என் உறவென வந்தவனே-1

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii... Frds & SIS's .... En uravena vandhavane mudhal epi pottachu... Padithuvittu comments kodukka marakadhinga... Happy Reading...:):):)



அத்தியாயம் - 1

உன்னை கண்டேன்...
உன்னிடம் சரணடைந்தேன்...
உன்னால் உறவுகளை உணர்ந்தேன்...
இம்மூன்றையும் உன்...
ஓர் உறவினால் மட்டுமே...
காதல்...

சிலுசிலுவென சாரல் அடிக்க... ஜன்னலின் வழியே அச்சாரலில் தன் முகத்தை காட்டி நனைத்து ரசித்துக்கொண்டிருந்தாள் தனுஶ்ரீ... அவளுக்கு மழை என்றால் பிடிக்கும்.. அதைவிட மழையில் நனைவது மிகவும் பிடிக்கும்... அவளின் எண்ணம் முழுதும் வருங்காலத்தை நினைத்தே இருந்தது... இவளின் பத்து வயதில் பெற்றோர்கள் இறந்துவிட... உறவினர்களால் ஒதுக்கப்பட்டு.. ஒரு நல்லவரின் உதவியோடு ஆசிரமத்தில் சேர்ந்து படித்தாள்.. இன்று ஒரு புகழ்பெற்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாள்... ஆனால் அவளின் லட்சியம் ஒரு அழகான கூட்டுக்குடும்பத்தில் மருமகளாக வாழவேண்டும் என்பதுதான்...

இப்படியே யோசித்துக்கொண்டிருந்தவளின் மொபைல் ஒலிக்கவும் எடுத்து பார்த்தவள் பானு என்று இருக்கவும் சிரித்துக்கொண்டே அட்டண்ட் செய்தாள்... "ஏய்.. தனு எப்ப கிளம்புற..." என்று பானு கேட்க.. "இதையே எத்தன தடவ கேட்படி.. நைட் எய்ட்டோ க்ளாக் ட்ரெயின்.. இப்போ டைம் என்ன நாலுதான் ஆகுது..." என்று தனு சொல்ல... "ம்ம்ம்.. ஓகே.. மழன்னு வராம இருக்காதடி... நீ வரலனா நோ மேரேஜ்.." என்று ஸ்ட்ரிக்டாக பானு சொல்ல... "சரி சரி.. இப்போ நான் போய் கிளம்புறேன்... ட்ரெயின் ஏறிட்ட உடனே கால்பன்றேன்..." என்று சொல்லிவிட்டு ராமநாதபுரம் போக ஆயத்தமானாள் தனுஶ்ரீ...

தனுஶ்ரீயும் பானுவும் கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்கள் மற்றும் நெருங்கிய தோழிகள்... ஒரே இடத்தில் வேலை செய்கின்றனர்... பானுவுக்கு கல்யாணம் முடிவாக.. மாப்பிள்ளை வீட்டில் சொந்த ஊரில்தான் திருமணம் வைக்கவேண்டும் என சொல்ல... ஐந்து நாட்கள் முன்னாடியே பானு வீட்டினர் இராமநாதபுரம் சென்றுவிட்டனர்.. கல்யாணம் முடிந்ததும் சென்னை வந்துவிடுவார்கள்... இவளின் கல்யாணத்திற்கு தான் தனு மும்முரமாக கிளம்புகிறாள்...

ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதி நிற்க... கூட்டத்தில் நடந்து சென்ற தனு யார் மீதோ மோத "சாரி சார்.." என்று கீழே பார்த்துக்கொண்டே சொல்லிவிட்டு சென்றாள்... கம்பார்ட்மென்ட்டில் ஏறி தனது இருக்கையை தேடி அமர்ந்துவிட்டாள்... பானுவுக்கு போன் செய்து கொண்டிருந்தவளின் எதிர் இருக்கையில் அவளை பார்த்துக்கொண்டே அமர்ந்தான் ஜான்... அவனை பார்த்தவள் மனதில் "ம்ம்ம்.. என்னடா இவன் நம்மளயே பார்க்கறான்... கண்ணுரெண்டயும் நோண்டிடுவேன்..." என்று பேச... பானுவோ போனில் "தனு..." என்று கத்திக்கொண்டிருந்தாள்... "ம்ம்ம்... எதுக்குடி இப்படி கத்தற..." என்று கேட்க... "பின்ன நீ பதில் பேசாம இருந்தா... சரி அதவிடு ட்ரெயின் ஏறிட்டியா..." என்று பானு கேட்க... "ம்ம்ம்... ஏறிட்டேன்டி..." என்று சொல்லி இருவரும் பேசிவிட்டு வைக்க... ட்ரெயினும் புறப்பட்டது... தனு எதிரில் இருந்தவனை பார்க்க அவனும் போன் பேசிக்கொண்டிருந்தான்... அவனையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தாள்... நீல நிற முழுக்கை ஷேர்ட்டை மடித்துவிட்டு கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தான்... "ம்ம்ம்.. நைஸ் டேஸ்ட்..." என்று மனதில் சொல்லிக்கொண்டு... காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு சாங்ஸ் கேட்க ஆரம்பித்தாள்..

இதுவரை அவளின் செய்கை ஒவ்வொன்றயும் போன்பேசிக்கொண்டே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான் ஜான்.. அவள் வரும்போது இடித்தது இவனைத்தான்....

அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்கவும்.. புதிதாக ஒருவன் ஜானின் அருகில் வந்து அமர்ந்தான்.. இப்படியே மூவரும் அமைதியாக அவர்களின் வேலையை பார்த்தனர்... இரவு சாப்பாடு முடிந்ததும்... புதியவன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த சிகரெட்டை எடுத்து பற்றவைக்க... அதை பார்த்த ஜான் "ஹலோ.. இங்க சிகரெட் பிடிக்கக்கூடாதுங்றது... உங்களுக்கு தெரியாத... அதுவும் குழந்தைங்களாம் இருக்காங்க... போங்க சார் டோர்கிட்ட போய் அடிச்சிட்டுவாங்க..." என்று சொல்ல... எதற்கும் பதில் சொல்லாமல் ஜானை பார்த்துக்கொண்டே எழுந்து சென்றான் அப்புதியவன்...

இரவு வெகுநேரம் ஆகியும் ஜானுக்கு தூக்கம் வராததால் எழுந்து சென்றவன் கதவின் அருகில் சாய்ந்து நின்று கருப்பு வானில் பல வண்ண நட்சத்திரங்கள் இருப்பது போல் இருக்கும்... போகும் வழியை ரசித்துக்கொண்டிருந்தான்...

தனு கழுத்து முதல் கால்வரை போர்த்திக்கொண்டு நன்றாக உறங்க... அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த புதியவன் அவளின் அருகில் சென்று கன்னத்தை தொடப்போக அதற்குள் ஜான் அவனை அடித்திருந்தான்... அவன் அடித்த சத்தத்தில் தனு வேகமாக எழுந்து அமர்ந்தாள்... ஜான் அவனை இழுத்துக்கொண்டு சிறிது தூரம் வந்தவன் "ராஸ்கல்.. நெக்ஸட் ஸ்டேஷன் வந்தவுடனே இருக்குடா உனக்கு.. அதுவரைக்கும் அந்த பொண்ணுப்பக்கத்துலக்கூட வரக்கூடாது... புரிஞ்சுதா.." என்று சொல்ல... "சா...ரி சார்... என்னவிட்ருங்க ..." என்று புதியவன் கெஞ்ச... "டேய்.. உன்ன மாதிரி எத்கனபேர நான் பார்த்துருப்பேன்..." என்று ஜான் சொல்லிவிட்டு அவனை டிடிஆரிடம் ஒப்படைத்தவன்... தனது இருக்கைக்கு சென்று அமர... அதுவரை என்ன நடந்தது என்று தெரியாமல் அமர்ந்திருந்த தனு "எதாவது சொல்வானா.." என்று அவன் முகத்தையே பார்க்க... அவனும் அவளை பார்த்து என்ன என்று இருப்புருவங்களையும் உயர்த்தி கேட்க... "ஹான்... ம்ம்ம்.. எதுக்கு சார் அவர அடிச்சிங்க..." என்று தனு கேட்க... "தப்பு பன்னான் அதான் அடிச்சேன்..." என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்... "அடேய்... அந்த தப்பு என்னன்னுதானடா கேட்டேன்.. " என்று மனதில் பேசிக்கொண்டே அவளும் திரும்பி படுத்துக்கொண்டாள்....

