என் காதல் தீ 08

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....

தாமதத்திற்கு மன்னிக்கவும். இதோ அடுத்த எபி. எப்போ எல்லாம் இந்த டைம் எபி தரேன்னு சொல்றேனோ, அப்போ எல்லாம் கரெக்டா தர மாட்டேங்குறேன். சோ, இப்போ எதுவும் சொல்லல. விரைவில் தருகிறேன்னு மட்டும் சொல்லிட்டு இந்த எபி போஸ்ட் பன்றேன். சாரி அகைன்ப்பா...


HelloGuruPremaKosame.jpg
வயலுக்கு சென்றுவிட்டு கதிரும் நிரல்யாவும் திரும்ப, அனைவரும் கோவிலுக்கு செல்ல தயாராகி இருந்தனர். இருவரும் வீட்டினுள் நுழைந்தவுடன் அவர்களையும் தயாராகி வரச் சொல்ல, சரியென்றுவிட்டு தங்கள் அறையினுள் நுழைந்தனர்.

அதுவரை இருந்த இலகுதன்மை காணாமல் போய் ஒரு சங்கடமான உணர்வு ஆட்கொண்டது இருவரையும். தன்னை வதைக்கும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அவன் இருக்க, தான் என்ன நினைக்கிறோம் என்றே புரியாமல் அவள் இருந்தாள். நிரல்யாவை எட்டி நின்று பார்க்கும்வரை கட்டுப்பாட்டில் இருந்த மனம், அவளுடன் வாழும் காதல் வாழ்க்கைக்கு ஏங்கியது. ‘நேற்று நல்லவன் மாதிரி பேசுனியேடா!’ என்று அவன் மூளை அவனை தூற்ற, தன் உடைகளை எடுத்துக்கொண்டு உள்ளறைக்கு சென்றுவிட்டான்.

கதிர் நகர்ந்துவிடவும் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நிரல்யா, பைகளைக் குடைந்தெடுத்து ஒரு சுடிதாரை தேர்ந்தெடுத்து உடுத்திக்கொண்டாள். சிறிது நேரத்தில் அங்கே வந்த கதிர், கண்ணாடி முன் நின்று தலையை சீவ, அவன் கண்ணில் தன் பின்னால் நின்று உடைகளை மடித்துக்கொண்டிருந்த நிரல்யா கண்ணில் பட்டாள்.

‘இவங்க என்ன இன்னும் ரெடியாகாம இருக்காங்க?’ என்று நினைத்தவன், “என்னங்க, இன்னும் கெளம்பலையா? சீக்கிரம் கெளம்புனா தா போய்ட்டு சீக்கிரம் வர முடியும்” என்றுவிட்டு தன் வேலையை பார்க்கத் தொடங்கினான்.

“ஹலோ! நான் ரெடியாகி தான் இருக்கேன்” என்றவள் கடுப்புடன் அவன் முன் வந்து நிற்க, ‘நம்ம தா சரியா கவனிக்கலையோ’ என்று நினைத்தவன் மீண்டும் பார்க்க, அப்பொழுது தான் புரிந்தது, அவள் எளிமையான ஒரு சுடிதார் அணிந்திருந்ததாலேயே அவ்வாறு நினைத்துவிட்டான் என்பது.

நிரல்யா அமெரிக்காவில் இருக்கும் தருணத்தில் கோவிலுக்கு செல்ல நினைத்தால் எளிமையாக ஏதேனும் உடுத்தியே செல்வாள். அதே நியாபகத்தில் இங்கேயும் உடுத்த, அதுவே கதிருக்கு அவ்வாறு தெரிந்தது.

“மன்னிச்சிடுங்க. நான் சரியா பார்க்கல. சுடிதார் உடுத்துவது சரிதான். ஆனால், இன்னிக்கு மட்டும் சாரி கட்டிக்கொள்ள முடியுமா?” என்று கேட்டான்.

