என் மன்னவன் நீ தானே டா...15

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா...15

"அம்மா.."என்று சிணுங்கும் மகளைக் கண்டு கலைவாணிக்கு சிரிப்பாக இருந்தது.தொழிலில் தொட்டதெல்லாம் வெற்றிக் கண்டவள் தனது வாழ்க்கையின் முதல் அடியெடுத்து வைக்க இவ்வளவு தயங்குகிறாளே என்று சற்று பயமாகவும் இருந்தது.தனது சிந்தனையில் இருந்து வெளியில் வந்தவர்,

"திவ்யா..என்ன இது சின்ன பிள்ளை மாதிரி..இதெல்லாம் சம்ரதாயம்..முடியாதுனு சொல்லக் கூடாது..சீக்கிரம் இந்த புடவைக் கட்டிக்க.."என்றார் சற்று கடுமையாக.பின்னே தன்மையாக சொன்னால் மகள் கேட்க மாட்டாள் என்று அவருக்கு தெரியும்.

கிருஷ்ணனோ திவ்யாவின் அறையில் ஒருவித பதட்டத்தோடு இருந்தான்.அவனுக்கு இந்த ஆடம்பர வாழ்க்கை சிறிது பயமுறுத்தியது.இது வாழ்க்கையின் மிக அழகான நிமிடங்கள் அதை அனுபவிக்க முடியாமல் தடுமாறினான்.அங்கு இருந்த ஒரு சோபாவில் அமர்ந்தவன் அந்த அறையை நோட்டமிட்டான்.அவனது வீட்டின் பாதி அவளது அறையாக இருந்தது. அவளது அறையின் தூய்மையைக் கண்டு,
"இவ என்ன இவ்வளவு சுத்தமா வச்சிருக்கா.."என்று யோசித்துக்கொண்டு இருந்தான். தனது அறையோடு ஒப்பிட்டு பார்த்தவன் "பச்.."என்று ஒரு மூச்சை இழுத்துவிடும் நேரம் அவனது முன் நிழலாடியது நிமிர்ந்து பார்த்தவன் ஒரு நிமிடம் பிரம்மை பிடித்தது போல நின்றுவிட்டான்.விண்ணுலகில் இருந்த வந்த தேவதை போல அவன் முன் நின்று கொண்டிருந்தாள் திவ்யா.

திவ்யா கிருஷ்ணனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற யோசனையோடு உள்ளே நுழைந்தவள் கண்ணில் கிருஷ்ணின் ஓய்ந்த தோற்றம் விழவும் இவனை ரொம்ப வதைக்கிறோமோ என்று நினைத்தவள் அவனின் முன்னால் போய் நின்றாள்.அவனோ இவளைக் கண்டவுடன் பிரம்மைப்பிடித்தவன் போல் இருக்கவும்,

"கிருஷ்ணா..கிருஷ்ணா.."என்று அழைத்தவள்.அவன் அப்படியே இருக்கவும் அவன் தோள்களை தொட்டு உலுக்கினாள்.அவளது தொடுகையில் சுயநினைவு பெற்றவன்.

"ஆங்..என்ன.."என்றான் தடுமாற்றமாக.

"என்ன ஆச்சு உனக்கு...ஆர் யூ ஓகே.."என்றாள்.

அவளது அருகாமையில் தடுமாறத் துவங்கிய மனதை அடக்கியவன்.

"ஐ ம் ஓகே.."என்றான்.

"வாங்களேன்..பால்கனிக்கு போவோம்..கொஞ்சம் பேசனும்.."என்றாள்.
பால்கனிக்கு அழைத்துவந்தவள் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசனையில் இருக்க கிருஷ்ணனோ அவளது தயக்கத்தை உணர்ந்து

"என்ன தாரணி...என்ன யோசனை..."என்றான்

"அது...சும்மா பேசிக்கிட்டு இருக்கலாமனு தான்.."என்றாள் திக் திணறினாள்.அவளது திணறளை ரசித்தவன்,

"என்னாச்சு தாரணி ஏன் கிட்ட என்ன சொல்லனும்..."சிரித்துக்கொண்டு.

