என் இதய விழி நீயே - Final

Advertisement

achuma

Well-Known Member
Im thanking malli mam , when i asked to write storiy, she believed and open thread for me..
And friends next im saying thanks to all reader who given likes n comments
padma mohan, pooja soundarya, chitrasaraswathi, ugina, megalaveera,ashvick,mahalakshmi lokesh, bujji, nasreen.

and another special thanks to banu mam who given her lovable comments..

என் இதய விழி நீயே

"பின் இல்லாம புடவை கட்டி விடுறேன் சொல்லி சொல்லி, இப்போ நம்ம அபி வளைகாப்புக்கும் ஆதியே புடவை கட்டி விட்டுட்டு இருக்கான்," என்று கிண்டல் அடித்தாள் ஸ்ரீ ..

"இன்னும் இங்க என்ன உங்களுக்கு அரட்டை , சீக்கிரம் அபியை ரெடி பண்ணலயா?" , என்றபடி வந்து நின்றான் அர்ஜுன்,

"ஹ்ம்ம் , உங்க தம்பியே அவர் பொண்டாட்டிக்கு அலங்காரம் செய்யறாரு , நாங்க இங்க இருக்குற எல்லா வேலையும் முடிச்சிட்டு தான் நின்னுட்டு இருக்கும், என்று, ஸ்ரீ, திவ்யா மற்றும் நிஷா , அவனிடம் கூறிக்கொண்டிருந்தனர் ..

"அடப்பாவி, என் தம்பிக்கு இப்படியா தாறு மாறா ரொமான்ஸ் வரணும், அவன் இப்படி ஏதாவது ஒன்னு செய்துட்டு, இவங்க கிட்ட அபியை கோத்து விட்டுட்டு போய்டுறானே ," என்று அர்ஜுனும் அவர்களுடன் கலந்து கொண்டான் ..

அபியின் வளைகாப்பு அன்று, அணைத்து சொந்தங்களும், வந்து இருந்தனர் ,..
அணு மற்றும் ஸ்ரீதர் புது ஜோடியாக ,விஜயன் கூறிய சம்மந்தமே ..
இப்பொழுது அன்பான கணவனுடன் அணுவும் அபியின் சீமந்தத்திற்கு வந்து சேர்ந்தாள் ..

தினேஷ் அவனின் தந்தை மற்றும் லீலா உடன் வந்து இருந்தான் ..
அம்புஜம் மாமி, மற்றும் அபியின் சிறுவர் பட்டாளம் , என்று அனைவருமே அபியின் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர் ..

கமலாவும், தினேஷும், இன்னும் இரண்டு வருடம் கழித்து அவர்களின் கடமை நிறைவடைந்ததும், திருமணம் செய்து கொள்வதாக இரு வீட்டாருக்கும் தெரிய படுத்தினார் ..

இதில் லீலாவிற்கு உடன் பாடில்லை என்றாலும், அவரின் பேச்சிற்கு அங்கு யாரும் மதிப்பளிப்பதாக இல்லை ..
லீலாவை வாயே திறக்க கூடாது என்று மிரட்டி அழைத்து வந்தான் ..

ஆதி பூரணிக்கு என்று வாங்கிய வீடு, ராசி இல்லை என்று கூறிய சொந்தங்களின் முன்னில் , அந்த வீட்டினிலே வளைகாப்பு நடக்க வேண்டும், என்று அபி கூறினாள் , கிரகப்ரேவசத்திற்கு பிறகு, சிறிது நாளிலே பூரணியின் இழப்பு மட்டுமே அங்கு நடந்தது ..

எந்த வீடு ராசி இல்லை என்று கூறினார்களோ, அந்த வீட்டிலே எங்கள் மகிழிச்சியான குடும்பத்தை பார், என்னும் விதமாக, அங்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தேறியது ..

