என் உறவென வந்தவனே - 4

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii... Frds&SIS's en uravena vandhavane 4 epi pottuvitten.... Sry for the late... Comments kodukka marakadhinga... Happy Reading...
:):):):)

அத்தியாயம் - 4

வாசமில்லாத மலராக இருந்த என் மேல்...
மல்லிகை பூவாக விழுந்தாய்....
நீ என்னைவிட்டு சென்றாலும்.... நீ விட்டுசென்ற மணம்....
என்றும் என்மேல் வீசும்....

தனுவின் முன் வந்து நின்ற ஜான் "இது உன் வேலதான..." என்று இருபுருவங்களையும் உயர்த்திகேட்க... எதுவும் சொல்லாமல் விலகி சென்றவளை கையை பிடித்து இழுத்து சுவற்றில் சாய்த்தவன்.. "ம்ம்ம்.. இங்க பாரு நீ என்ன பன்னாலும் நான் தான் உன் ஹப்பி... புரிஞ்சுதா..." என்று தலையாட்டயவனிடம்... "ம்ம்ம்.. புரியல.." என்று அவன் கையை தட்டிவிட்டு சென்றாள் தனு... அவள் போகும் அழகை ரசித்துக்கொண்டே ரவியிடம் சென்றான் ஜான்...

ஜான் "டேய்... மச்சான் உன் தங்கச்சி பன்ன வேலைக்கு.. இனி காஃபியே குடிக்கமாட்டேண்டா..." என்று சலித்தவனிடம்... "மச்சான்.. இப்ப இதெல்லாம் சொல்லத்தோனும்.. கல்யாணமான பிறகு எல்லாம் மாறிடும்... சரி நான் குளிக்க பம்பு செட் போறேன் வர்றியா இல்லையா.." என்று ரவி கேட்கவும் "வர்றேண்டா... வா.. போகலாம்..." என்று ஜானும் ரவியும் கிளம்பினர்...

"இவன் என்ன உண்மையாக தான் சொல்கிறான... ஹப்பியாமே.. ம்ம்ம்.. இனி இவன் இருக்குற பக்கமே போகக்கூடாது.." என்று தனக்குத் தானே பேசிக்கொண்டே அறைக்கு வந்த தனுவைக் கண்ட பானு... "ம்ம்ம்.. இவளுக்கு என்னாச்சினே.. தெரியலயே.. ஜான் அண்ணா வேற இவளோட டீடெய்ல்ஸ்லாம் கேட்டாரு... ம்ம்ம்.. நம்ம கல்யாணம் முடியறதுக்குள்ள இங்க ஒரு காதல் போராட்டம் நடக்கும்போல.. சரி.. என் ப்ரெண்டுக்கு நல்ல மாப்பிளயா கிடச்சா சந்தோஷம்தான்..." என நினைத்துக்கொண்டாள்....

கொஞ்ச நேரம் கழித்து தனுவை கூப்பிட வந்த பானு அவளை அறையில் காணாமல் தேட... "ம்ம்ம்.. இவ எங்க போய்ட்டா..." என்று சொல்லிக்கொண்டே ஜன்னல் வழியே பார்த்தவள் அங்கே தோட்டத்தில் சிவப்பு நிற ரோஜாக்கள் நிறைந்திருக்க... இப்போதுதான் தண்ணீர் ஊற்றியதால் ரோஜாக்களின் மேல் உள்ள நீர்துளிகள் காலை வெயிலின் தாக்கத்தால் ஜொலிக்க.. அதன் அழகை ரசித்தபடி நின்றுக்கொண்டிருந்தாள் தனு...

"ஒஒ.. அங்க இருக்காள.. சரி நம்மளும் அங்கப்போவோம்... கொஞ்ச நாளைக்கு அவக்கூட பேசமுடியுமா முடியாதான்னு தெரியல..." என்று வருந்திக்கொண்டே சென்றாள் பானு...

தனு... "இங்க என்னடி பன்ற.." என்று கேட்க... "ம்ம்ம்... சைட் அடிச்சிட்டுருக்கேன்..." என்று தனு சொல்லவும்... உடனே அந்த இடத்தை சுற்றிப்பார்த்த பானு... "ம்ம்ம்.. இங்க ஜான் அண்ணாக்கூட இல்லையே.." என்று முனுமுனுத்துக்கொண்டே "யாரடி சைட் அடிக்கிற... அதுவும் எனக்குத் தெரியாம..." என்று கேட்க... அவளை முறைத்த தனு "ஏய்... உன்ன... கல்யாணமாக போகுதுடி உனக்கு... வாய கொஞ்சம் கன்ட்ரோல் பன்னு... இங்க பாரு எவ்ளோ அழகா இருக்கு இந்த ரோஸ்..." என்று சொல்ல... "அது சரி... ஒரு ரோசே இன்னொரு ரோஸ சைட் அடிக்குதா..." என்று பானு சொல்ல... "ஹி...ஹி.. சிரிப்பு வரல..."என்று சொன்னாள் தனு... "சரி.. வாடி உங்கிட்ட கொஞ்சம் பேசனும். அந்த பென்ச்ல உட்காரலாம்..." என்று சொல்ல பானு சொல்லவும் இருவரும் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தனர்...