அவள் தூங்கியதும் எழுந்து அமர்ந்த ஜான் "தனுமா... உன்ன பார்த்து கிட்டதட்ட ரெண்டு வருஷம் ஆகுதுடி... இன்னைக்கு உன்ன பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்ல... அன்னைக்கு மிஸ்பன்னிட்டேன்... ஆனா இனிமே உன்ன மிஸ்ஸாக விடமாட்டேன்டி..." என்று உறுதிகொண்டான்... ஆம் இரண்டு வருடத்திற்கு முன்பு பள்ளியில் ஊட்டி டூர் ஏற்பாடு செய்ய குழந்தைகளுடன் தனுவும் சென்றாள்... அங்கே தான் முதலில் அவளை சந்தித்தான்.. சாம்பல் நிற சின்த்தட்டிக் சேலையில்... அவளை சுற்றி குழந்தைகளும் வெள்ளைநிறப்பூக்களும் நிறைந்திருந்தது... ஜான் சென்னையில் XXX மென்பொருள் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறான்... ரிலாக்ஸ் சேஷன்க்காக நண்பர்களுடன் ஊட்டி வந்தவன் கேமராவுடன் சுற்ற ஆரம்பித்தான்... அவனின் ஹாபியில் ஒன்றுதான் இது... பூக்களை போட்டோ எடுக்க வந்தவனின் கண்களில் ஒவியதாரகையாய் தெரிந்த தனுவை போட்டோ எடுத்தான்... அப்போது ஒரு சில்ரன் "தனு டீச்சர் பானு டீச்சர் உங்கள வரசொன்னாங்க..." என்று சொல்ல.. அவளின் பேரை கேட்டு மெய்மறந்து நின்றான்... அந்த இடைவெளியில் காணாமல் போனவள்தான்... இப்போது தான் பார்க்கிறான்... அன்றையில் இருந்து அவளை காதலிக்க ஆரம்பித்தவன் தான்... போகும் இடமெல்லாம் தனு தென்படுகிறாளா... என்று பார்த்துக்கொண்டே இருப்பான்... அவளின் ஞாபகம் வரும்பொழுதெல்லாம் போட்டோவை கண்டு மகிழ்வான்... எல்லாவற்றையும் நினைத்து அவளை பார்த்துக்கொண்டே தூங்கினான்...

காலை ஆறு மணியளவில் கண்விழித்தவள் முதலில் கண்டது அவனை தான்... "என்னாச்சி எனக்கு இவன பார்த்தாலே ஏதோ தோனுது..." என்று எண்ணிக்கொண்டே வாஷ்ரூம் சென்று ப்ரெஷ்ஷாகி வந்தாள்... ஜானும் எழுந்து அமர்ந்தான்... எதாவது குடித்தால் தேவலாம் என்று தனுக்கு தோன்ற வண்டி நின்றதும் இருவரும் வண்டியை விட்டு இறங்க... தனு முன் நடக்க ஜான் அவளின் பின் நடந்தான்... ஒரு டீ கடையில் சென்று நின்றவள் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு "அண்ணா ஒரு பால்..." என்று சொல்லிவிட்டு பென்ச்சில் அமர... பின்னாடி வந்தவன் "சரியான மில்க்பேபியா.. இருக்காளே... எப்படி தான் இவளவச்சி குடும்பநடத்த போறேன்னு தெரியலையே..." என்று மனதில் செல்லமாக திட்டிவிட்டு... சிரித்துக்கொண்டே அவளின் எதிர் இருக்கையில் அமர்ந்தான்... டிடிஆரும் வர அவரிடம் அந்த ராஸ்கல் பற்றி கேட்க... "அவன நைட்டே போலீஸ்கிட்ட புடிச்சிக்கொடுத்துட்டேன் தம்பி..." என்று சொல்லிவிட்டு சென்றார்... தனுவும் இவர்கள் பேசவதை கேட்டு "அப்படி என்னதாண்டா நடந்தது... அதுவும் போலீஸ்கிட்ட சொல்ற அளவுக்கு.." என்று நினைக்க.. அவளின் முன்பு பால் நீட்டப்பட... அதை வாங்கிக்கொண்டவள்... "அண்ணா ஒரு குட்டே பிஸ்கட் பாக்கெட் ..." என்று தனு சொன்னதும் ஜானுக்கு சிரிப்பு வந்துவிட்டது.. அவன் சிரிப்பதை கண்டவள்... ஒரு முறைப்புடன் திரும்பி அமர்ந்து பிஸ்கட்டை பாலில் நனைத்து உண்டுவிட்டு... அவனை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள்... அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனை மீண்டும் மீண்டும் காதல்கொள்ள செய்தது...

இருவரும் அடுத்த ஸ்டேஷனில் இறங்கவேண்டும் என்பதால் இருக்கைக்கு கீழே வைத்திருந்த பேகை எடுக்க இருவரும் குனிய முட்டிக்கொண்டனர்.. "சாரி..." என்று இருவரும் கோரசாக சொல்லிவிட்டு இறங்க ஆயத்தமானார்கள்... ஜானின் போன் அடிக்க எடுத்து பேசியவன்... "ம்ம்ம்.. இன்னும் பைவ் மினிட்ஸ்டா... வெயிட் பன்னு வந்தர்றேன்..." என்று சொல்லிவிட்டு வைக்க... இப்போது தனுவின் போன் ஒலிக்க அட்டண்ட் செய்தவள் "ம்ம்ம்... வெயிட் பன்னுடி வந்தர்றேன்..." என்று சொல்லிவிட்டு வைத்தாள்.... ஜான் "இன்று எப்படியாவது இவளோட அட்ரசை கண்டுபிடிக்க வேண்டும்..." என நினைத்துக்கொண்டிருந்தான்...

வண்டி நின்றதும் இருவரும் இறங்கி செல்ல... அங்கே ஜானின் வருகைக்காக ரவியும்... தனுவின் வருகைக்காக பானுவும் ஒன்றாக நின்றிருந்தனர்... இருவரும் தான் மணமக்கள்... தனு பானுவின் அருகில் சென்று நலம் விசாரிக்க... "இவர்தான்டி ரவி..." என்று அறிமுகம் செய்து வைத்தாள்... அவனுக்கு "ஹாய்..." சொல்லிவிட்டு திரும்பியவள்... ஜான் நிற்பதை கண்டு "ஹலோ... எதுக்கு என் பின்னாடியே வர்றீங்க..." என்று கேட்க... "நான் எப்ப உங்க பின்னாடி வந்தேன்.. நீங்க தான் எனக்கு முன்னாடி வந்து என் ப்ரெண்ட்கிட்ட பேசிட்டு இருக்கீங்க..." என்று ஜான் சொல்லவும்.... "ம்ம்ம்... ஆமாங்க... இவன் ஜான் என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்... எங்க மேரஜ்காக வந்துருக்கான்..." என்று ரவி சொல்ல... "அப்போ நான் மட்டும் எதுக்கு வந்துருக்கேனாம்..." என்று மனதில் நினைத்துக்கொண்டாள்...

- தொடரும்....
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே செம சூப்பராக
இருக்கு, காயத்ரி டியர்
தோழியின், நண்பனின்
திருமணத்தில், ஜான்,
தனுஸ்ரீ இருவரும்
மீட்டிங்காப்பா?
அடுத்து இவர்கள்
திருமணமா?
ஓ, ஜான் ஏற்கனவே
தனுவை மீட்
பண்ணியிருக்கானாப்பா?
ரொம்பவும் நல்லதாப்
போச்சு, காயத்ரி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top