என் இதய விழி நீயே 22

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிர்விற்கு, விருப்பம் மற்றும் கருது கூறிய அனைவருக்கும் நன்றி .
இந்த பதிவிற்கும் உங்களின் கருத்தினை எதிர்பார்க்கிறேன்...

be safe take care friends :)(y)



"ஆல் தி பெஸ்ட் ,அபி!" என்று அர்ஜுன் ஸ்ரீ யின் வாழ்த்துக்களுடன், சிவநேசனின் ஆசியுடன், அபியை ஆதி ஷோரூமிற்க்கு அழைத்து சென்றான்...

அங்கு சென்றதும், அபியை அங்கு பணிபுரியும் அனைவர்க்கும் ஆதி முறையாக அறிமுகம் செய்து வைத்தான் ...

இந்த ஷோரூமின் முதலாளி என்று அறிமுகம் செய்ததும், பிரேமாவிற்கு அதுவரை தான் தான் இங்கு அனைத்தும் என்று இருந்த கர்வம் ஆடி வாங்கியது ...

இன்னும் அவளின் கிளப் தோழிகளுக்கு அவளின் ஷோரூம் என்று தான் தெரியுமே ...

வேலை செய்வோர் தன்னை எவ்வாறு பார்கிறார்கள் , என்ற சிந்தனையே மனதில் சுற்றிக்கொண்டே இருந்ததால் , யாரையும் பார்க்க முடியாமல், தலை குனிந்தே நின்று இருந்தார்...

பிறகு அங்கு சென்று எம் டி சீட்டில் ஆதி அபியை அமர சொன்னதற்கு, அபி மறுத்து, "ஆதி நான் எல்லாம் கொஞ்சம் கத்துக்கிறேன், ஒரு தொழில் தெரியணும் என்றால் , அதை பற்றிய தகவல் எல்லாம் தெரிந்து இருக்கணும்னு நான் நினைக்கிறேன்".

"கொஞ்சம் நாள் , நான் இங்க ஒரு ட்ரைனியா , இருந்து எல்லாமே கற்றுக்கொள்கிறேன்"...

"நீங்க என்னை முதலாளி என்று சொன்னதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு, ப்ளீஸ், லெட் ஐ லேர்ன்," என்று விட்டாள் ...

ஆதியும், அவளின் கூற்றில் இருக்கும் உண்மை அறிந்து மனைவியை மெச்சிக்கொண்டான் , அகத்தினில் ...

பிறகு அவனும் விடை பெற்று சென்று விட்டான் ...

பிரேமா அதுவரை அங்கு ஒரு பார்வையாளராக மட்டும் இருந்து, அபியின் செயலை ஓவ்வொன்றும் மனதில் பதிய வைத்து கொண்டாள் ...

"இவ இவ்வளவு தெளிவா இருந்தா நம்ம வேலை ஒன்றும் முடியாதே, எப்படியாவது அவளை முழி பிதுங்க செய்யணும்," என்று நினைத்து கொண்டாள்

"அபி! வாழ்த்துக்கள் மா , அன்னைக்கே வருவேன்னு பார்த்தேன்" ...

"இல்ல எனக்கு வர ஐடியா இல்ல ஆண்ட்டி , இவர் தான் இனி வந்தே ஆகணும்னு , சொல்லிட்டாரு , அதான் ,"என்று பிரேமாவிடம் கூறினாள் ....

"நான் என்ன பண்ணனும் சொல்லுங்க," என்று அவளின் முன்னாள் வந்து நின்றாள் ...

பிரேமாவும், பைனான்ஸ் மேனேஜர் , சேல்ஸ் டிபார்ட்மென்ட் , சர்வீஸ் செஷன் , எச் ஆர் டிபார்ட்மென்ட் என்று அனைத்தும் காட்டி, ஒன்று ஒன்றாக புரிய வைத்தாள், அபியின் கற்றுக்கொள்ளும் ஆர்வம், பிரேமாவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது, "இவ, இவ்வளவு புதி சாலிய இருக்க வேண்டாம்" ...

"எங்க நம்ம வேளைக்கு வைத்த தடியனுக இன்னும் ஒருத்தரையும் காணும்," என்று புலம்பி கொண்டே கான்டீன் பக்கம் அழைத்து சென்றார் ...
அணைத்து துறையிலும், அவளின் ஆட்கள் சில பேர் அவளின் குள்ளநரி செயலுக்கு உதவுவதற்கு என்று வைத்திருந்தாள் ...
அங்கு சென்றதும் , அவளின் எடுபிடிகள் தேநீர் அருந்தி கொண்டிருந்த இடத்திற்கு அழைத்து சென்றார் ...

