என் கதை 3

Advertisement

சரண்யா

Writers Team
Tamil Novel Writer
சமையல் அறைக்குச் சென்றவள் இந்த நிமிடத்திலிருந்தே அம்மாவுக்கு உதவ எண்ணி "அம்மா உங்களுக்கு உதவி எதாவது வேணுமா ? " என்று கேட்டாள். இவளின் அன்னை இவளை அதிசயமாக பார்த்தவர் " என் பொண்ணு எனக்கு உதவி செய்யணும்னு சொல்றா. இன்னைக்கு மழை கொட்டோ கொட்டுனு கொட்ட போகுது போ. " எனக் கூறியவர் "சரி ஆட்டாங்கல்லில் இத எடுத்துட்டு போய் அரை" என சொல்லவும் பூங்குழலி அறையை சுற்றிப் பார்த்தாள். அவளின் அம்மா "எதுக்குடி இப்படி சுத்திப் பார்க்கிற?" எனக் கேட்கவும் "இல்லம்மா ஆட்டாங்கல்னு என்னமோ சொன்னீங்களே அத தேடுறேன்" எனவும் தேன்மொழிக்கு சிரிப்புத் தாங்கவில்லை. "இதுக்குப் பேர் தான் ஆட்டாங்கல். இதுவே உனக்கு இப்ப தான் தெரியுது. இதுல சட்னிக்கு எப்படி ஆட்டனும்னு தெரியுமா. சரி வா சொல்லித்தர்றேன்." என அழைத்தார். "அம்மா எனக்கு ஒரு சந்தேகம். மிக்ஸில அரைக்காம ஏன் ஆட்டாங்கல் உபயோகிக்கிறீங்க?" "ஆட்டாங்கல்லுல தேங்காய் சட்னி அரைச்சா சுவை அருமையா இருக்கும். அப்பாவும் பொண்ணும் சட்னி நல்லாருக்குன்னு சட்னிக்காகவே இன்னொரு தோசை கேட்பீங்கள்ள. அந்த சுவையோட இரகசியம் இது தான்." என்றவர் பூங்குழலிக்கு எப்படி ஆட்டாங்கல்லை உபயோகிப்பது என சொல்லிக்கொடுத்தார். பூங்குழலி சிறிது நேரம் ஆட்டியவள் "அம்மா! கை வலிக்குது மா" என மூச்சு வாங்கிக்கொண்டே கூறினாள். "முதல் தடவையா ஆட்டுற இல்ல அதுனால தான். போக போக பழகிடும். இன்னும் கொஞ்ச நேரம் தான். ஆட்டு" என்றார். ஆட்டி முடித்தவள் "ஹேய்! நான் சட்னி செஞ்சுட்டேன்!" என அவளது அணைத்தவள் தந்தையிடம் சென்று இந்த விஷயத்தைப் பகிர்ந்தாள். "சூப்பர் கண்ணம்மா ! " என வாழ்த்தியவரிடம் "செய்தி பார்த்துட்டு இருக்கீங்களாப்பா. இன்னைக்கு எதும் முக்கியமான செய்தி இருக்காங்கப்பா" என்று கேட்டாள். "ஆமாம்மா. பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன் வீட்டுப்பாடம் தப்பா பண்ணிட்டான்னு ஒரு ஆசிரியை அந்த சிறுவனுக்கு சூடு வச்சிட்டாங்க." "அச்சச்சோ! ஒரு சின்ன பையன தண்டிக்க எப்படி தான் இவங்களுக்கு மனசு வருதோ. அந்த சிறுவன் கிட்ட அவன் செஞ்ச தப்ப சுட்டிக்காட்டியிருந்த அவன் திருத்திக்குறான். இதுக்குப் போய் இவ்வளவு பெரிய தண்டனையா? அன்பா சொல்லி திருத்துறது தானேங்கப்பா சரி. இந்த ஆசிரியை கிட்ட சகிப்புத்தன்மையே இல்லைங்கப்பா" என்றாள். "இன்னொரு செய்தி பாரும்மா சாக்கடை சுத்தம் செய்யப் போய் ஒருத்தர் இறந்துருக்கார். மனித கழிவுகளை மனிதரே சுத்தம் செய்யிறதெல்லாம் நம்ம நாட்டுல மட்டும் தான்மா இன்னமும் நடக்குது. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்து இருக்கு ஆனா இதுக்கு ஒரு இயந்திரம் கண்டுபிடிக்க மாட்டேன்கிறாங்க" "ஆமாம்ங்கப்பா. இதுக்கு ஒரு இயந்திரம் கண்டுப்பிடிக்கணும் முதல்ல." அப்பாவிடம் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்தவள் கைப்பேசியை எடுத்து வந்து சட்னியை அழகான கிண்ணத்தில் வைத்து ஃபோட்டோ எடுத்தவள் வாட்சப்பில் #foodphotography என்ற தலைப்பில் ஸ்டேடஸ் வைத்தாள். அப்படியே அம்மாவுடன் ஒரு செல்பி எடுத்தவள் மற்றவர்கள் வைத்திருத்திருக்கும் வாட்ஸப் ஸ்டேடஸை பார்க்க ஆரம்பித்தாள். தமிழ் " கத்திரிக்காய் கத்திரிக்காய் குண்டு கத்திரிக்காய்.. கன்னம் இரண்டும் கிள்ளச் சொல்லும் காதல் பேரிக்காய்...." என்ற பாடலை ஸ்டேடஸாக வைத்திருந்தான். அதைப் பார்த்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது. அவனை திட்டலாம் என்று நினைத்தவள் 'நான் ஒன்னும் உன்னை கேலி பண்ண அந்த ஸடேடஸ் வைக்கலியே. உனக்கு அப்படி தோணினால் நான் என்ன செய்வது' என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தவள் அவனுக்கு பதிலளிக்காமல் அமைதியாக யோசித்தாள். "எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று. ஆனால் இத்தனை ஆண்டுகளாக 'junk food' சாப்பிட்டதால் கூடிய எடையை உடனே குறைக்க முடியாது. ஆனால் மெதுவாக என்றாலும் நாம் நம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவேடுத்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top