என் உறவென வந்தவனே-3

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii... Frds &SIS's ... Sorry for late.. Because i have lot of office works... En uravena vandhavane 3 epi pottachu padithuvittu comments koduka marakadhinga... Happy reading... 100 smilies....



அத்தியாயம் - 3

உன்னை பார்த்த நொடி...
காதல் என்ற கடலில்...
விழுந்தேனடி உன்னில்...
அதிலிருந்து எழ முயற்ச்சிக்கவில்லை...
இன்னும் அதில் முழ்க வேண்டும்...
என்றும் உன்னில் நான்...


சாமியை வணங்கிவிட்டு ரவியும் பானுவும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க... தனு குலக்கரையை சுற்றி பார்த்துக்கொண்டிருக்க... ஜான் அவள் பின்னாடி..சுற்றி பார்ப்பதைப்போல் சுற்றிக்கொண்டிருந்தான்...

தனு ஓர் இடத்தை அழுத்தமாக பார்க்க... ஜானும் அங்கே பார்த்தான்.. தனு வயதுடைய ஓர் பெண் தன் தாயுடன் செல்லம் கொஞ்சிக்கொண்டிருக்க... அதை பார்த்து...கண் கலங்க திரும்பியவளின் முன் வந்து நின்றான் ஜான்... "என்ன..." என்று கண்களை சரிசெய்துக்கொண்டே தனு கேட்க... "ஏன்.. அழுத..." என்று ஜான் கேட்க... "அத உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல.. ஓகே..." என்று சொல்லிவிட்டு நடந்தவளின் கைப்பிடித்து நிறுத்தினான்... "ஹலோ... கையவிடு.. என்ன வேணும் உங்களுக்கு..." என்று கையை உதறினாள்.. "ஏன் அழுதனு தெரியனும்..." என்று அவன் சொல்ல.. "அதான் சொல்லிட்டேன்ல... உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியம் இல்லனு..." என்று தனு கோவமாக பேச... "சொல்ல வேண்டிய அவசியம் இருக்கு..." என்று அவன் அழுத்தமாக சொல்ல... "என்ன சொல்ற... எதையும் முழுசா சொல்லமாட்டீங்களா.. எல்லாத்தையும் அரகுறையா சொல்லவேண்டியது..." என்று என்று அவள் கேட்க.. "நான் உன்ன காதலிக்கிறேன்...ஐ லவ் யூ... போதுமா.. இதுக்குமேல யாரும் விளங்குற மாதிரி சொல்லமாட்டாங்க..." என்று அவன் சொன்னதும் அதிர்ச்சியானவள்.. பின் சுதாரித்து "பார்த்து முழுசா ஒருநாள்கூட ஆகல.. அதுக்குள்ள லவ்.. நீங்க நினைக்கற மாதிரி பொண்ணு நான் இல்ல..." என்று சொல்லிவிட்டு நடக்க... "உன்ன பார்த்து ரெண்டு வருஷம் ஆகுது... ஊட்டி ட்ரிப்... யூ ரிமம்பர்.." என்று அவன் கத்திசொல்ல.. அவன் சொல்வது காதில் விழுந்தாலும்.. ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாள்...

அனைவரும் வீட்டிற்கு புறப்பட.. காரில் பானு தன் தோழியின் முகத்தை பார்த்து "ஏதோ.. சரியில்லை.." என எண்ணிக்கொண்டு அவளிடம் என்னவென்று கேட்க... "ம்ம்ம்.. நத்திங்டி..லேசா தலவலிக்கிற மாதிரி இருக்கு.. அதான்.." என்று சமாளித்து வெளிபுறம் வேடிக்கைப்பார்க்க ஆரம்பித்தாள்... ஜானின் புறம் திரும்பக்கூட இல்லை... ஜானும் அவளின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்...

வீட்டை அடைந்ததும் எதுவும் சொல்லாமல் இறங்கி அறைக்கு சென்றுவிட்டாள் தனு.. பானுவும் ரவியிடம் சொல்லிவிட்டு தனுவின் பின்னாடி சென்றாள்... "என்னடா ஆச்சு.. தங்கச்சி முகமே சரியில்ல.." என்று ரவி கேட்க.. "லவ் பன்றேன்னு சொல்லிட்டேன்.. பட் அவகிட்ட இருந்து பதில் வரல... ம்ம்ம்.. பார்ப்போம்.. ஹான்.. எனக்கு ஒரு ஹெல்ப் பன்னுடா தங்கச்சிகிட்டக் கேட்டு தனுவோட டீடெய்ல்ஸ் கொஞ்சம் வாங்கிதாடா..." என்று ஜான் கேட்க... "ம்ம்ம்.. கேட்டு பார்க்கறேன்டா..." என்று சொல்லிவிட்டு... இருவரும் உள்ளே சென்றனர்...

