என் இதயமே நீ தானே (அ)

ShanviSaran

Well-Known Member
#1
" தூங்குவியா",
சிறு குழந்தை போல் இந்த புறமும் அந்த புறமும் தலையாட்டிய வளைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்"அன்பா அமைதியா பேசுனா என்னைய ஹீரோவா நினைக்க மாட்ட போல , ஆன்டிக் ஹீரோ போல மிரட்டினா தான் கேப் ப போல " என்று சிரித்துக் கொண்டே கார் ஓட்டினான்.

சிறிது தூரம் சென்றதுமே , அவள் நன்கு உறங்க ஆரம்பித்து விட்டாள். அவள் உறங்குகிறாள் என்றதுமே கார்த்தி சாலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.

திடீரென்று அவளிடமிருந்து 'ஆ' என்ற சத்தம் வரவும் திரும்பியவன் , அவள் கார் ஜன்னல் கண்ணாடியில் தலையை இடித்துக் கொண்டு கண் களை திறவாமலேயே தேய்த்து விட்டுக் கொண்டு இருந்தாள் .

பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அவளை தோள் சாய்த்துக் கொள்ளும் எண்ணமே வந்தது. ஆனால் இடமும் குழ்நிலையும் அதற்கு இடம் தரவில்லையே என்ற ஆதங்கம் தோன்றியது. ஆனால் அவளை அமைதிப் படுத்த வேண்டும் என்று தோன்றியது.

பின்புறம் திரும்பிப் பார்த்தான், பின் மெதுவாக அவளது வீக்கம் இருந்த கையை எடுத்து தன் கைகளில் கோர்த்துக் கொண்டவன் , அவளறியாமல் அவனில் உயிராக இருக்கும் அவளுக்கு காயம் இருந்த இடத்தில் மென்மையாக இதழ் பதித்தான். பூவால் தீண்டினால் கூட வலித்திருக்கும்.

பிறந்தவுடன் குழந்தைக்கு அளிக்கும் முதல் முத்தம் எப்படி இருக்குமோ அப்படி. அந்த முத்தத்தில் காமம் இல்லை, காதலும் இல்லை , வேறு என்ன தான் இருந்தது தெரியவில்லை அவனுக்கு 'இவள் என்னவள், என் உயிர் , என் இதயமே நீ தான் , நான் இருக்கிறேன் உனக்கு ' என்ற உணர்வை அவளுக்கு கடத்துவதாகவே இருந்தது.

இதழ்களை கைகளில் இருந்து எடுத்தவன் கோர்த்த கைகளை சிறிது நேரம் கழித்துதான் விட்டான். வீடு வந்ததும் செளமினியை எழுப்பியவன் , திவ்யாவை கண்களில் காண்பித்தான் ' எழுப்பு' என்பதாக . அவளும் அம்மாவையும் செளமியையும் எழுப்பினாள்.

"கார்த்தி இன்னைக்கு நீ ஆபிஸ் லேட்டாக் கூட போக வேண்டாம் நாளைக்கு போய்க் கலாம், சாப்டுட்டு போய் ரெஸ்ட் எடு , திவ்யா , மினி நீங்களும் போய் கொஞ்ச நேரம் தூங்குங்க "என்றார்.

சீதா வந்து கதவைத் திறந்தவர் "மயினி எல்லோரும் டீ சாப்டுட்டு போங்க, தம்பி இப்போ போன் செஞ்சார் , போட்டு வச்சிட்டேன்" என்றவாறு உள்ளே சென்றார்.

திவ்யா அறையினுள் நுழைந்தவள், பாட்டி அருகில் சென்று நின்றவள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் சீதாவும் , சாந்தியும் உள்ளே வந்தவர்கள் , அவள் அப்படி நிற்பதைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் அவள் அருகில் சென்று "பாட்டி எங்கயும் போகல நம்ம கூட தான் இருக்காங்க , போ போய் முகம் கழுவிட்டு டீ குடிச்சுட்டு ரெஸ்ட் எடு"

'சரி' என்பதாக தலையசைத்து விட்டு முகம் கழுவி வந்தவள் டீ குடித்துக் கொண்டிருக்கும் போதே பாட்டி அசையவும் "அத்த, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க பாட்டிய நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவருக்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

இதோ சென்னை வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. கார்த்திக்கு வேலை அதிகம் இருந்தது. அப்பா எப்படி ஒற்றை ஆளாக சமாளிக்கிறார, என்ற எண்ணம் தான் தோன்றியது் .தொழிலில் தன் பங்கை அதிகம் செலுத்த வேண்டும் என்ற நினைவிலயே அத்தனை வேலைகளையும் நேரங்காலம் இன்றி பார்த்தான்.

அவன் வீட்டிற்கு வரும் நேரங்களில் அவள் தூங்கி இருப்பாள் , இல்லை ஏதாவது வேலை செய்து கொண்டு இருப்பாள். ஆனால் அவள் பேச்சு சத்தம் கேட்கவே இல்லை.