ஒரு வழியாக, ஆதியை சரி கட்டி அவனின் சில்மிஷங்களில் இருந்து போராடி அபியே கீழே வந்து சேர்ந்தாள் ..
ஸ்ரீ, மற்றும் மற்றவர்களும், அவர்களை கிண்டல் அடித்து ஒரு வழி ஆக்கி விட்டனர் , அபிக்கு தான், உன்னாலே பாரு, என்று ஆதியையும் முறைத்து, அவர்களிடம் இருந்து அவளின் வெட்கத்தை மறைக்க என்று படாத பாடு பட்டு விட்டாள் ..

ஆதி எதுவும் கண்டு கொள்ளவில்லை, என் பொண்டாட்டி , என் உரிமைன்னு, அலட்டி கொள்ளாமல் இருந்தான் ..
அவன் வந்தவர்களை கவனிக்க சென்றான் ..

பரம்பரை நகையில் ஸ்ரீயும், அபியும் அந்த வீட்டின் மருமகள்களாக , வலம் வந்தனர் ..வந்தவர்களை வர வேற்று , பெரியவர்களிடம் ஆசி பெற்று , அபி அங்கு அமர வைக்க பட்டாள் ..

அவள் உடை நகை என்று அனைத்தும், கண்டு லீலா இவளுக்கு வந்த வாழ்வை பாரேன் , என்று வயிறு எறிந்தாள் ..

முதலில், அம்புஜம் மாமி, நலங்கு வைத்து, நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் ..

அபியை நினைத்து, ஆனந்த கண்ணீரில் ராம மூர்த்தி , சிவநேசனின் கைகளை பிடித்து கொண்டு கண்ணீர் சிந்தினார் ..

நிகழ்ச்சி முடிந்ததும், லலிதா அபியை சாங்கியதிற்கு என்று தாய் வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று, அன்று மாலையே மீண்டும், கொண்டு வந்து ஆதியின் வீட்டிலே விட்டு விட்டார் ..

அவரே அங்கு அழைத்து சென்று பார்த்து கொள்வதாக கூறியதற்கு, பக்கம் தானே அனைவரும் இங்கேயே வந்து விடுமாறு கூறி விட்டான் ..

அவளின் நட்புகளும், அவளின் பெரிய தந்தை குடும்பமும், ஊருக்கு புறப்பட்டு சென்றனர் ..

இன்னும் அவள் அம்புஜம் மாமி, விச்சு என்று அவர்கள் நட்புகளுடன், தொடர்பில் தான் இருக்கிறாள் ..
அதற்கு முழு ஒத்துழைப்பும் , ஆதியே ..

திருமணத்திற்கு பிறகு, கணவனின் குடும்பம் என்று அபியின் உலகம் குறுகி விடாமல் , மேலும் அவளின் அன்பால் , நிறைய அன்பு உள்ளங்கள் இணைந்து பெருகியே உள்ளது ..

நிஷாவின் தந்தை அங்கு உள்ள தொழில் வீடு என்று அனைத்தும் வித்து அதில் கிடைத்த பணத்தில், டெல்லியில் ஒரு வீடு வாங்கி, அங்கு தங்கி விட்டார் ..

காரணம் தெரிந்தவர்கள் அவரை அவரின் விருப்பத்திற்கு விடுமாறு சிவநேசனிடம் கூறி விட்டனர் ..

கிஷோர், அவனுடன் இருக்க சொன்னதற்கு , மகள் வீட்டில் தங்குவது சரி வராது என்று, அங்கு இரண்டு வீடு தள்ளி , விலைக்கு வந்த ஒரு வீட்டை வாங்கி விட்டார் ..

மகளின் விருப்பத்திற்கு ஏற்ப, அங்கு டெல்லியிலே அவளின் பெயரில் ஒரு சூப்பர் மார்க்கெட் வாங்கி விட்டார் ..

இப்பொழுது அவர் நிஷாவுடன், இழந்த காலங்களை எல்லாம், அவரின் இரு பேரன்களுடன் இனிதே செலவிடுகிறார் ..

பகலில், நிஷாவுடன், சிறிது நேரம் கடையில் இருப்பார், பிறகு, இரு பேரன்களுடன், வீட்டிற்கு வந்து பொழுதை கழிப்பார் ..
அதுவரை அவர்கள் ஷோபாவுடன் இருப்பர் ..
மீண்டும் மாலை குழந்தைகளுடன், எங்கேனும் வெளியே சென்று விட்டு வருவார் ..

