என் மன்னவன் நீ தானே டா...26

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..என் மன்னவன் நீ தானே டா...26

தனது அறையில் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன் பெங்களூரில் இருந்து சற்று முன்பு தான் வீடு வந்திருந்தான்.ரமேஷின் நம்பர் அனைத்துவைக்கப்பட்டுள்ளதால் அவனை கண்டுபிடிப்பதில் சிரமாக இருந்தது.வெயிட்ர் சொன்ன அடையாளங்களை வைத்து அவனது ஸ்கேட்சை வரைந்திருந்தனர்.அதை வைத்து தேடுதல் பணியை தொடங்கும் படி கூறிவிட்டு வந்திருந்தான் கிருஷ்ணன்.அவன் வந்து இறங்கிய உடன் ராமசாமி போன் செய்து டைரவரும் செல்வராஜும் அடுக்கடி தனித்து பேசுவதாக கூறியிருந்தார். அவரிடம் அவர்களை தொடர்ந்து கண்கானிக்கும் படி அவரிடம் பணிந்துவிட்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.

காரை தன் மனம் போன போக்குக்கு ஓட்டிக்கொண்டு இருந்தாள் திவ்யா.செல்வம் டெண்டர் கிடைக்கவில்லை என்று கூறியதில் அதை பற்றிய விவரங்களை கேட்க வாய் திறக்கும் வேளையில் தன் கைபேசி இசைக்கவும் ஒருவேளை கிருஷ்ணனாக இருக்குமோ என்று நினைத்தவள்,

"ஹலோ கிருஷ்ணா..."என்றாள்.மறுமுனையில் கூறிய செய்தியில் முகம் கடுகடுவென மாறத்துவங்கியது.ரேஷ்மா தான் அழைத்திருந்தார் பெங்களூரில் உள்ள தன் தோழியின் பிறந்தநாளை கொண்டாட அவர்கள் பப்புக்கு சென்றிருந்தார்கள்.அங்கு கிருஷ்ணனைக் கண்ட ரேஷ்மா திவ்யாவை வெறுபேற்ற அவளுக்கு அழைத்திருந்தார்,

"என்ன திவ்யா எப்படி இருக்க...அன்னக்கி என்ன சொன்ன உன் புள்ள மாதிரி என் புருஷன் ஒண்ணும் கேடு கெட்டவன் இல்ல..அவர் ரொம்ப நல்லவர் அப்படினு சொன்ன...அந்த நல்லவர் இன்னக்கி பப்புல தண்ணி அடிச்சிட்டு இருக்காரு உனக்கு போட்டோ அனுப்புறேன் பாரு.."என்று அவளை பேசவிடாமல் பேசிவிட்டு வைத்துவிட்டு போட்டோகளை அனுப்பினார்.அவருக்கு தெரியும் திவ்யாவை பேசவிட்டால் அவள் முகத்தில் அடித்தது போல ஏதாவது கூறிவிடுவாள் என்று அதனால் அவளை பேசவிடாமல் பேசி வைத்துவிட்டார் ரேஷ்மா.

அவர் அனுப்பிய போட்டோகளை பார்த்தவள் முகம் மேலும் இறுகியது செல்வத்தை அனுப்பியவள் கிருஷ்ணனுக்கு தொடர்பு கொண்டாள் அது தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது என்று வரவும் எதுவும் செய்யமுடியாமல் அமர்ந்துவிட்டாள்.அவளுக்கு தலை வின்வின் என்று வலித்தது டெண்டர் கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் இருக்க இப்பொது கிருஷ்ணன் எதற்காக அங்கு சென்றான்,அவன் தோழனுக்கு அங்கு எதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று ஏதேதோ யோசித்தவள் அறையில் இருக்க முடியாமல் கிளம்பிவிட்டாள் ஆனால் எங்கு செல்வது என்று தெரியாமல் கடற்கரைக்கு சென்றாள்.

அஞ்சலிக்கு மனது உற்சாகமாக இருந்தது.திவ்யாவின் அறையில் மைக்குரோ போன் மூலம் அவளது செயல்பாடுகளை கேட்டு அதனை ஜேடி கம்பெனி மேளாலர் இடம் கூறியிருந்தாள்.அவள் திட்டபடியே டெண்டர் அவர்கள் கைக்கு சென்றது என்று தற்பொழுது ஒட்டுகேட்டவள் மனது துள்ளி குதித்தது.உடனடியாக அந்த மேளாலருக்கு அழைத்தவள் பணத்தை தன் வங்கி கணக்கு அனுப்பும் படி கூறிவிட்டு தன் வீடு நோக்கி சென்றாள்.அவளுக்கு கிருஷ்ணனை இதில் சிக்க வைக்க முடியவில்லை என்ற ஒரு வருத்தம் தான் இருந்தாலும் எங்கு சென்றுவிடுவான் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்.

