என் இதயமே நீ தானே 6

ShanviSaran

Well-Known Member
#1
அப்பொழுது பின்னாலிருந்து பைக் ஹாரன் சத்தம் கேட்டு விலகி நின்றனர். அந்த பைக் அவர்களைக் கடந்து முன்னால் வந்து நின்றது. அதிலிருந்து கறுப்பு நிற ஜீன்ஸ் , வெளிர் மஞ்சள் நிற டீ ஷர்டில் ஹெல்மெட்டைக் கழற்றி பைக்கில் மாட்டிவிட்டு வந்தான் .அவனைக் கண்ட திவ்யா"அண்ணா எப்படி இருக்கிங்க, எப் பண்னே வந்தீங்க .. என்று சந்தோஷமாக கேட்டாள். "நான் இன்னிக்கு காலையில் தான் மா வந்தேன். நீ எப்படி இருக்க எக்ஸாம்ஸ் எல்லாம் நல்லா பண்ணிட்டியா" பேச்சு அவளிடம் இருந்தாலும் , பார்வையை அருகில் இருந்தவளிடமே வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தவன் திவ்யாவின் ஒன்று விட்ட பெரியப்பா மகன் செந்தூர் பாண்டியன். சென்ற வருடம் என்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தில்பணிபுரிகின்றான். தங்கை இல்லாத அவனுக்கு சிறு வயதில் பொம்மை போன்ற அந்த குட்டி திவ்யா என்றால் அத்தனை இஷ்டம் , எப்பொழுதும் அவள் படிப்பில் அக்கறை செலுத்துவான். ஊருக்கு வரும் போது திவ்யா இருந்தால் அவளிடம் பேசி விடுவான். அவனைக் கண்ட பார்வதி , " திவ்யா நீ உங்க அண்ணாச்சிக் கிட்ட பேசிட்டு வா , நான் முன்ன நடக்கிறேன்" என்றாள். அவனுக்குத் தெரியும் , அவள் இப்படித்தான் செல்வாள் என்று , எனவே வேகமாக "திவிமா , உன் பிரண்ட ஒரு நிமிஷம் இருக்க சொல்லு, தனியா போக வேண்டாம் , எனக்கு மூணு வருஷத்துக்கு அமெரிக்கால வேலை பார்க்க கம்பெனி லருந்து அனுப்புறாங்க , அடுத்த வாரம் கிளம்பி ருவேன் .நீ நர்சிங் படிக்க முடிவு பன்னிருக்கனு பாட்டி சென்னாங்க , நல்லபடியா படிச்சு முடிடா சரியா, " , "அப்படியா அண்ணே, ரொம்ப சந்தோஷம் , நல்லபடியா போய்ட்டு வாங்க". "சரிமா நீங்க பத்திரமா வீட்டுக்குப் போங்க" என்றான். இதைக் கேட்ட பார்வதி " ஏட்டி உங்கண்ணாச்சிக்கு இப்போ வே அது தாரேன் இது தாரேன்னு போட்டி போட்டு பொண்ணு குடுக்க வாராங்கலாம், இதுல அமெரிக்கா போய்ட்டு வந்தா உங்க பெரியம்மாவ கையிலயே பிடிக்க முடியாது போல, " , "ஏய் இரு இரு … என்ன சும்மா சும்மா உங்கண்ணன் உங்க பெரியம்மா னுட்டு இருக்க , உன் அத்தான் , உங்க அத்தை பெத்தவருனு உனக்கு தெரியாதா " , "போடி அவுக பன்ற அலப்பறைக்கு அத்தை சொத்தை னுட்டு ஹ்ம்" என்று முகத்தை சுழித்துக் கொண்டாள். "இவளுக்கு என்னாச்சு' என்ற யோசனையோடே வீடு வந்து சேந்தார்கள்.
வீட்டுக்குள் செல்லும் முன் "பாரு நான் சாப்டுட்டு யுனிபார்ம் மாத்திட்டு வாரேன்டி நீயும் சீக்கிரமா வந்துடு , சர்ச்சுக்கு போவோம்".
"சரி டி, நான் வந்துருவேன். சொன்னது போலவே இருவரும் அந்த பிரமாண்ட சர்ச் வளாகத்துள் நுழைந்தனர். அது ஒரு பெரிய வளாகம். நிறைய வேப்ப மரங்கள் அங்கு உண்டு. அங்கிருந்த கன்னியாஸ்திரி மடத்தில் தான் திவ்யாவின் பாட்டி சமையல் வேலை செய்கிறார். அங்கு சுத்தம் செய்ய , சமையல் செய்ய என நிறைய பேர் வேலை செய்வார்கள். அந்த மரங்களிலிருந்து கீழே விழும் வேப்பங்கொட்டைகளை எடுத்து காய வைத்து மொத்த வியாபாரிகளிடம் கொடுத்தால் அவர்கள் பணம் தருவார்கள் வேப்ப எண்ணை தயாரிக்க வாங்குவார்கள்.
அதற்காக தான் இருவரும் வந்து அந்த பெரியவளாகத்தில் கேரித்தக் கொண்டு இருந்தார்கள்.
" திவ்யா நர்சிங் முடிச்சிட்டு என்னடி செய்யப் போற "
" முடிச்சதும் எங்க வேலை கிடைக்குதோ அங்க பாட்டிய கூட்டிட்டுப் போயிருவேன்டி, பாவம்டி பாட்டி எனக்காக இந்த வயசிலயும் வேலை செய்றாங்க, அவங்கள உக்கார வைச்சு கவனிக்கனும் "
"அது சரி, நீ படிச்சி முடித்ததும் பாட்டி உன்ன ஒருத்தன் கையில புடிச்சுக்கொடுக்கணும் எங்கம்மா கிட்ட சொல்லிட்டு இருக்காங்க , நீ வேலைக்குப் போய் பாட்டிய பார்க்குறது தான் முதல் வேலைங்கிற "
" ச.. ச.. நான் கல்யாணமல்லாம் பன்னிக்க மாட்டேன். மதர் கிட்ட சொல்லி பாட்டிட்ட பேசிக்குவேன்"
"ஏய் என்னடி சொல்ற , கல்யாணம் பன்னாம மதர் போல மடத்துல சேர்ந்து கன்னியாஸ்திரி ஆகப் போறியா .. போடி இவளே நடக்கிற காரியமா பேசு" என்று தன் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தவள் அவளிடமிருந்து சத்தம் வரவில்லை என்றதும் திரும்பி பார்த்தாள். அங்கு திவ்யா முகத்தில் மலர்ச்சியுடன் "பாரு , நீ நல்ல ஐடியா கொடுத்த டி , இப்பவே பாட்டிட்ட சொல்லி கிறிஸ்தவ மதத்துக்கு மாறி , அதற்கான முயற்சி செய்யப் போறேன்" என்றாள்.
அதைக் கேட்ட பார்வதி " அடி லூசே பேச்சுக்கு சொன்னா அதையே பிடிச்சுக்கு வியா , போடி போய் வேலையப் பாரு"
பார்வதி திட்டியதும் முகத்தை சுருக்கியவள் " நான் போய் பாட்டி வேலைய முடிக்கிட்டாங்களா பார்த்துட்டு வரேன்" என்று அந்த மைதானத்திற்குள் இருந்த மடம் நோக்கிக் சென்றாள்.
அவள் போவதையேப் பார்த்துக் கொண்டிருந்தவள்" கிறுக்கி ஒரு பேச்சுக்கு சொன்னா அதைப்போய் பிடிச்சிக்கிட்டு ... இவள .." என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதே ஓர் வலிய கரங்கள் அவளை பிடித்து அங்கிருந்த மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்றது.
"ஆ" என்று அலறப் போனவள் வாயைப் பொத்தி மரத்தில் சாய்த்தவன்" கத்தாதடி நான் தான் " , என்றான் .
வந்தவன் பாண்டியன் என்பதை அறிந்தவள் அவள் வாயைப் பொத்தி இருந்த கையினை விலக்கி, "சொல்லுங்க அமெரிக்க மாப்பிள்ளைக்கு இங்க என்ன வேலை "
"பாரு என்னையப் பாரேன் , அம்மா சொல்றதுக்கு எல்லாம் நான் எப்படி பொறுப்பாவேன். மூணு வருஷம் முடிஞ்சதும் நீயும் படிச்சு முடிச்சு இருப்ப , வந்தவுடனே உன் கழுத்தில தாலி கட்டிட்டு தான் மறுவேலை."
அவன் அப்படிச் சொன்னதும் முகத்தில் பூத்த வெட்கத்தை மறைக்க அவனுக்கு முதுகு காட்டி திரும்பியவள் . "ஆமா அதான் என்னைப் பார்க்க இவ்வளவு நேரம் " , அவளைப் பின்புறமாக அணைத்தவன் , "எவ்வளவு நேரம் ஆனால் என்ன நீ இங்க வருவேனு தெரிஞ்சுதானே இந்நேரம் இங்க வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
திடீரென்று அவன் அணைத்து முத்தம் தரவும் உடல் நடுங்கியவள் , வேகமாக அவனிடம் இருந்து பிரிந்து "ஐயோ அத்தான் என்ன செய்றீங்க ….திவ்.. திவ்யா வந்திரப் போறா" என்று திணறியவள் ,,,.. சட்டென்று நியாபகம் வந்தவளாக .."அத்தான் உங்க தங்கச்சிகிட்ட படிச்சிட்டு என்ன செய்யப்போறனு கேட்டா , சாமியாரினி ஆகி சேவை செய்யப் போறாளாம் அந்த லூசு " என்றாள். அதைக் கேட்டு திடுக்கிட்டவன் , "என்ன சொல்ற பாரு" என்றான்.
் அவள் கூறியதைக் கேட்டவன் சிறிது நேரம் யோசித்து விட்டு "சரி நான் பாட்டிகிட்ட பேசிக்கிறேன். நாம நம்ம விஷயத்துக்கு வருவோம் , அமெரிக்கா கிளம்புற அத்தானுக்கு அழுத்தமா ஒன்னு கொடு பார்ப்போம்"
"ம் அதெல்லாம் என் கழுத்துல உன் கையால தாலி எறினப் பிறகு தான்." என்று சொல்லிக் கொண்டே ஓடி விட்டாள். அவள் போவதை ரசித்துக் கொண்டிருந்தவன் , தன் பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தோழியர் இருவரும் பேசிக் கொண்டே வெளியே வருவதைப் பார்த்தவன் , திவ்யாவைக் கண்டதும் "பாட்டிகிட்ட பேசனும் " என்ற யோசனையில் வண்டி கிளப்பி சென்று விட்டான்.
 

Advertisement

New Episodes