"உன்ன ரொம்ப படுத்துறேனோனு தோணுது..."என்றாள் ஒரு தயங்கி.அவளுக்கு கிருஷ்ணின் ஓய்ந்த தோற்றம் மனதை மிகவும் பாதித்து இருந்தது.அவனோ அவளை ஆழ்ந்து நோக்கிவிட்டு,

"அப்படியெல்லாம் இல்லை..."என்றான்.திவ்யாவோ தனது நேசத்தை அவனிடம் சொல்ல வேண்டும் என்று மனதுதுடித்தது.அதை அவனிடம் சொல்ல எத்தனிக்கும் நேரம்,

"நான இது மாதிரி ஆடம்பரத்தை விரும்பமாட்டேன் தாரணி.அதனால தான் உனக்கும் எனக்கும் ஒத்துவராதுனு சொன்னேன்.உன்னோட வாழ்க்கை முறை வேற என்னோடது வேற.."என்று பேசிக்கொண்டு வந்தவனை,

"போதும் நிறுத்து...நான சொல்லவரத கேட்க போறது இல்லை..எப்ப பாரு நீ ரொம்ப பெரிய இடம் அது இதுனு லூசு மாதிரி பேச வேண்டியது.."என்றாள் காரமாக.அவளுக்கு இவன் இதை விடபோவது இல்லை என்று கோபம் வந்தது.தீடீர் என்று அவள் கோபமாக திட்டவும்,

"இப்ப நான என்ன சொல்லிட்டேனு இப்படி திட்டுறா.."என்று நினைத்தவன் அவளை புரியாமல் பார்த்தான்.

"பேசுனது போதும் தூங்கலாம்.."என்றாள்.

"என்னாச்சு தாரணி..ஏதோ பேசலாம்னு சொன்ன..இப்ப என்ன ஆச்சு.."

"ஓண்ணும் ஆகால போய் டிரஸ் மாத்திட்டு வரேன்.."என்று சொல்லி சென்றுவிட்டாள்.

அவள் சென்றவுடன்"நான் இப்ப என்ன சொல்லிட்டேனு இவ இவ்வளவு கோபபடுறா..."என்றவன்.தானும் உடை மாற்ற சென்றான்.

திவ்யாவோ கிருஷ்ணனை திட்டுக்கொண்டே உடை மாற்றி வந்தவள் படுக்கையில் விழுந்தாள்.மனது ஏதோ அழுத்துவது போல இருந்தது.கிருஷ்ணனோ இது எதையும் அறியாமல் உடை மாற்றி வந்தவன் திவ்யா கட்டிலில் படுத்துறுப்பதை பார்த்துவிட்டு இவன் சோபவில் படுக்கச் சென்றான்.அவன் வந்ததிலிருந்து அவனையே கவனித்துக்கொண்டு இருந்த திவ்யா அவன் சோபாவில் உறங்க செல்லவும் வேகமாக எழுந்து அவனிடம் சென்றவள்,

"டேய் என்ன தான் உன் பிரச்சனை..என்ன ரொம்ப கோபபடுத்திக்கிட்டே இருக்க.."

"என்ன ஆச்சு தாரணி..நான் என்ன பண்ணேன்.."

"ஏன் இங்க வந்து படுக்குற..நான என்ன உன்ன கடுச்சு திங்கவா போறேன்..."

"என்னது கடிச்சிடுவாளா.."என்று அதிர்ந்தவன்.

"இல்ல..நான்.."என்று இழுத்தான்.

"ஏதாவது பேசுன கொன்னுடுவேன்..ஒழுங்கா வந்து படு.."

"இல்ல எனக்கு தனியா தூங்கி தான் பழக்கம்..அது மட்டும் இல்ல.."என்று உலர ஆரம்பித்தான். அவளது அழகு அவனை பித்தம் கொள்ள செய்திருந்தது.மேலும் அவன் தனது உணர்வுகளை கடுபடுத்த போராடிக் கொண்டிருந்தான்.இதில் அவள் பக்கத்தில் படுக்க அழைக்கவும் அவன் ஏதாவது சொல்லி தப்பிக்க பார்த்தான்.அதில் கடுப்பானவள் தலையனை எடுத்து வீசி எறிந்தாள்.