தன் அறையின் படுக்கையில்.. தன் அண்ணனின் கல்யாண ஆல்பத்தை சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தாள் ஹேமா... கதவு திறந்திருக்கவும் சரோ வேகமாக உள்ளே வந்து "ஹேமா... அத்த சாப்ட கூப்டாங்க.. சீக்கிரம் வா..." என்று சொல்ல.. ஹேமா "அண்ணி.. உங்ககிட்ட எத்தனதடவ சொல்றது.. கதவ தட்டிட்டு உள்ளவாங்கன்னு.. ம்ம்ம்.. அம்மாகிட்ட வரேன்னு சொல்லுங்க..." என்று சொல்லிவிட்டு பாத்ரூமில் புகுந்துகொண்டாள்...

சரோவின் கணவன் ப்ரகாஷின் தங்கைதான் ஹேமா.. மிகவும் பிடிவாதம்.. ஒன்றின் மேல் ஆசைபட்டாள் அதை அடைந்தே ஆகவேண்டும் என்பது அவளின் குணம்... இவளின் இப்போதைய ஆசை சரோவின் அண்ணன் ஜானின் மீது... காதல் என்று சொல்லமுடியாது..

இரவு உணவு உண்பதற்காக கீழே வந்த தனு அங்கே ஜானை பார்த்துவிட்டு அப்படியே மேலே செல்லப்போக.. அதற்குள் ரவியின் அம்மா அவளை பார்த்து "வாம்மா.. வந்து உட்காரு... சாப்டலாம்..." என்று அழைக்க... வேறு வழியில்லாமல் சென்று சப்பாட்டுமேஜையின் முன் அமர்ந்தாள்... "என்ன... இவ இப்படி பன்றா.. நான் என்ன சொல்லிட்டேன்னு என் முகத்தக்கூட பார்க்பமாட்றா..." என்று மனதில் நினைத்துக்கொண்டே அவளை பார்க்க... அவளோ அவன் ஒருவன் இங்கே இல்லை என்பதுப்போல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்... திடீரென்று அவளுக்கு விக்கல்வர... ரவி அம்மா அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து "உன்ன பிடிச்சவங்க யாராவது உன்ன நினைச்சிருப்பாங்க..." என்று அவர் சொன்னதுதான் தாமதம் உடனே ஜானை திரும்பி பார்க்க.. அவன் சிரிக்கவும்.. கோவமாக பார்த்தவள்.. மனதில் "நீதான.. நினைச்ச.." என்று அவள் கேட்க... ஜானும் மனதில் "ஆமா.. நான் தான் நினைச்சேன்.." என்று சொல்ல.. அவள் பதில் நினைப்பதற்குள் விக்கல் வந்துவிட.. ஜான் யாருக்கும் தெரியாமல் "ஐ லவ் யூ.." என்று வாயசைக்க.. மீண்டும் அவனை முறைத்தவளின் விக்கல் நின்றது... அனைவரும் சாப்பிட்டு அவரவர் அறைக்கு சென்றனர்...

படுக்கையில் படுத்திருந்த தனு "ராஸ்கல்... யாராவது பார்த்திருந்தா என்னாகறது.. என்ன நினைச்சிருப்பாங்க... ம்ம்ம்.. நாளைக்கு காலையில உன்ன என்ன பன்றேன்னு பாரு..." என்று அவனை பற்றி நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டாள்... இங்கே ஜான் அவளின் விவரத்தை ரவி பானுவின் மூலம் தெரிந்துக்கொண்டவன்... அவளிடம் விரைவில் சம்மதம் வாங்கி.. கல்யாணம் செய்து தன்னுடன் அழைத்துக்கொள்ள வேண்டும்... என்று அவளை பற்றி எண்ணிக்கொண்டே.. தூங்கினான்...

காலையில் கண்விழித்த தனு ப்ரெஷ்ஷாகி கீழே வரவும்.. ஜானும் ரவியும் உடற்பயிற்சியை முடித்துவிட்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது... அவளை பார்த்தும் பார்க்காததுபோல் ஹாலில் உள்ள ஷோபாவில் அமர்ந்தான்.. அவன் தன்னை பார்க்காமல் சென்றது ஏனென்றே தெரியாமல் தனுவிற்கு கோவமாக வர... வேகமாக சமயலறைக்கு சென்றாள்... அங்கே பானு அனைவருக்கும் காஃபி போட்டுக்கொண்டிருக்க... தனு "குட்மார்னிங்... என்னடி இவ்ளோ கப் காஃபி..." என்று கேட்க... "ம்ம்ம்.. வேலப்பார்க்கரவங்களுக்கு...." என்று சொல்லிவிட்டு "ஏய்.. ஒரு ஹெல்ப் பன்னுடி.. இந்த ரெண்டு கப் காஃபிய ரவிகிட்டயும் ஜான் அண்ணாகிட்டயும் கொடுத்துடு... ஏன்னா தாலிகட்றப்பதான் ரவிய பார்க்கனும்னு அத்த ஆர்டர் போட்டுருக்காங்க.. ப்ளீஸ்.." என்று பானு கேட்க... "ம்ம்ம்.. ஓகே டி..." என்று நல்லபிள்ளைப்போல் தலையாட்டினாள் தனு...

