என் மன்னவன் நீ தானே டா...31

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...31

பழங்காலத்து அரண்மனை போல் இருந்தது அவர்களது வீடு,சுற்றிலும் மரங்கள்,பின்புறம் ஒரு பக்கம் காய்கறி தோட்டம் மறுபுறம் சில பழ வகைகள் என்று பார்க்கவே ரம்மியமாக காட்சியளித்தது.வீட்டின் மாடியில் இருந்த அழகை ரசித்துக்கொண்டு இருந்தான் கிருஷ்ணன்.கலைவாணியின் விருப்பபடி திவ்யாவின் தோப்பு வீட்டிற்கு வந்திருந்தனர் கிருஷ்ணன் திவ்யா தம்பதி.

மாடியில் இருந்து இறங்கியவன் மனைவியை தேடினான் அவளோ தோட்டத்தில் வானத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள்.அவளிடம் சென்றவன்,

"என்ன மேடம் இன்னும் கோபம் போகலையா..."என்றான்.அவளோ அவனை திரும்பியும் பாராமல்,

"நான் யார் மேலயும் கோபமா இல்ல..."என்றாள்.அவளது முகத்தை தன் புறம் திருப்பி,

"என்ன பார்த்து பேசு தாரணி...என்ன கோபம்...அன்னிக்கி நீ பேசனதுக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்ல..அப்புறம் ஏன் இரண்டு நாளா வீட்டுக்கு வரல போன எடுக்கலனு நீ கேட்டா ஒரு முக்கியமான வேலை அதான்..."என்றவனை முறைத்தவள் அவன் கைகளை தட்டிவிட்டு,

"அப்படி என்ன வேலைனு தான் கேக்குறேன் சொல்லு...என்ன நீ ஏத்துக்கவே இல்ல கிருஷ்ணா...நான் தான் உன்ன கட்டாய படித்தி கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்...இனி என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது கிருஷ்ணா.."என்றவள் அவன் ஒரு பத்திரத்தை நீட்டினாள்.அதை வாங்கி படித்தவன் அடுத்த நிமிடம் அதை சுக்கு நூறாக கிழித்துவிட்டு அவளை ஓங்கி அறைந்தான்.அவளோ எதுவேனா செய்துகொள் என்பது போல நின்றாள்.

"ரொம்ப கொழுப்புடி உனக்கு...என்ன தைரியம் இருந்தா விவாகரத்து நோட்டீஸ் கொடுப்ப...கொன்னுடுவேன் பார்த்துக்க..."என்றவன் தன் தலையை கோதி தன்னை சமன் செய்தவன் அவளிடம் திரும்பி,

"உன் கிட்ட மறைக்கிறேனா அது பெரிய விஷயம்னு உனக்கு புரியலையா...உன்ன பிடிக்காம தான் உனக்கு முத்தம் கொடுத்தேனா...என்ன சொன்ன கட்டாயபடித்தி கல்யாணம் பண்ணியா என்ன யாரும் எதிலயும் கட்டாய படுத்தமுடியாது நான் உன்ன விரும்பி தான் கல்யாணம் பண்ணேன்...உன்கிட்ட சொல்ல தயக்கம் அது மட்டும் இல்லாம என்னோட தாழ்வு மனப்பான்மை அதிலேயே சுழன்றுட்டு இருந்தவனை நீதான் எல்லாம்னு எனக்கு ஒரு முத்ததுல புரியவச்ச...அதிலேந்து உன்ன மட்டும் தான்டி நினைச்சிக்கிட்டு இருக்கேன்...விவாகரத்து கொடுக்குறாளாம்...ஒண்ணு புரிஞ்சிக்க உன்னோட வாழ்க்கை என்னோட தான் இத நீயே நினைச்சாலும் மாத்த முடியாது..."என்று அவளிடம் தன் மனதில் உள்ளதை கொட்டிவிட்டு சென்றுவிட்டான்.அவன் சென்ற திசையே பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு மனதில் சொல்லான நிம்மதி அவனது மனதை அறிந்ததில்.அவனை காண உள்ளே ஓடினாள் அவனோ மாடியில் வானத்தை வெறித்தான் அவனை பின் இருந்து கட்டிக்கொண்டவள்,

"சாரி கிருஷ்ணா....சாரி..."

