என் உயிர் காதலே - 9

#1
டிஃபன் பாக்ஸை தன் பேகில் வைத்துக் கொண்டு கலேஜிற்கு கிளம்பிக் கொண்டிருக்க

"நான் இன்னைக்கு உன்னை காலேஜில் ட்ராப் பண்ணவா மித்து" என பார்த்திபன் கேட்க
அவனது "மித்து"என்ற அழைப்பில் முகம் சுளித்தவள்
"கால் மீ மித்ரா " என கண்டிப்புடன் கூற

"சாரி கூல் மித்ரா ஓகேவா" - பார்த்திபன்

"ம்ம்" என்றபடி சமாதானம் அடைந்தாள்

"நான் வேணும்னா காலேஜ் ல ட்ராப் பண்ணவா" என பார்த்திபன் மீண்டும் கேட்க

"நோ தேங்க்ஸ் நானே போய்க்கிறேன்" என்று கிளம்பியவளை

" தம்பி ட்ராப் பண்ணா என்ன ஒழுங்கா பார்த்திபன் கூட போற" என பார்வதி கூற சிவ நாதனும் அதை ஆமோதித்தார்
வேறு வழியின்றி பார்த்திபனுடன் கல்லூரிக்கு சென்றாள் மித்ரா.
செல்லும் வழியில் மித்ரா எதுவும் பேசாமல் காரின் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வர

"என்ன படிக்கிற மித்ரா" - பார்த்திபன்

"Mba "மித்ரா ஒற்றை வார்த்தை
யில் பதில் அளிக்க

"ஏன் மித்ரா என்கிட்ட ரொம்ப Weird ஆக நடந்துக்கறிங்க என்னையும் உன் ஃப்ரெண்ட் ஆக நெனச்சு ஃப்ரீ மைண்ட் ஆக பேசலாமே - பார்த்திபன்

மித்ரா பதிலளிக்கவில்லை மாறாக யோசனையுடன் இருந்தாள்

.ஏனெனில் எப்பொழுதும் கல்லூரி பேருந்தில் ஏறியவுடன் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் தனக்காக காத்திருக்கும் பிரகாஷை பார்த்து விட்டு தான் நாளை
ஆரம்பிப்பாள்.பிரகாஷ்யும் அதே போல் அவளது கல்லூரி பேருந்து நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து காத்து கொண்டு இருப்பான்.

இப்பொழுது அவ்வழியே காரும் செல்ல அவள் அங்கே பிரகாஷ் நின்று கொண்டிருந்ததயும் கல்லூரி பேருந்தில் தன்னை காணாது அவனது விழிகள் ஏமாற்றம் அடைந்ததையும் கண்டவள்

"எல்லாம் இவனால் வந்தது " என பார்த்திபனை மனதிற்குள் திட்டி தீர்த்தாள்.

"மித்ரா ஆ ஆ என பார்த்திபன் உரத்த குரலில் அழைக்க

"என்ன ?! என எரிச்சலுடன் மித்ரா கேட்டாள்

"என்னையும் உன் ஃப்ரெண்ட் ஆக நினைத்துக்கோ னு சொன்ன - பார்த்திபன்
(ப்ரெண்ட் ஆக மட்டும் இருந்தா சரிதான் என நினைத்தவள்)

"உம் சரி" என தலையாட்டினாள்

"ஓகே காலேஜ் வந்துருச்சு பை மித்ரா என பார்த்திபன் கையசைக்க
எந்த பதிலும் சொல்லாமல் காரை விட்டு இறங்கி விரைந்து செல்ல எத்தனித்தவள் எதிர்புறத்தில் தன் காரை நிறுத்திவிட்டு பிரகாஷ் தனக்காக காத்திருப்பதையும் அவளை நோக்கியவன் அவளது அருகில் காரையும் பார்த்துவிட்டு அருகில் வரவும் பார்த்திபன் தன் காரை திருப்பி கொண்டு செல்லவும் சரியாக இருந்தது.

