என் இதயமே நீ தானே 5

ShanviSaran

Well-Known Member
#1
அவர்கள் அனைவரும் வெளியே வந்து கார்களில் ஏறத் தயாரானார்கள், அப்பொழுது சரியாக ஜோயல் மெர்சியியும் திவ்யாவை வழியனுப்ப தங்கள் காரில் வந்து இறங்கினார்கள் .அவர்களைக் கண்டதும் குழந்தை அவள் கையிலிருந்து இறங்கி வேகமாக ஜோயலின் கைப்பிடித்து நின்ற அவன் மகனிடம் சென்றான். அவனிடம் சென்று காலையில் கார்த்தி வாங்கி வந்த பொம்மைகளை காட்டும் ஆவலில் தன் கையிலிருந்த பெரிய கார் பொம்மையைக் காட்டிப் பேசினான். குழந்தைகளின் பாசத்தைக் கண்ட பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து தங்கள் புன்னகைத்துக் கொண்டனர்.
முதலிலேயே அவர்களைப் பற்றி அறிந்து இருந்ததால் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு காரில் ஏறும் போது குழந்தை ஜோயலைக் கண்டு "டாடி .. பை, மம்மி …பை" , என்றான். அப்பொழுது அவன் அருகே வந்து "பாஸ்… டாடி மம்மிக்கு பை சொல்லி டிங்களா , வாங்க நாம அந்தக் கார்ல போலாம் என்று அவனைத் தூக்கிக் கொண்டு , ஜோயலிடம் விடை பெற்று நண்பன் விக்ரம் அனுப்பி வைத்த மற்றொரு காரில் ஏறிக் கொண்டான்.
கார்த்தியின் பெற்றோர் அவர்கள் காரில் ஏறியதும் , அவளும் குழந்தையின் பொருட்டு அவர்களிடம் விடை பெற்று , அவனுடன் வந்து அமர்ந்து கொண்டாள்.
கார் மலையை விட்டு இறங்கும் முயற்சியில் முன்னோக்கிச் செல்ல…… அதில் பயணித்த அவர்களின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
சிறிது நேரத்திலயே குழந்தை தூங்கி விட அவனது தலையை தனது மடியில் வைத்துக் கோதிக் கொண்டிருந்தவன், குழந்தை தூங்கிய உடன் அவனை நன்கு படுக்க வைக்கும் முயற்சியில் , ஜன்னலின் வெளியே பார்வை பதித்து இருந்தவளை "திவ்யா குழந்தையை நல்லா படுக்க வை "என்றான். அவன் குரல் கேட்டுத் திரும்பியவள் , குழந்தையை தூக்கப் போனாள். "இப்படியே என் மடியிலயே தலை வைச்சு இருக்கட்டும் அவன் கால்களை மட்டும் நீ மடியில வச்சுக்கோ.,, " என்றதும் அவன் சொன்னது போலவே செய்தாள்.
ஆம் குழந்தை இப்பொழுது அவர்களுக்கு இணைப்பு பாலம் போல் படுத்திருந்தான். ஒரு நிமிடம் அப்படி உணர்ந்தவள்….ஒரு கசப்பு புன்னகையை தவள விட்டு கொண்டவள் வாகாக சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். "நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை'உன்னைக் கைவிடுவதும் இல்லை" நேரம் காலை ஐந்து மணி " .... டிங் டிங் டிங் ….. என்ற அருகில் உள்ள மாதா கோவிலின் ஓசையில் தன் கண்களை மெல்லப் பிரித்தவள் அருகில் பாட்டி வள்ளி இன்னமும் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மெதுவாக அவர் கைகளில் தட்டி "பாட்டி என்னாச்சு உடம்புக்கு முடியல யா". மெதுவாக எழுந்தவர் "ஆமா தாயி நேத்து கொஞ்சம் நிறைய வேலை.... அதான் அசந்து போய்ட்டேன். உனக்கு இன்னிக்கு கடைசிபரிட்சை ல நல்ல படிச்சிட்டியா மா". " நல்லா படிச்சிட்டேன் பாட்டி … நீங்க இனி வேலைக்கு போக வேண்டாம். நான் போன வாரமே மதர் கிட்ட கேட்டு டவுன்ல ஒரு கடைல வேலைக்கு கேட்டு வச்சுட்டேன்.அதனால இனி நீங்க வேலைக்கு போக வேண்டாம் ஆமா" செல்லமாக கோபித்துக் கொண்டதன் பேத்தியின் அழகை கண்கொண்டு பார்த்தவர்' முருகா இவள ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கற வரைக்குமா து என்னை உயிரோடு வச்சிரு" என்று மனதில் நினைத்துக் கொண்டே பேத்தியின் கைகளைப் பிடித்தவர் "தாயி அத பொறவு பாப்போம் இப்போ பரிட்சையை நல்லா எழுதிட்டு வா.….நான் உனக்கு காலைக்கு பலகாரம் வாங்கிட்டு வாரேன்". "பாட்டி நான் சீக்கிரம் கிளம்புறேன். நீங்க இருங்க நான் போய் வாங்கிக்கிறேன்" "வேண்டாதாயி டீ குடிக்கிறேனு வந்து நிக்கிறவனுக கண்னெல்லாம் உன் மேல தான் இருக்கும்.. நீ குளிச்சிட்டு கிளம்புமா". பாட்டி சொல்வதும் சரிதானே என்று யோசித்தவள்.. " சரி பாட்டி " என்று கூறிவிட்டு அந்த ஒற்றை அறையின் பின்னால் இருந்த குளியலறைக்கு சென்றாள். பின்னே திவ்யாவின் தாய் வட இந்திய பெண் , திவ்யா அப்படியே வட இந்திய பெண்களின் நிறத்தையும் தென்னிந்திய தந்தையின் சாயலையும் கொண்டு தேவதை போல் மிளிர் வாள். அதனாலயே அவள் பாட்டிக்கு தன் பேத்தியின் அதீத அழகில் சந்தோஷம் கொள்ள முடியவில்லை .அவள் குளித்து கிளம்பி கண்ணாடி யில் பார்த்து கொண்டே இரண்டு ஜடைகளை மடித்துக்கட்டியவள்." திவ்யா , திவ்யா , ஏ புள்ள திவ்யஸ்ரீ என்று கத்திக் கொண்டே வந்த தன் உறவின ளும் தோழியுமான பார்வதியைக் கண்டு " ஏட்டி இப்படி கத்திட்டே வர" "சொல்லுவடி சொல்லுவ… நேத்து வரைக்கும் ஏதாவது வேலை இருந்தா சொல்லுடி சொல்லுடினு சொல்லிட்டு இப்போ கத்தாதனா சொல்ற ,போடி உன்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்". "பாரு பாரு என்னைப் பாரேன்,இப்போ நாம பாட்டி வந்ததும் சாப்டுட்டு ஸ்கூலுக்கு போகும் போது பேசிட்டே போவமாம், என் செல்ல பாரு இல்ல கோவிச்சுக் காதட்டி "அப்போதும் உம்மென்று இருந்தவள் வள்ளி சூடாக ஆப்பம் தட்டில் எடுத்து வருவதைப் பார்த்து , " நீ சொல்றதும் சரிதான்' வா சாப்டுட்டு பேசுவோம்"தன் தோழியின் மாறுதலை புன்னகையோடே ரசித்தவள், சாப்பிட்டு விட்டு பாட்டியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்கள்.திருப்புளியன்குடி ..திருநெல்வேலி அருகே உள்ள சிறிய கிராமம் .அங்கு எண்ணி ஐம்பது வீடுகள் தான் இருக்கும் ..தாமிர பரணி ஆற்றின் ஓரம் அமைந்த அழகிய ஊர் ..சுற்றிலும் வயலும் பனை ..தென்னை மரங்கள் நிறைந்த செழிப்பான ஊர்தான் ..ஆனால் பரணி ஆறு வற்றினால் அங்கு பஞ்சமே .அதனால் அங்கிருந்த பலர் பஞ்சம் பிழைக்க பல ஆண்டுகளுக்கு முன்பே மும்பை சென்று விட்டனர் .இன்றைய மும்பை அன்றைய பம்பாய் ..எனவே அங்குள்ளவர்கள் முக்கால் வாசிபேர் பம்பாய் வாசிகள் .ஏதேனும் நல்லது கெட்டதற்கு வந்து போகும் வழக்கமே இருந்தது. அப்படியே வந்தாலும் பக்கத்து டவுனில் தங்கிக் கொள்வதால் ஊர் இன்றும் பின்தங்கியே உள்ளது. அங்கு எப்போதோ வரும் பேருந்துகளில் பள்ளி செல்லும் நிலை இருப்பதால் இருக்கும் சிலர் தங்கள் குழந்தைகளை விடுதியில் தங்கி படிக்க வைக்கின்றனர்.