அன்று இரவு வீடு திரும்பியவன் காரை நிறுத்தி விட்டுப் பார்த்தால் திவ்யா பாட்டி அறை பால்கனியில் தரையில் அமர்ந்து , முட்டியில் தலை சாய்த்து வானை வெறித்துக் கொண்டு இருந்தாள். இவன் அருகில் வந்ததை கவனிக்கவில்லை.

அருகில் வந்தவன் அவள் அருகில் இருந்த தட்டைப் பார்த்தான் , இரண்டு தோசைகள் அதில் ஒன்றை பிய்த்து அருகில் போட்டிருந்தாள்.காக்கையோ , குருவியோ சாப்பிட்டு இருக்கும் என்பதை ஊகித்தவன் , அவள் சாப்பிடாமல் இருக்கின்றாள் என்றுணர்ந்தான்.

"ஏஞ்சல்"

திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள், எழுந்து நிற்கப் போனாள். "உக்காரு , ஏன் சாப்பிடல" எனத் தட்டைக் காண்பித்தான்.

"இதோ சாப்பிடுறேன்" என்று எடுக்கப் போனாள்.

"அதை வை ஆறிப் போய் இருக்கு"

"இல்லத்தான் நான் சாப்பிட்டுக்குவேன்"

"ஒன்னும் வேண்டாம் , சீதக்கா கிட்ட சொல்லி வேற எடுத்துட்டு வா"

"அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க, அத்தநீங்க இன்னைக்கு நீங்க வெளிய சாப்பிட்டுட்டு வருவீங்க சொன்னாங்க, அதான் நேரமே போய்ட்டாங்க"

"ம் நீ கிச்சன் வா" என்று விட்டு விட்டுக்குள் வந்தான். அவளும் அவன் சொன்ன மறு நிமிடம் அங்கு வந்து விட்டாள். வந்தவள் "எதுவும் வேணுமாத்தான் , நான் எடுத்து தாறேன்"

"ம் தோசை மாவு எடுத்து தா" என்றவன் , முழங்கை வரை சட்டையை மடித்துக் கொண்டு தோசை வார்த்து அவளிடம் தந்தான் .

"எனக்கா , நீங்க சாப்பிட நினைச்சேன்"

"நான் சாப்பிட்டாச்சு, நீ சாப்பிடு" என்றதும் தயங்கி தயங்கி தட்டை வாங்கியவள் ரூம் நோக்கி நடந்தாள்.

"எங்க போற ,டேபிள் ல உட்காரு"

"எனக்கு அது பழக்கம் இல்லையே , நான் உள்ள போய் சாப்பிட்டுகிறேன் "
" ஒழுங்கா இங்க உட்கார்ந்து என் முன்னாடி சாப்பிடுற " அவன் சத்தமாக சொன்னதைக் கேட்டு வேக வேகமாக சாப்பிட்டவள் முன் தண்ணீர் வைத்து , " ம் இப்போ போ, டெய்லி கரெகட்டா சாப்பிடனும்
சரியா"
"அத்தான் நான் ஒன்னு சொல்லட்டா"

"சொல்லு"

"எங்க பாட்டிக்கு அப்புறம் நீங்கதான், நான் சாப்பிடலனு தெரிஞ்சி என்னைய கட்டாயப் படுத்தி அவங்களைப் போலவே சாப்பிட வைக்குறீங்க... எங்க பாட்டி … "ஏதோ சொல்ல வந்தவள் மெளனமாகி நடக்க ஆரம்பித்தாள்.

"நில்லு , என்னைய உனக்கு பிடிக்கும்ல"
"ம் , பிடிக்கும் அத்தான் "

"அப்போ உன் பாட்டி இங்கதான் உனக்கு பிடிச்சவங்க மூலமா உன்கிட்ட பேசுறாங்கனு நினைச்சு கோ சரியா , அவங்க எப்பவும் உன் கூடவே தான் இருப்பாங்க, போய் நிம்மதியா தூங்கு""ம்" என்று தலையாட்டியவளை கண்டு புன்னகைத்தவன் மாடியேறி தன் அறைக்குச் சென்றவன் குளித்து முடித்து வெளியே வந்து, அவன் அறையின் பால்கனியில் நின்று கடல் காற்றை அனுபவித்துக் கொண்டு இருந்தான்.

கீழே தெரிந்த நிழலில் , அவள் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருப்பது தெரிந்தது.

" இப்படியே இருந்தா எப்படி ஏஞ்சல், நீ படிக்கனும் , அதுல கான்சன்ட்ரேட் செய்யனுமே. உன் பாட்டி மேல உயிரா இருப்பன்னு தெரியும், இன்னும் நீ அழாம இருக்கியாம் அம்மா சொல்றாங்க , என்ன செய்றது " என்று யோசித்தவன் , தன் 'கிடார் 'பேக் திறந்து வாசிக்க ஆரம்பித்தவன் , அப்படியே பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து கன்களை மூடி பாடவும் ஆரம்பித்தான்.

"உறவுகள் தொடர் கதை ,
உணர்வுகள் சிறுகதை,
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே.…..
அவன் பாட ஆரம்பிக்கவுமே அந்த பால்கனியின் விளிம்பில் வந்து நின்று கொண்டாள்.