அவனை கண்சிமிட்டாமல் பார்த்திருந்தாள் நிரல்யா. அவள் அறிந்தவரை அவளது தந்தை தன் தாயிடம் எப்பொழுதும் மன்னிப்பு என்ற ஒன்றை வேண்டி அவள் கண்டதே இல்லை. (நீ இன்னும் வளரனும் கண்ணு!) அவரையும், தான் கண்ட வேறு சிலரையும் கண்டு பொதுவாக கணவன் என்றால் இவ்வாறே இருப்பான் என்று ஒரு பிம்பத்தை அவள் தன் மனதில் உருவாக்கி வைத்திருக்க, அதனை சிறிது சிறிதாக உடைத்துக்கொண்டு அவள் மனத்துள் நுழைந்துகொண்டிருந்தான் கதிர், அவள் அறியாமலேயே!

நம் மனம் பொதுவாக ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரைப் பற்றிய தவறுகளை தேடித் தேடி கண்டுபிடிக்கும். அதேபோல, இந்திய ஆண்கள் இவ்வாறுதான் இருப்பர் என்று சில இடங்களில் பார்த்த, கேட்ட சில விஷயங்களால் அவளும் யூகித்துவைத்திருந்தாள். அவள் கெட்ட நேரம், நல்லவைகளை நினைக்காமல் தீயவைகளாகவே அவள் நினைவில் நின்றது. ஒருவேளை, அவள் செதுக்கி வைத்திருந்த அந்த கற்பனை நல்லதாக இருந்திருந்தால் அவள் தந்தை கேட்டபோதே ஒத்துக்கொண்டிருப்பாளோ என்னவோ? கசப்பும் மிஞ்சியிருக்காது, பின்வரும் குழப்பங்களும் இருந்திருக்காது.

தன்னையே பார்த்துக்கொண்டிருந்த நிரல்யாவின் முன் சொடுக்கிட்டவன், “டைம் ஆகுது, சாரி கட்டறீங்களா?” என்று கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்கவும், தன்னை அறியாமலேயே தலையாட்டியவள் இரண்டடி எடுத்துவைத்து நடக்க, அவனிடம் ஏதோ சொல்ல வந்தவள் திடீரென்று திரும்பியதில் அவள் பின்னே வந்துகொண்டிருந்த கதிரிடம் மோதி நின்றாள்.

“சாரி!” என்றுரைத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளை அவன் என்னவென்று கேட்க, தயக்கமாக அவன் முகம் பார்த்தவாறே நின்றாள் நிரல்யா.

‘சும்மாவே உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு திட்டிட்டு இருப்பான் கிளாசுல. இதுல புடவை கட்ட தெரியாதுன்னு சொன்னா என்ன சொல்லுவான்? இது எந்த காலேஜுல கத்து குடுப்பாங்கன்னு தெரியலயே! அங்க சீக்கிரமா ஒரு சீட் வாங்கி வைக்கனும் போல இருக்கே’ என்று நினைத்தவள், ‘இப்போதைக்கு இவனிடமே சொல்லலாம். நாம வாங்காத திட்டா?’ என்று நினைத்தவள் அவனிடமே அதனை அவனிடமே கேட்டும் விட்டாள்.

“ஓ… சரி… நான் யாரையாவது வர சொல்லுறேன்” என்றுவிட்டு நகர்ந்தான் கதிர்.

அவன் சென்ற சில நிமிடத்தில் அபிராமி வர, நிரல்யாவும் அவள் உதவியுடன் விரைவில் தயாராகி வந்தாள்.

*******

வேன் ஒன்று ஏற்பாடு செய்திருந்ததால் அனைவரும் அதிலேயே செல்வது என்று ஏற்பாடானது. மாணிக்கம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டிலேயே இருந்துவிட்டார். அவரையும் பாட்டியையும் தவிர்த்து அனைவரும் ஏற, வேன் தெற்கில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற கோவிலை நோக்கி சென்றது.

