என் மன்னவன் நீ தானே டா...29

Ambal

Well-Known Member
#1
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..என் மன்னவன் நீ தானே டா...29

திவ்யா கிருஷ்ணனை தேடி அலைந்துவிட்டு தோல்வியுடன் வீடு வந்தாள்.அவள் வீட்டில் நுழையும் நேரம் அவினாஷின் அலரலைக் கேட்டு ஏதோ விபரீதம் என்று உள்ளே ஓடினாள்.அங்கு தான் கண்ட காட்சி உண்மை தானா என்பது போல உறைந்து நின்றுவிட்டாள்.அவினாஷ் கீழே விழுந்து கிடந்தான் அவனது உதடு கிழிந்து ரத்தம் வந்துக்கொண்டு இருந்தது,அவனது கன்னங்களில் கை தடம் யாரோ அடித்திருக்கிறார்கள் என்று காட்டியது.கலைவாணியோ ஒரு இடத்தில் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்பது போல உறைந்து அமர்ந்திருந்தார்.

கலைவாணியிடம் வேகமாக சென்ற திவ்யா,

"என்ன ம்மா...என்ன ஆச்சு ஏன் இப்படி உட்காந்து இருக்கீங்க...இவனுக்கு என்ன ஆச்சு...வர்ஷி எங்க.."என்று வரிசையாக கேள்விகளை தொடுத்தாள்.கலைவாணியோ அதிர்ந்த நிலையில் இருந்து வெளி வராமல் இருக்கவும் அவர் தோள்களை உலுக்கானாள் திவ்யா.அதில் தன்னிலை பெற்றவர்,

"திவிமா...வர்ஷி..."என்று மேலும் கூற முடியாமல் விழித்தார்.வர்ஷிக்கு ஏதோ ஆபத்தோ என்று பயந்தவள்,

"என்ன ம்மா...வர்ஷிக்கு என்ன...சொல்லுங்க..."என்றாள் பதட்டத்தோடு.கலைவாணி பதில் அளிக்கும் முன்,

"நான் நல்லா தான் இருக்கேன் அக்கா..."என்று கூறிய படி கையில் ஒரு கேன் உடன் வந்தாள் வர்ஷி.அவள் கண்கள் சிவந்து முகம் வீங்கி இருந்தது.அவினாஷிடம் வந்தவள் கையில் உள்ள கேனை திறந்து அதில் உள்ள மண்ணெண்யை அவன் தலையில் ஊற்ற போனாள்.அவளது செயலைக் கண்டு அதிர்ந்த திவ்யா,

"என்ன டி பண்ற என்ன ஆச்சு சொல்லு...."என்றாள் அவளை தடுத்துக்கொண்டு.வர்ஷியோ,

"விடுக்கா..விடுக்கா...அவன கொல்லாம விடமாட்டேன்..."என்றாள்.

"இவன கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போகப்போறியா...என்ன தான் நடக்குது இங்கு யாராவது சொல்லுங்க...அம்மா நீயாவது சொல்லு..."என்று கலைவாணியை உலுக்கினாள் திவ்யா.

"திவி நம்ம வர்ஷிக்குள்ள ஏதோ சாமி வந்துடுச்சுடி அவ இவன அடிச்ச அடில இவன் செத்துபொய்டுவானோ நான் பயந்துபொய்யிட்டேன்..."

"என்ன இவ அடிச்சாளா ஏன் என்ன நடந்தது சொல்லுங்க முதல்ல..."

"நான் சொல்ரேன் அக்கா..."என்றாள் வர்ஷி.

இரவு மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது கலைவாணி வர்ஷியிடம்,

"வர்ஷி மாப்பிள்ளை நேத்து நைட்லேந்து இன்னும் வீட்டுக்கு வரல திவ்யாவும் எதுவும் சொல்ல மாட்டேங்குறா நீயாவது மாப்பிள்ளைக்கு போன் போடு டி நான் பேசுறேன்...அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு தெரியலயே..."