அருகில் வந்தவன்

"என் கூட வர பிடிக்கலை னா நேரடியாக சொல்ல வேண்டியதுதானே மித்ரா" - பிரகாஷ்

பிரகாஷ் தன்னை ஒருமையில் "மித்து" என ஒருமையில் அழைக்காமல் "மித்ரா" என பன்மையில் அழைத்ததையும் அவனின் முக மாறுதலையும் கண்டு கலங்கியவள்

"இல்லை பிரகாஷ் அது வந்து " என ஆரம்பிக்க

"பிளீஸ் எந்த கதையும் சொல்லாத இதுக்கு மேல "என்று கோபத்துடன் கூறியவன் . தன் காரில் ஏறி கிளம்பி விட்டான்.
அவர்களின் உறவில் இதுவே முதல் கருத்து வேறுபாடு எனவே மித்ரா கலங்கி போனாள்.

"ஹாய் டி மித்து ஏன் காலேஜ் பஸ் ல வரல என தான்யா கேட்க

கலங்கிய கண்களை துடைத்தவள் "ஒண்ணுமில்லைடி சும்மாதான்"என்று கூற

"ஏய் மித்து அழறயாடி" - தான்யா

கண்ணீருடன் இல்லை என தலையசைத்தாள்

"இன்னைக்கு ஃபர்ஸ்ட் ஹவர் அனிமேஷன் கிளாஸ் தானே வா நாம கிருஷ்ணா ஹால் கிட்ட போவோம் என்றபடி மித்ரா வை அழைத்து சென்றாள்.
அங்கு சென்றவுடன் தன் தோளில் சாய்ந்து அழுத மித்ராவை கண்ட தான்யா பதறினாள்.
(ஏனெனில் மித்ரா அழுது அவள் என்றுமே பார்த்ததில்லை கல்லூரியில் சேர்ந்த நாளில் இருந்து மித்ரா வை கலகலப்புடன் மட்டுமே பார்த்திருக்கிறாள்)

"என்னடி ஆச்சு ஏதாவது பிரச்சினை யா?! என தான்யா கேட்க

பார்த்திபன் காலேஜ்க்கு ட்ராப் செய்வதாக கூறியதையும் மறுக்க முடியாமல் அவனுடன் வந்தது பிரகாஷ் பேசியது என அனைத்தையும் கூறியவள்

"இதுக்கு போய் யாராவது அழுவாங்களாடி லூசு இதெல்லாம் காதலில் சகஜம் தான் - தான்யா

ஏனோ முதல் தடவையாக இருந்தாலும் பிரகாஷ் தன்னிடம் கோபித்து கொண்டு பேசாமல் சென்றது அவளை மிகவும் பாதித்தது.சமாதானம் அடையாத தோழியை கண்ட தான்யா

"சரிடி ஒண்ணு பண்ணு இப்போ நம்ம கிளாசுக்கு போகல சோ அண்ணாவுக்கு கூப்பிட்டு பேசி பிராப்ளம் சால்வ் பண்ண பாரு" - தான்யா

உடனே தன் போனை எடுத்து பிரகாஷ் இன் நம்பருக்கு அழைத்தாள்.பிரகாஷ் அவளது அழைப்பை துண்டித்தான் பலமுறை அழைத்தும் பிரகாஷ் மித்ராவின் அழைப்பை ஏற்கவில்லை. காரணத்தை கூறி அவள் குறுந்தகவல் மூலம் மன்னிப்பு கேட்டும் பதிலளிக்கவில்லை.

"மித்து இது hod கிளாஸ் கண்டிப்பாக போயாகனும் டி - தான்யா
"சரி" என மனமில்லாமல் கூறிவிட்டு தன் தோழியுடன் சென்றாள்.அவள் வகுப்பில் அமர்ந்திருந்தாலும் அவளது மனமோ பிரகாசிடமே நிலைத்திருந்தது.

பிரகாஷ் உம் அங்கு அதே நிலையில் இருந்தான்.அலைபாயும் மனதுடன் மீட்டிங் அட்டெண்ட் பண்ண முடியாது எனவே இன்றைய மீட்டிங் அனைத்தையும் நாளைய schedule க்கு மாற்றும்படி தன் PA விடம் கூறிவிட்டான்.

மித்ரா தான்யா எவ்வளவு வற்புறுத்தியும் மதிய உணவு உண்ணவில்லை."கடனே" என்று கல்லூரி வகுப்பையும் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் சென்றாள்.

