என் இதய விழி நீயே 27

Advertisement

achuma

Well-Known Member
hi friends take care all dears
:love:(y)
முன் அனுப்பிய பதிவிற்கு, விருப்பம் மற்றும் கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி ..
அடுத்த பதிவும் படித்து, தங்களின் கருத்தை கூறுங்கள் ..:):love:



அபியின் கூற்றில், ஸ்ரீக்கு தான் மனம் மிகவும் வருந்தியது, அபியும் ஸ்ரீயிடம் , அவளின் முகம் மாறுதலை கவனித்து என்னவென்று கேட்டாள் ..

" இல்லை அபி, சித்திக்கு என்ன குறை , எங்க வீட்டுல , தாத்தா இறந்து போனதும், எவ்வளவோ சொல்லியும், பேச்சாலேயே , தனியா போய்ட்டாங்க , சரி பெரியவன்களும் இல்லை , அவங்க அவங்க வாழ்க்கைனு இனி இருக்கட்டும்னு தான் , கடையும் தனியா ஆனது" ..

"அப்படியே அப்பாவும், சித்தப்பாவும் , அவங்க உழைப்பால , மளிகை கடை, அப்படியே சூப்பர்மார்கெட் ஆச்சு, இந்த ஷோரூம் கூட, முதல , என்னோட அம்மாவை தான் பார்க்க சொன்னாங்க, ஆனா அம்மாக்கு, என் கல்யாணம், குழந்தைனு, பார்க்க இருந்ததால, இவங்க பார்க்க ஆரம்பித்தாங்க ..

ஆனா இப்படி அடுத்தவங்க உடைமைக்கு , ஆசை படுவாங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லை அபி ."

"அக்கா! இன்னும் எதுவும் முழுசா நமக்கே தெரியல, எதற்கு தேவை இல்லாம டென்ஷன் ஆகணும், இன்னும் என்னனு தான் பார்க்கலாம், வெய்ட் பண்ணுங்க," என்றாள் ஸ்ரீயிடம் .

"ஆமா இன்னும் என்ன இருக்கு தெரியதற்கு , இத்தனை வருஷம், அவங்க கம்பெனின்னு வெளில ஏமாத்தி இருக்காங்க ,"என்று புலம்பினாள் ..

"அக்கா , அவங்க மட்டும் இல்லை அக்கா , அங்க இருக்கும் சிலரை பற்றி நான் சொன்னேன் இல்லை , அவங்களும் தான் , வசமா மாட்டும் வரை நம்ம எதுவும் நம்ம ரியாக்ஷன, வெளி படுத்தாம இருக்கனும், அதான் சொன்னேன், "என்று ஸ்ரீயை தேற்றினாள் ..

தீபாவளி வருது டா , என்று இருவருக்கும், பேச்சு அதை பற்றிய திசையில் சென்றது , அன்று மாலை ..

பெருசா ஒன்னும் இல்லை மா , காலையிலேயே , பூஜை வேலை எல்லாம் முடிந்ததும் சாமிக்கு படையல் வைக்கணும் , அப்பறம், அன்னைக்கு முழுதும் பிரீ தான் , என்று அந்த வீட்டின் முறையை சொன்னாள் , அபியிடம் ..

எப்பவுமே எங்கயாவது வெளில போயிடுவோம் , அன்னைக்கு நல்ல நாளுன்னு கஸ்டமர் வருவாங்க, ஷோரூம்கு , அதுனால , ஷிபிட் வைத்து வேலைக்கு , ஒர்க்கர்ஸ் வருவாங்க , ஒன்னு மாமா இல்லை அர்ஜுன் அங்க இருப்பாங்க.

மற்ற படி, மத்தவங்க எல்லாரும் வெளியே போயிடுவோம் , அன்னைக்கு தான் என்னோட அம்மா அப்பா, சித்தப்பா வீட்டுல, எல்லாருமே ஒண்ணா வெளியே போறது..

இந்த வருஷம், சந்தீப் எங்கயாவது, ட்ரிப் போகலாம் சொன்னாரு"..
ஆதியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ..

இருவருக்கும் தனிமை கொடுக்கும் பொருட்டு , ஸ்ரீ அறையிலிருந்து வெளியேறினாள் ..

ஆதி குளிக்க சென்றான் , அபியும்,கம்பெனியில் இருந்து எடுத்து வந்த, சில கோப்பைகளில் , அவளின் கவனத்தை செலுத்தினாள்..

ஆதி குளித்து இடுப்பில் துண்டு மட்டும் கட்டி கொண்டு வந்து அபியை பினில் இருந்து அணைத்தான் ..

அவன் உடையில்லா அகன்ற மார்பில் , அவளின் முதுகு படுமாறு அவன் கட்டியணைத்தது அபியால் , உணர முடிந்தது .