"ம்மா...எப்ப பாரு புலம்பிக்கிட்டே இருக்காதீங்க மாமா ஒரு முக்கிய வேலையா வெளில போய் இருக்காங்க என்கிட்டேயும் சொன்னாங்க வந்துடுவாங்க நீ தேவையில்லாம பயப்படாதீங்க..."என்றாள்.

"அது சரி இப்ப இன்னும் உங்க அக்காவ காணும் எங்க போனானு தெரியல..போன் போட்டாளும் எடுக்க மாட்டா.."என்று அடுத்த புலம்பலை தொடங்கவும் கடுப்பான வர்ஷி,

"உனக்கு வேற வேலையே இல்ல நீ போய் தூங்கு நான் படிக்கனும்..."என்றாள்.அவளை முறைத்த கலைவாணி,

"ஏன்டி நீ டிவி பார்க்க என்ன தூங்க சொல்ரியா..."என்றார்.

"என்ன டிவியா நான் படிக்கனும் ம்மா..."

"ஆமா கிழிச்ச காலையில இருந்து நீ படிச்ச லட்சணத்த தான் நான் பார்த்தேனே...போடி போய் படு...அத்தராத்திரில படிக்கிறாளாம்....போடி.."என்று திட்டியவரை எப்படியோ பேசி கரைத்து அனுப்பியவள் அவர் சென்றவுடன் படிக்க புத்தகத்தை திறந்தாள்,

"ச்ச புக்க திறந்தவுடனே ஏன் இப்படி தூக்கம் வருதுனு தெரியல..."என்று தன்னையே திட்டிக்கொண்டே எழுந்து சமையல் அறையில் காப்பி தயாரிக்க ஆரம்பித்த நேரம் தன்னை பின்னால் இருந்து யாரோ அணைக்கவும் உடல் தூக்கி போட திரும்பியவள் அவினாஷைக் கண்டு திகைத்து போனாள்.அவன் மேல் வீசிய வாடையே கூறியது அவன் நன்கு குடித்திருக்கிறான் என்று.

"வர்ஷி மை பேபி..."என்று அவன் போதையில் உலரிக்கொண்டிருக்க அவனது அணைப்பில் இருந்து திமரி வெளி வந்த வர்ஷி அவனை ஓங்கி ஒரு குத்துவிட்டாள்.அவள் அடிப்பாள் என்று எதிர்பார்க்காத அவினாஷ் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.அவனது தலைமுடியை பிடித்து வெளியில் இழுத்து வந்தவள் அவனது கன்னத்தில் மாறி இருமுறை அறைந்தாள்.அதில் அவன் அலர ஆரம்பிக்க கலைவாணி தனது அறையில் இருந்து வெளி வந்தவர் வர்ஷியின் புதிய பரிணாமத்தை பார்த்து பயந்து போனார்.அந்தளவுக்கு அவனை வெளுத்து வாங்கியிருந்தாள்.

வர்ஷிக்கு அவினாஷைக் கொல்லும் வெறியே வந்தது.ஏற்கனவே தன் தவறில் மனவருந்தியவளை கிருஷ்ணன் தான் தேற்றி அவளிடம் பல அறிவுரைகள் கூறி அவளை கராத்தே கிளாஸில் சேர்த்துவிட்டுருந்தான். அவளது கல்லூரியிலேயே கிளாஸ் என்பதால் யாருக்கும் தெரியாமல் போனது.அது தற்போது உதவுகிறது என்று நினைத்தவள் மேலும் அவனை அடிக்க கலைவாணி தான் பயந்து போய்,

"ஏய் என்ன டி ஆச்சு உனக்கு அடிக்காதடி செத்துடபோறான்..."என்று தடுத்தவரை தள்ளியவள்,

"சாவுட்டும் விடு ம்மா...எவ்வளவு தைரியம் இருந்த என்ன கட்டிபுடிப்பான் ராஸ்கல்...இருடா வரேன்..."என்று உள்ளே சென்றாள்.