பானு சென்றதும்... "ம்ம்ம்.. ஜான்.. இப்ப உன்ன என்னப் பன்றேன்னுப்பாரு.." என்று எண்ணியவள்... உப்பு டப்பாவை எடுக்கப்போனவள்... "இது பழைய ஐடியா... ம்ம்ம் இதுதான் கரக்ட்..." என்று மிளகாய்த்தூளை எடுத்தவள்.. ஒரு காஃபியில் கலந்து... அதை எடுத்துக்கொண்டு ஹாலிற்குள் நுழைந்தவள்... ரவியின் முன்னாடி காஃபியை நீட்டி.. "இந்தாங்கன்னா காஃபி.." என்று கொடுக்க... "தேங்ஸ்மா.." என்று எடுத்து டேபிளின் மேல் வைத்தான்... அடுத்து ஜானிடம் நீட்ட... அவன் கண்டுகொள்ளாமல் பேப்பர் படிக்க... "இவனுக்கு இருக்க திமிருக்கு.. நல்லா வாயடறப்பொண்ணதான் கிடைப்பா..." என்று மனதில் நினைத்துக்கொண்டு "காஃபி..." என்று சொல்ல... "ம்ம்ம்.. தேங்ஸ்.." என்று சொல்லி அவனும் எடுத்து டேபிளின் மேல் வைத்தான்...

சமயலறை சென்று எட்டிப்பார்த்தவள்... "ச்ச்ச.. கீழவச்சிட்டானே.. சரி எப்படியா இருந்தாலும் குடிப்பான்ல... வெயிட் பன்னிப்பார்போம்..." என்று அடிக்கடி எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தாள் தனு...

ஜான் காஃபியை எடுத்துக்குடிக்கப்போக அதன் நிறத்தைக்கண்டவன் "என்ன.. காஃபி ரொம்ப திக்கா இருக்கு.. காஃபிதூள் நிறைய போட்டாங்களோ..." என்று யோசித்தவன்... ரவியின் காஃபியை பார்க்க... "ம்ம்ம்... இது நார்மலா இருக்கே..." என்று சமயலறையை பார்த்தவன் தனுவைப் பார்ததுவிட்டான்... அவனுக்கு புரிந்துவிட்டது "இவ... ஏதோப்பன்னிருக்கா.. ம்ம்ம்.." என்று யோசித்தவன் ரவியின் காஃபியை எடுத்துகொண்டு மிளகாய்தூள் காஃபியை அவனிடத்தில் வைத்துவிட்டு... குடிக்க ஆரம்பித்தான்... மறுபடியும் எட்டிப்பார்த்தவள் அவன் குடிப்பதைக்கண்டு சந்தோஷப்பட்டவள் "என்னடா... இது அந்ந காஃபியையும் இப்படி குடிக்கிறான்.. இன்னும் எந்த சத்தமும் வரல..." என்று யோசிக்க... யாரோ "ஆஆஆ..." என்று கத்த.. "ம்ம்ம்.. சவுண்ட் வந்துடுச்சி.." என்று எட்டிப்பார்த்தவள் அதிர்ந்தாள்... ஏனென்றால் அங்கே கத்திக்கொண்டிருந்தது ரவி... அனைவரும் வந்து பார்க்க... ரவியின் அம்மா "என்னடா... ஏன் இப்படி கத்தற..." என்று கேட்க... "யாரும்மா காஃபி போட்டது..." என்று கேட்டவனின் காதில் "டேய்... மச்சான் அதுவந்து... தனுதாண்டா இந்த வேலய எனக்காகப்பன்னா... நான் தாண்டா மாத்திவச்சேன்..." என்று ஜான் சொல்ல... அவனை கொலைவெறியோடு பார்த்தவன்... "டேய்.. அத சொல்ல வேண்டயதுதானேடா.. நான் குடிச்சிருக்கமாட்டேன்ல..." என்று ரவி கேட்க.. "சாரிடா..." என்று அசடுவழிந்தான் ஜான்... ரவியின் அம்மா "பானுதான் காஃபி போட்டா.." என்று சொல்ல... "அதுவந்தும்மா.. ம்ம்ம்.. சூடா எடுத்து குடிச்சிட்டேன்.. அதான்மா..." என்று சொன்னவனை.. முறைத்தவர் "கழுத வயசாகுது...இப்படிதான் கத்துவியாடா.." என்று திட்டிவிட்டு சென்றார்...

தனு "ஹப்பா... நல்லவேல நம்மள மாட்டிவிடல அண்ணா... போய் சாரி கேட்கணும்... ம்ம்ம்.. இந்த ஜான் தப்பிச்சிட்டானே..." என்று சமயலறையைவிட்டு வெளியே செல்ல திரும்ப அவளின் முன் வந்து நின்றான் ஜான்...

- தொடரும்....
 

Saroja

Well-Known Member
என்னம்மா இது இப்படி நடக்கிறது
காலையில் ஒரு காபி குடிக்க இந்த அக்கபோறு
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ?
வில்லி ஹேமா வந்துட்டாளா?
சரோவை பகடைக்காயாக
வைத்து ஜானை கல்யாணம்
செய்யலாம்-னு நினைத்த
ஹேமாவின் ஆசையில் மண் விழுந்ததா, காயத்ரி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top