கலைவாணி ஏதோ யோசனையுடன் இருப்பதைக் கண்ட கிருஷ்ணன்,

"என்ன அத்தை என்ன ஆச்சு வர்ஷி எங்க..."என்றான்.

"அவ தூங்கிட்டா தம்பி...திவிமா தான் இன்னும் காணும் எங்க போனானு தெரியல...உங்க கிட்ட ஏதாவது சொன்னாளா..."

கலைவாணி திவ்யாவை பற்றி கூறியவுடன் தான் அவனுக்கு அவள் நியாபகமே வந்தது அந்த அளவிற்கு மனதும் உடம்பும் சோர்ந்து இருந்தது அவனுக்கு.இப்போது கலைவாணி கூறியவுடன் தன் கைபேசியை எடுத்து பார்த்தான் அதில் செல்வம் மற்றும் திவ்யாவின் அழைப்புகள் குவிந்திருந்தன.தன் தலையில் கைவைத்து "ச்ச..ஏதோ நியபகத்துல சைலன்ட்ல போட்டுடேன் போல..."என்று வாய்விட்டு புலம்பியவன் கலைவாணியிடம் திரும்பி,

"அத்தை நான் கூட்டிட்டு வரேன்..."என்று கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டான்.காரில் செல்லும் போதே செல்வத்திக்கு அழைத்தவன் விபரம் கேட்விட்டு வைத்தான்.அவனுக்கு தெரியும் டெண்டர் கைமாறியது,அது யார் மூலம் மாறியது என்று.திவ்யாவின் அறையில் திவ்யாவுக்கு தெரியாமல் அவன் கேமரா பொருத்தியிருந்தான்.கேமிராவினை தன் மொபைல் மூலம் பார்ககும்படி செட் செய்திருந்தான் அதன் மூலம் அஞ்சலி திவ்யாவின் அறைக்கு வந்தது கடிகாரத்தில் மைக்குரொ போன் வைத்தது அனைத்தும் பார்த்திருந்தான்.அஞ்சலி ஏன் இவ்வாறு செய்கிறாள் என்று யோசித்தவன் அவளை கண்கானிக்கும் படி கூறியிருந்தான்.அவர்களும் அஞ்சலி செல்வராஜ் மற்றும் சகுந்தலாவை ஒரு பார்க்கில் பார்த்தாகவும்,சகுந்தலா அஞசலிக்கும் செல்வராஜுக்கும் பணம் கொடுத்தாக கூறியிருந்தனர்.அவர்கள் கூறியவுடன் கிருஷ்ணனுக்கு சில விஷயங்கள் பிடிபட்டது.முதலில் வர்ஷியின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நினைத்தவன் மத்தவற்றை கண்கானிக்க ஆரம்பித்தான்.தன் சிந்தனையில் இருந்து வெளிவந்தவன் கடற்கரையில் திவ்யாவை தேடினான் அவனுக்கு தெரியும் அவள் இங்கு தான் வந்திருப்பாள் என்று.கடல் அலைகளை வெறித்து பார்த்துக்கொண்டு நின்றாள் திவ்யா.

"தாரணி..."என்று கிருஷ்ணனின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள் திரும்பி அவனை வெறுமையாக பார்த்தாள்.அவளது பார்வையில் உள்ள வெறுமை கண்டவன் டெண்டர் கிடைக்கவில்லை என்று மிகவும் வருந்துகிறாள் என்று நினைத்து,

"தருமா இந்த டெண்டர் கிடைக்கலான இவ்வளோ வருத்தபடுற...நமக்கு இதவிட பெரிய வாய்ப்பு எல்லாம் இருக்கு...அத்தை வேற பதட்டமா இருக்காங்க வா வீட்டுக்கு போவோம்..."என்று அவள் கைகளை பிடித்தான்.அவனது பிடியில் இருந்து தன் கைகளை உருவியவள் மீண்டும் கடலை வெறிக்க தொடங்கினாள்.

"என்ன தாரிணி இது சின்னபிள்ளை மாதிரி வா வீட்டுக்கு போகலாம்..."என்று மீண்டும் கைகளை பிடிக்கவர அவனை தடுத்தவள்,

"கிருஷ்ணா உங்க பிரண்ட் எப்படி இருக்காரு...வேலைல ஏதோ பிரச்சனைனு சொன்னீங்க...இப்ப சரி ஆகிடுச்சா..."என்றாள்.அவள் திடீர் என்று கேட்கவும்,

"ஆங் அவன் நல்லா இருக்கான்...எல்லாம் சரி ஆகிடுச்சு...நீ வா போகலாம்..."என்றான்.

