என் உயிர்க் காதலே

Advertisement

Archanadevi966

Writers Team
Tamil Novel Writer
என் உயிர்காதலே-1

விடியற்காலையில் அந்த வீட்டை சுற்றி பச்சைபசேலென்று
தோட்டத்தில் சில்லென்ற காற்றினை அனுபவித்தபடி நடந்து
கொண்டிருந்தாள் சங்கமித்ரா.

சிவநாதன்-பார்வதியின் செல்வபுதல்வி
சங்கமித்ரா ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூட்ஸ் ல் mba படித்துக்
கொண்டிருந்தாள். அவள் உடன் பிறந்த சகோதரன் சூர்யா பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்
அவள் எதிரே சூர்யா அவளை முறைத்தபடி நின்றிருந்தான் அதைப்ர்த்து வயிற்றைப்பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள
(அதுக்குக் காரணம் நம்ம கதாநாயகி செஞ்சு வச்ச வேலைதாங்க)

வாக் போகலாம் என்று நினைத்த சங்கமித்ரா சீக்கிரமே எழுந்தாள் அறையை விட்டு வெளியே வந்தவள் பக்கத்து அறையில் நன்று உறங்கி கொண்டிருந்த தன் தம்பியை பார்த்தவள் குரும்புத்தனம் தலைதூக்க தன் அறையிலிருந்து eyeliner, lakme foundation ஐ எடுத்து வந்து அவன் முகம் முழுதும் foundation ஐ நன்கு அப்பிவிட்டு நன்கு பெரிய தாடி வரைந்து விட்டு வந்திருந்ந்தாள். காலையில் வழக்கம் போல் எழுந்தவன் பாத்ரூமிற்கு முகம் கழுவ சென்ற போது தன் உருவத்தை கண்ணாடியில் கண்டு பேய் என்று அலறினான் பின்தான் அது தன் உருவம் என்றறிந்தான்.

வர வர உன் தொல்லை தங்கமுடிலடி -சூர்யா

அதுதானே என் வேலை டா தம்பி -சங்கமித்ரா

ஏய் என்ன சத்தம் இங்க என்றபடி பார்வதி அங்கு வந்தார்.

எம்மா இவள நீங்க பெத்திங்களா இல்லை செஞ்சிங்களா -சூர்யா

ஏண்டா கேக்ற என்றார் -பார்வதி
நாளுக்கு நாள் இவ இம்சை தாங்க முடியலை இவளை கல்யாணம் பண்ணி பேக் பண்ணி விடுங்கமா -சூர்யா

இப்போது முறைப்பது சங்கமித்ராவின் முறையாயிற்று.

நானும் அதுக்குதண்டா காத்துகிட்டு இருக்கேன் மகனே என பார்வதி மனதிற்குள் கூறிக்கொண்டார்

தன் மகளும் மகனும்தன்னையே உற்று நோக்குவதைக் கண்டு

இப்போ ரெண்டு பேரும் கிளம்ப போறீங்களா இல்லையா லேட்டா வந்தால் டிபன் கெடையாது என்று பார்வதி திட்ட
அவர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி சென்றனர்.
பின் கிளம்ப
ஆரம்பித்தனர்.

சங்கமித்ரா கல்லூரிக்கு கிளம்பினாள் சங்கமித்ராவிற்கு பெண் நண்பர்களும் உண்டு ஆண் நண்பர்களும் உண்டு அவளுடன் படிக்கும் ஆண்களிடம் என்னை விட்டு விலகியே நில் என்ற எச்சரிக்கை உணர்வுடன் பழகுவாள்.

அதே சமயம் மார்னிங் வாக் முடித்துவிட்டு வந்து ஒரு கையில் பிஸினஸ் நியூஸ் உம் மறுகையில காபியுடனும் அமர்ந்திருந்தான் பிரகாஷ் அருணாச்சலம்-மீனாட்சி அவர்களின் செல்வ புதல்வன் பிரகாஷ் அருணாச்சலம் கன்ஸ்டருக்ஷன் MD பிரகாஷ் காந்தம் போன்ற கண்கள் வசீகரிக்கும் சிரிப்பு .செதுக்கி வைத்த சிற்பம் போல இருப்பவன்.
தன் படிப்பினை வெளிநாட்டில் முடித்துவிட்டு தன் தந்தையின் கம்பெனியை நிர்வாகம் செய்து கொண்டிருந்தான்
அவன் தங்கை சஹானா பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.