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன் ,

உன் கண்களின் ஓரம் ,
எதற்காகவோ ஈரம்,
கண்ணீரை நான் மாற்றுவேன்..

வேதனைத் தீரலாம்,
வெறும் பனி விலகலாம் ,
வெண்மேகமே புது அழகிலே
நாமும் இணையலாம் … (உறவுகள்)

அவன் குரல் தந்த ஆறுதலா , அந்த இசைத் தந்த ஆறுதலா , அந்த பாடலின் வரிகளா , ஏதோ ஒன்று நெஞ்சில் ஏதோ வலி ஏற்படுவதை உணர்ந்தவள் பாரம் தாங்காமல் கண்ணீர் வடித்தாள் , கண்கள் நீரைப் பொழிந்தது….

வாழ்வென்பதோ கீதம்,
வளர்கின்றதோ நாதம்,
நாளொன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்,
இனி வாழ்வெல்லாம் இன்பம் ,
சுகராகமே ஆரம்பம் ,

நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது,

நம் சொந்தமோ ,
இன்று இணைந்தது ,
இன்பம் பிறந்தது ...
அவன் பாடி முடிக்கவும் தான் கண் திறந்தவன், கீழே கேவல் ஒலி கேட்கவும் எட்டி கீழே பார்க்க , பால்கனி கம்பியில் முகம் பதித்து திவ்யா அழுது கொண்டு இருந்தாள்.

ஒரு நொடி கூட யோசிக்க வே இல்லை. அறையை விட்டு அந்த இரவில் மாடியிலிருந்து வேகமாக ஓடி வந்தவன் , பாட்டி அறையை திறந்து கொண்டு , பால்கனியில் வேகமாக போய் மூச்சு வாங்க அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தான்.

"ஏஞ்சல்"
ம்கூம் அவளுக்கு கேட்டதா தெரியவில்லை. கைகள் நடுங்க அவளை தொட்டு தன் புறம் திருப்பியவன் அவள் முகத்தை தன் நெஞ்சில் அழுத்திக்கொண்டு , அவள் கண்ணீரைத் துடைத்தவன், அப்படியே அழட்டும் என்றும் விட்டான்.

அவள் அழ வேண்டும் என்று எதிர்பார்த்தவன் , இப்பொழுது தாங்க முடியாத பாரத்தை சுமப்பதைப் போல் இருந்தது.

அவனை இறுக்கி கட்டிக் கொண்டவள் கேவல்களுடே"அத்தான் , பாட்டி , பாட்டி.,…." என்றவள் அழுது கொண்டே இருந்தாள்.

அவளை தலைகோதி , முதுகில் தட்டி ஏதோ குழந்தையை ஆறுதல் படுத்துபவன் போல் , தட்டிக் கொடுத்து கொண்டு இருந்தவன் , அழுகை சத்தம் நிற்கவும் , அவள் முகத்தை நிமிர்த்தினான். அப்படியே உறங்கி விட்டிருந்தாள்.

அவன் முகத்தில் புன்னகைத் தோன்ற , அவள் கலைந்த கூந்தலை ஒதுக்கியவன் , அவளை குழந்தையை தூக்குவது போல் கையிலேந்திக் கொண்டவன். அங்கு ஓரமாக அவளுக்காக அவள் விரித்து வைத்திருந்த பாயில் படுக்க வைத்துவிட்டு , அவள் நெற்றியில் இதழ் பதித்தவன்,

"தூங்கு ஏஞ்சல் , இப்போ நானும் நிம்மதியா தூங்குவேன். இதுக்கப்புறம் நீ எதுக்கும் அழக்கூடாது. நான் அழவிட மாட்டேன்" , மெதுவாக அறையை விட்டு வெளியேறியவன் , தானும் போய் நிம்மதியான துயில் கொண்டான்.
 
#6
"உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை.........."
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
என்னுடைய தோழி போல
எத்தனையோ நாள், எனக்கு
ஆறுதலளித்த பாடல்
இந்த அருமையான பாடலைத்
திரும்பவும் கேட்க ஒரு வாய்ப்பு
கொடுத்ததற்கு மகிழ்ச்சி,
ஷான்வி டியர்
 
#8
திவ்யா மீது கார்த்திக் பையன்
இவ்வளவு பாசமும், நேசமும்
வைத்திருக்கிறானே?
அந்த அத்தை, சொத்தை வந்து
என்ன ஏழரையைக் கூட்டப்
போறாளோ-ன்னு இப்பவே
எனக்கு மனசு பக்கு பக்கு-ன்னு
அடிச்சிக்குது, ஷான்வி டியர்
 
Last edited:

Latest profile posts

hiii friends... manjal vaanam konjam megam episode 2 posted.. read and share ur comments.. :) :)
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! 12 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என் கூட பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.
Innaiku my hero athul entry kodupara @mithrabarani ka
@ShanviSaran
முடிந்தால் இன்று Update குடுங்க சகோ..பிளீஸ்...

Sponsored