என்றென்றும் அன்புடன் அழகி - 9

Advertisement

Dharanika

Active Member
ஹே மதி.. எனக்கு முன்னாடியே நீ வந்துட்டியா? எப்போ வந்த?

இப்போ தான்.. ஒரு மணி நேரம் இருக்கும் கனி..அப்புறம் ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?

எல்லாரும் நல்லா இருக்காங்க.. உனக்கு எப்படி போச்சு லீவ்?

எப்பவும் போல தான்..

ம்ம்.. சரி நீ ஹாஸ்டல் பீஸ், காலேஜ் பீஸ் கட்டிட்டியா?

ஐயோ மறந்துட்டேன்.. எப்போ கடைசி நாள்?

இன்னும் ஒரு வாரம் இருக்கு..

ஓ.. சரி.. நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்.. மூன்று மாதம் விடுமுறை முடிந்து மதியழகி கல்லூரி விடுதிக்கு வந்துவிட்டாள். தன் அன்னைக்கு அழைத்தவள் கல்லூரிக்கு கட்ட வேண்டிய கட்டணத்தை சொல்லி சிறிது நேரம் பேசிவிட்டு அடுத்த நாள் கல்லூரி செல்வதற்க்கு தேவையானவற்றை எடுத்து வைக்க தொடங்கினாள்.

தேர்வு முடிவுகளும் வந்திருக்க மதியழகி எண்பது விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள்.

***************************************

சென்னையில் கல்லூரி தொடங்கி இரண்டு மாதத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு சுற்றுலாவிற்கு கல்லூரி ஏற்பாடு செய்திருக்க, மாணவர்களுடன் செல்ல மனோ, ஜனனியுடன் இன்னும் இரண்டு ஆசிரியர்களும் செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. ஐந்து நாள் சுற்றுலா. சென்னையில் இருந்து கூர்க், அடுத்து மைசூர் மற்றும் ஊட்டி. இவர்கள் கிளம்பி சென்று மூன்று நாள் இருக்க மதியழகியின் தாத்தா பரமசிவத்திற்கு உடல்நலம் மோசமடைய தொடங்கியது. மருத்துவர் வந்து பரிசோதித்தவர் பரசிவம் இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறி உறவினர்களுக்கு தகவல் சொல்ல சொன்னார். தகவல் கேட்டு அழகம்மையின் மகள் ஜோதி மனோவிற்கு தகவல் தெரிவிக்க ஊட்டியில் இருந்து உடனே கிளம்பினார்கள். சாந்தி மீனாட்சிக்கும், வள்ளியம்மைக்கும் தகவல் தெரிவித்து விட்டு மதியழகிக்கு அழைக்க அது அடித்து கொண்டதே இருந்தது. கைபேசி கல்லூரிக்குள் அனுமதி இல்லாததால் விடுதியில் வைத்து விட்டு செல்வாள். பலமுறை முயன்றும் மதியழகி எடுக்காததால் "யாரையாவது அனுப்பி கையோட கூட்டிட்டு வர சொல்லுங்க மதனி" என்றார் ஜோதி. சாந்திக்கும் சரியென தோன்ற யாரை அனுப்புவது என யோசித்து கொண்டிருக்க குமரவேல் முன்வந்தான்.

சாந்தியிடம் இருந்து செய்தி வந்ததுமே மீனாட்சியும் வள்ளியம்மையும் நாச்சியாபுரம் கிளம்பி இருந்தனர். அன்புவிற்கு வேலை இருந்ததால் மதியம் மூன்று மணி போல் கிளம்பினான். மனோ, ஜனனி, அன்பு என அனைவரும் இரவு எட்டு மணி போல் நாச்சியாபுரம் வந்து சேர மதியழகி மட்டும் இன்னும் வரவில்லை. அன்புவின் கண்கள் மதியை தேட சூழ்நிலை காரணமாக யாரிடமும் கேட்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து "சாந்தி, எங்க மதிய காணோம்? அவளுக்கு தகவல் சொல்லியாச்சா? இல்லையா?" என்றார் வள்ளியம்மை.