ஒன்னு பேப்பர் படி இல்லனா காபி குடி டா ரெண்டையும் சேர்ந்து பண்ணாத என திட்டி கொண்டு வந்து அமர்ந்தார்
மீனாட்சி அப்போது அங்கே வந்த அருணாச்சலம்

மீனா நம்ம உன் அக்கா பொண்ணு கல்யாணத்தில பார்த்தோமே அவந்திகா அழகா இருந்தால்ல

இது தனக்கான வலை

என்றறிந்த பிரகாஷ் குறும்சிரிப்புடன்
எனக்கு ஓகேதான் என்றான்- பிரகாஷ்

பெற்றோர்கள் இருவரும் வியப்புடன் அவனை நோக்கினர் (பின்னே இத்தனை நாள் கால்யாணத்திற்கு பிடிகொடுக்காத மகன் இப்போது சம்மதம் சொன்னால் எப்படியிருக்கும?)

உங்களுக்கு அந்த பொண்ணு ஓகே னா எங்களுக்கும் அந்த பொண்ணு ஓகே தன் என்னமா என்றான் சிரிப்புடன் -பிரகாஷ்

அவனுடைய குறும்பை புரிந்து
கொண்டு டேய் படவா என்று விளையாட்டாக கையை ஒங்க
ஆபீஸ்க்கு லேட்டாச்சு பை என பிடிபடாமல் ஓடினான்.

ஏனோ பிரகாஷிற்கு இதுவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்ததில்லை. எந்த பெண்ணை பார்த்தாலும் அலட்சியமாக நோக்கிவிட்டு சென்று விடுவான் அவர்கள் தன்னில் ஏதும் குறை உள்ளதா என்று கண்ணாடியில் பார்த்துவிட்டு செல்வார்கள்

இன்று அவர்களது கல்லூரியில் 30ஆம் ஆண்டு நிறைவு விழா.சங்கமித்ரா தான் பாடல் போட்டியில் பங்குபெற பெயர் கொடுத்திருந்தாள் எனவே கல்லூரிப் பேருந்தை தவிர்த்து ஸ்கூட்டியில் முன் கூட்டியே சென்றிருந்தாள்

அவள் தோழி தன்யா அவளுக்காக காத்திருந்தாள்

ஹே மித்ரா சீக்கிரம் வாடி டயம் ஆகிடுச்சு-தன்யா

இதோ வந்துட்டேன் டா வா

போகலாம் -சங்கமித்ரா

நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டியாடா ஆல் தி பெஸ்ட் நல்லா பாடு

ஓகே டியர் சூப்பரா பாடறோம் ப்ரைச தூக்கரோம் ஓகேவா என்றாள் சிரிப்புடன்

பின் கிருஷ்ணா ஹாலை சென்றடைந்தனர் கல்லூரி விழா துவங்கியது

முதலில் கல்லூரி நடுவர் உரையாற்றினார்.பின் சிறப்பு விருந்தினராக அருணாச்சலம் கன்ஸ்டருக்ஷன் MD பிரகாஷ் அவர்களை அறிமுகபடுத்தினர்
பின் கலைநிகழ்ச்சிகள் துவங்கின.
பின் பாட்டு போட்டி துவங்கியது. அடுத்ததாக சங்கமித்ரா வின் பெயரை அழைக்க வரவேற்க்கும் விதமாக கூட்டம் முழுவதும் கைத் தட்டி அர்பரித்தது

பிரகாஷ் என்ன பாட்டு என்று கடமை கு ஸ்ருதி, தாளம், ஸ்வரம் ஏதும் தெரியாமல் கடனே என படுவர் என நினைத்து அலட்சியமாக அமர்ந்திருந்தான்

"ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க"

என்று தொடங்கிய குரலைக் கேட்டு தன் விழிகள் அகல திரும்பி நோக்கினான்.
அழகிய முகம் நீண்ட விழிகள் நீண்ட கூந்தல ரோஜா நிற சுடிதாரில் அழகிய தேவதைபெண்ணொருத்தி மனதை மயக்கும் குரலில் பாடி கொண்டிருந்தாள்

"கன்னம் தீண்டியதும் கண்ணன்

என்று அந்த கண்ணி கண்ணை விழித்தாள்

கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை வெறும் காற்றூ என்று திகைத்தாள்

கண்கள் மூடிக்கொண்டு

கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்

காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்

கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள்

குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்

அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்

கண்ணா கண்ணா வா வா

கண்ணீரில் உயிர் துடிக்க

கண்ணா வா உயிர் கொடுக்க.."

அக்குரலில் கரைந்தவன் அவளுடைய கண்ணணாக தன்னை அழைப்பது போல் உணர்ந்தான்.
பாட்டு முடிந்தவுடன் அனைவரும் எழுந்து கை தட்டினார்கள்
பின் அடுத்தடுத்து ஒவ்வொருவராக பாட பிரகாஷ் அத்தேவதை பெண்ணை அடுத்து எப்போது காண்போம் என சிந்தனையில் இருந்தான.