அவர்கள் அனைவரும் இரண்டு மணி நேரத்தில் கோவிலை வந்தடைய, அங்கே அனைத்தும் ஆயத்தமாக இருக்கவும், விரைவிலேயே பூசை முடிந்து ஊர் நோக்கி திரும்பினர்.

கதிருக்கும் நிரல்யாவிற்கும் தனியே கடைசியில் இடம் ஒதுக்கப்பட்டிருக்க, நிரல்யா ஜன்னலருகே அமர, அவளை அடுத்து கதிர் அமர்ந்தான். கதிரின் தங்கையும் அவள் கணவனும் முன்னே அமர்ந்திருந்தனர். அபிராமியின் கணவன் கையில் இருந்த அவள் குழந்தை அவரிடம் இருந்து திமிறி இறங்கியது. வேனில் அனைவரும் தெரிந்தவர்களாகையால், குழந்தையை இறக்கி விட்டவர் தன் மனைவியின் புறம் கவனத்தைத் திருப்பினான்.

அந்த பெண்குழந்தையோ, தளிர்நடையிட்டு தன் மாமனின் புறம் வந்து நின்றது. அவளுக்கு கதிரென்றால் மிகவும் இஷ்டம். எப்பொழுதும் மாமனின் பின்னே சுற்றிக்கொண்டிருப்பாள். கதிரின் திருமண வேலைகளால் அவனருகே இருந்தால் தொல்லை செய்வாள் எனக் கருதி அபிராமி தன்ன்னுடனேயே வைத்துக்கொண்டாள். தன் மாமனின் அருகில் நேற்றிலிருந்து வேறொருவர் எப்பொழுதும் இருக்கவே கோபம் கொண்டது அந்த பிஞ்சு. இன்றும் காலையில் இருந்து மாமனின் அருகில் தன்னை விடவில்லை என்பதாலும், கோவிலிலும், தற்போது வேனிலும் கதிர் நிரல்யாவினுடனே இருக்கவும், கோபம் வந்துவிட்டது அவளுக்கு. (குழந்தைகள் பொதுவாக தன்மேல் கவனம் வரவேண்டும் என்றே நினைப்பர். அதுவும் பிடித்தவர்கள் என்றால் சொல்லவே வேண்டாமே)

தன்னருகில் வந்து நின்ற தங்கை மகளை, “ஹே குட்டி… மாமாகிட்ட வாம்மா” என்று மடியில் தூக்கி வைத்துக்கொண்டான் கதிர்.

அவனிடம் வந்ததும் ஒரு கர்வத்துடன் நிரல்யாவைப் பார்த்தாள் வெண்பா, சிறிது கோபத்துடனும்தான். இரண்டுநாட்கள் கண்டுகொள்ளவில்லை அல்லவா? அவளுக்கு வரும் மிட்டாய்களும்கூட தரப்படவில்லை.

வெண்பாவின் மனம் கதிருக்குத் தெரிந்ததோ என்னவோ, தனது சட்டைப் பைகளில் இருந்து மிட்டாய் எடுத்துத் தந்தான். அதனை வாங்கியவளுக்கு கோபம் முழுவதும் தொலைந்துபோக, அவனைக் கண்டு புன்னகைத்தாள். இதனைப் பார்த்த நிரல்யா தானும் புன்னகைக்க, முறைப்பே பதிலாகக் கிடைத்தது.

கதிரும் பார்த்துக்கொண்டிருந்ததால், “அத்தைடா” என்று அறிமுகப்படுத்தினான். அத்தை என்ற வார்த்தையைக் கேட்டதும் சட்டென்று முகமெல்லாம் பல்லாக அவளை நோக்கியது குழந்தை. பின்பு, தன் மாமனிடம் திரும்பி, “மாமா, வா!” என்று அவன் கையை பிடித்து இழுத்தது.

“ஏன்மா?” என்று கேட்டவனிடம், “இந்த அத்தை வேண்டாம். நாம வேற அத்தை வாங்கிக்கலாம்” என்று அவனுக்கு நெஞ்சுவலியே வர வைத்தாள். (இந்த பாப்பாவே நிரல்யாவுக்கு முன்னாடி டிவர்ஸ் வாங்கி குடுத்துறும் போலவே!)

“ஏன்மா இப்படி சொல்ற?” என்று கேட்டவனிடம், “நீங்க அத்தை என்கூட நல்லா பேசுவாங்க, விளையாடுவாங்கன்னு சொன்னீங்க; இவங்க என்ன கண்டுக்கவே இல்ல. அதான், என்னோட விளையாடுற அத்தை வாங்கலாம் வாங்க” என்று அவனை கையோடு கடைக்கு அழைத்தாள். (எந்த கடைலையும் அத்தைய விக்கமாட்டாங்க, அப்படியே இருந்தாலும் உன் மாமனுக்கு இந்த அத்தை மட்டுமே போதும்னு சொல்லுவான்னு எப்படி புரியவைப்பேன்?)

இந்த பேச்சுவார்த்தையை கேட்டுக்கொண்டிருந்த நிரல்யாவின் முகத்தின் புன்னகை தவழ்ந்தது. அவள் சிரிப்புடன் தன்னிரு கைகளையும் நீட்ட, சிறிது யோசித்து பின் தாவியது குழந்தை.

நிரல்யாவினால் தன் புடவையையும் குழந்தையையும் ஒன்றாக கையாள முடியுமோ என்று எண்ணியவன், வெண்பாவை வாங்க கைநீட்ட, வேண்டாம் என்று மறுத்தாள் நிரல்யா.

“புடவை கசங்கிடும்” என்றவனிடம், “இட்ஸ் நாட் வெர்த் தேன் அ சைல்ட் (குழந்தையை விட புடவை பெரியதல்ல)” என்றவள், வெண்பாவிடம் திரும்பி பேசத் தொடங்கினாள்.

நிரல்யாவின் வார்த்தைகளைக் கேட்டவன், காதல் கடலுள் மீள முடியாத அளவுக்கு விழுந்தான், மீண்டும்.

தன்னருகே இருந்து கதைத்துக்கொண்டிருக்கும் அந்த பெரிய குழந்தையையும் சின்னகுழந்தையையும் காணக்காண திகட்டவில்லை அவனுக்கு. அந்த மழலை அவனுள் தாய்மை உணர்வை பெருகச் செய்ததென்றால், அதனை கொஞ்சிக் கொண்டிருக்கும் மனையாள் அவள் தங்கள் குழந்தையை இவ்வாறு கொஞ்சும் தருணம் விரைவில் வரவேண்டும் என்று ஏங்க வைத்தாள்.

நிரல்யாவிடம் பேசிக்கொண்டே முன்னும் பின்னும் வலமும் இடமும் என ஆடிக்கொண்டிருந்த வெண்பா ஒரு கட்டத்தில் முழுமையாக வலப்புறம் ஜன்னலை தொடுமாறு செல்ல, அவளை பிடிப்பதற்காக நிரல்யாவும் முன்னே வர, அதே சமயத்தில் கதிரும் வெண்பாவை பிடிக்க அருகே வர, எதிர்பாராமல் விழுந்தது முதல் முத்தம் நிரல்யாவின் கன்னத்தில்!
 
Last edited:

lekha_1

Writers Team
Tamil Novel Writer
அந்த நேரம் பார்த்து ரேடியோவில் இருந்து வந்த பாடல் கூட அவர்கள் இருவருக்கும் பேக்கிரவுண்ட் வைத்தாற்போல கச்சிதமாக பொருந்தியது.

அரும்பே அரும்பே என்ன கடத்தி போ கரும்பே

அலும்பே தழும்பே உள்ள கெடத்தி போ குறும்பே

அருகாமையே விறகாகுதே

உணராமலே உயிர் போகுதே

இதம் ஊறுதே ஏக்கமும் கூடுதே

அவள் தொலைவில் இருந்தாலே தன் காதலை பெரும்பாடு பட்டு அடக்குபவன், இவ்வளவு அருகில் தன்னவளைக் கண்டு கிறங்கித் தான் போனான்.

குறும்பே குறும்பே என்ன கடத்தி போ குறும்பே

அலும்பே தழும்பே உள்ள கெடத்தி போ கரும்பே

காலையில் இருந்து தன்னிடம் தோன்றும் மாற்றத்தாலும் அவனருகிலேயே இருந்ததால் வந்த ஏதோ ஓர் இனம் புரியாத என்னவென்று பிரித்தரிய முடியா உணர்விலும் பிடிபட்டிருந்த நிரல்யாவும் தன் உலகம் யாவும் நின்றுவிட, ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் அந்த இருளிலும் தெளிவாக கதிரின் கண்களில் இருந்து வழிந்த காதலில்.

பத்தியமா நின்ன வாலிபம் உன்ன பார்த்துதான் விடுதே

பத்திரமா வச்ச ஆணவம் தூளாகி தூவிடுதே

எந்த நேரம் செஞ்ச ஓவியம் நிழல் கூட கூசிடுதே

பத்துவிரல் பொட்டக்காட்டுக்குள் பூக்கோலம் பூசிடுதே

கன்னக்குழியோடதான் என்ன விதை போட்டுட்டா

எட்டுக்கரையோடதான் என்ன அலை போட்டுட்டான்

போதைய

தரும் தேவத

அந்த வாசம் காட்டிப்புட்டா

தன்னவளின் கன்னக்குழியை தேடினான் அந்த கள்வன். அவள் சிரித்தால் மட்டுமே தெரியும் அந்த குழி தற்போது தெரியுமா? அவன் தேடல் அறியாதவளோ, தன் ஆணவம் சில நாட்களாக எங்கே சென்றதென்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

நெத்திமுடி சுத்தும் பாம்பைப் போல் என்ன சீண்டி பாக்குதடி

சின்னப்புள்ள செய்யும் வீம்பைப்போல் கை தீண்டி பார்க்குதடா

குங்குமப்பூ கொட்டும் மேகமோ பஞ்சு பாகம் தூவுதடி

மன்மதத்தீ பத்தும் பானத்த உன் மோகம் ஏந்துதடா

ஜென்மம் பல தாண்டித்தான் வந்தேன் தடை போடாத

கொஞ்சி உறவாடத்தான் போறேன் வலை போடாத

பால் நிலா

இந்த ஜோடிய

வந்து வாழ கூப்பிடுதே

நிரல்யாவின் முன்னுச்சியில் வந்து விழுந்த முடிகளை அவள் காதின் பின்னால் கொண்டு சென்றவன், அவள் கன்னம் தீண்டி நின்றான். அதில் கூசி சிலிர்த்தவளோ, தன் நெஞ்சோடு அணைத்திருந்த வெண்பாவை மேலும் அணைக்க, தன்னை தடுத்து கையோடு அவள் அணைத்ததில் கைவளைவில் உணர்ந்த கதகதப்பிலும், காலையில் இருந்து விளையாடிய சோர்விலும், வெளியில் இருந்து வந்து வருடிய மாலைக் காற்றிலும் தூங்கியிருந்த குழந்தை மெல்ல சினுங்கியது..

அதில் தன்னிலைக்கு வந்த இருவரும் சட்டென்று விலகினர். நிரல்யா வெளியே திரும்பி இருளை வெறிக்க, கதிரோ, தலையை கோதி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

இருவரின் காதல் காட்சியையும் வானத்தில் இருந்து கண்டு ரசித்த அந்த வெண்ணிலவோ, மகிழ்ச்சியுடனும் அதே சமயம் சிறிது சோகத்துடனும் அதன் ஒளியை அனுப்பிக்கொண்டிருந்தது. கதிரின் இந்த சந்தோஷத்திற்கு ஆயுள் குறைவு என்று அறிந்து கொண்டதோ அந்நிலவு?

தொடரும்....


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top