இப்படி அவரின் நாட்கள் இனிதாக சென்றது ..
பிரேமாவின் துரோகத்தில் இருந்து அவரை காக்க வந்த தெய்வங்களாகவே அவரின் இரு பேரன்களை நினைத்தார் ..
நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவரும் பெங்களூரு வந்து செல்கிறார் ..
அப்படி தான் இன்று வளைகாப்புக்கும் வந்தார்..

அவனின் அக்கபோர் தாங்காமல், லலிதாவும், இங்கு ஆதி வீட்டிலே இருந்து கொண்டார் ..
அபியை ஸ்ரீ லலிதா, என்று அனைவரும் நன்றாகவே பார்த்து கொண்டனர் ..
அதிலும், ஆதியை கேட்கவே வேண்டாம் , அவளை தாங்கினான் என்றே சொல்ல வேண்டும் ..
அவர்களின் காதலின் பரிசாக அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது ..

ஆதிக்கு கண்ணீர் வந்து விட்டது , அவனின் மகளை கைகளில் ஏந்தியதும் ..
அவனின் அன்னையே வந்து பிறந்ததாக பூரிப்பில் இருந்தான் ..


மூன்று வருடங்கள் கழித்து ,

"பூர்ணா குட்டி, இங்க பாருங்க, அப்பா வரும் போதும் இப்படியே சமத்தா சிரிச்சிட்டு இருக்கனும்," என்று அர்ஜுனும் சந்தீப்பும், அவளிடம், குட்டி காரணம் போட்டு , அணைத்து வேடிக்கையும் காட்டி அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தனர் ..

அதற்கு கரணம், ஆதியின் மகள் பூர்ணாவிற்கு அன்று மொட்டை அடித்து காது குத்தியதே காரணம் ..

பூர்ணா பதினோரு மாதம் இருக்கும் போது அணைத்து சொந்தங்களையும் அழைத்து , குலா தெய்வ கோயிலில் , மொட்டை அடித்தனர்.
மொட்டை அடிதத்திற்கே ஆதியின் மகள் ஆர்பாட்டம் செய்து விட்டாள் , காது குத்தும் நேரம், ஆதியும், அவன் மகளை அங்கு இருந்து, அழைத்து சென்று விட்டான் , அவன் மகளுக்கு வலிக்கும் என்று ..

அந்த சடங்கு பாதியிலே நிற்கிறதே என்று அபிக்கும் வருத்தம் ..
பூர்ணாவிற்கு இரண்டு வயது பூர்த்தி ஆனதும், ஆதியை தவிர அனைவரும் அவனிற்கு தெரியாமல், கோயிலிற்கு சென்று, மீண்டும், சந்தீப்பின் மடியில் பூர்ணாவை அமர வைத்து , மொட்டை அடித்து காது குத்தினர் ..
"ஐயோ என் மருமக இப்போவே என்னை முறைக்கிறாளே, இப்படி சிக்கலான விஷயத்துக்கு எல்லாம் தாய் மாமனை கோத்து விட்டு அழகு பார்க்குறாங்களே ," என்று பூர்ணாவை மடியில் அமர வைக்கும் போது ,சந்தீப் புலம்பினான் ..

அழாதே பூர்ண சரி ஆகிடும், என்று பூர்ணாவை சமாதானம் செய்தான் ஐந்து வயது ஆரவு ..
திவ்யா சந்தீப்கும், மூன்று வயதில் சஞ்சய் என்ற மகன் இருந்தான் ..
பெரியவர்களின் நட்பு போலவே குழந்தைகளும், நட்புடன் இருந்தனர் ..

