என் காதல் தீ 12

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ, உங்களுக்கு இன்னொரு அப்டேட். என்னடா, எப்பவும் ரொம்ப இடைவெளி விட்டு அப்டேட் வரும். ரெண்டு நாளில் அடுத்த அப்டேட் போட்டுட்டான்னு நினைக்கறீங்களா? வேற ஒன்னும் இல்லப்பா, அடுத்த வாரம் என்னால ஒரு அப்டேட் தான் கொடுக்க முடியும்னு நினைக்குறேன். அதான், இந்த வாரம் மூன்று எபி கொடுக்குறதா பிளான். இதோ, 12-ஆவது அத்தியாயம்.


HelloGuruPremaKosame.jpg


கல்லூரிகளில் பொதுவாக ஈவன் மற்றும் ஆட் செமஸ்டர்கள் இருக்கும். ஆட் செமஸ்டர் வந்தாலே மாணவர்களுக்கு குஷிதான். அவர்களின் விருப்பமான செமஸ்டர். இருக்காதா பின்னே! குறைந்த அலுவல் நாட்கள், அது மட்டுமல்லாது துறையிலும் கல்லூரியிலும் கொண்டாடப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் அந்த அவசர காலமான நான்கு மாதத்தில் தான் நடக்கும்.

வெறும் Introductory session அல்லது ஜூனியர்களுக்கு வரவேற்பு விழாவை மட்டும் வைத்து ஆறு மாதங்கள் ஓட்டி எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் காய்ந்து போய் இருக்கும் இளவட்டங்களின் இனிமையான நாட்கள் எல்லாம் இப்பொழுது தான் வரிசைகட்டி வரும், காலேஜ் டே முதல் ஹாஸ்டல் டே வரை.

‘இண்டர்காலேஜ் ஃபெஸ்டிவல்-ல பல காலேஜ் பொண்ணுங்க வரும் மச்சி’ என்று சைட் அடிப்பவனுக்கும், தன் அடுத்த காலேஜ் காதலியை பிரச்சனை இல்லாமல் காணத் துடிக்கும் காதலனுக்கும், காதலிகளுக்கும் வசந்தகாலம் அது. மாணவர்களுக்கு வசந்தம் என்றால், ஆசான்களுக்கு தலைவலி காலம். அனைத்து நிகழ்ச்சிகளையும் சரிவர மேற்பார்வையிடுவது, அதில் மாணவர்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்று அவர்களை இடைவிடாது கடுப்படிக்கும் காலம்.

அத்தகைய செமஸ்டரின் ஆரம்ப காலத்தில் தான் கதிர் மற்றும் நிரல்யாவின் திருமணம் நடைபெற்றது. அதன்பின், அங்கே இங்கே என்று ஓடியதில் கதிருக்கு கொடுக்கப்பட்டிருந்த விழாவை எடுத்து நடத்தும் வேலை சிறிது தொய்ந்து தான் போனது. இருந்தும், முடிந்த அளவு அதனை அலைபேசியின் உதவி கொண்டே செய்திருந்தான் அவன்.

மாணிக்கத்தை வீட்டில் சேர்த்துவிட்டு முழுமூச்சாக அதில் இறங்கியவனின் நேரம் எல்லாம் கல்லூரியிலேயே பெரும்பாலும் கழிந்தது. பொங்கல் நெருங்கிவிட, அது முடிந்தவுடனே காரமடை தேர் திருவிழாவிற்கு ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிடும். அது முடிந்ததும் அடுத்த மாதமே கல்லூரியில் விழா. பெரிய அளவில் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாத கல்லூரியில் இந்த விழாவே மாணவர்கள் வருடம் முழுவதும் சக்கரவாகமாய் காத்து நிற்கும் மழை. அந்த கல்லூரியிலேயே படித்த மாணவனாதலால் சிறப்பாக செய்வான் என்ற நம்பிக்கையில் இவனுக்கும் சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. தான் ஆசானாக பொறுப்பேற்று நடத்தும் முதல் நிகழ்ச்சி தங்கு தடையின்றி நடக்க வேண்டும் என்று நினைத்தான் கதிர். அதுமட்டுமல்லாது, சில நாட்களுக்கு அங்கும் இங்கும் நகர முடியாது என்பதுவும் ஒரு காரணம்.

அதனால் அவனுக்கும் நிரல்யாவிற்கும் பேச்சுவார்த்தை இல்லை என்பது வீட்டினர் யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது. ஆம்! அன்று நிரல்யாவுடன் அவன் பேசியதோடு முழுவதும் அவளுடன் பேசுவதை தவிர்த்துவிட்டான். அவனின் இந்த செய்கை அவளைத்தான் அதிகம் பாதித்தது.

