என் உயிர்காதலே- 7

Advertisement

மார்க்கெட்டிங் வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு ஆசிரியர் விடுமுறை என்பதால் மற்ற மாணவர்கள் எங்கேனும் வெளியே செல்லலாம் என திட்டமிட்டு கொண்டிருந்தனர்
தான்யா தன் தோழி சங்கமித்ராவை உடன் வருமாறு அழைத்தாள்.

"இல்லைடி நீங்க போய்ட்டு வாங்க எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது என்றாள் சங்கமித்ரா.

சரிடி நீங்க போய்ட்டு வாங்க நான் மீத்து கூட இருக்கேன் என தான்யா கூற மற்ற மாணவர்கள் கிளம்பினர்.

"நீ ஏன்டி போகல "-மித்ரா
"நீ ஏன்டி வரல" -தான்யா முறைத்தபடி கேட்க,அவளை பொய்யாக முறைத்த மித்து அவள் முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்தாள்.
"பிசாசே வலிக்குதுடி"- தான்யா
பிறகு தோழிகள் இருவரும் கிருஷ்ணா ஹாலுக்கு முன்புறம் உள்ள மைதானத்தில் வட்ட வடிவில் அமைந்திருந்த சிமெண்ட்டால் ஆன இருக்கையில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.

"ஏன்டி மித்து நம்ம ஹீரோ எப்படி இருக்கார் என தான்யா கண்சிமிட்டியபடி கேட்க,

"என்னது நம்ம ஹீரோ வா கொன்று விடுவேன்டி உன்னை" என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து முறைத்தாள்.
"சரிடி சரிடி கூல் கூல் டவுன் உன் ஆளு என் அண்ணன் போதுமா என தான்யா புன்னகையுடன் கேட்க
"என் செல்லம்" என தன்னை செல்லம் கொஞ்சியவளை பொய்யாக முறைத்த தான்யா ஒரு மணி நேரம் முடிந்து அடுத்த பீரியட் துவங்க இருக்க
" சரி வாடி போகலாம் கிளாசிற்கு டயம் ஆச்சு" என கூற
"சரி வாடி போகலாம்" - மித்ரா
இருவரும் பேசியபடி அவ்விடத்தை விட்டு வெளியே வர வெளியேறும் வாயிலில் பிரகாஷ் நின்று கொண்டிருக்க அவனை எதிர்பாராத மித்ரா (நாங்கள் பேசியதைக் கேட்டிருப்பானோ என்று பதட்ட த்துடன் நோக்கினாள்)

"சரிடி நான் முன்னாடி போறேன் நீ வா என கூறிவிட்டு தான்யா சென்றாள்.
"நான் உன் ஹீரோவாடி" -பிரகாஷ்
காற்றில் பறந்த தன் முன்னுச்சி முடியை அலட்சியம் செய்யாமல் பார்ப்பவர் அனைவரையும் கட்டி இழுக்கும் காந்த கண்களால் தன்னை காதலுடன் நோக்குபவனை ரசித்தவள், இவன் தன் ஹீரோ தான் என மனதில் நினைத்தபடி
"ம்ம்" என நாணத்துடன் கூற
"எப்படியோ காதல் ரவுடி ல இருந்து உன் ஹீரோ வா ப்ரோமோட் ஆகிட்டேன்டி" என்றுபிரகாஷ் கண்ணடிக்க மித்து முகம் சிவந்தாள்.
பிரகாஷ் கலகலத்து சிரித்தபடி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.


"இது வரைக்கும் எனக்கு இது போல்

இல்லை

இருதய அறையில் நடுக்கம்

கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை

புதிதாய் இருக்குது எனக்கும்

உன்னோடு இருக்கும் பொன்னான

நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்"

என தொலைவில் பாடல் ஒலித்தது

சிறிது நேரத்தில் தான் இருக்கும் இடமறிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய மித்ரா

"பிரகாஷ் கிளாஸ்க்கு டயம் ஆச்சு நான் வீட்டுக்கு வந்துட்டு கூப்பிடறேன்" - மித்ரா

"சாரி மித்து இன்னைக்கு உனக்கு காலேஜ் லீவு சோ நாம வெளியே போறோம்"- பிரகாஷ்

"என்ன காலேஜ்ல இருந்து என்னை கடத்திட்டு போறீங்களா சார் " மித்ரா

"ஏய்ய்" என கலகலத்து சிரித்தவன்
நான் எதுக்கு உன்னை கடத்தணும் நீ என் ராணிடி என்றபடி மித்துவை தன் தோழில் சாய்த்துக் கொண்டான்.

இருவரும் புரூக்-பீல்ட் மாலில் விண்டோவ் ஷாப்பிங் செய்கிறோம் என்ற பேர் வழியில் ஒருவரைஒருவர் இணை பிரியாமல் காதல் பறவைகளாய் சுற்றி கொண்டிருந்தனர்..
பின்பு மதிய உணவு அங்குள்ள ரெஸ்டாரண்ட்-ல் உண்டு விட்டு பார்க்கிற்கு சென்றனர்.
ஓர் சிறு பென்ச்-ல் அமர்ந்து மித்து இயற்கையை ரசித்துக் கொண்டிருக்க பிரகாஷ் தன்னவளை ரசித்து கொண்டிருந்தான்.

பிரகாஷ் அவள் கையை பற்றி இழுக்க அவள் அவன் மார்பில் விழுந்தாள். தனது ஒற்றை விரலால் அவளது முகத்தை நிமிர்த்த நாணத்தினால் கண்களை மூடி கொண்டாள் மித்து.
அந்நேரம் பார்த்து மின்னலோடு கன மழை பெய்ய ஆரம்பிக்க காதலோடு மித்துவின் மேல் பரவி படர்ந்தான் பிரகாஷ்.
"அடைமழை வரும் அதில் நனைவோமே

குளிர் காய்ச்சலோடு சிநேகம்

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் "

என பாடல் எங்கோ ஒலித்தது அடுத்த மின்னலில் தன் இயல்புக்கு திரும்பியவர்கள் இதற்கு மேல் இங்கே இருந்தாள் எல்லை மீறி விடுவோம் என உணர்ந்து வீட்டிற்கு கிளம்பினர்.
மழையில் நனைந்ததற்கு தன் அன்னையிடம் கூறி சமாளித்து வந்தவள் உடை மாற்றி கொண்டு தலையை துவட்டி கொண்டிருந்தவள் மனது மகிழ்ச்சிக்கு மாறாய் ஏதோ நெருடலாக இருந்தது

(அந்த மின்னலுடன் கூடிய மழை அவர்களது காதலின் அடுத்த கட்டமா அல்லது பிரிவின் துவக்கமா?!! அடுத்த பகுதியில் காண்போம் மக்களே)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top