வீட்டிற்கு சென்ற மித்ரா யாரையும் திரும்பி பார்க்காமல் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்

"மித்ரா கதவை திறடி காஃபி ஸ்நாக்ஸ் சாப்பிட வா" - பார்வதி
பதில் இல்லாமல் போக
மித்ராஆஆ என சத்தமாக அழைக்க

"ஒரு வேளை சாப்பிடலன்னா செத்தா போயிடுவேன் என கத்தியவள் அறையின் விளக்கை கூட அணைக்காமல் தன் தலையணை இல் புகுந்து கண்ணீர் உகுக்க ஆரம்பித்தாள்.

"என்னடி வாய் நீளுது" என மகளை திட்டிய பார்வதி அந்த பக்கம் பதில் இல்லாமல் போக சரி தன் மகளுக்கு மனம் சரியில்லை அவளே வருவாள் என்று நினைத்தபடி தன் வேலையை கவனிக்க சென்று விட்டார்.

சூர்யா தன் அக்காவின் அறைக்கதவை தட்டி

"அக்கா கதவைத் திற" என கூற
கண்ணீரை துடைத்து கொண்டு அறை விளக்கை போட்டவள் கதவை திறந்து விட்டாள்.

தன் அக்காவின் கலங்கிய முகத்தை கண்டவன்
"என்ன அக்கா ஆச்சு ஏதாவது பிரச்சனையா" என சூர்யா கேட்க

"அப்படியெல்லாம் இல்லை டா சூர்யா என கூற

"சரிக்கா அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க"

"இல்லைடா எனக்கு பசிக்கலை அம்மாகிட்ட சொல்லிடு"

"கொஞ்சமாவது வந்து சாப்பிடுக்கா"

"அதான் பசிக்கலைனு சொல்டிரேன்ல அப்புறம் என்ன விட வேண்டி தானே என தன் தமயனை திட்டினாள்.

முகம் வாடிய சூர்யா
"சாரிக்கா என கூறிவிட்டு சென்றான்
பின் தன் அறைக்குள் புகுந்து மீண்டும் தன் கட்டிலில் அமர்ந்தவாறு விட்டத்தை வெறித்து கொண்டிருந்தாள்.

அனைவரும் உணவருந்திவிட்டு தூங்க செல்ல மனமில்லாமல் பார்வதி

"மித்ரா கண்ணு ஏன் சாப்பிட வரலை" என பரிவுடன் தன் மகளின் தலையை கோதியபடி கேட்க
கலங்கிய கண்களை கட்டுபடுத்தியவள்

"இல்லை அம்மா காலேஜ் ல இருந்து வரும்போது ப்ரெண்ட்ஸ் ஓட சாப்பிட்டு வந்தேன் அதான் அம்மா" என கூற

"காலேஜில் ஏதாவது பிரச்சனையாடா" - என பார்வதி கேட்க

"இல்லைமா பிரச்சினை என அவள் தன் கவலையை மறைத்து கூறினாள்.

"பார்வதி தாய் மனம் அவள் கூறியது பொய் என அறிந்தது.

"சரிடா உனக்காக சாப்பாடு ஹாட் பேக் ல வச்சிருக்கேன்டா நைட் பசிச்சுதுன்னா சாப்பிடு என கூறி விட்டு சென்றார்.

பிரகாஷ் தன் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் வேலை இருப்பதாக தன் தாயிடம் கூறிவிட்டு ஆபீசில் அமர்ந்திருந்தான்.


தூக்கம் வராமல் தன் முட்டியில் கைகளை வைத்து அதில் தன் கைகளை வைத்து புதைந்து கொண்டாள்.பின் ஹாலிற்கு சென்று டிவியை ஆன் செய்ய
மியூசிக் சேனலில்

"வாழ்க்கை என்னும் வீதியிலே

மனசு என்னும் தேரினிலே

ஆசை என்னும் போதையிலே

என்னை விட்டு விட்டு போனாயே

நான் தனியாய் தனியாய் நடந்தேனே

சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே

ஒரு நுரையாய் நுரையாய் நடந்தேனே

காதலாலே"

என மென்மேலும் அவளது மன நிலையை சோதிக்கும்படி பாடி வைத்தது.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement