என் இதய விழி நீயே 23

Advertisement

achuma

Well-Known Member
hi friends epadi irukeenga
i put next ud
please read and give comments

thanks for all your support

takecare:love:(y)




என் இதய விழி நீயே 23

வீட்டிற்குள் வந்ததும் அபியின் அழுகை கேட்பாரின்றி அதிகரித்து கொண்டே இருந்தது , திவ்யா வீட்டினுள் ஆர்பாட்டத்துடன் வரும் வரை.

அபியின் வீட்டு பக்கம் வந்து ரொம்ப நாட்கள் ஆனதால் , இன்று சந்தீப்பும் திவ்யாவும் வருவதாக இருந்தது .

ஆதியும், சந்தீப்பும், திவ்யாவை அவர்களுக்கு இருக்கும் சிறுது வேலைகளை முடித்து விட்டு வருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

அபியின் அழுகை கண்டு திவ்யா பதறி என்னவென்று கேட்டு அபியை அணைத்து கொண்டாள் .

அபி அவளின் அழுகையை கட்டுப்படுத்தினாலும் , அவளின் அன்னையின் அரவணைப்பிற்கு பிறகு வெகு நாட்கள் கழித்து கிடைத்த ஒரு தோழியின் ஆறுதலில் , அபியும் நடந்த விஷயங்களை கூற ஆரம்பித்தாள் .

திவ்யா , " நான் பண்ணதுல எதாவது தப்பு இருக்கானு நீயே சொல்லு , ஒரு கஸ்டமர் வந்து அவருக்கும் பிடித்த மாடல் கார் கேட்டாரு, நான் அந்த மாடல் இல்லாததால , ஒன்னு டைம் கேளுங்க , இல்ல வேற மாடல் காட்டுங்கனு, கஸ்டமர ஹாண்டில் செய்த குமாருன்னு, ஒரு சேல்ஸ் பெர்சன் கிட்ட சொன்னேன்.
அவரும் உங்களுக்கு என்ன தெரியும்னு சொல்லி , கடைசியில , அந்த மாடல் எங்களுக்கு வர வைக்க தெரியும், அது எல்லாம் ஒழுங்கா செய்து விடுவோம்னு , என்னையே முன்னாடி நிறுத்தி, எல்லா வேலையும் செய்தார் .

சரி ரொம்ப வருடம் வேலை பார்க்குறாருனும் , அவருக்கு தெரியும்னு, நானும், அந்த கஸ்டமருக்கு ஹோப் குடுத்து அனுப்பி வைத்தேன், கடைசில இன்னைக்கு அந்த கார் வரவே இல்லை ...

நான் தான் அதற்கு காரணம்னு , அந்த கஸ்டமர் முன்ன என்னை மாட்டி விட்டுட்டாரு , அவர் மேல தப்பே இல்லைனு சாதிக்கிறாரு ...

நான் எங்க தப்பு செய்தேனு எனக்கே தெரியல ," என்று சிறு பிள்ளை போல் உதட்டை பிதுக்கி கொண்டு விசும்பலுடன் கூறி கொண்டிருந்தாள் திவ்யாவிடம் .

"கஸ்டமர் கிட்ட டிரெக்டா அந்த மாடல் கார் இல்லைனு , ஒரு எம் டீயா நீ அவங்க கிட்டயே சொல்லி இருக்கனும் நீ செய்த தப்பு அங்க தான்," என்ற ஆதியின் குரலில், அபி திடுக்கிட்டு திரும்பினாள் .

அபி அனைத்தும் கூறி கொண்டிருக்கும் போதே ஆதி வந்து கேட்டு விட்டான் , அவனிற்கு, அந்த குமார் மீதே கோவம், என்ன தான் சீனியர் என்றாலும்,அவர் அவர் பொறுப்புகளில் இருப்போருக்கு மரியாதை கொடுக்க தெரியாத ஆட்களா அவனின்
கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள் என்று அவனிற்கு அதிர்ச்சியே ...

அதிலும் அவன் மனைவி அந்த குமாரிடம் திட்டு வாங்கி கொண்டு வந்தது, அவனிற்கு அபியின் மீதும் கோவமே ...

இன்னும் எத்தனை நாட்களுக்கு, இப்படி இவள் பயந்து கொண்டு இருப்பது, என்று அவளின் மீதே கோவம் கோவமாக வந்தது .