"காலைல அவளுக்கு போன் பண்ணா எடுக்கவே இல்லை. அது தான் நம்ம துறை அண்ணே மகன் குமரவேல் கூட்டிட்டு வர போயிருக்கு"

"எப்போ கிளம்புனான் குமரவேல்? சென்னைல இருந்து நாங்களே வந்துட்டோம். இன்னும் மதியழகியை காணோமே?"

"அது போற வழியில கார் ரிப்பேர் ஆகிடுச்சாம். ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்ன தான் குமரவேல் போன் பண்ணுச்சு.. இப்போ வந்துடுவாங்க பெரியம்மா.."

மீனாட்சி, வள்ளியம்மை, அன்பு, மனோ, ஜனனி என அனைவரும் பரசிவத்தை பார்த்துவிட்டு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்திருக்க அரை மணி நேரம் கழித்து மீண்டும் வள்ளியம்மை மதியழகி பற்றி கேட்க சாந்தி , மதியழகியின் கைபேசிக்கு அழைத்தார். அங்கே நிலவிய சூழ்நிலையால் சாந்தி மதியழகியிடம் பேச முடியவில்லை. குமரவேல் தான் சாந்திக்கு அழைத்து கார் ரிப்பேர் ஆகிவிட்டதாகவும் நாச்சியாபுரம் வர தாமதமாகும் என கூறியிருந்தான். மதியழகியின் கைபேசி அனைத்து வைக்கப்பட்டிருக்க குமரவேலுக்கு அழைத்தார். அவனின் கைபேசியும் எடுக்க படாமல் இருக்க "மனோ, மதிக்கு போன் போட்டா போகலை.. இந்த குமரவேலுவும் எடுக்க மாட்டிங்குறான்.. நீ கொஞ்சம் அவனுக்கு மறுபடியும் கூப்பிட்டு பாக்குறீயா?" என்றார் பதட்டத்துடன். மனோவும் மீண்டும் மீண்டும் அழைக்க அழைப்பு ஏற்கப்படாமல் இருக்க, கடைசியாக குமரவேலுவின் கைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

"அத்த.. அவனோட போனும் எடுக்கல..இப்போ என்ன பண்றது?"

"அவனை நல்லவன்னு நம்பி தான கூட்டிட்டு வர அனுப்பினேன்.. இப்போ என் பொண்ணு எப்படி இருக்கானு தெரியலையே" என சாந்தி அழுக "அத்தை அழுகாதீங்க.. மதிக்கு ஒன்னும் ஆகியிருக்காது.. நான் போய் பார்த்துட்டு வரேன்" என அன்பு கிளம்ப அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர். பின்னே இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தவன் திடீரென கிளம்பவும் அனைவரும் "ஆவென" பார்த்தனர். அன்பு காரை நோக்கி செல்ல மனோவும் உடன் சென்றான். அன்பு முதலில் மதியின் கைபேசிக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்லியது. இதை பார்த்த மனோ "உனக்கு எப்படி டா மதியோட நம்பர் தெரியும்?"

"இப்போ இது ரொம்ப முக்கியமா? மறுபடியும் அந்த குமரவேலுக்கு கால் பண்ணிப்பாரு".

"ஆமா எப்போ இவன் நம்ம கேள்விக்கு பதில் சொல்லிருக்கான்" என்று சலிப்புடன் கூறியவன் "அவனோடதும் சுவிட்ச் ஆப் னு வருதுடா.. அடுத்து என்ன பண்ணலாம்?"

"ம்ம்.. நேரா மதியோட ஹாஸ்டலுக்கு போகலாம்" என்றவன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மதியின் ஹாஸ்டல் முன் வண்டியை நிறுத்தினான்.

"எப்படியும் நான் கேட்டாலும் பதில் சொல்ல மாட்ட.. இருந்தாலும் கேட்குறேன்.. உனக்கு எப்படி மதியோட காலேஜ் தெரியும்?"

