என் காவல்காரன் - 4

Advertisement

Akila Jayavel

New Member
அத்தியாயம் – 4


இங்கு நியூஸ் பார்த்துக்கொண்டு இருந்த அர்ஜுன் அப்படியே சோபாவில் உறங்கிவிட காலிங் பெல் ஓசை கேட்டு விழித்தான். சோபாவில் இருந்து எழுந்து அமர்ந்து தன் இருக்கையினால் முகத்தை தேய்த்துக்கொண்டு இருக்கும்போதே மறுபடியும் அழைப்பு மணி அடிக்க இவன் எழுந்து சென்று கதவை திறந்தான்.



இவன் கதவை திறக்கவும் ஒருவன் அவனின் வைத்தில் குத்தவரா அர்ஜுன் அவனின் கையை மடக்கி பிடித்து அவனின் தலையில் நன்கு நன்கு என்று நாலு கொட்டு கொட்டிவிட்டான்.



கொட்டுவாங்கியவன் " டேய் டேய் விடுடா எப்போப்பாரு வளர பிள்ளை தலைலயே கொட்டுற...... நீ கொட்டி கொட்டித்தான் நா வளரல " என்று பாவமாய் சொல்ல



" அதுக்கு ஒழுங்கா இருக்கனும் எதுக்கு இந்த வேண்டாத வேலை " என்று அர்ஜுன் கேட்க



" சும்மா டா..... கொஞ்சம் விளையாடலாம்னு பார்த்தான் ஆனா நீதான் உஷாரா இருக்கியே " என்று சலிப்பாய் சத்யா கூற அவனின் கையை விட்டுவிட்டு உள்ளே சென்றான் அர்ஜுன். அவனை பின் தொடர்ந்து சத்யா மற்றும் கார்த்திக்கும் சென்றனர்.



மூவரும் அங்குள்ள சோபாவில் அமர சத்யா " இப்போ தான் சென்னை வர தோணுச்சா???" என்று கேள்வி கேட்க



" ஹ்ம்ம் இப்போதான் இங்க ட்ரான்ஸபெர் கிடைச்சுது " என்று சிறு புன்னகையுடன் கூற



"அப்பாடா இனிமே நா ஜாலி ஆஹ் ஊரு சுத்தலாம் எந்த தொல்லையும் இருக்காது " என்று ஓரக்கண்ணால் கார்த்திகை பார்த்துக்கொண்டே சொல்ல அதை பார்த்து கார்த்திக் அவனை முறைக்க அதை அவன் சட்டை செய்யவே இல்லை.



அர்ஜுன் இருவரையும் பார்த்துவிட்டு " ஏன் இப்போ மட்டும் சுதலையா" என்று கேட்க



" எங்க ஒருத்தன் டியூட்டி டியூட்டி னு போறான் இன்னொருத்தன் ஐடி ஐடி னு போறான் இதுல நா தனியா எஸ் ஆனா எப்புடிதான் இவனுக்கு மூக்கு வேர்க்குமோ ஒடனே எதாவது எனக்கு வேலைய குடுத்துடுவான் இப்போகூட எவனோ போகவேண்டிய டியூட்டி ஆஹ் நா வாங்கிட்டு ஒரு ரெண்டுநாள் எஸ் ஆகலாம்னு பார்த்தான் கரெக்ட் ஆஹ் மோப்பம் புடிச்சிட்டான் நாய்" என்று சத்யா புலம்ப ஆரம்பித்துவிட்டான்.



அவன் புலம்பி கொண்டு இருக்கும்போதே அவனின் பின் மண்டையில் கிஷோர் தட்டிவிட்டு " ஆரம்பிச்சிட்டியா உன் புலம்பலை மனுஷனா தூங்க விட மாட்டிக்குறிங்க" என்று அவன் தன் தூக்கத்தை கெடுத்து விட்ட கடுப்பில் கத்த



தன் தலையை தேய்த்துக்கொண்டே கிஷோர் ஐ முறைத்துவிட்டு " வந்துட்டான் தூங்கமூஞ்சு இவனலான் எவன் வேலைக்குடுத்தானோ " என்று அவனை கரிய தொடங்கினான்