இருவரும் ஆதி சந்தீப் வந்தது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தனர், பிறகு ஆதி கூறியதை கேட்டு அந்த பக் கம் திரும்பினர் .

ஆதி , என்கிட்ட இவளுக்கு இப்படி எல்லாம் கட்டி புடிச்சி சொல்லணும்னு தோணுதா பாரு , என்று அவளை மனதினில் சிடுசிடுத்து கொண்டிருந்தான் ...
"என்னையும் இந்த மாதிரி கட்டி புடிச்சுக்கிட்டே சொல்லலாம்," என்று சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு , ஆதி கூறினான் .

"அடப்பாவி," என்று திவ்யா , ஆதியின் முதுகில் ஒன்று போட்டு இருவருக்கும் தனிமை கொடுக்கும் பொருட்டு அங்கு இருந்து சென்றாள் .

சந்தீப்பும், "நீ நடத்து ராஜா," என்று கிண்டலடித்து சென்றான் ..

அவர்கள் இருவரும், செல்லும் வரை புன்னகையுடன் இருந்த ஆதி, பிறகு புன்னகை மறைந்து , அபியை முறைத்தான் .

கண்டவன் கிட்ட எல்லாம் திட்டு வாங்கி கொண்டிருக்கிறாளே என்கிற கோவமே அதற்கு காரணம் .

அபிக்கு, "ஐயோ , நம்ம பண்ண தப்ப இவரு என்ன சொல்ல போறாரோ தெரியலையே," என்று அனைத்து தப்பும் அவள் மீதே என்பது போன்று,

பிரேமா அபி மீது வடிவமைத்த உருவத்திற்கு உயிர் கொடுத்தாள், அபி ..

கையை பிசைந்து கொண்டு திரு திரு என்று முழித்து கொண்டிருக்கும் அபியை இழுத்து அணைத்து சமாதானம் செய்ய துடித்த கைகளை அடக்கி , "ஒரு கம்பெனி முதலாளியா , நீ சொல்றத கேட்கறது , விட்டுட்டு ,கண்ட கண்ட நாய்ங்க கிட்ட நீ திட்டு வாங்கிட்டு வந்து இப்படி நிற்கிற , என்று அவன் கேட்ட கேள்வி யின் அழுத்தத்திலே , அபி ஆதியை நிமிர்ந்து பார்த்தாள் , அவன் என்ன கூறுகிறான் என்று .

"இல்லை , நான் தப்பு , செய்து இருக்கேன், அதான் என்று அபி இழுத்தத்திற்கு , "என்ன தப்பு? "

"நீ சொன்னதை பார்த்த வரை எதுவும் தப்பு இல்லையே , நீ டிரெக்டா அந்த கஸ்டமரிடமே பேசி இருக்கலாமே, உன்னோட ஐடியா சரி என்று பட்டதுனா" ..

"எதுக்கு தயங்குற , இன்னும் நீ சார்ஜ் வேற எடுக்காம இருக்கிறே, இரண்டு பேர் பேசும் போது , நீ நடுவுல போகாம இருந்தது எல்லாம், ஓகே தான்" ..

"அது எங்க, எப்படிங்கிறதுல இருக்கு , அடுத்த தப்பு, அந்த கம்பெனில இன்னும் நீ எம் டீயா , உன்ன இன்வால்வ் செய்துகாமா இருக்கிறது , அதான் எவன் எவனோ உன்னை திட்டுறான் "...

"இல்லை அத்தை பார்த்து வேலையில வைத்தவங்க, அந்த குமார் சார் , அதான் "...
"அம்மா இது போல ஆட்களை எல்லாம் வேலையில் வைக்க மாட்டாங்க, நான் என்னனு பார்க்கிறேன் , நீ இப்படி இருக்காத அபி , கொஞ்சம் தைரியம் இருக்கனும்,"

"அபி! எங்க போச்சு உன் தைரியம் எல்லாம் ?" என்று அவனின் கனிவான குரலில், உருகி தான் போனாள், பெண்ணவள் ..
(ஹ்ம்ம், பிரேமா தான், அபியின் அனைத்து செயலிற்கும், நிஷாவுடன் ஒப்பிட்டு, அவளை மட்டம் தட்டி , அவளை தாழ்வு மனப்பான்மையில் வைத்திருக்கிறாளே , இதில் எங்கு இருந்து தைரியம் இருக்கும், இதில் ஆதி நிஷாவை நினைத்து கொண்டிருக்கிறான் என்று வேறு கூறினால் , அவளிற்கு, ஆதியை பற்றிய சிந்தனையே இல்லாமல் செய்து விட்டாள் ..)

பேச்சுவாக்கில், அபியிடம் ஆதி நெருங்கி அவளை தோளோடு அணைத்து ஆறுதல் கூறினான், சட்டென அபி அவனிடம் இருந்து விலகி, அவனின் கனிவான முகம் கோவமான முகமாக மாறியதை கண்டு , ஓடியே விட்டாள் அறைக்குள் ...

"ச்சே , இவளுக்கு இன்னுமா என்னுடைய மனசு தெரியல , நான் அவள் மீது வைத்து இருக்கும் காதல் , என்னுடை எந்த ஒரு செயலிலும் தெரியலையா , என்று நொந்து கொண்டான்" ...

"டேய், நாங்க வரலாமா?" என்று சந்தீப்பும் வீட்டினுள் வந்து சேர்ந்தான்...
"வாடா, "என்று ஆதியும் அவனின் தோளில் தட்டி, உள்ளே அழைத்தான் .

உடனே அவனிற்கு தெரிந்த ஆட்களில் ஒருவரிடம் குமாரை பற்றி கேட்டதற்கு, அவரும் நல்ல விதமாக கூறவில்லை ...

யார் அவனை வேளைக்கு வைத்தது என்று கேட்டதற்கு, அவனும் சந்தோஷ் என்ற எச் ஆர் பேரினை கூறினார் ..

மேலும், கம்பனியை பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து பொதுவான தகவல் கேட்டதற்கு, அங்கு இருக்கும் சிலர் சரி இல்லை என்றும் , அவர்கள் அனைவரும் சந்தோஷ் என்னும் எச் ஆர் தான் வேலையில் வைத்தார் என்றும் கூறினான் ...

இந்த விஷயம் ஆதிக்கும் உவப்பானதாக இல்லை , "சம்திங் ஹாப்பெனிங்," என்று அவனும் முனுமுனுத்துக் கொண்டே அமர்ந்தான் ...

"டேய் என்னடா நல்ல தானே வந்த , என்ன டா ஆச்சு , அபியை திட்டுற அளவுக்கு அங்க யாருக்கு டா , தைரியம் இருக்கு," என்று சந்தீப்பும் கேட்டான் ...
ஆதியும் நடந்து அனைத்தும் கூறி, "இனி அங்க என்ன நடக்குதுன்னு பார்க்கணும் டா , ஏதோ தப்பா இருக்கு , சந்தோஷுனு ஒரு எச் ஆர் சொல்லறாங்க," சரி இல்லை என்றான் ...

எதிலும், பிரேமா நேராக செயல் படாமல் , எச் ஆர் வைத்து , அவளிற்கு தேவையான ஆட்களை கம்பனியில் நுழைத்து கொண்டாள் ...

அதனால் , யாருக்கும், அவளின் மீது சந்தேகம் வரவில்லை ..
இரவு உணவு அங்கே முடிந்ததும், திவ்யாவுடன், சந்தீப் அவன் வீட்டிற்கு சென்றான் ..
அடுத்த , பேச்சாக நிஷாவிற்கு , ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் சடங்கிற்கு, அனைவரும் செல்வது பற்றிய பேச்சை சிவநேசன் எடுத்தார்..

ஷோபா அனைவர்க்கும் அழைப்பு விடுத்தார் , விஜயனும் அவர் பங்கிற்கு அழைத்தார் ...அதனால் சிவநேசன் டெல்லி கிளம்புவதை பற்றி கேட்டார் ...

அபி ஏதும் கூறாமல் அமைதியாக இருந்ததால் , ஆதி தான் பார்த்துக்கொள்வதாக கூறினான் தந்தையிடம் ...

அர்ஜுன் குடும்பமும், அன்று அங்கு தான் இருந்தது ...
பிரேமா , அபி வீட்டினில் ஏதேனும் கூறினால் , பார்த்து கொள்வோம், என்று மிகவும் அலட்சியமாக தான் இருந்தார் , ஏனென்றால் , அபியை ஒரு பொம்மை போன்று அவரின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் தான் மாற்றி வைத்திருக்கிறாரே , அந்த துணிச்சலில் தான் .