"அவர் எங்க வேலை பார்க்குராருனு சொன்னீங்க..."என்று அடுத்த கேள்வியை கேட்கவும் துணுக்குற்றவன்,

"என்ன தாரணி பிரச்சனை..."என்றான் நேரடியாக.அவன் அவ்வாறு கேட்கவும் அவனிடம் ரேஷ்மா அனுப்பிய புகைபடங்களை காட்டினாள்.அனைத்தையும் பார்த்தவன் முகம் கோபத்தில் இறுகியது,

"சோ...மேடம் என் மேல சந்தேகபடுறீங்க அப்படி தானே..."என்றான் கண்களில் கோபத்தை கக்கிக் கொண்டு.அவனை மேலும் வெறுமையாக பார்த்தவள்,

"என்ன விஷயம் கிருஷ்ணா நீ என் கிட்டேந்து மறைக்குர… எனக்கு தெரியும் என் கிருஷ்ணன் தப்பு பன்னமாட்டான் சொல்லு ஏதோ பிரச்சனை அத என் கிட்ட மறைக்கிற...அன்னக்கே நீ கிளம்பும் போதே உன் முகமே சரியில்ல நான் அந்த டெண்டர் நியபகத்தில உன்ன கவனிக்கல...இப்ப சொல்லு என்ன.."அவள் தன்னை எந்தளவுக்கு விரும்புகிறாள் என்பதை அவளது பதிலில் புரிந்துகொண்டவனுக்கு மனது லேசனது.

இருந்தும் வர்ஷியை பற்றி கூற அவனுக்கு மனம் வரவில்லை.அதனால்,

"நீ கேட்குற அத்தனைக்கும் பதில் சொல்லுரேன் ஆன இப்ப இல்ல கொஞ்சம் பொருமையா இரு..."என்றான்.மேலும் ஏதோ கூற வந்தவனை தடுத்தவள்,

"அப்ப நீ சொல்லபோரது இல்ல அப்படி தானே..."என்றாள் கலங்கிய விழிகளுடன். அவளுக்கு கிருஷ்ணன் தன்னை இன்னும் தன் வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஏற்கவில்லை அதனால் தான் மறைக்கிறான் என்று நினைத்தவள்,

"இனி என் மூஞ்சிலே முழிக்காத...என்ன நீ ஏத்துக்கவே இல்ல..."என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல்,

"போ...இனி என்கிட்ட பேசாத என்ன நம்பாதவன் எனக்கு வேண்டாம் போ..."என்று அவன் நெஞ்சில் குத்திக்கொண்டு அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன் நெஞ்சில் புதைத்துக்கொண்டான். அவள் எவ்வளவு தன்னை தேடுகிறாள் என்பதை அவள் உணர்த்திவிட்டாள் தற்பொழுது அவனுக்கான நேரம் என்பதை உணர்ந்தவன் அவளின் அனைத்து சிக்கல்களையும் தீர்க்கவேண்டும் மனதில் முடிவெடுத்தான்.

அவனது அணைப்பில் அழுது கரைந்தவள் பின் தான் இருக்கும் நிலை உணர்ந்து வேகமாக விலகினாள்.ஏற்கனவே டெண்டர் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சல் இதில் கிருஷ்ணனின் ஒட்டாத செயல்கள் மேலும் அவளை உடைய செய்தது.அவனை பாராமல்,

"என் மூஞ்சிலே முழிக்காத...போ..இங்க இருந்து..."என்றாள்.அவளது குழந்தை தனத்தில் சிரித்தவன்,

"நான் ஏன் போகனும் உனக்கு தான என் முகத்தை பார்க்கபிடிக்கல நீ போ..."என்றான். அவனது பதிலில் மேலும் கடுப்பானவள்,

"போடா..."என்று ஒருவித இயலாமையோடு கூறிவிட்டு சென்றுவிட்டாள். எனது அழுகை கூட அவனை பாதிக்கவில்லை.நான் தான் லூசு மாதிரி இவன் பின்னாடி சுத்துரோன் என்று தன்னையே கடிந்து கொண்டு வீடு சென்றடைந்தாள்.மகளைக் கண்டவுடன் ஓடி வந்த தாயைக் கூட பார்க்காமல் தனது அறைக்கு சென்றுவிட்டாள்.அவள் மட்டும் வருவதைக் கண்டவர் கிருஷ்ணனுக்கு அழைத்தார்.அவனோ தனக்கு ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும் திவ்யாவை தொந்தரவு தர வேண்டாம் என்று கூறி வைத்துவிட்டான்.