ஒரு வழியாக பூர்ணாவும் வலியில் அழுதாலும், அவளின் காதில் அழகாக இருந்த கம்பளை தொட்டு காட்டியதும், வலி மறந்து சிரித்தாள் ..
அதன் பிறகே, அபிக்கும் வேண்டுதல் நல்ல படியாக நிறைவேறிய திரிப்த்தி ..
வீட்டிற்கு அனைவரும் வந்து சேர்ந்தனர் ..
ஆனால் அபியை தவிர ஆதி வீட்டிற்கு வந்து இதை தெரிந்து கொண்டால் , என்ன கூத்து நடக்கும் என்று அனைவருக்கும் ஒரு பயம் ..

பூர்ணாவிற்கு ஒரு சின்ன முகம் சுணக்கம் இல்லாமல் அவளின் தந்தை தாங்குவானே , இப்பொழுது அவனிற்கு தெரியாமல் காது குத்தியது தெரிய வந்தால் , என்ன நடக்குமோ என்ற பயம் தான் ..
அதனாலேயே , அர்ஜுனும் சந்தீப்பும், பூர்ணாவை , சிரிக்க வைக்கும் முயற்ச்சியில் இருந்தனர் ..


ஆதியின் வண்டி சத்தம் கேட்டதும், அவனின் சின்ன சிட்டு எப்பொழுதும் போல் , வாசலிற்கு விரைந்து சென்றாள் ..
ஆதியும் கண்டிப்பாக அவன் மகள் காத்து இருப்பாள் , என்று அவளின் வருகை நினைத்து, மகிழ்ச்சியுடன், காரை நிறுத்தி இறங்கினான் ..
அதுவரை அனைவருடனும் சிரித்து கொண்டிருந்த மகள், ஆதியை பார்த்ததும், உதடு பிதுக்கி , கண்களில் நீருடன் அவள் கைகளை காதில் தொட்டு தொட்டு காட்டி அழுகைக்கு தயாரானாள் ..

ஆதிக்கு மகளை கண்டதும் அதிலும், அவளின் அழுகையை பார்த்ததும் பொறுக்க முடியாமல், அவளை தூக்கி அணைத்து வீட்டிற்கு வந்து அனைவரயும் ஒரு வழி ஆகி விட்டான் ..

யாரை கேட்டு என் பொண்ண இப்படி கொடுமை பண்ணுறீங்க , இப்போ காதுக்கு கம்மல் இல்லனு யாரு கேட்டா , என்று அவன் கத்தி கொண்டிருந்தான் ..
ஆதியின் குரல் கேட்டு அபி கீழே இறங்கி வந்தாள் , அவன் யாரை பற்றியும் கவலை படாமல் அவள் மகளிர்க்கு உடல் சூடு இருக்கா என்று ஆராய்ந்து கொண்டிருந்தான் ..
அது எல்லாம் செக் பண்ணிட்டோம் ஆதி , பூர்ணாக்கு பிவேர் எல்லாம் இல்லை , நீ பயப்படாதே , என்று திவ்யாவும் அவள் பங்கிற்கு அவனை சமாதானம் செய்தாள் ..

"நிறுத்துங்க ஆதி , உங்க பொன்னரசிக்கு ஒன்னும் இல்லை , இவ்வளவு நேரம் எல்லாரோடும் கெக்க பிக்கணு சிரிச்சிட்டு இப்போ உங்களை பார்த்ததும் அழுறா ," என்று அபியும் அவனிடம் சண்டையிட்டாள் ..
அபியை கண்டதும் ஆதி அடங்கினான் , "இவனுக்கு அபி தான் சரி," என்று சிவநேசனும் ஆதியை திட்டி விட்டு அவரின் பேத்தியை அழைத்து கொண்டு உறங்க சென்றார் ..

அனைவரும் அறைக்கு சென்றதும், அவனுக்கு உணவு கொடுத்து , அபி அமைதியாக அறையில் சென்று படுத்து விட்டாள் ..
ரொம்ப பண்ணிட்டோமோ , என்று ஆதியும் அறைக்குள் நுழைந்தான் ..
அங்கு அவன் மனைவி முதுகு காட்டி படுத்து இருந்தாள் , "ஹே என்னடி கோவம், நான் தான் கோவ படணும், என் பொண்ணு, வலியில இன்னைக்கு துடிச்சு இருப்பா , இப்போ காது குத்தலான என்ன கெட்டு போச்சு, குழந்தையை போய் படுத்தி எடுக்கிறீங்க , இதுல என் மேல மேடம்க்கு, கோவம் வேற , என்று ஆதியும் அவளிடம் எகிறி கொண்டிருதான் ..

அவள் அவனை பார்க்குமாறு எழுந்து அமர்ந்ததும், அவனின் தைரியம் எல்லாம் எங்கு சென்றதோ, குரல் மிகவும் அடங்கிற்று ..

"இல்ல சின்ன குழந்தை அதான்," என்று அவ்வளவு சிறிய குரலில் கூறினான் .. "நீங்க எல்லாம் டாக்டர்னு வெளிய போய் சொல்லிடாதீங்க , அப்போவே செய்து இருந்தா , இந்த அளவுக்கு கூட வலி தெரிந்து இருக்காது , இதுல அவ அதுக்கும் மேல, உங்கள பார்த்ததும் எல்லா சலுகையும் எங்க இருந்து வருதோ, அப்போ தான் எல்லாரையும் போட்டு குடுக்கிறா," என்று அவள் மகள் தந்தையுடன் செல்லம் கொஞ்சுவதை கோவமாக கூற முயன்று ,பெருமையாக கூறினாள்..

"ஆதி, நீங்க உங்க அம்மா கிட்டயும் , நான் என் பெத்தவங்க கிட்டயும் எப்பிடி சலுகையா இருந்தோம்னு , நமக்கே தெரியும், அவங்க இல்லன்னுதும், எவ்வளவு கஷ்ட பட்டோம்னு தெரியும், நம்ம பொண்ணுக்கு , எல்லாமே நம்ம இருக்குற வரை பழக்கணும், நீங்க பூர்ண விஷயத்துல மட்டும் ரொம்ப சென்சிட்டிவா இருக்கீங்க , அவள ரொம்ப பொத்தி பார்க்கிறீங்க , அதுல அவ எப்படி வளரும்னு தெரியாம போய்டுமோ எனக்கு பயமா இருக்கு ," என்று அபியும் அழுதாள் ..

"ஹே என்ன இவ்வளவு சீரியஸ் ஆகுற, ஏன் பழைய விஷயம் எல்லாம் பேசுற , என்று ஆதியும் அபியை அணைத்து ஆறுதல் செய்தான் ..
நம்ம அவளுக்கு நல்ல அப்பா அம்மாவ இருந்து வழி நடத்துவோம் சரியா, நீ எதை நினைத்தும் கவலை படாத .."

"ப்ளீஸ் டா நீ அழுதா என்னால தாங்க முடியாது," என்றான் ஆதி , அபியும் அழுகையை நிறுத்தி, "ஹ்ம்ம் , இவ்வளவு நேரம் பொன்னு அழுததை தாங்க முடியல , இப்போ நான் அழுதவா , நான் அப்படி என்ன ஸ்பெஷல் , என்று அபியும் அவனிடம் வம்பு செய்தாள் ..

"தெரிஞ்சே கேட்குறே, பார்த்தியா , நீ தான் டீ எல்லாம், நீ ஸ்பெஷல் தான் , நீ எனக்கு இல்ல, அப்டினு ஒரு நிலைமை வந்த அப்போ கூட உன் நினைப்பு தான் என் இதயதுக்குள்ள இருந்து என்ன வழி நடந்துச்சு , உன் நினைவுல தான் நான் வாழ்ந்தேன் ..

நீ வந்த , என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்தது, பூர்ணா அவ நம்ம தேவதை, என் அம்மா ," என்றான் ..
உங்க தேவதை , இன்னும் கொஞ்ச பெரிய பொண்ணு ஆனதும், இப்போ மட்டும் நம்ம கம்மல் போட்டு இருக்கலனா , காதுல மூணு இடத்தில குத்திட்டு வந்து இருப்பா ஸ்டைல்னு ..

இருவரும் அதற்கு சிரித்தனர் ..
அவர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே ..



அனைவரையும் அன்பின் இனியா என்னும் புதிய கதையில் சந்திக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top