அறைக்குள் வந்ததும் , எப்படியோ, அபிக்கும் ஒரு மாற்றமாக இருக்கும் என்ற எண்ணத்தில் , "அபி ! நீயும், அங்க போய்ட்டு வா, அப்பா , அண்ணி , கிளம்புறாங்க, உனக்கும் ரிலாக்ஸா இருக்கும் ," என்றான் ...

அபிக்கு, டெல்லி , நிஷா வீடு என்றதும், முக சுழிப்பில் அவளின் விருப்பமின்மையை காண்பித்தாள் ...
அது வரை அவன் வைத்திருந்த பொறுமை போனது ...

நான் போகலை , என்றாள் , சரி , என்று அவனின் பொறுமை இழுத்து பிடித்து சம்மதித்தான் ...

பிரேமா அத்தையை , மாமா இந்த முறை கண்டிப்பா அழைத்து போகணும்னு சொல்றாங்க, அதுனால , ஷோரூமுக்கு , சனி , ஞாயிறு , இரண்டு நாட்களும் , நீயே முழு நேரமும் இருந்து பார்த்துக்கணும், அவர்களுக்காக," என்றான் ...

அபிக்கும் கோவம் வந்து விட்டது , ஏற்கனவே, பூரணியின் பெயரை சொல்லி, கம்பெனியை சரியாக பார்த்து கொள்ள வில்லையோ என்று தன் மீதே சந்தேகம் வரும் அளவிற்கு பிரேமா அபியை உருவாக்கி வைத்துள்ளார் .

அந்த பயமே அபிக்கு , இனியும் அங்கு செல்ல அவளிற்கு விருப்பம் இல்லை ..

இப்பொழுது, ஆதி என்னவோ, இரண்டு நாட்கள் முழுதும் அங்கு இருந்து வேலை கவனிக்க வேண்டும் என்றால் , "இல்லை நான் போகமாட்டேன்," என்றாள் திக்கி திணறி .

அவ்வளவு தான், ஆதிக்கு கோவம் வந்து விட்டது , " போக மாட்டேனா," என்று பல்லிடுக்கில் வார்த்தயை கடித்து துப்பினான் , "எப்பவுமே போக மாட்டேன்," என்று பட்டென்று அபியும் கூறினாள் .

"இங்க பாரு, பொறுமையா உனக்கு சொல்றேன் , இப்போ ஏதோ டென்ஷன்ல இருக்க , கொஞ்ச நாட்களுக்கு போகமாட்டேனா , சரி , எப்பவுமே போக மாட்டேன்னு சொல்றது , நல்ல இல்லை அபி"...

"உன்னோட பொறுப்பு , உன் கம்பெனி , நீ ஒழுங்கா செய்யலான எப்படி, எதற்கு இந்த பயம்,"

அவளின் கடமையில் இருந்து பயந்து ஓடலாமா , எப்பொழுது தான் தைரியத்துடன் செயல் படுவாள் , என்னும் அர்த்தத்தில் தான் ஆதி கேட்டான் , அபிக்கு அன்று நேரம் சரி இல்லை போலும்.

ஆனால், அபி தான் தவறாக புரிந்து கொண்டாள் .

"தந்தைக்கு மதிப்பு கொடுத்து தன்னை திருமணம் செய்து கொண்டான் , இன்னும் பழய காதலில் இருந்து வெளியில் வர முடியாமல் , தவிக்கிறான் ..
என் மீது பாவ பட்டு வாழ்க்கை குடுத்து இருக்கிறான் ,
அன்று ஆண்டி சொன்னதும் இதே தானே , என்னுடைய கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று , நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் , என்று சிந்தித்தாள் ..

"பிரேமா ஆண்டி அவர் மகளின் சடங்கிற்கு செல்வதற்கு , தான் கம்பெனிக்கு செல்லவேண்டும் ,"
அபிக்கு சலிப்பு வந்து விட்டது ,"யாரு அப்படி எனக்கு வாழ்க்கை கொடுக்க சொன்னா , என்று ..

"என்னால எங்கயும் போக முடியாது ஆதி , என்ன நீங்க படிக்க வைக்கிறிங்களா , அதையும் நான் செய்யல , ஆமா என்னோட கடமை எனக்கு தெரியலை" ...
"எனக்கு நன்றி இல்லை , அத்தையோட பெயரை கெடுத்துடுவேனோனு பயமா இருக்கு , எனக்கு தகுதியும் இல்லை, என்று பட பட என்று பேசினாள் ..

எந்த ஒரு விஷயமும், முழு மனசோட செய்து தான் எனக்கு பழக்கம் ...
"உங்களை போன்று மனதில் ஒருத்திய வைத்து கடமைக்காக என் கூட வாழுறீங்க பாருங்க, அது போல் எல்லாம் எனக்கு வராது," மாலை அவளை நெருங்கி வந்து அணைத்தை மனதில் வைத்து கூறினாள் ..
அடுத்த வார்த்தை கூறும் முன், பளார் என்று அவன் விட்ட அறையில் ,அவளின் கன்னத்தை பிடித்து அவனை பார்த்தாள் , கண்களில் நீருடன் .
"பூனை மாதிரி இருந்துட்டு, எங்க இருந்து டீ இவ்வளவு வாய் , என்ன பார்த்தா அடுத்தவன் பொண்டாட்டிய நினைக்கிறவன் மாதிரியா இருக்கு?" ச்சே.

"நீயா டீ இப்படி , நான் உன்னோட பேசுனதுல, உன்னோட பழுகுறதுல, என்னோட ஏக்கம் , என் மனசு எதுவுமே உனக்கு புரியலையா ?"

"பாவ பட்டு வாழ்க்கை குடுக்கிற அளவிற்கு, உன்ன நீயே ஏன் இப்படி தாழ்வா நினைக்கிற , இன்னுமா உனக்கு இந்த தாழ்வு மனப்பான்மை போகல?"

"உன் கம்பெனி , அதில் ஒரு பிரச்னை , அங்க இருந்து வெளிய வந்திடுவியா , நின்னு சமாளிக்கணும்னு தெரியலையா"

"என் பார்வையில, என் காதல் உனக்கு புரியலையா, இல்ல யாரை வேணும்னா எங்க அப்பா எனக்கு கல்யாணம் செய்து வைப்பாரா, இல்ல நான் தான் எனக்கு விருப்பம் இல்லாமல் கல்யாணம் செய்துப்பேனா ?"என்று கேட்டான் ...

"உன்னை போல ஒரு தொடை நடுங்கிய , சந்தேக பிராணியை லவ் பண்றேன் பாரு என்ன சொல்லணும்," என்று தலையில் அடித்து கொண்டான் ...

"எதே லவ்வா ..." அபிக்கு அதிர்ச்சி
கோவத்தில் அவனிற்கே தெரியாமல் ஆதியின் காதல் அபியிடம் கூறினான் ...

"உன்னை நான் என்னையே அறியாத வயசுல இருந்து என் மனசுல சுமந்துட்டு இருக்கேன் டீ , என்னோட பொக்கிஷம் நீ , இவ்வளவு இடைஞ்சளுக்கு பிறகு, நீ எனக்கு கிடைத்து இருக்க , அந்த மகிழ்ச்சியை அனுபவிக்காம , என்ன நெருங்க விடாம , நீ தான் என்ன சித்திரைவதை செய்றியே" ...

"நீ என் மனதை புரிந்து நடந்துப்பன்னு உனக்கு நான் டைம் கொடுத்தா , நீ என்னை தவிர வேற என்ன எல்லாமோ நினைக்கிறே , என்று அபியை அடிபட்ட பார்வை பார்த்து வருந்தினான் ஆதி ...

நிஷாவை என்னைக்கும் நான் நினைத்து பார்த்ததில்லை , என் தேவதையா நீ மனசுல இருக்கும் போது , எனக்கு யாரை பற்றிய சிந்தனையும் , வந்தது இல்லை, இனியும் வராது ..

இனி என்னவோ பண்ணு , என்று ஆதியும், அந்த அறையில் இருந்து மொட்டை மாடிக்கு சென்றான் ...
அபியின் வார்த்தை அவனிற்கு அவ்வளவு வேதனையை கொடுத்தது...

அவள் இருக்கும் மனதில் , வேறு ஒருவரை அவளே வைத்து பார்த்தால் ..

அபி அப்படியே உறைந்து நிலையில் அமர்ந்து இருந்தாள் , அவளின் மனது என்ன நினைக்கிறது என்று அவளிற்கே விளங்கா நிலை ..

சந்தோஷமா, அதிர்ச்சியா , கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்க வில்லை ...

"இறுதியில் அவன் மனதில் தான் தானா ?"
 

Nasreen

Well-Known Member
Adhi luv sollitan
But eppadi ninaikanum abi ava purinjukkuvannu
First as a doctor psychologically abi mananilaila avala engayavathu kootittu poi thaniya time spend pannalam
Mmm
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top