காரை எவ்வளவு வேகமாக இயக்க முடியுமோ அவ்வளவு வேகமாக இயக்கினான்.தாரணி சென்ற சில நிமடங்களில் அவனுக்கு அந்த டிடக்டிவ் ஏஜன்ஸியில் இருந்து போன் வந்தது.ரமேஷின் நம்பர் ஆன் செய்யபட்டுள்ளதாகவும் அவன் தற்பொழுது சென்னையில் தான் உள்ளான் என்றும் அவன் இருக்கும் இடத்தை அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர்.அதை பார்த்தவுடன் தாரணி பின்னுக்கு சென்றாள் அவனை எப்படியாவது பிடித்துவிட வேணடும் என்று நினைத்தவன் நேராக அவர்கள் கொடுத்த அட்ரஸுக்கு சென்றான் அதுவொரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அதில் உள்ள பாரில் தான் ரமேஷ் தன் நண்பன் ஒருவனுடன் மது அருந்திக்கொண்டிருந்தான்.பாரில் நுழைந்த கிருஷ்ணன் கண்களை சுழலவிட்டான் தான் வரைந்த ஸ்கெட்சின் படி யாராவது தென்படுகிறார்களா என்று பின் ஓரமாக அமர்ந்திருந்த ரமேஷைக் கண்டவன் அவனது உருவம் தான் வரைந்த ஸ்கெட்ச் உடன் ஒத்துபோவதை உணர்ந்தவன் அவன் தானா என்று தெரிந்து கொள்ள வர்ஷியின் சிமில் இருந்து அவனுக்கு அழைத்தான்.

மிகுந்த போதையில் இருந்த ரமேஷ் தன் கைபேசி ஒளிரவும் அதில் ஒளிரும் நம்பரை பார்த்தவன் முகமும் ஒளிர்ந்தது.அதனை இயக்கி காதில் வைத்தவன்,

"ஹலோ...வர்ஷி பேபி..."என்றவுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.அவனோ மிகுந்த போதையில் இருந்ததால் ஏதோ உலரிக்கொண்டே இருந்தான்.அவன் செய்கைகள் அனைத்தையும் கவனித்த கிருஷ்ணனுக்கு அவன் தான் என்று புரிந்து போனது.அவன் கைபேசியுடன் வெளியில் செல்வதை பார்த்தவன் பின்னோடு சென்றான்.ரமேஷோ தள்ளாட்டமாக தன் பைக் நிறுத்தும் இடம் நோக்கி வந்தவன் சில நிமிடங்களில் மயங்கி விழுந்து இருந்தான்.அவன் போதை தெளிந்து விழிக்கும் நேரம் அவனது இரு கைகளும்,காலும் கட்டப்பட்டு இருந்தது.
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

திவ்யா ரூமில் அவளுக்கே தெரியாமல் கேமரா வைச்சுட்டானா?
ஹா ஹா ஹா
கிருஷ்ணா எத்தனுக்கு எத்தனா இருக்கானே
இந்த ரேஷ்மா மூதேவி சும்மாவே இருக்க மாட்டாளா?
திவ்யாவிடம் கண்டதும் சொல்லி புருஷன் பொண்டாட்டிக்குள்ளே சண்டை மூட்டி விட்டுட்டாளே
ஹா ஹா ஹா
ரமேஷ் சிக்கிட்டான்
சூப்பர் கிருஷ்ணா அசத்திட்டான்
அடப்பாவி செல்வராஜூம் துரோகியா?
அஞ்சலி, செல்வராஜ் இரண்டு பேரும் கிருஷ்ணாவிடம் மாட்டி சின்னாபின்னாமாகும் நாள் எந்நாளோ?
ஹா ஹா ஹா
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

திவ்யா ரூமில் அவளுக்கே தெரியாமல் கேமரா வைச்சுட்டானா?
ஹா ஹா ஹா
கிருஷ்ணா எத்தனுக்கு எத்தனா இருக்கானே
இந்த ரேஷ்மா மூதேவி சும்மாவே இருக்க மாட்டாளா?
திவ்யாவிடம் கண்டதும் சொல்லி புருஷன் பொண்டாட்டிக்குள்ளே சண்டை மூட்டி விட்டுட்டாளே
ஹா ஹா ஹா
ரமேஷ் சிக்கிட்டான்
சூப்பர் கிருஷ்ணா அசத்திட்டான்
அடப்பாவி செல்வராஜூம் துரோகியா?
அஞ்சலி, செல்வராஜ் இரண்டு பேரும் கிருஷ்ணாவிடம் மாட்டி சின்னாபின்னாமாகும் நாள் எந்நாளோ?
ஹா ஹா ஹா
நன்றி தோழி...இனி அனைவரும் கிருஷ்ணனின் கையில் சிக்க போகின்றனர்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement