என் காதல் தீ 14

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

லேட்டா வந்ததுக்கு சாரி.... சீக்கிரமே வர நினைச்சும் முடியல. இந்த கதை எப்படியும் இந்த மாதம் இறுதிக்குள் முடிஞ்சுடும்ப்பா... கொஞ்சம் எபிஸ் தான் இருக்கு இன்னும். எவ்வளவு எபி வரும் என்று சரியா சொல்லத்தெரியல. அது எபியின் நீளம் பொறுத்து. இந்த மாதத்தோட மிடில் வரைக்கும் என்னால சின்ன எபிஸ் தான் தர முடியும்ப்பா... அதன்பின் நல்ல பெரியதாகவே தர்றேன். இதுவும் சின்ன எபி தான்ப்பா... சாரி... ஒரே ஒரு சீன் மட்டும்தான் டைப் செய்ய முடிஞ்சது.



HelloGuruPremaKosame.jpg
கதிரும் நிரல்யாவும் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சில நாட்கள் கடந்திருந்தன. இருவரும் வாரநாட்களில் அங்கும், வாரயிறுதிகளில் ஊரிலும் என்று மாறிமாறி இருந்து வந்தனர்.

காலையில் இருவரும் கல்லூரிக்கு செல்ல, மாலை வரை அங்கேயே ஓடிவிடும். அதன்பின் வருபவர்கள், மாலை சிற்றுண்டி உண்டுவிட்டு இரவு உணவு தயாரிப்பில் இறங்கிவிடுவர். கதிர் நியமித்தவர் காலை மட்டும் வந்து இரு வேளைகளுக்கும் சமைத்துவிட்டு சென்றுவிடுவார். இரவுக்கான சமையலும் கதிரே செய்வான் ஆரம்ப காலங்களில்.

அவன் மட்டுமே செய்வதைக் கண்டவள் தானும் சென்று அவனுடன் இணைந்து சிறிய அளவிலான உதவிகளை செய்வாள். அவன் உபயத்தால் தற்போது சில உணவு வகைகளை செய்யவும் பழகிவிட்டாள். அவள் எவ்வாறு சமைத்தாலும், தீஞ்சே போனாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்லி சாப்பிடும் கதிருக்காகவே மேலும் நன்றாக சமைக்கத் தோன்றும் அவளுக்கு.

கதிரின் மேல் காதல் உள்ளதோ இல்லையோ, அவன் மேல் ஒரு விருப்பம் வந்துவிட்டிருந்தது. அவன் செய்யும் சிறு சிறு செயல்களையும் ரசித்து பார்க்க ஆரம்பித்தாள் தன்னையுமறியாமல்.

காதலை வெளிப்படுத்தும் விதமே அலாதியானது அல்லவா? அதுவும் திருமணத்திற்குப் பின், தாம் மற்றவர் மீது காட்டும் உரிமையையும் அக்கறையையும் விட சிறப்பாக காட்டுவது எது? அது தானே பல காலமாக தம்பதியரை அந்த பந்தத்தில் கட்டி வைத்திருப்பது? வெளிப்படையாக அவற்றை ஒத்துக்கொள்ளாவிட்டாலும், நிரல்யாவிற்காக ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செய்தான் கதிர். அதனை புரிந்து கொள்ளும் பக்குவம்தான் இன்னும் அவளுக்கு வரவில்லை.

அவனை எவ்வாறு தன் காதலை ஒப்புக்கொள்ள வைக்கலாம் என்று யோசித்தவளுக்கு, அவன் செய்கைகளில் இருந்த காதலும் புரியவில்லை, தனக்கும் அவன் மேல் விருப்பம் வந்துவிட்டது என்று தான் அவனிடம் உரைக்கவில்லை என்பதும் எட்டவில்லை.

இரவு உணவு முடிந்ததும் இருவரும் தத்தமது வேலைகளில் மூழ்கி விடுவர். சில வேளைகளில் நிரல்யாவிற்கு பாடத்தில் சந்தேகமென்றால் கதிர் அதனை தீர்த்து வைப்பதும் உண்டு. அந்த நேரங்களில் அவன் சொல்வதை விட, கண்களில் தோன்றும் பாவம் அவனுக்கு கற்பித்தல் எத்தனை இஷ்டம் என்று காட்டிட, அதே போல் தன்னைப் பற்றி எப்போது இவ்வாறு கண்ணில் மின்னலுடன் கூறுவான் என்று கனா கண்டு அவன் கையால் கொட்டு வாங்கியதும் உண்டு.