"போடி...செய்யறது எல்லாம் செஞ்சிட்டு சாரியாம்..சாரி..."என்றவனது கண்ணீர் துளிகள் அவளது கைகளில் விழ அதில் அதிர்ந்தவள் அவனை தன்னை பார்க்கும் படி செய்து,

"ப்ளீஸ் கிருஷ்ணா...என்ன இரண்டு அடிவேன அடிச்சுக்க..."என்றாள் அவனது கலங்கிய விழிகளை காணமுடியாமல்.

"போடி இங்கிருந்து...என் பத்தூ போனதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில வந்த தேவதை நீ தான்...ஆனா நீயும் போறேனு சொல்லுர..."என்றவனது குரல் கரகரத்தது.அவனது அழுகைப் பார்த்து வான் தேவதைகளும் அவனுக்காக கண்ணீர் சிந்தியது.மழை வளுக்க ஆரம்பிக்க அவனை கிட்டதட்ட இழுத்து வந்திருந்தாள் திவ்யா.

அவனோ இவளது கரங்களை உதறிவிட்டு போக முற்படவும்,

"ப்ளீஸ் கிருஷ்ணா..."என்றாள் இரைஞ்சுதலா.அதில் சற்று மனம் மட்டுபட்டாளும்,

"நான் இன்னும் கோபமா தான் இருக்கேன்..."என்றான் வீராப்பாக.

"அதான் சாரி கேட்டேன்ல..."என்றாள் பாவமாக.அவனோ உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு,

"அது எதுக்கு எனக்கு…நீ தான் என்னை சமாதான படுத்தனும்..."என்றான் குறும்பாக. சமாதான படுத்தனுமா என்று யோசித்தவள்...பின் அவன் முகத்தை பார்க்க அதில் தெரிந்த குறும்பில்,

"ஏய் உன்னை..."என்று அவனது நெஞ்சில் குத்தினாள்.அவளை பூ போல அள்ளியவன்,

"போதும் அடிச்சு விளையான்டது...இன்னக்கி நான் உனக்கு வேற பாடம் எடுக்கிறேன்..."என்றான் உல்லாசமாக.அவனது பேச்சில் சிவந்த முகத்தை அவனது மார்பிலே புதைத்துக்கொண்டவளை கட்டிலில் விட்டவன்,தன் இதழ்களால் அவளது மேனியில் ஓவியம் வரைந்தவன் இறுதியில் அவளது இதழ்களில் முடித்தான்.நீண்ட நேரம் நடந்த இதழ் யுத்ததில் யார் வென்றனர் யார் தோற்றனர் என்று இருவரும் அறியார்.அவனது விரல்களோ கட்டுபாடு இன்றி அவளது மேனியில் ஊர்ந்தது.அவனது தொடுகையில் அவளது மேனி சிலிர்த்து அடங்கியது.இவள் கெஞ்ச அவன் மிஞ்ச என்று கலைந்து களைத்தாலும் இருவரது தாபமும் அடங்கவில்லை.வெளியில் கேட்கும் மழை துளிகளின் சத்தத்தோடு இவர்களது காதலும் கரைபுரைண்டு ஓடியது.

வெளியில் கேட்ட குயில்களின் சத்ததில் கண்விழித்தாள் திவ்யா நெடுநாட்களுக்கு பிறகு ஒரு நிம்மதியான உறக்கம்.தன் படுக்கையில் புரண்டவளுக்கு நேற்றைய இரவின் நினைவுகள் அலைமோத அப்போது சுற்றுமுற்றும் பார்த்தாள் கிருஷ்ணனைக் காணவில்லை,குனிந்து தன்னை பார்த்தவள் முகம் மீண்டும் சிவக்க அவன் வரும் முன் குளியல் அறைக்கு செல்ல எத்தனிக்க அவளை பின்னிருந்து அள்ளியிருந்தான் கிருஷ்ணா.