அவளது கோபத்தை ரசித்தவன் கட்டிலின் அந்த பக்கம் வந்து ஓரமாக படுத்தான்.திவ்யாவோ இவன் என்ன ஏன் பக்கத்தில் படுக்கவே இவ்வளவு யோசிக்கிறான் என்று நினைத்தாள்.இவன் எப்படி தான் என் மனசுக்குள்ள வந்தானு தான் தெரியல என்று நினைத்தவள் அவனை முதன் முதலில் கண்ட நாளை எண்ணிப்பார்த்தாள்.அதே சமயம் கிருஷ்ணனும் அவளை முதலில் கண்ட நாளை நினைத்துக்கொண்டு படுத்திருந்தான்.

அந்த கல்லூரி வளாகம் முழுவதும் கோலாமாக இருந்தது.பலதறப்பட்ட கல்லூரியில் இருந்து போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.அதில் திவ்யாவின் கல்லூரியும் ஒன்று.

"டி திவி...இந்த வாட்டி இந்த லோகிலாஸ் காலேஜில தான் போட்டினு சொல்லி நம்ம பிரன்ஸி உயிர எடுத்துட்டார் டி.."என்றாள் திவ்யாவின் தோழி ஹேமா.

"ஆமா..டி..அந்த ஆளு சரியான லூசு..நம்ம ஸேடஸ்க்கு அங்க எப்படி செட்டாகும்.."என்றாள் தாரிகா.

திவ்யாவோ இது எதையும் காதில் வாங்காமல் தனது வேலையில் கண்ணாக இருந்தாள்.அவளைக் கண்ட மற்ற இருவரும்"இவ என்ன நினைக்கிறானு சொல்லமாட்டாளே"என்று தங்களுகுள் கூறிக்கொண்டு இருந்தனர்.

"மச்சி...எல்லா காலேஜூம் வந்தாச்சு வா டா..."என்றான் வருண்.

"இரு டா..போலம்.."என்று கூறிவிட்டு தனது சமோசாவில் கவனமாக இருந்தான் கிருஷ்ணன்.

"டேய்...இதோட மூணு சமோசா சாப்ட்டல..அப்புறம் என்னடா .."என்று அலுப்பாக கேட்டான் வருண்.

"டேய்..அங்க போய் என்ன பண்ணபோர..தூரமா நின்னு பார்க்கதான் போர..அப்புறம் ஏன்டா உயிர வாங்குற.."

"நான் மட்டும் இல்ல நீனும் என்கூட வர..."என்று இழுத்துக்கொண்டு போனான்.

அரங்கத்தில் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன.திவ்யாவின் தோழிகள் அவர்கள் போல வந்த மேல்தட்டு கல்லூரி பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது அங்கு வந்த கிருஷ்ணனும் வருணும் அங்கு குழுமியிருந்தவர்களை பார்த்துவிட்டு,

"டேய்..மச்சான் எல்லாமே சூப்பரா இருக்குடா..."என்றான் அங்கிருக்கும் பெண்களை சைட் அடித்தவாறே.கிருஷ்ணனோ இவர்களில் முக்கால்வாசி பேர் மேல் தட்டுமக்கள் என்று யூகித்தவன்.

"டேய்..இதெல்லாம் பெரிய இடம் நம்மல திரும்பி கூட பார்க்காது..வா டா போலாம்..அங்க நம்ம நாயர் சுடசுட வடை போட்டுருப்பார்..."என்றவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தான் வருண்.

இதை ஒரு வேலையாக அங்கு திவ்யா கேட்டுவிட்டு அவனை பார்த்தாள்.அவனோ இங்கு இருக்க பிடிக்காதவன் போல முகத்தை வைத்துக்கொண்டு தன் அருகில் உள்ளவனை மேலும் ஏதோ சொல்லி கிட்டதட்ட இழுத்து சென்றான்.

கிருஷ்ணின் பேச்சை கேட்டவள்,"அதென்ன பெரிய இடம்னா பார்க்காது..எப்படி இவன் எல்லாரையும் ஒரேமாதிரி நினைக்கலாம்.."என்று மனதில் நினைத்துக்கொண்டு போகும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

வாய்ப்பு கிடைத்தால் பெண்களை மிகவும் கேவலமாக பார்க்கும் ஆண்களுக்கு இடையில் இவன் வேறாக இருக்கிறான் என்று நினைத்தவள் மனதில் அன்றே சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருந்தான் அவளது மன்னவன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top