புரிதல் உள்ள தம்பதியாய் இருந்தாலாவது சேதாரம் சிறியதாக இருந்திருக்கும். இருவருக்கும் தான் இமயத்திற்கும் குமரிக்கும் உள்ள இடைவெளியில் உள்ளதே! அவள் கூறுவதை அவன் தப்பும் தவறுமாக கேட்க, தான் நினைப்பதை அவள் சரிவர கூற முடியாமல் அனைத்தும் இடியாப்பச் சிக்கலாகி இருந்தது. அதனை சரிப்படுத்த முயலாமல் அவனிருக்க, முடியாமல் அவள் இருந்தாள்.

அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஓடியிருக்க, ஞாயிறாகையால் கதிர் ஓய்வாக வராந்தாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். நிரல்யாவும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். அவளுக்கு திருமணம் ஆனது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. கல்லூரிக்கு செல்லும் வரை மஞ்சள் கயிரில் கோர்த்திருந்த தாலி, ஒரு மெல்லிய செயினுடன் சேர்த்து அவள் கழுத்தை அலங்கரித்தது; அதுவும், தடிமனான செயினை அணியமாட்டேன் என்று அவள் மறுத்ததால். கதிரின் சார்பில் துறைத் தலைவருக்கு மட்டும் தெரியப்படுத்தப்பட்டிருக்க, அவரும் திருமணம் நடந்த சூழலையும், நிரல்யாவின் படிப்பையும் கருத்தில் கொண்டு அமைதியாக வாழ்த்துகளோடு நின்றுவிட்டார்.

கதிருக்கு இந்த செமஸ்டருக்கு அவள் வகுப்பு தரப்படாததால் அவனை கல்லூரியில் பார்ப்பதே அரிதாகிப் போனது. வீட்டிலும் அவன் நேரம் சென்றே வந்தான். கல்லூரி வேலையை அவன் காரணம் காட்டினாலும், விலகி இருக்க நினைப்பவனுக்கு ஆயிரம் காரணங்கள் அணிவகுத்து நிற்காதா என்ன?

அவன் இல்லாத இந்த வாரம் அவன் அருகாமையையும் ஆசைப் பார்வையையும் அசைபோட்டுக்கொண்டிருந்தாள் நிரல்யா. திருமணம் நிச்சயம் செய்ததிலிருந்து அவனின் பார்வை மாற்றத்தை அவள் அறிவாள். அதன்பின், அந்த பஸ் சம்பவம் பற்றி சொல்லவா வேண்டும்? ஆனால், பிறகு முற்றிலும் விலகிப்போகிறானே!

தான் அனைத்தையும் சொன்னதால் தான் அவனுக்கு கோபம் என்று புரிந்தது அவளுக்கு. ஆனால், எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்தையும் உளரி விட்டவளுக்கு அதனை சரியான நேரம் பார்த்து செய்யவேண்டும் என்று தெரியவில்லை. அனைத்திலும் அவசரத்தை கடைபிடிப்பவள் இதிலும் அதையே செய்தாள். அவனிடம் பேசி இருவருக்குள்ளும் சுமூகமான நிலையை கொண்டுவர வேண்டும், முடிந்த அளவு இந்த ஒதுக்கமாவது இல்லாமல் செய்யவேண்டும் என்ற முடிவில் உள்கட்டிற்க்கும் வெளிகட்டிற்கும் நடை பயின்று கொண்டிருந்தாள்.

கதிர் இருக்கும் இடம் வரை சென்று அவன் பின்னே நிற்பதும், அவன் கவனிக்காததால் உள்ளே செல்வதும், பின் சிறிது நேரத்தில் மீண்டும் வந்து நிற்பதும் என்று அவள் ஆடிய கண்ணாமூச்சியை கதிரும் உணர்ந்திருந்தான். ஆனால், அவளாக வந்து பேசட்டும் என்று கண்டு கொள்ளாமல் இருந்தவனை அழைத்து ஏதேனும் கோவிலுக்கு இருவரும் சென்று வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார் இருவரையும் கவனித்த அவன் தந்தை.

தந்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தி மாலையில் மணம் புரிந்தவளுடன் அந்த மலைக்கோவிலை நோக்கி புறப்பட்டான் கதிர்.