"சொல்லுடி... என்ன விஷயம்..."என்று அவள் கேட்க... "சும்மாதான்டி.. இதுக்கப்புறம் உன்கிட்ட நேர்ல பேச ஒரு மாசமாகும்... ம்ம்ம்.. அப்புறம் நான் இல்லன்னு லன்ச் அவர்ல சாப்டாம இருக்காத... அந்த மோனிஷா மிஸ்கிட்ட சண்டைக்கு போகாத... ஓகே வா..." என்று சொன்னவளை கண்டு சிரித்துக்கொண்டாலும் உள்ளுக்குள் வருந்தினாள் தனு... பிறகு இருவரும் ஏதோப் பேசிக்கொண்டிருக்க... ஜானும் ரவியும் குளித்துவிட்டு அவ்வழியாக வர... பானு ரவியை பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.. பின்ன அவள் அத்தைக்கு யார் பதில் சொல்வது...

பானு சென்றவுடன் தனு மீண்டும் ரோஜாக்களை ரசிக்கத் தொடங்கிவிட்டாள்... இவளை பார்த்துவிட்ட ஜான் "டேய்.. மச்சான் நீ போ.. நான் வந்தற்றேன்..." என்று சொல்லிக்கொண்டே தனுவை பார்க்க... "டேய்... என் கல்யாணம் முடியறவரைக்கும்.. கொஞ்சம் பொறுமையா இருடா... உன் ப்ரெண்ட் பாவம்ல்ல..." என்று ரவி கேட்க... "அப்போ நான் பாவம் இல்லையா.. போடா... நானே எப்படா.. இவள கல்யாணம் பன்றதுன்னு திங்க் பன்னிகிட்டு இருக்கேன்..." என்று சொல்லிக்கொண்டே அவளிடம் சென்றான் ஜான்... "ம்ம்ம்... இந்த காதல் வந்தாலே நல்லவனா இருக்குரவன்கூட கொஞ்சம் நல்லகெட்டவனா மாறிடறான்..." என்று தன் நண்பனை திட்டிக்கொண்டே சென்றான் ரவி...

யாரோ தன் அருகில் வருவதுப்போல் இருக்க... திரும்பிப்பார்த்த தனு "அய்யோ... இவனா..." என்று மனதில் அதிர... அவளின் முகபாவனையை கண்டு சிரித்தவன் "என்ன.. பயந்திட்டியா... ம்ம்ம்.. சாரி..." என்று சொல்ல... "என்ன இவன் சாரி எல்லாம் கேட்க்கறான்... அவ்ளோ நல்லவனாடா நீ..." என்று மனதில் மட்டுமே நினைத்தாள்... அவள் அங்கிருந்து நகரப்போக... "தனுமா.. ஒரு நிமிஷம்..." என்று அவன் சொல்ல... அவன் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தால்கூட நின்றிருக்கமாட்டாள்... ஆனால் அவனின் "தனுமா..." என்ற அழைப்பு ஏதோ செய்ய.. அப்படியே நின்றாள்....

"இங்கப்பாரு... ஏற்கனவே சொன்னது தான்... நான் என்னைக்கு உன்ன ஊட்டிலப் பார்த்தனோ அன்றையிலிருந்து நீ மட்டும் தான்... என்னோட வைப்னு முடிவேப் பன்னிட்டேன்... இத்தன நாளா உன் போட்டோவோட வாழ்ந்துட்டேன்... ஆனா உன்ன நேர்ல... அதுவும் பக்கத்துலேயே இருக்கும்போது... என்னால... முடியவே முடியாது.. ம்ம்ம்.. சரி எப்போ கல்யாணம் பன்னிக்கலாம் தனுமா..." என்று அவன் கேட்க... "போதும்.. நிறுத்துங்க.. நான் எப்போ உங்களுக்கு ஓகே சொன்னேன்.. அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போய்ட்டீங்க.. முதல்ல உங்ககிட்ட நின்னுப்பேசறதே தப்பு..." என்று சொல்லிவிட்டு திரும்பியவள்... கீழே தண்ணீர் இருந்ததைப் பார்க்காமல் அதில் கால் வைத்துவிட... கீழே விழப்போக... "தனுமா..." என்று அவனும் அவளின் கையைப்பிடித்து இழுக்க.. இழுத்தவேகத்தில் இருவரும் சேர்ந்தே கீழே விழுந்தனர்...

