என் உயிர் காதலே-5

Advertisement

அந்த நிசப்தமான முடிவில்லா இரவில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க
சங்கமித்ராவும் பிரகாஷும் ஒருவரையொருவர் நினைத்து க் கொண்டிருந்தனர். பின் ஒருவரையொருவர் மாற்றி மொபைல் எண்ணிற்கு அழைத்து பார்க்க பிஸி டோனில் காட்டியது

சிறிது நேரம் கழித்து பிரகாஷே அவளுக்கு திரும்பி அழைக்க அவள் அழைப்பை எடுத்ததும் ஒரு சேர

"யார்கிட்ட பேசிட்டு இருந்த?'என கேட்க
பின்பு தான் தங்கள் செய்த முட்டாள் தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டனர்.
"சாப்பிட்டயா??என பிரகாஷ் கேட்க'

'சாப்பிட்டேன் நீங்க சாப்பிடங்களா?-மித்ரா'
'ம்ம் ஏன் இன்னும் தூங்கல மித்து - பிரகாஷ்'
'தூக்கம் வரலை அதான் - மித்ரா'

"உண்மையை சொல்லு என்ன பத்தி தானே யோசிச்சுட்டு இருந்த??'
"இல்லையே என மித்து தனக்கு வராத பொய்யை கூற'
"பொய் சொல்லாதடி கள்ளி!! - பிரகாஷ் கேட்க'
"ஆமாம் டா அதுக்கு என்ன இப்போ?? -மித்ரா"
"என்னது டா வா ? என கூறியவன்
அவளின் குறும்பு தனத்தை ரசித்து சிரித்தான்." பின்பு

"மித்து - என பிரகாஷ் அழைக்க"
"ம்ம் சொல்லுங்க - மித்ரா"
"ஐ லவ் யூ மித்து - பிரகாஷ்'
"ம்ம் என மித்து கூற"
"என ம்ம் நீயும் சொல்லுடி - பிரகாஷ்"
"ஐ லவ் யூ மச்சான் என மித்ரா கூற"
"என்னது மச்சானா?? பிரகாஷ்"
"ஆமாங்க மச்சான் - மித்ரா"
எனக்கு உன்ன இப்போவே பார்க்கணும் டி மித்து - பிரகாஷ்
"இப்போ எப்படி பார்க்க முடியும் நாளைக்கு காலேஜ் க்கு லீவ் போட்டுட்டு வரேன் பாக்கலாம் - மித்ரா"

"இல்ல எனக்கு உன்ன இப்போவே பாக்கணும் என பிரகாஷ் பிடிவாதமாக கூற"
"ஆனா இப்போ எப்படி??" என மித்ரா கேட்க
"உன் குட்டி மூளையை வச்சு ரொம்ப யோசிக்காத உங்க வீட்டுக்கு வெளியே வா மித்து என பிரகாஷ் அழைக்க"
" ஹே இங்க வந்திருக்கிங்களா யூ கிரேசி என கூறியபடி மெதுவாக தன் வீட்டு கதவை திறந்து சென்றாள்.

தன் வீட்டு கேட்டிற்கு வெளியே பிரகாஷ் நிற்பதை காண்டவள் ஓடிச்சென்று கேட்டை திறந்தாள்.
அவன் தன் இரு கைகளையும் நீட்டி அவளை அழைக்க நொடி கூட தாமதிக்காமல் அவனிடம் சரண் புகுந்தாள்
அவனும் அவளை யுகம் யுகமாக காணாத து போல இறுக்கி அணைத்து கொண்டான்.
அவர்களின் நிலைக்கேற்ப பக்கத்து வீட்டு செக்யூரிட்டி யின் எப் எம் இல்

"கல்யாண சொர்கத்துல கச்சேரி

நேரமுன்னு கட்டி புடிச்சேன்

நான் கட்டி புடிச்சேன் என்

வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்

சொக்கி தவிச்சேன்

சொக்கி தவிச்சேன் நான்

சொர்க்கத்தையே எட்டியதா

துள்ளி குதிச்சேன்

குற்றால சாரல் அது

கண்ணோரம் ஊறி வர

உன்ன நெனச்சேன் நான்

உன்ன நெனச்சேன் எந்த

பூர்வ ஜென்ம புண்ணியமோ

உன்ன அடைஞ்சேன்"
என பாடியது

பின் சுயநினைவிற்கு வந்தவளாய்

"எப்போ வந்திங்க ஏன் என்கிட்டே சொல்லல என மித்து கேட்க"

"சும்மா உன் ரியாக்ஷன் என்னனு பாக்கலாம் னு தாண்டி சொல்லல - பிரகாஷ்"
"ம்ம் " -மித்ரா
"ஐ மிஸ் யூ டி - பிரகாஷ்'

அவள் அவனை காதலுடன் நோக்கினாள்.
வீட்டில் இருப்பவர்கள் யாராவது எழுந்து வந்து விட்டால் என்னாவது என நினைத்தவள் தன் வீட்டிற்கு பின்புறம் அமைந்துள்ள சிறிய கார்டன் க்கு பிரகாஷ் ஐ அழைத்து சென்றாள்.