ஆதியை பார்க்க சங்கோஜ பட்டு ," கொஞ்சம் கூட ஒரு பொண்ணு முன்ன எப்படி இருக்கனும் தெரிய வேண்டாமா ," என்று அவளின் வெட்கத்தை மறைக்க, ஆதியை வசை பாடினாள் ..
என் பொண்டாட்டி முன்ன நான் இப்படி நிக்கிறதுல , என்ன டீ தப்பு , நீ என்ன பார்க்காம இருக்குறது தான் தப்பு , என்று அவளை , தோள்களை பற்றி அவனை பார்க்குமாறு , முன்னே திருப்பினான் ..
அவனை பார்க்க வெட்கம் கொண்டு, அவன் மார்பில் முகம் புதைத்தாள் ..

"சந்தீப் எங்கயாவது, போகலாமா கேட்குறான் , உனக்கு எந்த இடமா பார்க்கணும் இருந்தா , நீ சொல்லேன் , இந்த முறை உன் சாய்ஸ்," என்றான் .

"அப்படி எதுவும் இல்லை ஆதி , நம்ம அன்னைக்கு, சில பேருக்கு தீபாவளி பரிசு கொடுக்கலாமனு இருக்கேன் , உங்களுக்கு அந்த தேதி ஓகேவா ?"
ஹ்ம்ம் நீ போன்ல சொன்னதும், எனக்கும் ஷாக் தான் , சர்விஸ் வர வண்டிக்கு, பழைய என்ஜின் பிக்ஸ் , பண்றது, புது என்ஜின் , திருடுறது , இது எல்லாம், நீயும் சேரனும் சொன்னதும், அங்க இப்படி எல்லாம் நடக்கும்னு, எனக்கு அதிர்ச்சி தான் ..

"ஆனா அப்படி வண்டி வாங்கும் கஸ்டமரும், வண்டில திரும்பவும் பால்ட் , இருக்கிறா மாதிரி பிரச்சனை இது வரைக்கும் சொன்னதும் இல்லை , அது தான் எங்கயோ இடிக்குது" ..
"அங்க தான் அவங்க நிற்கிறாங்க ," என்றாள் அபி ..

இங்கு பிரேமாவின் வீட்டில் , பிரேமா எங்கும் வெளியில் செல்லாமல், சோகமே உருவாக , அமர்ந்திருந்தாள் ..
விஜயன், மனைவியின் வருந்திய முகம் பார்த்து , அவளின் அருகினில் சென்று, அவரே பேசினார் ..
"பிரேமா, திடீர்னு, நீ நிஷாவை பற்றி சொன்னதும், எனக்கும் கோவம் வந்துடுச்சு , அதான் "என்றார் ..
அவருக்கு அதை பற்றிய கவலை எங்கு இருந்தது , அபி, இதை பற்றி வீட்டினில் யாருக்கேனும் கூறினாளோ , அவர்கள் பிரேமாவை எப்படி நினைப்பார்கள் , என்றே சிந்தனை ஓடியது ..

"இன்னும் இரண்டு நாளில் , தீபாவளி வருது மா , நம்ம போய் மாப்பிளை வீட்டுக்கு போயிடு அண்ணன் சீர் செய்துட்டு வரலாம் , வா ."
"என் அண்ணனும் , இன்னைக்கு, அங்க போறத சொன்னாங்க "..

"ஆமா, தங்கச்சியே போய் சேந்துட்டா , இன்னும் நொண்ண சீரு , இவர் அண்ணா போறாங்கன்னா , சம்மந்தி முறை ஆச்சு, இந்த மனுஷனுக்கு, என்ன , அதான் நான் பெத்த லூசு , மாச சம்பளம் வாங்குற பரதேசியோட ஓடி போச்சே ," என்று விஜயன் முதற்கொண்டு, மகள் மருமகன், என்று பாரா பட்சமின்றி , அனைவரையும் மனதில் வசை பாடினாள்..

"எதுக்கும், அங்க போய் பார்க்கலாம் , அபி வீட்டுல ஏதாவது சொன்னாளா , இல்லை இனி நம்ம கிட்ட , எப்படி நடந்துப்பானு , பார்க்கலாம்," என்று விஜயனுடன் சென்றாள் ..

அபியின் வீட்டில், பிரேமா சென்றதும், அங்கு இருந்த அழகான தோட்டத்தை பார்த்ததும், வயிறு எறிந்தது , "ஹ்ம்ம் , எப்படி இருந்தது, இந்த இடம், இவ்வளவு அழகா இருக்கே இப்போ," என்று தோட்டத்தையே பார்த்து நின்றாள் ..

"என்ன மா இங்கயே நிற்கிற," என்று சிவநேசன் வெளியே வந்து, அவர் மனைவி வீட்டு சொந்தங்களை வரவேற்றார் .

"அபி இங்க வந்ததும், வீடு இந்த தோட்டம் எல்லாம் அப்படியே மாத்திட்டா , இங்க பூத்து இருக்குற பூ மாதிரி தான் எங்க மனசும், இப்போ மலர்ச்சியா இருக்கு , பூரணி இருந்து பார்க்க தான் கொடுத்து வைக்கல," என்று வருந்தினார்.