"அய்யோ கிருஷ்ணா...நான் குளிக்க போகுனும் விடு...ப்ளீஸ்..."என்றாள் அவனது முகத்தை பாராமல்.அவனது முகத்தை பார்க்கவே அத்தனை வெட்கமாக இருந்தது பெண்ணவளுக்கு.

அவளது சிவந்த முகத்தை நிமிர்த்தி,

"என் முகத்தை பார்த்து சொல்லு தருமா..."என்றான் அவளது நெற்றியில் தன் இதழ் பதித்தவாரே.அதில் மேலும் சிவந்த முகத்தை அவனது மார்பிலேயே புதைத்தாள் அவனது மனையாள்.பின் என்ன இருவரும் அவர்களது உலகில் ஒன்றினர்.

அந்த ஒரு வாரமும் அவர்களுக்கு எவ்வாறு சென்றது என்றே தெரியவில்லை. இரவு அவர்களது உலகில் இருப்பவர்கள் காலை எழுவதும் எளிமையான சமையல் இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டு சமைப்பதும் பின் ஒருவர் ஒருவர் கை கோர்த்து அந்த தோப்பினை சுற்றி வருவர்.அவ்வாறு சுற்றும் சமயங்களில் திவ்யா அவளது சிறு வயது கதைகளை கூறிக்கொண்டே வருவாள்.சிறுகுழந்தை போல அவனும் அவளது கதைகளை கேட்ட வண்ணம் வருவான்.யாரிடமும் அதிகம் பேசாதவள் கிருஷ்ணனிடம் மனதில் உள்ள அனைத்தையும் பகின்றாள்.

அவள் இவ்வளவு பேசுவாள் என்று கிருஷ்ணனுக்கே இப்போது தான் தெரிந்தது.தன் சுக,துக்கங்களை யாரிடமும் பகிராமல் தவித்துள்ளாள் என்று புரிந்தது கிருஷ்ணனுக்கு. அதற்கு பிறகு திவ்யா கிருஷ்ணனிடம் எதற்காக பெங்களூர் சென்றாய் என்று கேட்கவில்லை அவன் கூறவறும் போதும் தடுத்துவிட்டாள்.அவனும் சிலவற்றைக் கூறி சிலவற்றை மறைத்தான் அவன் ஏதோ சொல்லாமல் மறைக்கிறான் என்று தெரிந்தும் அவள் அவனிடம் வாதிடவில்லை.அவளுக்கு கிருஷ்ணனுடன் இருக்கும் இந்த நிமிடங்கள் மிகவும் பிடித்திருந்தது அதை அவள் கெடுக்கவிரும்பவில்லை.இந்த தனிமை இருவரிடம் இருந்த மனகசப்புகளை நீக்கியதோடு அல்லாமல் இருவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

சூப்பர் தோப்பு வீடு
சூப்பர் ரொமான்ஸ்
அப்போ கூடிய சீக்கிரம் ஜூனியர் திவ்யா or ஜூனியர் கிருஷ்ணன் வரப் போறாங்களோ?
ஸ்டோரி முடியப் போகுதுன்னு நினைக்கிறேன்
ஆனால் இன்னும் வர்ஷினி வருண் ஜோடி ஒண்ணா சேரலையே
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

சூப்பர் தோப்பு வீடு
சூப்பர் ரொமான்ஸ்
அப்போ கூடிய சீக்கிரம் ஜூனியர் திவ்யா or ஜூனியர் கிருஷ்ணன் வரப் போறாங்களோ?
ஸ்டோரி முடியப் போகுதுன்னு நினைக்கிறேன்
ஆனால் இன்னும் வர்ஷினி வருண் ஜோடி ஒண்ணா சேரலையே
நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top