அபியை பிரேமாவுடன் கண்டதும், மரியாதை கருதி , அனைவரும் எழுந்ததும், பிறகு அவர்களிடம், புது முதலாளி என்றார்...
அந்த ஒரு வார்த்தையிலே அவர்களும் கண்டு கொண்டனர், பிரேமா இரண்டு நாட்களுக்கு முன்பு , அபியை பற்றி கூறியதினை ...

அதில் சிலர், அவளை அலட்சியமாகவும், சிலர் அவளின் அழகை அடைய ஆர்வமாகவும் பார்த்தனர் .

அபி ஒரு சிலரின் பார்வையினை கண்டு கொண்டு, அங்கு அசௌகரியத்துடன் நிற்க முடியாமல், "நான் ரூம்க்கு போறேன் ஆண்ட்டி ," என்று சென்று விட்டாள்


அபி ஓட்டமும் நடையுமாக அவ்விடத்தினில் இருந்து வந்து விட்டாள் , "மேடம் குட்டி சூப்பர்," என்று அபியை பார்த்து வழிந்து இருந்தது ஒரு ஜென்மம் ...
"டேய்! அவளை லேசா நினைக்காதிங்க , ரொம்ப புத்திசாலியா இருக்கா , நமக்கு பிரச்னை இல்லாம அவ கதையை முடிக்கணும் , பார்த்துக்கங்க," என்று பிரேமா அவ்விடத்தில் இருந்து சென்றாள் ...

"இந்த சிறு பெண் என்ன செய்து விட முடியும்,"என்று அபியை அலட்சியதுடன், நினைத்தவர்கள், அகன்றதும்,அவளை வழிசலுடன் பாத்துக்கொண்டிருந்த , சில ஜந்துகள் , அவளை அடைய நேரம் பார்த்து கொண்டிருந்தனர்...


"என்ன அபி, ஏதோ யோசனையா இருக்கிற மாதிரி இருக்கு," என்று அவளின் முகத்தை பார்த்து பிரேமா கேட்டார் ...
அவளும் அங்கு கேன்டீனில் ,இருப்போரை பற்றி கூற வாய் எடுத்ததும்,சுதாரித்த பிரேமா, "அவங்க இந்த கம்பனிக்கு ரொம்ப முக்கியமானவங்க , உங்க பூரணி அத்தை காலத்தில இருந்து, இந்த கம்பெனி வளர்ச்சிக்கு,உழைக்கிறவங்க ...

உங்க அத்தை தான் அவர்கள் வேளைக்கு தேர்வு செய்தது, ரொம்ப நம்பிக்கையானவங்களும் கூட , என்று சொல்லிவிட்டாள்(அபி வாய் அடைக்க ஒரே பொய்யா அடித்து விடுறது ) ...

"அத்தைக்கு முக்கியமானவங்களா ,இங்க இருக்குறவங்க முகத்தை பார்த்தா அப்படி இல்லையே," என்று தனக்குள் நினைத்து கொண்டு , அங்கு இருந்து ,மற்றொரு ஷோரூம், வந்தாள் ...

அன்று வீட்டிற்கு வந்ததும், ஆதி மற்றும் சிவநேசன் எதிர்பார்ப்புடன், அவளின் முதல் நாள் ஷோரூம் அனுபவம் பற்றி கேட்டதற்கு , அவர்களின் ஆர்வமான முகத்தை பார்த்ததால் , ஏதும் தவறாக கூறாமல் , நல்ல விதமாகவே கூறி , உறங்க சென்று விட்டாள் ....

தூக்கம் தான் வருவேனா என்றது, அந்த கயவர்களின் முகமே அவளின் உறக்கத்தில் வந்து சென்றது ...
ஒரு கட்டத்தில் , எழுந்து அமர்ந்து விட்டாள் , பிறகு பூரணியின் புகைப்படம் அங்கு இருப்பதை பார்த்து , அத்தை வேளைக்கு வைத்த ஆட்கள் , முதல் நாளே தவறாக நினைப்பது தன் தவறு என்று நினைத்து கொண்டாள் ...

தினமும் கல்லூரி சென்று வருவது, மாலையில் ஒரு நாள் ராஜேஸ்வரி நகரில், இருக்கும் ஷோரூமிற்கும் மற்றொரு நாள்,ஷாந்தி நகரில் இருக்கும் ஷோரூமிற்கும் சென்று வருவாள் ...

அபிக்கு என்று,சில நேரங்களில் காம்ப்லெஸ் சென்று மேற்பார்வை பார்த்து விட்டு வருவதும் உண்டு...
இவ்வாறு அபிக்கு மூச்சு விட கூட நேரம் இல்லாமல் சென்றது ..

இதில் அங்கு இருக்கும்,கயவர்களின் பார்வையில் இருந்து தப்பிப்பது வேறு அபிக்கு பெரும் அவஸ்த்தையாக இருந்தது ...