" சரி டா பொலம்பாத நம்ப சண்டே வெளிய போலாம் " என்று அர்ஜுன் கூற



அவனை தெய்வமாய் பார்த்தான் சத்யா.... பின் கிஷோர் " நீ எப்போ வேலைல ஜாயின் பண்ண போற " என்று அர்ஜுனை பார்த்து கேட்க



" மண்டே " என்று பதில் கூறினான்



" இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு... ஏன்டா கொஞ்சம் முன்னாடியே வரலாம்ல ஒன் வீக் கேப் இருக்குற மாதிரி உணவச்சு நா கொஞ்சம் தப்பிச்சு இருப்பேன் " என்று பாவமாய் சத்யா கூற கார்த்திக் அவனை காலால் ஒரு இடி இடித்து விட்டு " எரும எரும எப்போ பாரு எப்டி டிமிக்கி குடுக்குறதுலே இரு நீலான் போலீஸ் னு வெளிய சொலிடாத காரி துப்பிடுவாங்க வந்து சேந்து இருக்கான் பாரு இம்ச" என்று அவனை நன்கு திட்ட தொடங்க



கிஷோர் உடனே " டேய் பசிக்குது டா... அப்பறமா அவனை திட்டிக்கலாம் " என்று சொல்ல அப்பொழுதுதான் எல்லாரும் தங்கள் பசியை உணர்ந்து மணியை பார்க்க அது இரண்டு என்று காமிக்க கார்த்திக் சத்யாவை பார்த்து " நீ போய் பார்சல் வாங்கிட்டு வா " என்று கூறிவிட்டு தன் ரூமிற்கு செல்ல கிஷோரும் டிவி சேனல் ஐ மாத்தி தனக்கு பிடித்த பாடல்களை ஓடவிட்டான்.



சத்யா அவர்கள் இருவரையும் கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டே அர்ஜுனை நோக்க அவனும் சிரித்து கொண்டே " நானும் வரன் வாடா போலாம் " என்று சொல்லிவிட்டு அவனையும் இழுத்து கொண்டு ஹோட்டலுக்கு சென்றான்.



கார்த்திக் தன் போலீஸ் உடையை மாற்றிக்கொண்டு வர அவர்களும் சாப்பாடு பார்சல் உடன் வந்தனர் நான்கு பேரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டு கொண்டே தங்கள் பழைய கதைகளை பேசிக்கொண்டு இருந்தார்கள்.



சத்யா, கார்த்திக், அர்ஜுன் மூவரும் யூஜி ஒரே காலேஜ் இல் ஒன்றாய் பயின்றவர்கள் கிஷோர் இவர்களுடன் பிஜி யில் ஒன்றாய் பயின்றவன் அதில் இருந்து இவர்கள் நட்பு தொடர்கிறது.



***********



தமிழ் நாடு மற்றும் ஆந்திர பார்டர் கிடையில் இருக்கும் ஒரு ஊரில் உள்ள சிறிய வீட்டில் ரெண்டு படுக்கை அறை கொண்ட அந்த வீட்டின் ஒரு அறையில் பத்தொம்போது வயது உடைய பெண் மருத்துவ உபகரணங்கள் உடன் ஆழ்ந்த மயக்க நிலையில் படுத்து இருக்க அவளின் நாடியை பிடித்து பார்த்து விட்டு ஒரு ஊசியை ட்ரிப்ஸ் யில் ஏற்றி விட்டு அவ்வறையை விட்டு வெளிய ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் வெளியேறினார் அவரை பார்த்து அவரின் மனைவி " எப்போங்க அந்த பொண்ணு கண்ணு முழிப்பா ?? பாவம் யாரு என்னனு தெரில... அவங்க வீட்டுல அவளை தேடுவாங்களே..... போலீஸ் ல சொல்லலாம்னா நீங்க வேணாம்னு சொல்லுறீங்க" என்று அங்கலாய்ப்பாய் கூற



அவரின் மனைவியை பார்த்து " நா தான் சொன்னன்ல அவ கண்முழிச்சதும் விசாரிச்சிட்டு சொல்லலாம்..... அவளை நா அந்தமாதிரி ஒரு நிலமைல பாத்தன் அதான் போலீஸ் கு சொல்ல யோசிக்குறன்" என்று கவலையாய் சிதம்பரம் கூற அவரின் மனைவி செண்பகமும் வருத்தப்பட்டார் அந்த நாளை நினைத்து.



சிதம்பரம் அரசு மருத்துவர் சென்னையில் தன் வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் தான் அந்த பெண்ணை பார்த்தார்.



சிதம்பரம் மற்றும் அவரின் மனைவி செண்பகம் இருவரும் தமிழ் நாடு எல்லையில் உள்ள ஒரு சித்தூரில் வசிக்கின்றனர். நகரத்தில் தங்கள் வாழ்க்கையை முடித்துவிட்டு இவ்வூரில் கூடி ஏறி விட்டனர். தினமும் ஒண்டரை மணி நேரம் பயணித்து தான் அவர் வேலை செய்யும் மருத்துவமணைக்கு வருவார்.



அப்படி நான்கு நாட்கள் முன் வேலையை முடித்து தன் காரில் வருகையில் அந்த பெண் எங்கு இருந்து வந்தாலோ இவரின் காரின் முன் வந்து விழ கார் இடித்து சிறிது தொலைவில் தூக்கி எரிய பட்டாள். இவள் திடீர் என்று தன் காரின் முன் வந்ததை கவனியாமல் அவரும் அவளை இடித்த உடன் பதற்றமாய் அவளை நெருங்கி அவளை பார்க்கையில் அவள் இவரின் காலை பிடித்து " க கா ப் காப்பாத்துங்க " என்று கூறிவிட்டு அவளின் எதிர் திசையில் கையை தூக்கி காமித்துவிட்டு மூர்ச்சையானால்.



இவரும் அவசரமாய் அவளின் நாடியை பிடித்து பார்க்க அது துடிப்பதை உறிதி படித்துவிட்டு அவளை தூக்கி தன் காரின் பின் பக்கம் படுக்க வைத்துவிட்டு நிமிர யாரோ வருவதுபோல் தோன்ற சட்டென்று முன் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். காரின் ரெயர்வியூ வழியில் பார்க்க அங்கே ஒரு மூன்று பேர் கையில் சில ஆயுதங்கள் உடன் ஓடி வர இவர் காரின் வேகத்தை கூட்டி எங்கயும் நிறுத்தாம்பால் நேராக அவரின் வீற்றின் முன் நிறுத்தினார்.

சிதம்பரத்தின் கார் ஹார்ன் சவுண்ட் கேட்டு வெளியில் வந்த செண்பகம் கணவர் காரில் இருந்து இறங்கி பின்பக்கம் சென்று ஒரு பெண்ணை தூக்குவதை பார்த்து இவரும் சென்று அவருக்கு உதவி அப்பெண்ணை வீட்டின் உள்ளே அழைத்து சென்று படுக்கை அறையில் படுக்க வைத்துவிட்டனர். செண்பகம் அவரின் கணவரை நோக்கி " யாருங்க இந்த பொண்ணு ?? என்ன ஆச்சு?? " என்று கேள்வி கேட்க



அவரும் நடந்ததை கூறிக்கொண்டே அவளுக்கு முதல் உதவி குடுத்தார். அப்பொழுதுதான் அவரும் அப்பெண்ணை பார்த்தார் சிறிய பெண் அதுவும் உடம்பில் அங்கங்கே முட்கள் கீறிய தடங்கல் பின் கால் பாதத்தில் வீங்கி போய் காயங்கள் உடன் இருக்க முகத்தில் எதையோ பார்த்த பயம் மயக்க நிலையிலும் அது தெரிந்தது.



செண்பகமும் அப்பெண்ணின் நிலையை உணர்ந்து சண்முகத்துக்கு உதவினார். முதலுதவி செய்துவிட்டு இருவரும் வெளிய வந்து சோபாவில் உட்கார்ந்தனர். செண்பகம் தன் கணவரை பார்த்து பதற்றமாய் " ஏங்க என்னங்க இப்படி உடம்பு முழுக்க காயம இருக்கு அந்த பொண்ணுக்கு வேற எதுவும் ஆகலால " என்று தயக்கமாய் கேட்க