கலைவாணிக்கு வர்ஷி கூறியது ஒரு அதிர்ச்சி என்றால் அதற்கு அவள் அவினாஷை துவைத்து எடுத்தது மற்றொரு அதிர்ச்சி.தன் மகளுக்கு வீட்டிலே ஆபத்து என்று பயப்படுவதா இல்லை வர்ஷியின் இந்த புதிய அவதாரத்தைக் கண்டு சந்தோஷபடுவதா என்று புரியவில்லை.திவ்யா வந்து உலுக்கும் வரை அவர் அதே நிலையில் தான் இருந்தார்.

அனைத்தையும் கேட்ட திவ்யா உடனடியாக தன் கைபேசியை எடுக்கவும் அவள் யாருக்கு போன் போட போகிறாள் என்று உணர்ந்த வர்ஷி.

"எதுக்குக்கா போலீஸ் அதான் நான் இவன உறிச்சிட்டேனே...போலீஸ்க்கு சொன்னா எனக்கு தான் அசிங்கம்...எங்க இவன பெத்தவ...இன்னும் வரலையோ வரட்டும் இருக்கு அவளுக்கு..."என்றாள் கண்களில் வெறியுடன்.அவளைக் கண்டு திவ்யாவுக்கும் பயம் வந்தது.

"வர்ஷி நீ உனக்கு ஒண்ணும் இல்லல..."என்றாள் தடுமாறிய படி.

"பயப்படாத அக்கா நான் நல்ல தான் இருக்கேன்..."என்று தன் தமக்கைக்கு தைரியம் மூட்டினாள்.

சகுந்தலா அப்பொழுது தான் வீட்டில் நுழைந்தார்.அங்கு ஹாலில் கீழே தன் மகன் விழுந்து கிடக்கவும் வேகமாக சென்றவர்,

"டேய் அவி...டேய் என்ன டா ஆச்சு..."என்று அவனை எழுப்பினார்.அவனோ பாதி போதையும் அதில் வர்ஷி அடித்ததில் அரை மயக்கத்தில் இருந்தான்.சகுந்தலாவைக் கண்டவுடன் வர்ஷிக்கு மட்டுபட்டு இருந்த கோபம் மீண்டும் விழித்து எழுந்தது.

"உன் புள்ள இன்னும் சாகல...உயிரோட தான் இருக்கான்...இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தானா உயிரும் இருக்காது..."என்றாள்.அவளது பதிலில் கொதித்து எழுந்தவர்,

"என்னங்க டி ஆள் ஆளுக்கு மிரட்டுரீங்க..."என்று மேலும் ஏதோ கூறவந்தவர் முன் கிருஷ்ணனின் கோபமுகமும் அவன் கூறியவைகளும் நியாபகம் வந்தது.

சகுந்தலா கெஞ்ச ஆரம்பிக்கவும் கிருஷ்ணன் அவரிடம் சில பத்திரங்களை நீட்டினான்.அதில் என்ன உள்ளது என்று கூட பாராமல் கையெழுத்திட்டவர் தான் தப்பித்தால் போதும் என்று நினைத்து பத்திரங்களை அவனிடம் நீட்டினார்.

"என்ன ஆன்ட்டி இந்த பத்திரத்தில என்ன இருக்குனு கூட பார்க்காம சைன் பண்ணிட்டீங்க...சரி ஏதோ பதட்டத்துல இருக்கீங்க நானே சொல்ரேன் இதுல உங்களுக்கு கார்மெண்ட்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... நானும் என் மகனும் வருங்காலத்துல அதில் எந்தவித உரிமையும் கொண்டாட மாட்டோம்...சிலது வெத்து பத்திரம் ஆன்ட்டி...நீங்க இனி இங்க இருக்ககூடாது...இனி உங்களால வர்ஷிக்கோ,தாரணிக்கோ எதாவது பிரச்சனை வந்துச்சு அப்புறம் நான் உங்க படத்த போலீஸ்ல குடுத்துடுவேன் அப்புறம் வாழ்க்கை முழுக்க கஞ்சி தான் புரியும் நினைக்கிறேன்..."என்றவன் மீண்டும்,

"நீங்க பாட்டுக்கு சின்னபுள்ள மாதிரி உங்கள கடத்தி நான் மிரட்டினத யார்கிட்டயாவது சொல்லனும் நினைச்சிங்க...போட்டோ பிரஸ்க்கு போயிடும்...ஒழுங்கா மூட்டைய கட்டுர வேலைய பாரு..."என்று கூறி அவரை வீடு வரை விட்டு வரும் படி ராமசாமியிடம் கூறிவிட்டு சென்றான்.தன்முன் சொடுக்கிடும் சத்தம் கேட்கவும் நிகழ்வுக்கு வந்த சகுந்தலா முன் வர்ஷி,

"நீயும் உன் புள்ளயும் இனி இங்க இருக்கக் கூடாது...வெளில போங்க இல்ல இவன நான் கொன்னே போட்டுவன் பார்த்துக்க..."என்றாள்.சகுந்தலாவோ ஏற்கனவே கிருஷ்ணன் கூறியவற்றில் பயந்தவர் எதுவும் பேசாமல் தன் மகனை எழுப்ப முயன்றார்.அதற்குள் வீட்டில் வேலை செய்யும் ஆளின் உதவியுடன் அவனை எழுப்பியவர் கிளம்ப ஆயத்தமானார்.திவ்யாவும் கலைவாணியும் வர்ஷியின் செய்கையில் அதிசயித்து தான் போனர்.

சகுந்தலா தன் அறையில் இருந்து வரவும் அவரின் முன் வந்த திவ்யா ஒரு பத்திரத்தை தந்தாள் அதை வாங்கியவர் புருஷனும்,பொண்டாட்டியும் பேசி தான் செய்யுராங்களோ என்று யோசித்தவர்,

"நீ எதுலமா கையெழுத்து போட சொல்லுர..."என்றார் பயந்துகொண்டு.

"கையெழுத்தா...இது உங்களுக்கு தாத்தா கொடுத்த வீட்டோ பத்திரம்...அப்புறம் உங்களுக்கு தாத்தா போட்ட பணம் இந்த பேங்குல இருக்கு...என்று கூறி ஒரு பாஸ் புக்கையும் கொடுத்தாள்...இவ்வளவு நாள் தாத்தா சொன்னாங்கனு ஒரு காரணத்துக்காக தான் உங்கள விட்டு வச்சேன் ஆனா இப்ப தாத்தாவே உயிரோட இருந்தா கூட அவரும் இத தான் பண்ணுவார்..."என்று கூறிவிட்டு அவர் கையில் பத்திரத்தை வைத்தவள்.தன் வீட்டு வேலை ஆள் உதவியுடன் இருவரையும் அனுப்பினாள்.இனி இந்த ஒதவாக்கரை பிள்ளையை வைததுக்கொண்டு என்ன செய்து என்ற யோசனையுடன் சென்றார் சகுந்தலா.
 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
வாவ் அவினாஷ்ஷை அடி பின்னி பெடலெடுத்தது வர்ஷினியா?
வர்ஷி கராத்தே கற்றுக் கொண்டு விட்டாளா?
சூப்பர் கிருஷ்ணா சூப்பர்
ஹா ஹா ஹா
ஒரு வழியா சகுந்தலா வீட்டை விட்டு போயிட்டாள்
இனி திவ்யா பேமிலிக்கு நல்ல காலம்தான்
ஆனால் லூசு திவ்யா சகுந்தலாவுக்கு எதுக்கு பணம் கொடுக்கணும்?
அவளிடம்தான் நிறைய பணம் இருக்கே
 
Last edited:

Ambal

Well-Known Member
#8
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
வாவ் அவினாஷ்ஷை அடி பின்னி பெடலெடுத்தது வர்ஷினியா?
வர்ஷி கராத்தே கற்றுக் கொண்டு விட்டாளா?
சூப்பர் கிருஷ்ணா சூப்பர்
ஹா ஹா ஹா
ஒரு வழியா சகுந்தலா வீட்டை விட்டு போயிட்டாள்
இனி திவ்யா பேமிலிக்கு நல்ல காலம்தான்
ஆனால் லூசு திவ்யா சகுந்தலாவுக்கு எதுக்கு பணம் கொடுக்கணும்?
அவளிடம்தான் நிறைய பணம் இருக்கே
நன்றி தோழி...இனி அனைத்தும் நன்மையே...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement