என் கதை 7

Advertisement

சரண்யா

Writers Team
Tamil Novel Writer
"இனிமே நீ கவனமா இருக்கணும். கராத்தே வகுப்புக்கு போறயா? எல்லா பெண்களும் ஒரு தற்காப்பு கலைய கத்துக்கிறது அவசியம். யோசிச்சு சொல்லு. வகுப்புக்கு விசாரிக்கலாம். இப்ப கை கால் முகம் கழுவிட்டு வா. வந்து தர்பூசணிப்பழம் சாப்பிடு." என்றார் பூங்குழலியின் அம்மா.
இவளும் அதன்படியே செய்தவள் கல்லூரியில் கொடுத்திருந்த வீட்டுப்பாடத்தை செய்ய ஆரம்பித்தாள். அப்பொழுது அவளது கைப்பேசியில் சத்தம் கேட்கவே எடுத்துப் பார்த்தாள். தமிழ் தான் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
"நான் காலையில சொன்னனே மாரத்தான். கலந்துக்கிறியா?"
இவள் "சரி கலந்துக்கிறேன்" என்று பதில் அனுப்பினாள்.
"மாரத்தான் 5கிமீ தூரம் ஓடணும். அதுக்கு பயிற்சி எடுக்கணும். அதனால தினமும் காலைல நடக்க ஆரம்பி. கொஞ்ச கொஞ்சமா நடக்குற தூரத்தை அதிகப்படுத்து. நாளையிலிருத்து 1 கிமீ தூரம் நடக்க ஆரம்பி. செய்யறியா?"
"ம். நடக்கிறேன். ஆனா தனியா எப்படி நடக்கிறது. எனக்கு போர் அடிக்கும்"
"உனக்கு பிடிச்ச பாட்ட கேட்டுட்டே நட. நேரம் போறதே தெரியாது."
"ம். சரி"
"தண்ணித்தாகம் எடுத்தா குடிக்கிறதுக்கு தண்ணிப் பாட்டில் வச்சுக்க பக்கத்துல."
"ம். சரி"
"அதுக்குன்னு நடக்குறப்ப நிறைய தண்ணீ குடிக்காதே.அப்புறம் நடக்க முடியாது. தொண்டயா நனைச்சுக்க. "
"ம். சரி"
"என்ன பண்ணிட்டு இருக்க?"
"வீட்டுப்பாடம் பண்ணிட்டு இருக்கேன்"
"ம். சரி. வேற எதுவும் கேக்கணுமா?"
"இல்லை"
"ஆனா எனக்கு உன்கிட்ட சொல்ல ஒரு விஷயம் இருக்கு. இந்த மாதிரி மாரத்தான் எங்க நடந்தாலும் கலந்துக்க. அப்புறம் உனக்கே உடற்பயிற்சி மேல ஈடுபாடு வரும். புரிஞ்சதா"
"ம். புரிஞ்சது. "
"சரி நீ வீட்டுப்பாடம் படி. நான் அப்புறம் மெசேஜ் பண்றேன்"
"ம். சரி"

குறுஞ்செய்தியை பரிமாறிக்கொண்டிருந்தவள் வீட்டுப்பாடத்தை எழுதி விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கே அவளது அப்பா அமர்ந்திருக்க "அப்பா இன்னைக்கு நாள் எப்படி போச்சுங்க அப்பா?" என்று கேட்டாள் பூங்குழலி. "நல்லா போச்சும்மா. உனக்கு எப்படி இருந்தது" என்று கேட்க அன்று நடந்த வழிப்பறி சம்பவத்தை பற்றி சொன்னாள். அதை கேட்டுக்கொண்டவர் "நீ இனிமே தங்கச்சங்கிலி உபயோகிக்காதம்மா. அப்புறம் கராத்தே கத்துக்க ஆரம்பி. பெண்கள் தற்காப்பு கலை ஒன்னு கத்து வெச்சுக்கணும் கண்ணம்மா. நான் விசாரிக்கிறேன் கராத்தே வகுப்புக்கு. சரியா" என்றார்.
"சரிங்கப்பா" என்றாள்.
பிறகு "அப்பா தேர்தல் அறிவிச்சுட்டாங்களா? நம்ம தொகுதில யார் நிற்கிறாங்க" என்று கேட்டாள். அப்படியே அரசியல் பேச ஆரம்பித்தவர்கள் அவளது அம்மா சாப்பிட அழைக்கவும் இருவரும் எழுந்து சென்றனர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top