இருவரும் ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க... ஜான் "தனுமா... நின்னு பேசமாட்டேன்னு இதுக்குதான் சொன்னியா.." என்று சிரித்துக்கொண்டே கேட்க... அப்போதுதான் நினைவு வந்தவளாக... "ச்ச... இவ்வளவு நேரமா இவன் மேல விழுந்துகிடக்கோமே..." தன்னைத்தானே கடிந்துக்கொண்டவள்... வேகமாக எழுந்தவள்... அவனை முறைத்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள்... ஜானும் இந்நிகழ்வின் தாக்குதலில் மகிழ்ச்சியுடன் அவ்விடம்விட்டு அகன்றான்...

"அத்த.. அத்த..." என்று கத்திக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் ஹேமா... பேப்பர் படித்துக்கொண்டிருந்த ராஜ் நிமிர்ந்து பார்க்க... "வாம்மா.. ஹேமா... எப்படி இருக்க... சரோ வரல..." என்று கேட்க... "ஏன் மாமா... அப்போ நான் வந்தது உங்களுக்கு பிடிக்கலையா.." என்று ஒரு மாதிரியாக கேட்க... "அச்சோ அப்படிலாம்.. இல்லம்மா சரோவ.. பார்த்து ரொம்ப நாளாகுது.. அதான் கேட்டேன்..." என்று அவர் சொல்ல... "இல்ல... மாமா... நான் இங்க என் ப்ரெண்ட் வீட்டிற்கு வந்தேன்... அதான் அப்படியே... இங்க.. உங்க எல்லாரையும் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்..." என்று சொல்ல... "வா..வா... ஹேமா.. எப்படி இருக்கடா..." என்றபடி வந்தார் சகுந்தலா..

"ம்ம்ம்... நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க..." என்று அவள் கேட்க... "ம்ம்ம்... எனக்கென்னமா குறைச்சல்... நல்லா ஜம்முனு இருக்கேன்..." என்று இருவரும் பேசிக்கொண்டிருக்க... ராஜ் மனதில் "இந்த பொண்ணோட குணத்தையே புரிஞ்சுக்க முடியலையே... ம்ம்ம்... சரி நமக்கெதுக்கு இந்த வேல... நம்ம வேலய பார்ப்போம்..." என்று நினைத்துக்கொண்டு நாளிதழில் முழ்கினார்...

"அத்த... சொல்ல மறந்துட்டேன்.. அண்ணி அவங்களோட பிங்க் சாரிய.. போனதடவ வந்தப்போ.. இங்கயே வச்சிட்டாங்களாம்... அத அப்படியே வாங்கிட்டு வரசோன்னாங்க..." என்று சொல்ல... "சரி... இரும்மா மேல ரூம்ல இருக்கு எடுத்துட்டு வரேன்..." என்று அவர் சொல்ல... "பரவால்ல அத்த... உக்காருங்க நான் போய் எடுத்துட்டு வரேன்..." என்று சொல்லிவிட்டு படி ஏறிசென்றாள்...

தன்னறைக்கு வந்த தனு கதவை சாற்றிவிட்டு அழ ஆரம்பித்தாள்... "உனக்கு ஏண்டா... அவ்ளோ பிடிச்சது என்ன... அதுவும் நீ தனுமான்னு சொன்னதும் எனக்கு என்னமோ ஆகுது... இதுவரைக்கும் யாரும் என்ன இவ்ளோ அன்பா கூப்பிட்டது இல்ல... ஆனா உன்னோட அந்த அழைப்பு... நான் உனக்கு தகுதியானவள்தானா... உங்க வீட்ல ஒரு அநாதையான என்னை ஏத்துப்பாங்களா..." என்று ஏதோ ஏதோ நினைத்து அழுதவள்... ஒரு நிமிடம் தன் எண்ணம் எங்கோ போவதை நினைத்து அதிர்ச்சியானவள்... "அப்..அப்போ நா.. அவன காதலிக்கிறேனா???"

- தொடரும்....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேமா எதுக்கு ஜானோட ரூமுக்கு
போறாள்?
என்ன எடுக்கப் போறாள், காயு டியர்?
இன்னும் பானு and ரவி கல்யாணமே
முடியலை
இதிலே இந்த ஜான், தனுஸ்ரீ
இவங்களோட கல்யாணம் எப்போ
நடக்குமோ?
கல்யாணம் நடந்து, பார்க்குறதையெல்லாம்
தனக்கு வேணுமுன்னு ஆசைப்படுற
ஹேமாவிடம் தனு என்ன பாடுபடப்
போகிறாளோ?
ஜான்-ங்கிற பொம்மையை இப்பொழுது
விரும்பும் ஹேமாவினால், ஜானின்
அம்மாவினால் தனு என்ன பாடுபடப்
போகிறாளோ?
தெரியலையே, காயு டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top