அன்று இரவு தூக்கத்தில் இருந்த நிரல்யாவிற்கு சமையலறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்க, எழுந்து வந்து பார்த்தவள் கண்களில் பட்டான் எதையோ சமைத்துக்கொண்டிருந்த கதிர்.

“ஹேய்… இந்த நேரத்தில் இங்கே என்ன செய்யறீங்க?” என்று கேட்டபடி வந்து கிச்சன் மேடையில் ஏறி அமர்ந்தவள், அவன் கிண்டிக்கொண்டிருக்கும் வாணலியினுள் எட்டிப் பார்த்தாள். உள்ளே பிரட் தக்காளியுடனும் பச்சை மிளகாயுடனும் சேர்ந்து ஒரு உணவாக தயாராகி இருந்தது.

அதனை கிண்டியவாறே, “தூங்கலியா?” என்று கேட்டான் கதிர்.

“தண்ணி குடிக்க எழுந்தா, சத்தம் வரவும், என்னன்னு பார்க்க வந்தேன். மிட்நைட் ஸ்னேக்ஸா செய்யறீங்க?”

“ஆமா… பிரட் தான் இருந்துது. அதுதான் சும்மா…”

இவ்வாறே இருவரும் பேசியவாறே நின்றிருந்தனர். திடீரென்று, “நீ முதல் இருந்ததற்கு இப்போ நல்லாவே பேசுறே, எப்படி?”

“அதுவா, ஒரு டைம் நான் ஹோர்டிகல்ச்சர் டிபார்ட்மென்ட் எங்க இருக்குன்னு தேடிட்டு போனப்போ தேர்ட் இயர் பசங்க கிட்ட மாட்டிட்டேன். நான் இங்க்லிஷ்ல பேசவும், ரொம்ப கலாய்ச்சு தமிழ் டங்க்ட்விஸ்டர் தினமும் சொல்லனும்னு சொல்லிட்டாங்க. முதல் நாள் ஏதோ திருக்குறள். அடுத்த நாள் இன்னும் பெருசா ஏதோ ஒன்னு. இப்படி தினமும் அவங்க சொல்லவும், படிக்க ஹெல்ப் கேட்டு அஞ்சலி கிட்ட போகவும், அப்படியே தமிழ் பழகிட்டேன்.”

“என்னது? இவ்வளவு நடந்துருக்கா? ரேகிங் நம்ம காலேஜ்ல தப்பாச்சே. யார் அவங்க?” என்று ஆண்டி-ராகிங் கமிட்டி மெம்பராக விசாரிக்க ஆரம்பித்தான்.

‘அட என் சின்சியர் சிகாமணியே!’ என்று தலையிலடித்துவிட்டு, (மனசுக்குள்தான்!) “இப்போ எல்லாம் என்ன பார்த்தாலே ஓடுறாங்க. ஒரு வாரம் மட்டும் கலாய்க்கலாம்னு நினைச்சாங்க. நான் தினமும் தொறத்தி தொறத்தி அவங்க கிட்ட வம்பிழுக்கவும், என் பக்கமே வர்றதில்ல” என்று தன் நைட் டிரஸில் இருந்த காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்.

அதனை கேட்டவன், அந்த விஷயத்தை அத்தோடு விட்டுவிட்டு, வேறு விஷயங்கள் பேசலானான்.

தூங்க செல்லாமல் அவனுடனே அவள் இருக்க, கதிர்தான் தவித்துப் போனான். தனியாக வந்தால், விருப்பம் இல்லாமல் அவனுடன் நன்றாக இருப்பதாக காட்டிக்கொள்வதைவிட அந்த பிரச்சனை இல்லாமல் அவள் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தே அவன் இங்கே வந்தது. ஆனால் இங்கோ, அவனை விட்டு விலகிச் செல்லாமல் அவன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் ஏதேனும் செய்து அவனுடனே நேரத்தை செலவளித்தாள். பாவம், தனியாக என்ன செய்வாள் என்று அவனும் நட்புக்கரம் நீட்ட நினைத்தால், சில சமயங்களில் அவள் கண்களில் தெரியும் அவன் மீதான ஆர்வம் அவனுக்கு ஒரு வகையான இம்சையை ஏற்படுத்தியது. தந்தையின் விருப்பமே இனி என் விருப்பமும் என்று அவள் சொன்னதிலிருந்தே இவ்வாறுதான். எங்கே, தந்தைக்கு உன்னுடன் நான் வாழ்வதுதான் ஆசை என்று கூறிவிடுவாளோ என்ற அச்சம் சிறிது தோன்றியிருந்தது அவனுள்.

ஆனால், அதுவும் சில நாட்களாக விலக ஆரம்பித்திருந்தது. இதுவரை கதிரின் கவனத்தைக் கவர நிரல்யா எதுவுமே செய்து அவன் கண்டதில்லை. அவள் அவளாகவே இருந்தாள். ரூம்மேட்டுடன் ஒருவர் எவ்வாறு பழகுவாரோ, அவ்வாறே அவள் செயல்கள் இருந்தது.

இதற்குள் உணவு தயாராகியிருக்க, கதிரை விலக சொல்லிவிட்டு தானே இரு தட்டுகளில் பரிமாறி ஒன்றை அவனுக்கு அளித்தாள். “காரம் ரொம்ப அதிகமா இருக்கும். உனக்கு சேராது” என்றான் அவன். அவளுக்காக இவனும் காரம் சேர்க்காமல் இருந்தாலும், பல காலமா உரைப்பா சாப்பிட்ட நாக்காச்சே, உடனே கேட்குமா? அதற்குத்தானே தற்போது இங்கே வந்ததே!

“எனக்கு எல்லாம் சேரும். இத்தனை நாளா சாப்பிடுறேனே” என்றவள் ஹாலில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்.

முதலில் சுவையை மட்டுமே கருத்தில் கொண்டவளுக்கு நேரம் செல்ல செல்ல கண்களில் நீர் முட்ட, ‘அப்பவே சொன்னாரே! கேட்காம இருந்துட்டோம். இப்போ காரமா இருக்குன்னு சொன்னா கெத்து போய்டும். அப்படியே மைன்டெய்ன் செய்வோம்’ என்று நினைத்தவள், தான் நன்றாக இருப்பதாக காட்டிக்கொள்ள, அவள் முன்னே அமர்ந்திருந்தவன் எழுந்து உள்ளே சென்றான்.

அவன் தலை மறைந்ததும், காற்றை ஊதியவள், அதுவும் முடியாமல் தண்ணீரை அள்ளிப் பருகலானாள். அவ்வாறும் காரம் குறையாமல் இருக்கவும், என்ன செய்வதென்று விழித்துக்கொண்டிருந்தவளுக்கு முன் ஒரு கோப்பை ஜூஸை நீட்டினான் கதிர். அதனை முழுவதும் குடித்தபின் தான் நாக்கு சிறிது கட்டுப்பாட்டிற்கு வந்தது அவளுக்கு.

அவள் இயல்பிற்கு வந்ததைக் கண்ட கதிர், “இதுக்கு தான் பெரியவங்க சொன்னா கேட்கனும்னு சொல்றது” என்று ஒரு குட்டு வைத்தான்.

‘போடா, இப்படி ஒரு சிட்சுவேஷன்-ல ஜூஸ் எடுத்துட்டு வந்து நீட்டுறான். நீ எல்லாம் நோட்ஸ் ஆஃப் லெசன் எழுத தான் லாயக்கு. லவ் லெட்டர் எழுத இல்ல’ என்று நினைத்தவள், “சரிங்க தாத்தா! இனிமேல் உங்க சொல்படியே செய்யுறேன்” என்று பணிவாக சொல்லி நாக்கை துருத்திவிட்டு அறையினுள் சென்று மறைந்தாள்.

ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே

ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே

அக்கம் பக்கம் பாத்து பாத்து

ஆசையாக வீசும் காத்து

நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே

அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே

அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே



கிட்ட வந்து நீயும் பேசும் போது

கிட்டதட்ட கண்ணு வேர்த்து போகும்

மூச்சே… காய்ச்சலா மாறும்…

விட்டு விட்டு உன்ன பாக்கும் போது

வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்

மனசே… மார்கழி மாசம்…

அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வேசுது

விழி தெருவில் போகும் உந்தன் உருவம் தேடுது

பாவி நெஞ்ச என்ன செஞ்ச

உந்தன் பேர சொல்லி கொஞ்ச

என்ன கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வேனடா



ஒன்னா ரெண்டா என்ன நானும் சொல்ல

ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள

பேச… தைரியம் இல்ல…

உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள

உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள

இருந்தும்… வெட்கத்தில் செல்ல…

காலம் யாவும் நாளும் உன்ன பார்த்தே வாழனும்

உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே ஆகனும்

உன்ன தவிர என்ன வேணும் வேற என்ன கேட்க தோணும்

நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா


தொடரும்



 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top