*********

குருந்தமலை – குருந்த மரங்கள் நிறைந்த பகுதியானதால் இப்பெயர் பெற்றது. சிறு குன்றின் மேல் முருகன் குழந்தை வேலாயுதசுவாமியாக அருள்பாலிக்கும் எழுநூறு ஆண்டுகள் பழமையான கோவில் அது. கதிரின் மனதிற்கு மிகவும் பிடித்தமான கோவில்களுள் ஒன்று இது; அழகான, அமைதியான இடமும் கூட.

மலையடிவாரத்தில் வண்டியை நிறுத்தியவன் நிரல்யாவுடன் அங்கே இருந்த சன்னதிகளை வழிபட்டு படிக்கட்டில் ஏறி குன்றின் மேலே முருகனை தரிசித்து பிரகாரத்தை சுற்றிவிட்டு அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்தார்கள்.

அந்த இனிமையான பொழுதில் எதையும் கூறி அதனை கலைக்க விரும்பாமல் அவன் அருகே அமைதியாக அமர்ந்திருந்தாள் நிரல்யா. சிறிது நேரம் பொறுமையாக இருந்தவள், மெல்ல எழுந்து சுற்றும் முற்றும் தெரிந்த கிராமங்களையும் வயல்களையும் ரசித்துக்கொண்டிருந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்கள், பொட்டைக் காடு, வீடு என்று மாறி மாறி இருந்தன. அவற்றின் முடிவில் இன்னொரு மலை தெரிந்தது.

‘அந்த மலையை தாண்டினா நம்ம ஊர் வந்துரும்’ என்று நினைத்தவள் தன் எண்ணப்போக்கைக் கண்டு லேசாக அதிர்ந்தாள், என்று முதல் உறவு கொண்டாட ஆரம்பித்தாள் என்று. அவளது எண்ணத்தை கலைத்தது கதிரின் நகைப்பொலி. ‘கொஞ்சம் சத்தமா நினைச்சுட்டோமோ?’ என்று எண்ணி திரும்பியவள், அவன் கண்களில் தெரிந்த சிரிப்பில் தன்னை மறந்து நின்றுவிட்டாள்.

தன்னை பார்த்துக்கொண்டு நின்றிருந்த நிரல்யாவைக் கண்டவன் ‘என்ன?’ என்பதாக தன் புருவத்தை மெல்ல உயர்த்த, அது அவள் மனம் என்னும் மென்பொருளை கரெப்ட் செய்யும் (அல்லது) செய்யப்போகும் வைரசாக உள்ளே நுழைந்தது. ஒன்றுமில்லை என தலையசைத்துவிட்டு திரும்பி நின்றுகொண்டவள் அருகே வந்து தடுப்பில் சாய்ந்து நின்றவன் மெல்ல பேசத்தொடங்கினான், அந்த புன்னகை மாறாமல்.

“நாம முன்னமே இங்க வந்துருக்கோம்”

“அப்படியா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் நிரல்யா.

“ஆமா… அப்போ நீ ரொம்ப சின்ன பொண்ணு. நான் எது செய்தாலும் அதையே திரும்ப செய்வ. எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும்னு வெச்சுக்கோயேன். இல்ல, அதுக்கும் மேலையே இருக்கும்னு நினைக்குறேன். நம்ம அப்பா, அம்மா, நான், நீ, அபி எல்லாரும் வந்தோம், மாட்டு வண்டி கட்டிட்டு. எப்பவும் நம்ம ஆத்துல முழங்கால் அளவு தண்ணிதான் இருக்கும். அன்னைக்கும் அவ்வளவுதான். அதுதான் மாட்டுவண்டி. இல்லைனா, ஆத்துல இறங்கி நடந்துதான் வந்துருக்கனும். அப்போ எல்லாம் ஆத்துக்கு குறுக்கே பாலம் கட்டல”

“அன்னைக்கு நல்லா முறுக்கு, அது இதுன்னு பட்சனம் எல்லாம் நல்லா சாப்பிட்டு நாம வந்துட்டு இருந்தோம். நாம போட்ட சண்டைல அந்த வெயில் கூட உரைக்கல. இங்க வந்து படி ஏறும்போது நான் பாட்டுக்கு ஒவ்வொரு படியா தொட்டு கும்பிட்டு போயிட்டு இருந்தேன். எப்பவும் நான் செய்யுறது எல்லாம் நீயும் செய்யுறது வழக்கம். அதேமாதிரி நீயும் என்னை போலவே ஒவ்வொரு படியா தொட்டு கும்பிட்டு வந்த. யார் சொல்லியும் நீ கேட்கல, என்ன நிறுத்த சொல்லி நானும் கேட்கல. ஒரு வழியா எல்லாரும் மேல ஏறி சாமி கும்பிட்டு வீடுக்கும் வந்தாச்சு.”
 
Last edited:

lekha_1

Writers Team
Tamil Novel Writer
“ஆனா, அன்னைக்கு நைட் உனக்கு சரியான கால்வலி. அதோட, அந்த வெயில்ல கால் புண்ணாகிடுச்சு. நைட் முழுக்க நீ தூங்கவே இல்ல; வலியில அழுதுட்டே இருந்த. இத தெரிஞ்சு நாங்க எல்லாரும் காலைல வந்து பாக்கவும், எனக்கு செம திட்டு. என்னால தான் உனக்கு கால்வலி வந்து நைட் பூர அழுதன்னு என் அம்மா என்ன லெஃப்ட் ரைட் வாங்கிட்டிருந்தாங்க. அப்போதான் கால்வலி குறைஞ்சு நீ கொஞ்சம் தூங்க ஆரம்பிச்ச. இந்த சத்தம் கேட்கவும், என்னை திட்டுறாங்கன்னு தெரிஞ்சு நீ ஓடி வந்து என் கால புடிச்சிட்டு, ‘நிலா மாமாவ எதுவும் திட்டுனா எனக்கு கோவம் வரும்’னு எனக்காக சண்ட போட்ட. அப்போ எல்லாம் உனக்கு எதுவும் புரிஞ்சுக்கற வயசு கூட இல்ல. அது எல்லாம் இப்போ திடீர்னு நியாபகம் வந்துச்சு. அதான் சிரிச்சேன். அது எல்லாம் ஒரு காலம் இல்ல?” என்றவனின் முகத்தில் மேலும் புன்னகை விரிந்தது.

அவன் கூறியது எல்லாம் தன் மனக்கண்ணில் காட்சியாக தோன்ற, அதை மீண்டும் அனுபவித்தவள் சந்தோஷத்துடன் ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத

அச்சங்கள் கொண்டாடுதே

யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத

அச்சங்கள் கொண்டாடுதே



என் கையை கோர் யவ்வனா

என் கண்கள் பார் யவ்வனா

என் நெஞ்சில் சேர் யவ்வனா

திரன திரன னா

என் வார்த்தை கேள் யவ்வனா

என் வாழ்வாய் நீ யவ்வனா

என் வானே நீ யவ்வனா

எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே



யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத

அச்சங்கள் கொண்டாடுதே

விண்ணோடும் செல்லாமல் மண்ணோடும் நில்லாமல்

என் கால்கள் திண்டாடுதே

கண்ணாடி பூவாகிறேன்

உன் கையில் நான் வீழ்கிறேன் என் அன்பே



என் கையை கோர் யவ்வனா

என் கண்கள் பார் யவ்வனா

என் நெஞ்சில் சேர் யவ்வனா

திரன திரன னா

என் வார்த்தை கேள் யவ்வனா

என் வாழ்வாய் நீ யவ்வனா

என் வானே நீ யவ்வனா

எங்கேயும் செல்லாதே எந்நாளும் நில்லாதே



நிறவொளி நிறவொளி சிதறுது வானம்

நமக்கென இசைக்குது காலநதி

விழிகளில் காதலும் ஓவியம் தீட்டிடுதே

எதிரினில் அருகினில் அழகிய நாளை

மலர்களில் படர்ந்திடும் பாதை இது

பழகிய கனவென பூமியும் மாறிடுதே



வெளியிலே ஓர் புன்னகை அணிகிறேன் நான் போலியாய்

பயங்களை நீ நீக்கியே அணைத்திடு காதல் வேலியாய்

தீ ஒன்றின் பொறியாக நான் எனை சூடும் திரியாக நீ என் அன்பே



என் கையை கோர் யவ்வனா

என் கண்கள் பார் யவ்வனா

என் நெஞ்சில் சேர் யவ்வனா

திரன திரன னா



இருவரும் இவ்வாறு மேலும் சில கதைகள் பேசி நேரம் போவது தெரியாமல் அங்கேயே இருந்தனர். இருவருக்கும் நடுவே இருந்தவை எல்லாம் அப்படியே தான் இருந்தது. ஆனால், தற்பொழுது அது சிறிது ஒதுங்கி இருந்தது (அல்லது) அவர்கள் ஒதுக்கி வைத்திருந்தனரோ?

மெல்ல இருட்டத் தொடங்கவும், சுற்றுப்புறம் உறைக்க, அடிவாரத்திற்கு வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தவன் கண்ணில் விழுந்தது அது.


தொடரும்


 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
சின்ன பிள்ளையாகவே இருந்து இருக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top