சண்முகமும் அவளின் கேள்வியை உணர்ந்து தலை அசைத்து " இல்லைமா அப்படி எதுவும் இல்ல நானும் அப்படித்தான் நினைச்சன் இப்போ செக் பணத்துல அப்படி எதுவும் ஆகல அதுக்குள்ள அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்து இருக்க அப்படி வரப்ப ஏர் பட்ட காயம் தான் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல எப்படியும் காலையில கண் முழிச்சிடுவா அப்பறம் என்னனு விசாரிக்கலாம் " என்று கூற



செண்பகத்துக்கு அதை கேட்டதும்தான் நிம்மதி ஆனார் பின்னே காலம் அப்படி இருக்கு எங்கயும் இம்மாதிரி செயல்கள் தான் நிறைய நடக்கிறது அதனால் தான் அவர் பயந்தார் அப்படி எதுவும் இல்லை என்றதும் சிறிது அசுவாசமானார் பின் தன் கணவரிடம் " நம்ப போலீஸ் ல சொல்லிடலாம் அவங்க இந்த பொண்ணு யாருனு விசாரிச்சு அவங்க வீட்டுல சேத்துடுவாங்க" என்று சொல்ல



" காலைல அந்த பொண்ணு கண் முழிச்சதும் நம்ப விசாரிச்சு சொல்லிடலாம் " என்று கூறிவிட்டு சென்றார்.



அந்நாளை இருவரும் நினைவு கூர்ந்தனர் இப்பொழுது செண்பகம் தன் கணவர் இடம் " என்னங்க இந்த பொண்ணு நாலு நாள் ஆச்சு இன்னும் கண் முழிக்கல ஆனா தினமும் மயக்கத்திலே பயந்து கதற ஏதோ ஒளருறா " என்று புலம்ப



சண்முகம் தன் மனைவியை தீர்க்கமாய் பார்த்து " அதான் சொன்னன்ல அவ எதையோ நினைச்சு பயப்புடுற அவ ஆழ்மனசுல அது நல்லா பதிஞ்சுடுச்சு எங்கே கண் முழிச்சி நம்ப அத பார்த்துடுவோம்னு மயக்கத்திலே இருக்கா " என்று கூறிவிட்டு



" அவ கண் முழிச்சு அவளை பத்தி சொன்னதும் நம்ப அவ சொல்லுற இடத்துல விட்டுடுலாம் எனக்கு போலீஸ் ல சொல்ல வேணாம்னு தோணுது அப்படி நம்ப சொல்ல போய் அதுல இவளுக்கு எதாவது ஆபத்து வந்துட்டா அதனால எதுனாலும் அவ எழுந்ததும் பார்த்துக்கலாம் ..... அதான் இன்னைக்கு கை விரல் அசைஞ்சுதுல எப்படியும் ரெண்டு நாள்ல முழிச்சுப்பா" என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார் செண்பகமும் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.



**********

இங்கு பாலா ரஸூலுக்கு கால் பண்ணி "சரக்கு ஞாயிற்று கிழமை வருது" என்று தகவல் சொல்ல



" ஏன் சீக்கிரம் வருது ??" என்று கேள்வி கேட்க



" சரக்கு இருக்குற இடத்துல ப்ரிச்சனையா அதான் சீக்கிரம் இடம் மாத்துறாங்க நீ நம்ப எப்பவும் இறக்குற இடத்துல சரக்க எடுத்து மாத்திடு பசங்ககிட்ட சொல்லிடு " என்று கூறிவிட்டு கால் ஐ கட் பண்ணிவிட்டான் ரசூலும் அவன் சொன்னபடி செய்வதுக்கு ஆளுங்களை அழைத்து அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை கட்டளை இட்டான்.

பாய் ரசூலை பார்த்து " என்ன ஆச்சு ??" என்று விசாரிக்க அவனும் பாலா கூறியதை சொல்ல பாய் யோசனையுடன் ரசூலை பார்க்க ரசூலும் அவனை பார்த்து " என்ன ??"

என்று கேட்க



" என்னமோ சரி இல்லனு தோணுது " என்று யோசனையாய் கூற



"என்ன சரி இல்ல " என்று ரசூல் திருப்பி கேட்க



" ஒன்னும் இல்ல" என்று சொல்லவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.



ரசூலும் யோசனையாய் அவன் செல்வதை பார்த்தான்.








காவல்காப்பன்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top