முறையே நிஷாவின் பெற்றோர் , நிஷா மற்றும் ,அர்ஜுனுக்கு ஒரு தட்டில் , புது துணி , நிஷாவிற்கு ஒரு நகையும், மாப்பிளை அர்ஜுனுக்கு , பணமும் என்று கொடுத்தனர் தீபாவளி சீராக ..

சிவநேசனுக்கு , என்று கொடுத்ததற்கு, அவர் யோசித்தாலும், அவர்களின் வருத்தம் தோய்ந்த முகத்திற்காக , பெற்று கொண்டார் ..
இன்னும் பூரணி இருப்பதாகவே கருதி அவளின் பிறந்த வீடு அவருடன் இருப்பது, அவருக்கு பெருமையே ..

அவரும் சும்மா இல்லாமல், மச்சினர் இருவருக்கும், தேவைக்கு அதிகமே திருப்பி கொடுத்து அனுப்புவார் ..

லலிதா , அபியும், தனது மகளாக கருதி, அபிக்கும், ஆதிக்கும் கொடுப்பதற்கு, ஒரு தட்டில் அனைத்தும் எடுத்து வைத்து கொண்டிருந்தாள் ..

சிவநேசன் என்றும் போல் பேசியதால், அபி ஏதும் வீட்டில் கூறவில்லை , என்று பிரேமா தெரிந்து கொண்டாள் ..

வாய் சும்மா இல்லாமல், அபியை சீண்ட அவளிடம், சென்று, "என்ன அபி , உனக்கு சீர் கொடுக்க, லலிதா அக்கா இருக்காங்கனு ,நினைப்பா" ..

"அவங்க பொண்ணு வாழுற வீடு, உன்னை விட்டுட்டு, அவங்க பொண்ணுக்கு மட்டும் கொடுத்தா , உன் வயித்தெரிச்சல் , அவங்கள ஏதாவது, செய்துட்டா , அதான் ," என்றார் ஏளனமாக ..

அபிக்கு அவரின் கூற்றில் வருத்தம், அவளின் வருந்திய முகம் பார்த்து, பிரேமாவிற்கு பரம சந்தோஷம் ..

தனக்கும், பெற்றோர் இருந்து இருந்தால் என்று அபியால் நினைக்காமல், இருக்க முடியவில்லை ..

ஆதி அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தாலும், அபியை இந்த சீர் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்து, அவளை தான் பார்த்து கொண்டிருந்தான் ..

கம்பெனியில் இது போல் தவறு நடக்கிறது என்று தெரிந்ததில் இருந்து , அவன் பிரேமாவிடம், முன்பு போல் பழகுவதில்லை ..

இவரின் பொறுப்பில் தானே இருக்கிறது , இவருக்கு தெரியாமல் , எப்படி இருக்கும், என்ற குழப்பத்தில் தான் இருக்கிறான்..

அபி இன்னும் பீரேமா மீது அவளின் சந்தேகத்தை முழுதாக கூறவில்லை ஆதியிடம் .

அதனால் அவருடன் சரியாக பேசாமல் , அங்கு அவன் மாமன்களுடன் அமர்ந்திருந்தான் ..

அபியின் முக மாறுதலில், அவளின் அருகில் செல்லும் நேரம் , அபியே சுதாரித்து, "நிஷா வீட்டுக்கு எப்போ போய் உங்க அம்மா வீட்டு சீர் செய்ய போறத இருக்கீங்க ,இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு , இங்கயே இருக்கீங்க," என்று நிறுத்தி நிதானமாக கேட்டாள் ..

அபியின் கேள்வி, "உன் வேலையை முதலில் பார், உனக்கு இங்கு என்ன வேலை," என்பது போன்று இருந்தது ..

இப்போது பிரேமாவின் கன்றிய முகம் கண்டு அபி சந்தோஷம் படலாம், ஆனால் அவள் அப்படி அடுத்தவரின் துன்பத்தில் மகிழ்ச்சி அடையும் பெண் அல்லவே .

என்ன தான் பிரேமாவிற்கு பதில் கொடுத்தாலும், அபிக்கு அவளின் பெற்றவர்களின் நினைப்பு இருந்து கொண்டே இருந்தது ..

பிரேமா தான் அவமானத்துடன் , அவள் கணவர் இருக்கும் இடம் நோக்கி சென்றாள் ..

லலிதா, அபியை நெருங்கி அவளிடம் கொடுக்கும், நேரம், "உள்ள வரலாமா, என்று குரல் கேட்டு அனைவரும், வெளியே பார்வை பதித்தனர் ..
வெளியே தினேஷ் நின்று இருந்தான் ..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா டியர்

தினேஷ் அபிக்கு தீபாவளி சீர் கொண்டு வந்திருக்கிறானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top