அவர்களை தவிர்த்து, அபி மற்றவர்களிடம் , மிகவும் பழகி வந்தாள் ...

பூரணி காலத்தில் வேலை செய்தோர் அங்கு இருக்கின்றனர் ...

அவர்களுக்கு, அபியை மிகவும் பிடித்து விட்டது ...
பிரேமாவின் அதிகாரத்தில் இருந்து அபியின் அன்பான அணுகுமுறை , அவர்களுக்கு மகிழ்ச்சி குடுத்தது ...

அன்று, கார் வாங்க ஒருவர், அவர் குடும்பத்துடன் வந்து இருந்தார் ...
சேல்ஸ் டீமில் இருந்த பிரேமாவின் எடுபிடி குமார் என்பவன்,அவர்களிடம் , எந்த வண்டி வாங்குவது,எத்தனை பேர் அமர கூடியது , அவர்கள் எதிர்பார்க்கும் விலை , என்று கேட்டு, அவரின், கோரிக்கையும் கேட்டு கொண்டிருந்தான்...

அந்த வண்டியை பற்றிய தகவல்களை அவர் மனைவியிடம் கூற சென்றார்...
அப்பொழுது, அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த அபி , "சார் இப்போ இவர் கேட்ட அவர் கேட்ட மாடல் இல்லையே இங்க, அவர் கேட்குற நாட்களுக்கு முன்ன இங்க கொண்டு வர முடியாது, அதே போன்று இருக்கும் வேற மாடல் நம்ம சொல்லலாம் தானே , அவர் எதிர்பார்க்கும் எல்லாம் அதிலும் இருக்கிறது" என்று அவளின் கருத்தையும் கூறினாள்

உனக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா என்று அபியை அலட்சியமாக பார்த்த அவன் , உங்களுக்கு இதை பற்றி தெரியாது , நீக்க உங்க வேலைய பார்த்துட்டு போனா மரியாதை ,அபிக்கு அதிர்ச்சியே அவனின் செயலில்...

கஸ்டமர் கிட்ட எப்படி பேசணுமோ அப்படி தான் பேசுறேன் , நீங்க இப்போ வந்துட்டு என்ன அதிகாரம் பண்ணாதீங்க , என்று திமிராக பேசினான் ...
அபிக்கும் தெரிந்தது, அவரின் ஈகோ ..
அதன் பிறகு அவர்களிடத்தில் வந்த அந்த கஸ்டமரும் , அவருக்கு வேண்டியது பற்றி பேசி கொண்டிருந்தார்

அப்பொழுது தான் குமாரு அபியை சீண்ட வேண்டும் என்று நினைத்து, ஒரு நாடகத்தை அரங்கேற்றினான் .
அபியும் தெரியாமல் அதில் விழுந்தாள் ...

அந்த கஸ்டமரிடம் அபியை முதலாளி என்று அறிமுகம் செய்து வைத்தான் ...
அவர் ஆடர் குடுத்த நாளில் வண்டி வருமாறு அபியை முன்னிறுத்தி முன் கட்டன தொகை, அவளிடம் குடுக்க வைத்தார் குமார் ...

அபியே அனைத்தும் முன் நின்று செய்ததாக அங்கு உள்ள அனைவர்க்கும் , காட்டி விட்டார் ...

குமாரின் மேல் எந்த தவறும் இருப்பதாக யாருக்கும் தெரியாத வண்ணம் அவன் செயல் இருந்தது ...

ஒரு வாரம் கழித்து வண்டி பெற்று கொள்ள வருவதாக அபி, அங்கு பிரேமாவிடம் கூறினாள் ...
பிரேமாவிற்கு தான் குமாரின் நாடகம் தெரிந்ததே , அவரும் அப்படியா அபி, என்று கேட்டு கொண்டு, எனக்கு அப்படி ஏதும் லோட் வந்ததா தகவல் வரலே, என்று கேட்டார் ...
அபிக்கு பயம் தொற்றி கொண்டது ...


"இல்ல , குமார் சார் தான் டீல் பண்ணாரு, நான் அமௌன்ட் வாங்கும் போது கூட இருந்தேன் " என்றாள் ...
உடனே குமார் என்று பிரேமா அழைத்ததும் , அவரின் முன் வந்து நின்றான் ...

ப்ரேமா அபி கூறியது பற்றி கேட்டதற்கு, "ஐயோ மேடம், இவங்களுக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை , அவருக்கு வண்டி மாடல் சொன்னது நான் தான் , ஆனா , அமௌன்ட் வாங்கி பினிஷ் பண்ணது இவங்க தான்,
மேடம் இன்னைக்கு வரும் சொன்னீங்களா , பெரிய வண்டி நம்ம எப்போவும் இங்க வைக்கிறது இல்லை, கஸ்டமர் வந்து அவங்களுக்கு தேவையான மாடல், கலர், சொன்னதும், நாங்க அதா டீலர் கிட்ட கேட்டுட்டு, இந்த நாட்கள தர முடியுமான்னு கேட்டு தான் தருவோமே" ...

"நான் தான் அன்றைக்கே சொன்னனே, அந்த மாடல் இல்ல , வேற மாடல் அவங்களுக்கு சொல்லலாம், இல்ல கொஞ்சம் நாள் கேட்டு பார்க்கலாம்னு" ...
அபி கூறியதை அவன் கூறியதாக கூறினான்...
"நீங்க எதுவும் தெரியாம இன்றைக்கே வர சொல்லிடீங்களா," என்று அனைவரும் கேட்க்கும் படி , அபி மீதே அனைத்து தவறும் , என்பது போன்று சத்தமாக பேசினான் ...

"ஐயோ இல்ல, நான் வேற மாடல் சொன்னதுக்கு, நீங்க ," என்று அபி ,பேச வாய் எடுத்ததும், மீண்டும் குமாரின் குரல் சத்தமாக ஒலித்தது ...
"ஏன் தான் இப்படி செய்யறீங்க , கஸ்டமருக்கு , குடுக்கிற வாக்க காப்பாத்த தெரிந்தவன் தான் தொழில முன்னேற முடியும்". ( இனி நீ என்னிடம் கேள்வி கேட்ப ?) என்பது போன்று இருந்தது அவனின் செயல் ...

அதற்குள் , அந்த கஸ்டமர் வந்து விட்டார், கார் வாங்குவதற்கு ...

அபிக்கு குமாரின் செயலில் அதிர்ச்சி, அபி கூறியதை அப்படியே அவன் கூறியதாக மாற்றி விட்டான் , அவளுக்கு எந்த விளக்கமும் தர வாய்ப்பு தாராமலே , அவளை அங்கு உள்ளோரின் முன் அசிங்க படுத்தி விட்டான் ...

கார் வாங்குவதற்கு, சொன்ன நேரத்திற்கு, அந்த கஸ்டமரும் வந்து விட்டார்....
அதுவரை அனைத்தும் கை கட்டி வேடிக்கை பார்த்து இருந்த பிரேமா , கஸ்டமரிடம் , "சார், சாரி சார், இவங்க புதுசு , ஸ்டாக் இல்லனு உங்க கிட்ட சொல்ல மறந்துட்டாங்க "...

"ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க , நீங்க கேட்ட மாடல் ஆர்டர் பன்றோம் , ஒரு மாதம் ஆகும், என்று தன்மையாகஅவரிடம் பேசினார் ...

வாடிக்கையாளருக்கு அபியின் மீது கோவம் வந்தது, "ஏங்க, என்ன இது, ஒரு தகவல் உருப்படியா சொல்ல தெரியல , நீங்க எல்லாம் முதலாளி , சே, எங்க கேட்டாலும், இங்க வந்து வாங்குனு, உங்க ஷோரூம், பெஸ்டுன்னு சொன்னதால வந்தோம் பாருங்க, எங்களை சொல்லணும்," என்று அபியை திட்டி விட்டே சென்று விட்டான் ...

அபிக்கு , பிரேமாவிடமும் இருந்து நன்றாக மண்டகபடி கிடைத்தது ...

"நான் என்ன பண்ணுவேன் தெரியலையே, என் நாத்தனார் பெயரை கெடுத்துடுவா போல , கஸ்டமர் கிட்ட கேட்ட பேரு வாங்க வெச்சிடுவா போலயே," என்று எல்லோரும் கேட்கும் படி அபியை இது தான் சாக்கு என்று, நன்றாக விளாசி விட்டார் ...

அபி அங்கு நிற்க முடியாமல் வீட்டிற்கு சென்று விட்டாள் , ஒரு ஆட்டோ பிடித்து ...

"இன்னும் எவ்வளவோ இருக்கு, இதுக்கேவா," என்று பிரேமா நினைத்து கொண்டே, சென்றார் ...
குமாரும், "வந்துட்டா எனக்கே ஆலோசனை சொல்ல," என்று தெனாவட்டாக நினைத்து , அங்கு இருந்து சென்றான் ...
 

Nasreen

Well-Known Member
Nice
Pudam pottathan thangam
Ippo abi kku learning time
Seekiram pathil adi koduppa
But ithai ava husband kitaiyo illa uncle kittsiyo sollalam...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா டியர்

இப்பொழுதும் ஆதியிடம் எதுவும் சொல்லாமல் ஊமைக்கோட்டானாட்டம் வாயை மூடிக் கொண்டு லீலாவதியிடம் கஷ்டப்பட்டது போதாதுன்னு லூசு அபி பிரேமாவிடமும் கஷ்டப்படப் போறாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top