என் காவல்காரன் - 3

Advertisement

Akila Jayavel

New Member
அத்தியாயம் - 3

ஜி.எச் இல் இருந்து கிளம்பிய இன்ஸ்பெக்டர் நேராக திருவான்மியூரில் பணக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றான் அங்கே ஒரு பெரிய பங்களாவின் உள்ளே தன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே செல்ல அங்கு இருந்த ஒருவன் " வணக்கம் சார்..... என காலைலயே வந்து இருக்கிங்க??" என்று கேட்க



இவன் கடுப்பாய் " ஐயா இல்லையா " என்று கேட்க



" என்ன பார்த்திபா காலையிலே டென்ஷன்" என்று அவன் பின்னால் சத்தம் கேட்டு திரும்ப அங்கே இந்த சென்னையே தன் கைக்குள் வைத்து இருக்கும் ராஜேந்திரன் மாடியில் இருந்து படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டு இருந்தான்.



ராஜேந்திரன்கு அரிசியால் தலைவர்கள் முதல் சாதாரண peon வரை அனைவரையும் தன் சொல்படி நடக்கும் படி வைத்து உள்ளான். இவனுக்கு தனியாய் பல தொழில்கள் உண்டு. இவனுக்கு கீழ் மூவர் இவன் பினாமியாக இருக்கின்றனர் அதனால் எதிலும் இவன் பெயர் வெளிய வராமல் பார்த்துக்கொள்வான்.



ராஜேந்திரன் கீழே வந்து அங்கே உள்ள சோபா வில் அமர்ந்து பார்த்திபனையும் அமர சொல்லிவிட்டு " என்ன ஆச்சு பார்த்திபா ?? அவன் கண் முழிச்சிட்டானா??" என்று கேட்க



" இல்ல ஐயா " என்று பார்த்திபன் பதில் கூற



ராஜேந்திரன் யோசனையாய் அவனை நோக்க அதை பார்த்து பார்த்திபன் தயக்கத்துடன் " அங்க அந்த ஏ.சி.பி இருக்கான் ஐயா என்னைய கிளம்ப சொல்லிட்டான் " என்று தான் வந்த காரணத்தை கூற



ராஜேந்திரன் சற்று யோசித்துவிட்டு " சரி நா பாத்துக்குறேன் நீங்க அவன் அடுத்து என்ன பன்றான் மட்டும் பாருங்க " என்று சொல்ல



மறுபடியும் தயக்கத்துடன் " அவன் அங்க யாரையும் கூட வச்சிக்கல தனியாத்தான் இருக்கான் " என்று கூற



ராஜேந்திரன் உடனே மொபைல் ஐ எடுத்து யாருக்கோ கால் பண்ண அந்த பக்கம் எடுத்த உடன் " நம்ப பசங்க ரெண்டு பேர அந்த ஏ.சி.பி மேல கண்ணு வைக்க சொல்லு அவன் என்ன பன்றான் எங்க போறான்னு பாருங்க " என்று கட்டளை இட்டு விட்டு கால் ஐ கட் பண்ணிவிட்டு பார்த்திபனை பார்த்து " இதுக்கு மேல நா பாத்துக்குறேன் நீயும் அவன் மேல ஒரு கண்ணா வச்சிக்கோ " என்று கூற



" சரிங்க ஐயா " என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பிவிட்டான்.



ராஜேந்திரன் சற்று நேரம் அமர்ந்துவிட்டு தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த தன் பி.ஏ வை பார்த்து " வண்டி எடுக்க சொல்லு பேக்டரி போகணும் " என்று சொல்லிக்கொண்டே சோபா வில் இருந்து எழுந்து வெளிய நடக்க தொடங்கினான். அவனுக்கு முன் சென்று வண்டியை எடுக்க சொல்லி டிரைவர் இடம் கூற டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்து ரெடி ஆக இருந்தான். காரின் முன் கதவை திறந்து கொண்டு ராஜேந்திரன் அமர பின் இருக்கையில் அவன் பி.ஏ அமர்ந்தவுடன் காரை பேக்டரி நோக்கி செலுத்தினான் டிரைவர்.



**********

இங்கு கண்மூடி அமர்ந்து இருந்த கார்த்திக்கின் முன் ஒருவன் வந்து நிற்க அதை உணர்ந்து அவன் கண்ணை திறந்தான். தன் முன்னால் நிற்பவனை பார்த்துவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து counselor இருக்கும் அறை நோக்கி செல்ல அவனை பின் தொடர்ந்து புதிதாய் வந்தவனும் சென்றான். அங்கே அப்பொழுதுதான் கண் விழித்த counselor இவர்களை கேள்வியாய் நோக்கினான் அவனின் பார்வையின் பொருளை உணர்ந்து கார்த்திக் " என்ன இங்க எதிர்பாக்கலயா ???" என்று நெக்கலாய் கேள்வி எழுப்ப அவன் பதில் சொல்லவில்லை.



" சரி அதை விடு உனக்கு எப்டி அடி பட்டுச்சு??" என்று தன் விசாரணையை தொடங்க



" எனது அடிபட்டுச்சா என்ன அஞ்சு பெரு சேந்து வெட்டிட்டாங்க " அவன் பொரிய



" அப்படியா?? சரி யாரு அவங்க ?? உனக்கு அடையாளம் தெரியுமா??" என்று பதில் கேள்வி கேட்க



" அவனுங்க அந்த எதிர் கட்சி ஆளுங்க " என்று பதில் கூற



" எப்டி சொல்லுறிங்க?? உங்களால அவங்கள அடையாளம் காமிக்க முடியுமா??" என்று கேட்க



" அவனுங்கதான் சொன்னாங்க நேத்து நடந்த கூட்டத்துல நா அவங்க தலைவர பத்தி பேசுனனு சொல்லி வெட்டுனாங்க " என்று கூற



" அப்போ அந்த கட்சி ஆளா தான் இருக்கும் நீங்க அவனுங்கள அடையாளம் காமிங்க " என்று சொல்ல



" இல்ல எனக்கு யாருனு தெரியாது " என்று பதில் சொல்ல



" அது எப்டி இவளோ தெளிவா சொல்றிங்க இப்போ யாருனு தெரிலன்னு சொல்லுறிங்க " என்று கேள்வி கேட்க



" அவங்க எல்லாரும் முகத்தை மறைச்சி இருந்தாங்க " என்று சொல்ல



அவனை கூர்மையா பார்த்துவிட்டு தன் பக்கத்தில் இருந்தவனிடம் கண் காமிக்க அவன் சென்று அந்த அறையின் கதவை சாத்தினான். அதை பார்த்ததும் ஜெர்க் ஆகி " எதுக்கு கதவை சாத்துரிங்க" என்று ஒரு வித பயத்துடன் கேட்க

" ஹ்ம்ம் உன்கிட்ட இருந்து உண்மை வரவைக்க " என்று நக்கல் அடித்தான் கார்த்திக்



**********



ஹாஸ்பிடல் வெளியே பிரஸ் ஆட்கள் எல்லோரும் counselor க்கு என்ன ஆயிற்று என்று காவல் அதிகாரிகளை கேள்வி கேட்க அதற்கு அங்கே இருந்த அதிகாரிகள் " கொஞ்சம் பொறுமையா இருங்க விசாரணை முடிஞ்சதும் உங்களுக்கு சொல்லுவோம் " என்று சொல்லி அவர்களை சமாளித்துக்கொண்டு இருக்கும் போது கார்த்திக் மற்றும் அந்த புதியவனும் வந்தனர் அவர்களை பார்த்தவுடன் பிரஸ் ஆட்கள் அவர்களை சூழ்ந்து கொள்ள கார்த்திக் அவர்களை அடக்கி " என்ன கேட்கணுமோ கேளுங்க " என்று சொல்ல

அவர்கள் தங்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்..



" counselor எப்டி இருகாங்க ??"



" அவங்கள யாரு வெட்டுனாங்க ??"



" வெட்டுனவங்கள கண்டுபுடுச்சிட்டீங்களா ??" என்று வரிசையாய் கேள்விகளை தொடுக்க



அவர்கள் எல்லாருடைய கேள்வியாய் கேட்டுவிட்டு மெலிதாய் சிரித்துக்கொண்டே " அவர் இப்போ நல்லா இருக்குறார்.... அவரை யாரும் வெட்டலை தூக்க கலகத்துல வண்டிய சரியா பேலன்ஸ் பண்ணாம கீழ விழுந்துட்டாரு " என்று அவர்கள் கேள்விக்கு பதில் கூற



அதை கேட்டு அங்கு இருந்த அனைவரும் ஒரு நிமிடம் அமைதி ஆகினர்... அவன்கூட வேலை செய்யும் அதிகாரிகள் கூட ஆச்சரியமாய் பார்த்தனர்....



எல்லாம் சில நொடிகள் தான் அதற்குள் எல்லாரும் சுதாரித்து " நீங்க என்ன சொல்லுறிங்க அவரை வெட்டிட்டாங்கன்னுதானே சொன்னாங்க " என்று ஒரு ஊடக ஊழியர் கேட்க



" அப்படியா?? யாரு சொன்னாங்க ??" என்று அவரை பதில் கேள்வி கேட்க அவர் வாயை மூடிக்கொண்டார்



அதற்குள் அருகில் இருந்த மற்றொரு ஊழியர் " அதுலாம் எதுக்கு கேக்குறிங்க?? வெட்டுனவங்கள புடிக்காம வேற எதோ கதை சொல்லிட்டு இருக்கீங்க " என்று துடுக்காய் கேட்க



அவனை பார்த்து தன் ஒரு பக்கம் புருவத்தை தூக்கி பார்த்துவிட்டு " உங்ககிட்ட வெட்டுனாங்கனு சொல்லி இருகாங்க ஆனா counselor நானா போய் விழுந்து அடிபட்டுட்டேன்னு சொல்லுறாரு இதுல நா யாரை நம்புறது?? வெட்டுப்பட்டவரைய?? இல்லை யாருனே தெரியாத ஒருத்தர் சொன்னதா சொல்லுற உங்களயா??" என்று கேள்வியாய் அவரை நோக்க அவரும் அவன் பதிலில் அடங்கினார்.



அவனின் பேச்சு சாமர்த்தியத்தை பார்த்து மெச்சிக்கொண்டனர். பின் ஒருவர் " நீங்க சொல்லுறத நாங்க எப்டி நம்புறது ??" என்று கேட்க



" அதுக்கு தான் நான் counselor பேசியதை ரெகார்ட் பண்ணி கொண்டுவந்துள்ளேன் " என்று கூறிவிட்டு தன் பக்கத்தில் இருந்தவனை பார்க்க அவனும் தன் மொபைல் ஐ எடுத்து அந்த வீடியோ ரெகார்டிங் ஐ காமிக்க அதை எல்லாரும் பார்த்தனர்.



அவ்வீடியோ வில் counselor " என்ன யாரும் வெட்டலை நாந்தான் தூக்க கலகத்தில வண்டில இருந்து விழுந்து அடிபட்டுடன் " என்று கூறி இருந்தார்



அதை பார்த்த ஊடக ஊழியர்களுக்கு சப் என்று ஆகிவிட்டது பின்ன விறுவிறுப்பான நியூஸ் என்று இருந்தவர்களுக்கு இப்படி ஒன்னுமில்லாமல் போக எல்லாருடைய மூஞ்சும் தொங்கிவிட்டது.



அதை பார்த்து கார்த்திக் " இப்பொழுது நம்புனீர்களா.... அவருக்கு லைட் அஹ தான் அடி பட்டு இருக்கு நாளைக்கே டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க சோ ப்ளீஸ் எல்லாரும் கலைஞ்சு போங்க " என்று கூறிவிட்டு அவன் ஹாஸ்பிடல் உள்ளே சென்று மறைந்துவிட்டான்.



**********

இங்கு தன் பாக்டரியில் உள்ளே சென்ற ராஜேந்திரன் அங்கு இருக்கும் குடவுனின் உள்ளே செல்ல அங்கு ஏற்கனவே மூவர் அங்கு போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தனர் அவர்களை சுற்றி பத்து அடியாட்கள் நின்றுகொண்டு இருந்தனர். ராஜேந்திரனின் வருகையை பார்த்து மூவரும் எழுந்து கொண்டனர் அவர்களை அமர சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான் ராஜேந்திரன். அப்பொழுது சரியாக கார்த்திக்கின் பேட்டி நேரலையாய் ஒளிபரப்பாகி கொண்டு இருக்க எல்லாரும் அதை கவனித்தனர். பேட்டி முடியவும் அங்கு இருந்த நால்வரின் முகமும் கோவத்தில் சிவக்க ஆரம்பித்தது.



" இதுக்குதான் நா அவனை அப்பவே போட்டுடுறானு சொன்னேன் " என்று ரசூல் கோவத்தில் உருமா



" நீ பண்ண ஒரு வேலைனாலதான் இப்போ இந்த ப்ரிச்சனை " என்று அவனுக்கு கொட்டு வைத்தான் பாய் என்று அழைக்க படும் மொஹம்மத் அலி



அதை கேட்டு ரசூல் அவரை முறைக்க இவர்கள் இருவரையும் அடக்கினார் பாலா " சரி சரி இப்போ என்ன பண்றதுனு யோசிங்க முடிஞ்சது பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்லை " என்று கூற



மூவரும் ராஜேந்திரனை நோக்க அவரும் சிறிது யோசித்துவிட்டு " கொஞ்ச நாள் போகட்டும் எலெக்ஷன் வேற வருது பொறுமையா இருபோம் " என்று கூற



" நாம்ப சும்மா இருந்தாலும் அவன் சும்மா இருக்கணும்ல " என்று பாய் கூற



அதை ஆமோதிப்பதை போல் ரசூலும் " அவன் இதோட விடுவானு எனக்கு தோணல "என்று கூற



"பாலா நீ இத பாத்துக்கோ நா சொன்ன மாறி அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும் "

என்று சொல்ல பாலாவும் அதை ஆமோதிக்கும் விதமாய் தலை அசைத்தான்.



"இந்த வாரம் சரக்கு வருது" என்று பாய் கூற



" வழக்கம் போல ரசூல் பாத்துக்கட்டும்..... எப்போ சரக்கு வருது?? " என்று ராஜேந்திரன் கேட்க



" இன்னும் நாலு நாளுல " என்று ரசூல் பதில் கூறினான்



" சரி அப்போ சரக்கு வர அன்னைக்கு பார்த்திபன் கிட்ட தகவல் சொல்லிடுங்க " என்று கூறிவிட்டு அவர் இருக்கையை விட்டு எழுந்து வெளிய சென்ற விட்டார் மற்றவர்களும் தங்களுக்கு இட்ட வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.



இவ்மூவர் தான் ராஜேந்திரனின் பினாமிகள். ராஜேந்திரன் உடைய எல்லா வேலைகளிலும் இவர்கள் பங்கு உண்டு. இதில் ரசூல் முப்பது வயது உடைய ஆண்மகன் சிறு வயதில் இருந்து ராஜேந்திரன் இடத்தில தான் வேலை செய்கிறான். ஊரில் உள்ள அத்தனை ரௌடிகளும் இவன் சொல் படி தான் நடப்பார்கள். பாய் ரஸூலிற்கு துணையாய் மற்றும் அறிவுரை கூறவும் இருப்பான். பாலா ராஜேந்திரன் உடைய ரைட் ஹாண்ட் போல அவர் நினைப்பதை துள்ளியமாய் செய்து முடிப்பான். இவர்கள் தான் ராஜேந்திரனின் பலமே.



**********

பிரஸ் மீட் முடிந்ததும் ஹாஸ்பிடல் உள்ளே counselor இருக்கும் அறையின் உள் கார்த்திக் மற்றும் அந்த புதியவனும் நுழைய அவர்கள் இருவரையும் பார்த்து கோவமாய் முறைத்தான் அந்த counselor அவர் முறைப்பை கண்டுக்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிறிது நேரத்துக்கு முன் நடந்ததை நினைத்து சிரித்துக்கொண்டனர்.



" ஹ்ம்ம் உன்கிட்ட இருந்து உண்மை வரவைக்க " என்று நக்கல் அடித்தான் கார்த்திக்



அதை கேட்டு புரியாத பார்வை பார்க்க "என்ன புரியலையா அப்போ புரிய வச்சிடுவோம் " என்று சிரித்துக்கொண்டே கார்த்திக் கூறிவிட்டு



" யாரு உன்ன இப்படி சொல்ல சொன்னது ??" என்று கேட்க



" நான் உண்மையைத்தான் சொன்னேன் " என்று அவன் சாதிக்க



" சரி அப்போ நீ சொன்னதையே நானும் மீடியால சொல்லுறன் கூடவே இதையும் " என்று கூறிவிட்டு சத்யா என்று சொல்ல



அவன் கூட இருந்த சத்யா என்கிறவன் உடனே தன் மொபைல் ஐ எடுத்து ஒரு விடியோவை காமிக்க அதை பார்த்து counselor பதற்றம் அடைந்து கார்த்திக் ஐ பார்த்து " இதுக்குலான் நான் மசியமாட்டேன் " என்று சொல்ல



" அப்படியா சரி இன்னொன்னு இருக்கு அதையும் பாத்துட்டு சொல்லு " என்று சொல்லிவிட்டு கார்த்திக் சத்யாவை பார்க்க அவன் அடுத்த விடியோவை பிலே செய்தான் அதை பார்த்த counselor சர்வமும் நடுங்கி கார்த்திகை பார்க்க அவனின் முகத்தை பார்த்தே இவன் பயந்து விட்டான் என்று புரிந்து " அப்போ நா சொல்லுறமாறி நீ பேசுறியா " என்று கேட்க அதற்கு அவனின் தலை தானாய் அசைந்தது.



பின் கார்த்திக் சொன்ன படி அவன் பேசப்பேச சத்யா அதை ரெகார்ட் செய்துகொண்டான். நடந்ததை நினைத்து இருவரும் சிரிக்க அவர்களை முடிந்தமட்டும் முறைக்க முயன்று தோற்று போய் கெஞ்சலாய் " நா தான் நீங்க சொன்னமாதிரி சொல்லிட்டேன்ல அந்த விடீயோவை டெலிட் பண்ணுங்க " என்று கெஞ்ச



" இப்போ இப்படி பேசிட்டு அப்பறம் வெளிய போய் மாத்தி பேசுனா அதுனால அந்த வீடியோ பத்திரமா எங்க கிட்டயே இருக்கட்டும்" என்று கார்த்திக் சொல்ல



"இல்லை இல்ல நா மாத்தி பேசமாட்டேன்" என்று கெஞ்ச



அதை சட்டை செய்யாமல் இருவரும் வளியேறினார். இருவரும் வெளிய வந்து அந்த காரிடோரில் நடக்க சத்யா கார்த்திகை பார்த்து " எப்டி கண்டு புடிச்ச அவன் பொய் சொல்லுறான்னு " என்று வினவ



"வெட்டு ஆழமா படமா லைட்டா கிழிச்சு இருக்குனு டாக்டர் சொல்லவுமே எனக்கு சந்தேகம்தான் அதன் கொஞ்சம் அவன்கிட்ட போட்டுவாங்குனேன் அதுவும் இல்லாம அந்த பார்த்திபன் அவளோ காலையிலே இங்க இருந்தான் அதான் அவன அனுப்பிச்சிட்டு உனக்கு கால் பண்ணேன் " என்று கூற



" எதோ இப்போ தடுத்தாச்சி இதுக்கு அப்பறம் அவனுங்க உஷார் ஆகிடுவாங்களே என்ன பண்றது " என்று சத்யா கேட்க



"எப்படியும் எலெக்ஷன் வரதுனால கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க அதுக்குள்ள எதாவது நமக்கு சாதகமா அமையும் பாக்கலாம் " என்று பெருமூச்சுடன் கூறினான்



இருவரும் பேசி கொண்டே வெளியில் வர " அடுத்து என்ன " என்று சத்யா கேட்க



" வீட்டுக்கு போறேன் டா அர்ஜுன் வந்து இருக்கான் " என்று கூற



"ஏஹ்... அவன் எப்போ வந்தான் சொல்லவே இல்லை " என்று கேட்க



" காலைல தான் வந்தான்... நீதான் பந்தபோஸ் க்கு திருநெல்வேலி போயிடு நைட் தான வந்த அதான் சொல்லல " என்று பதில் கூற



" சரி சரி வா போலாம் நானும் வரன் " என்று சொல்லிக்கொண்டே அவனுடன் அவனின் வீட்டிற்கு சென்றனர்.



காவல்காப்பன்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top