கண்டவுடன்,

"சித்தி..."என்று கூவிக் கொண்டு ஓடினான் ஆதிரன்.

"வா டா செல்லம்..."என்று வாரி அணைத்துக்கொண்டாள் வர்ஷி.

"ஏன்க்கா...லேட்..."என்றாள் தமக்கையை பார்த்து.அவளோ கிருஷ்ணனை முறைத்தாள்,

"அய்யோ...இந்த சின்னகுட்டிக்கு எப்போதும் என்ன மாட்டிவிடுறதே வேலையா போச்சு..."என்று நினைத்தான.

"இன்னக்கி என்னமோ நீ சீக்கிரம் வந்துட்டேனு சொல்லு...இல்லனா உன்ன கிளப்புறது எவ்வளவு கஷ்டம் எனக்கு தெரியாதா...என்ன இப்ப மாப்பிள்ளை தான் பாவம்..."என்றார் நக்கலாக.

"அம்மா..."என்று பல்லைக்கடித்தாள் வர்ஷி.வருணோ,கிருஷ்ணனிடம்,

"நம்ம அத்தை ரொம்ப நல்லவங்க டா...நம்மள எப்போதும் காப்பாதிடுறாங்க..."என்றான்.

"அவங்க இல்லனா என் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்..."என்றான் கிருஷ்ணன்.ஆம் பலமுறை திவ்யாவிடம் இருந்து கலைவாணி தான் அவனை காப்பற்றுவார்.இவர்களின் உரையாடலை கேட்ட திவ்யாவும்,வர்ஷியும்,

"பாத்தியா அக்கா...கொழுப்ப..."என்றாள்.அவளோ கிருஷ்ணனை முறைப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை.

திவ்யாவுக்கு தங்கள் துறையில் சிறந்து விளங்கியதற்கான விருது வழங்கப்பட்டது.விருதை கையில் வாங்கும் நேரம் அவளது கண்கள் கீழே தனக்காக கைதட்டும் கணவனிடம் சென்றது.அவனும் அவளைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.இது இருவரின் வெற்றி ஆனால் அவன் திவ்யாவை தான் அனைத்திற்கும் முன்னிருத்தினான்.அவள் மறுத்து கூறவந்தாள் உன்ன பார்த்து பல பெண்களுக்கு உன்ன போல வரனும்ற எண்ணம் வரனும் தாரணி என்பான்.அவனது கூற்றில் அவளும் அமைதியாவாள்.விழா முடிந்து கிருஷ்ணனும்,தாரணியும் அவருகளது தோப்பு வீட்டிற்கு சென்றனர்.குழந்தைகளை கலைவாணியிடம் ஒப்படைத்துவிட்டு தோப்பு வீடு வந்தனர்.

அவர்களின் அனைத்து சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடம் இது தான்.மொட்டை மாடியில் வானத்தை ரசித்தபடி தூங்குவதற்காகவே கண்ணாடி மேற் கூரை போட்டு ஒரு ரூம் கட்டியிருந்தான் கிருஷ்ணன்.அது திவ்யாவின் சிறுவயது கனவு அதை நினைவாக்கியிருந்தான் அவளது கணவன். அதில் கணவனின் மடியில் அமர்ந்து வானத்து நட்சதிரங்களை ரசித்துக்கொண்டிருந்தாள் திவ்யா.

கிருஷ்ணனோ தன் மடிமேல் அமர்ந்திருக்கும் மனைவியை ரசித்துக்கொண்டு இருந்தான்.ஏதோ சொல்ல திரும்பியவள் கணவனின் பார்வையில் என்ன என்றாள் கண்களால்,

"நீ எப்படி என்ன காதலிச்சனு சொல்லு..."அவனை முறைத்தவள் இதை எத்தனை தடவை கேட்ப என்று நொந்துகொண்டாலும் பதில் கூறினாள்,

"எப்போ உன்ன முதன் முதல்ல பார்த்தேனோ அப்பவே என் மனசுல சிம்மாசணம் இட்டு அமர்ந்தவன் நீ தான்....

என் மன்னவன் நீ தானே டா...."என்று கூறி அவனை அணைத்துக்கொண்டாள்.அவளது எல்லையில்லா காதலில் அவனும் கரைந்தான்.இருவருக்கும் தனிமை கொடுத்து நிலவு கூட மேகங்களால் தன்னை மூடிக்கொண்டது.இனி அவர்கள் வாழ்வில் அனைத்தும் சுபமே....

சுபம்.
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவும் அருமையான குடும்ப நாவல், காயத்ரி டியர்
அடுத்த லவ்லி நாவலுடன் சீக்கிரமா வாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top