அவன் மனதைபடித்தாற்பொல் அக்கல்லூரி முதல்வர் ஆசிரியரிடம் சங்க மித்ராவை அழைத்து வர சொல்லி கூறினார்.
சார் இவள் சங்கமித்ரா இக்கல்லூரியின் சிறந்த மாணவி என அறிமுகப்படுத்தினார். பிரகாஷ் ஆச்சரியத்துடன் அவளை நோக்க அந்நேரம் கல்லூரி முதல்வரை யாரோ அழைக்க அவர் பிரகாசிடம் கூறி விட்டு சென்றார்.

வணக்கம் சார் என அவள் கைக்குவிக்க பிரகாஷ்.

நல்லா பாடினீங்க மித்ரா என்று கூற

சங்கமித்ரா அவனை நோக்க அப்பார்வையில் எதுவோ இருப்பது போல் தோன்றியது

அந்நேரம் பார்த்து மேடையில்

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணிலே என்னம்மா…

இருவர்களின் பார்வைகளும் பின்னி பிணைந்தன

மீட்டாத வீணை

தருகின்ற ராகம்

கேட்காது பூங்காதலே

ஊட்டாத தாயின்,

கணக்கின்ற பால் போல்

என் காதல் கிடக்கின்றதே,

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணிலே என்னமா…

பாடல் முடிவடைந்தது அவள் தோழி மித்ரா என அழைக்க அப்போதும்
அசையாமல் இருக்க

மித்ராஆ என அவள் கையை உலுக்கினாள்

கனவு கலைந்தது போல் விழித்தவள் சற்றுமுன் நிகழ்ந்ததை யோசித்து முகம் சிவந்தவள்

சார் அது வந்து வந்துது.. என திணற

அந்நேரம் பார்த்து பிரகாஷின் கை பேசியில் அழைப்பு வர தப்பித்தோம் பிழைத்தோம் என சிட்டாக பறந்து விட்டாள்..

"என்ன மித்து ஒரே ரொமான்சா" என அவளின் நண்பர்கள் கோரசாக கிண்டலடிக்க
அவள் முறைக்க

"கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாபியா"

என அவள் நண்பன் ஆதி பாடி அவர்கள் சீண்ட

"செருப்பும் செருப்பும் நோக்கியா
உனை அடிக்க போறேன் பாக்கிறயா"

என சங்கமித்ரா பாடி வைக்க

அக்கூட்டத்தில் சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆனது
கல்லூரி விழாவில் அவர்களுடைய குழுவின் சத்தம் மட்டும் தனியாக கேட்க அவர்கள் ஆசிரியர் ஒருவர் சென்று பேசாமல் இருக்குமாறு
திட்டிவிட்டு சென்றார்இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்தவனிற்கு குறுநகை தோன்றியது.

ஒருவாறாக கல்லூரி நிறைவு விழா முடிந்தது. பரிசு கொடுத்து கொண்டிருந்தனர்.

பாட்டு போட்டியில் மித்ரா முதல் பரிசு வாங்கினாள்
இனி அவளை எப்போது பார்ப்போம் என்ற நினைவுடன் பிரகாஷ் ஆஃபீஸிற்கு கிளம்பி சென்றான்.

வீட்டிற்கு சென்ற சங்கமித்ரா கல்லூரி நடந்த நிகழ்வுகளை அசைபோட்டபடி அமர்ந்திருந்தாள் சே என்ன பார்வை அது இனிமேல் அவனை வாழ்க்கையில் பாக்கவே கூடாது என்று நினைத்தபடி உறங்க சென்றாள் ஆனால் அவளுக்கு தூக்கம் வரவில்லை மாறாக மூடிய விழிகளுள் அவனே வந்தான்


ப்ரகாஷும் அதே நிலைமையில் இருந்தான்.தன் கம்பெனி ப்ரொஜெக்ட் புல்டிங்ஐ தன் மனம் போன போக்கில் வரைந்தான்

பின் கடைசியில் பார்த்தவன் இனிதாக அதிர்ந்தான் எனெனில் அத்தேவதைப் பெண்ணை வரைந்திருந்தான்.அதை பார்த்து அவன் இதழ்கள் தானாக ஓர் பாடலை முணுமுணுத்தன

"பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணால்

ஒவ்வொன்றும் காவியம்

அரைநொடிதான் உன்னை பார்த்தேன்

ஒரு யூகமாய் தோன்ற வைத்தாய்

பணித்துளியாய் நீயும் வந்தாய்

பாற்கடலாய் நெஞ்சில் நின்றாய்

பிரம்மன் செய்த சாதனை
உன்னில் தெரிகிறது

உன்னை எழுதும்போது தான் மொழிகள் இனிக்கிறது"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top