அங்கு ஒரு சிறிய பெஞ்ச் போடப்பட்டிருக்க அதில் அமர்ந்தவன் அவளை இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்து க் கொண்டான்.
"பிராகாஷ் விடுங்க யாராவது வந்துர போறாங்க??" - மித்ரா
'யாரும் வர மாட்டாங்க டி பயப்படாத மித்து - என பிரகாஷ் கூற அவள் அமைதியானாள்."
"உனக்கு எப்படி டி என்ன பிடிச்சுது மித்து"- பிரகாஷ்
"எப்படி எதனால சொல்ல தெரியல பிரகாஷ் ஆனா உங்கள எனக்கு பிடிச்சிருக்கு என மித்து அவனை காதலுடன் நோக்கியபடி கூறியவள்"

" உங்களுக்கு எப்புடி என்ன பிடிச்சுது என பிரகாஷிடம் கேட்க"
உண்மையா சொன்னா ரீசன் தெரியல
ஆனா ஐயா உன்ன பார்த்த முதல் நாளே பிளாட் மா " என பிரகாஷ் கூற
மித்து முகம் சிவந்தாள்.
"மித்து எனக்காக ஒரு பாட்டு பாடு டா அன்னைக்கு நீ பாடுனது எனக்காகவே பாடுன மாதிரி இருந்தது "
முதலில் தயங்கியவள் பிறகு மெதுவான குரலில் பாட ஆரம்பித்தாள்

"பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே

காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்

என்பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே"

அவளை இன்னும் தன்னுடன் நெருக்கமாக சேர்த்து அணைத்தவன்

"கண்ணே காட்டிக் கொடுக்கிறதே

காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகலிரவை

உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழையானேன்"
என பாடி முடித்தவன் அவள் முகத்தை தன் இரு கைகளால் தாங்கி பிடித்து அவள் முகத்தை உற்று நோக்க

அவன் நோக்கத்தை புரிந்தவள்
முகம் சிவந்தவளாய் தன் இரு கண்களையும் மூட
"ஏய் கண்ணை திறடி" என அவன் கொஞ்ச
முதலில் மறுத்தவள் பின்பு மெதுவாக கண்களை திறக்க
அவள் இதழில் தன் முத்தத்தை மென்மையாக பதித்தவன் பின் அவள் கழுத்தில் தன் முகத்தை பதிக்க போக நாணமுற்றவள் தாள முடியாமல் தோய்ந்து அவன் மார்பில் சரிந்தாள்.


"சில்லென்ற முத்தம் ஒன்று செல் எல்லாம் நனையும்போது

உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே

தேரோடு பூவனம் ஒன்று வாரோடு சரியும்போது

அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே

தேகம் ரெண்டும் பிரியாதா

ஜீவன் எரியும் சுடராக
முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம்"

என பாடலுக்கேற்ப அவ்விரு மனங்கள் ஒன்றிணைந்து கொண்டிருந்தன.
அவன் கைகள் அவளின் உடலை தொட்டு தழுவ இதற்கு மேலே இங்கே அமர்ந்து இருந்தால் எல்லை மீறிவிடுவோம் என உணர்ந்து அவனிடம் இருந்து விலகி அமர்ந்தாள்.
பின்பு அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள் அவளை தன்னுடன் சேர்த்து அனைத்து கொண்டான் அவ்விரு காதலர்களும் மனம் நிறைந்த திருப்தி முகத்தில் தெரிய அன்று பௌர்ணமி என்பதால் முழு நிலவை ரசித்து கொண்டிருந்தனர்.
மித்ரா அவனையே நோக்க பிரகாஷ் கேள்வியுடன் நோக்க

"நீங்க என் கூட இருக்குற வரைக்கும் தான் நான் இந்த நிலாவை போல பிரகாசமாக இருப்பேன் ஐ லவ் யூ forever யூ ஆர் தி லைட் ஆப் மை லைஃ ப்'என உணர்வுபூர்வமாக கூற

மென்மையாக அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன் மீண்டும் ஒரு முத்தத்தை அவள் இதழில் முன்பு போல அல்லாமல் வன்மையாக முத்தம் பதித்தான்.
மீண்டும் அங்கு ஒரு சிறிய காதல் கவிதை அரங்கேறியது.
இரு ஜோடி கண்கள் தங்களை உற்று நோக்கி கொண்டிருப்பதை அறியாமல் அவ்விரு காதலர்களும் மிதமிஞ்சிய காதலில் திளைத்து கொண்டிருந்தனர்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ
யாருப்பா அந்த இரண்டு ஜோடி
விழிகள்?
நல்லவங்களா?
இல்லை கெட்டவர்களா?
லவ்வர்ஸ்க்குத்தான் காதல்
கண்ணை மறைச்சு தூக்கம் வரலை
அவங்களை வேவு பார்க்கும் இந்த எட்டிப் பார்க்கிறவங்களுக்கு என்ன கேடு?
நேரங் காலத்தில் போய் தூங்காமல்
இளம் ஜோடியை என்ன பாடுபடுத்தப் போறாங்களோ?

காதலுக்குத்தானே கண்ணில்லைன்னு சொல்லுறாங்க
பூனை கண்ணை மூடிக்கிட்ட மாதிரி
இந்த லவ்வர்ஸ் இருக்காங்களே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top