திவ்யாவும் பார்வதியும் அப்படி தான் பாளையங்கோட்டையில் உள்ள புகழ் பெற்ற கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் கன்னியாஸ்திரி களால் நடத்தப்படும் தொண்டு நிறுவனம் மூலம் பிளஸ் டூ வரை படித்து முடித்து விட்டனர் .இதோ இன்று கடைசித் தேர்வை எழுத செல்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டிற்கு அவர்கள் பொருட்கள் எடுத்து வந்து விட்டதால் இன்று தேர்வு மட்டும் எழுதிவிட்டு வந்து விடலாம் என்று பேருந்தில் ஏறி விட்டனர்."திவ்யா இன்னிக்கு பரிட்சை முடிஞ்சிரும் , எங்க அப்பா அம்மா மூனு வருஷம் நர்ஸிங் படிக்க வைக்க காசில்லன் டாக டீ எங்க அக்கா கல்யாணத்துக்கு நெறைய கடன் வாங்கியாச்சாம் அதனால மதர் கிட்ட சொல்லி டிப்ளமோ நர்சிங் முடிச்சுட்டு வேலை பாக்கலாம்னு இருக்கேன்டி ". "என்னடி இப்படி சொல்லிட்ட மதர் சொல்லிட்டாங்களேனு தான் எண்ட்ரன்ஸ் எக்சம் எழுதப் போறேன். டாக்டர் க்கு படிக்க ஆசை இருந்தாலும் காசு நிறைய செலவாகும்னு தான் நர்சிங் படிக்கிறேனு மதர் கிட்ட சொன்னேன். ரிஸல்ட் வரதுக்குள்ள எதுனா வேலைக்கு போயி காசு சேத்துக்கலாம்னு நினைச்சேன்" - ஆ... அதான் டி சொல்ல வந்தேன்.. ." அதற்குள் பள்ளி நிறுத்தம் வந்ததால் இருவரும் இறங்கி பள்ளியினுள் சென்றனர். "எக்ஸாம் முடிச்சிட்டு பேசுவோம் டி" இருவரும் மதியம் பரிட்சை முடிந்ததும் பள்ளி வளாகத்தில் இருந்த மதர் அறைக்கு சென்று விவரங்கள் கேட்டு விட்டு பேருந்து நிலையம் வந்தனர். "சொல்லுடி என்ன விஷயம் ", "சென்னைல எங்கம்மாக்கு ஒன்னு விட்ட பெரியம்மா இருக்காகளாம் டி , அவுக மாமியார் படுக்கைல இருக்காகலாம், அவுகள பாத்து கு றவுக மகளுக்கு முடியலனு ஊர்க்கு போய் டாகளாம் அவுகளுக்கு பதிலா ஒரு மாசத்க்கு அந்த ஆச்சிய பார்த்துக்க ஆள்வேனும்னு என்னைய கேட்டாகலாம்ட்டி , அக்கா பிரசவத் க்கு வரப்போறா அம்மாவால ஒத்தையா அக்காவையும் பார்த்துட்டு காட்டையும் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாக, வேற ஆள் இருந்தா சொல்ல சொன்னாகலாம், நல்ல சம்பளம் தாரத சொல்லிருக்காக , இருக்க இடம் , சாப்பாடு எல்லாம் தந்து சம்பளமும் தாராங்கடி மதர் சொன்ன கடைல சம்பளம் கம்மிடி, நீ காலேஜ் சேர்ந்தா செலவுக்கு ஆகும்ல."நீ சொல்றதும் சரிதான் பாரு ஆனா பாட்டிக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலயேட்டி அதான் யோசிக்கிறேன்." "ஏட்டி இப்படி சொல்ற | உனக்கு மட்டும் பாட்டி இல்ல எனக்கும் தான் நான் பார்த்துக்கிறேன். நீ போய்ட்டு வா , பாட்டிட்ட அம்மாவ பேச சொல்றேன். மெட்ராஸ்ல அவுக பெரிய கோடீஸ்வரங்களாம். நல்லா செய்வாங்கலாம்" சரி டி அத்தைய வந்து பேச சொல்லு". தோழிகள் எடுத்த முடிவும் அந்த ஆண்டவன் எடுத்த முடிவும் ஒன்றோ …… பேசிக் கொண்டே அங்கிருந்த சிறிய ஆற்றுப்பாலத்தில் நடந்துக் கொண்டிருந்தனர்.
 

Advertisement

New Episodes