வெளியே இருந்து ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் சொல்லி வார்டனை பார்க்க அனுமதி வாங்கி உள்ளே சென்றனர்.

"வாங்க சார்.. என்ன விஷயம்? வாட்ச்மேன் யாரையோ காணும்னு நீங்க தேடி வந்திருக்கறதா சொன்னாரு?"

"மேம்.. மதியழகி.. தர்ட் இயற் (மூன்றாவது வருடம் ) பையோடெக்னாலஜி.. அவங்க தாத்தாக்கு உடம்பு சரியில்லைன்னு ஊருக்கு கிளம்புனாங்க.. ஆனா இன்னும் வரலை.."

"அப்படியா.. இருங்க.. ரிஜிஸ்டர் பாக்குறேன்" என வார்டன் சொல்லிவிட்டு "ஆமா சார்.. மதியம் மூணு மணிக்கே அந்த பொண்ணு கிளம்பிடுச்சே"

"மேம்.. அவங்க ரூம் மெட்ஸ் கொஞ்சம் பார்க்க முடியுமா?"

"சாரி சார்.. மத்த யாரையும் பார்க்க அனுமதி இல்ல..அதுசரி நீங்க யாரு? சாந்தினு அவங்க அம்மா பேரு தான் கார்டியன்னு கொடுத்திருக்காங்க"

"மேம்.. நான் அவங்க ஹஸ்பன்ட்.. இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. நான் சென்னைல ப்ரொபஸரா இருக்கேன்" என அவனின் கல்லூரி அடையாள அட்டையை எடுத்து காண்பிக்க, அது புகழ்பெற்ற கல்லூரி என்பதால் வார்டனுக்கும் சிறிது நம்பிக்கை வந்தது.

"மேம் ப்ளீஸ்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.."

"ஓகே சார்.. நீங்க இவ்ளோ கேக்குறதால பண்றேன்" என அவரது உதவியாளரை அழைத்து மதியின் ரூம்மெட்டை அழைத்து வர சொன்னார்.

பத்து நிமிடம் சென்று கனிமொழி வர "ஹாய் அண்ணா" என்றாள் இருவரை பார்த்தும்.

"உனக்கு ஏற்கனவே தெரியுமா இவங்க இரண்டு பேரையும்?"

"தெரியும் மேம்.. இவங்க மதியோட ஹஸ்பன்ட்.. இவங்க மதியோட மாமா"

"ஹாய்.. உங்க பேரு?"

"என் பேரு கனிமொழி"

"இன்னைக்கு மதி எப்போ கிளம்புனாங்கனு சொல்ல முடியுமா?"

"ஏன் என்னாச்சு மதிக்கு?"

"அவங்க இன்னும் வீட்டுக்கு வரலை"

"நாங்க ரெண்டு பெரும் மதியம் லஞ்சுக்கு வந்தோம்.. மதி ஒரு புக் எடுக்கணும்னு ரூம்க்கு போனா.. அப்போ அவங்க அம்மாகிட்ட இருந்து நிறைய கால்ஸ் வந்திருந்தது.. அவங்க அம்மா கிட்ட பேசிட்டு வந்து "தாத்தாக்கு ரொம்ப சீரியஸா இருக்காம்.. நான் உடனே கிளம்புறேன்.. நீ இந்த லீவ் லெட்டர் நம்ம HODட்ட கொடுத்திருன்னு சொல்லிட்டு உடனே கிளம்பிட்டா"

"அவங்க கிளம்புனப்போ மணி என்ன இருக்கும்? யாரு கூட போறேன்னு எதுவும் சொன்னாங்களா?"

"ஒரு மூணு மணி இருக்கும் அண்ணா.. இன்னைக்கு லேப் இருந்ததால நாங்க லஞ்சுக்கு லேட்டா தான் வந்தோம்.. எப்படி போறேன்னு கேட்டதுக்கு ஊர்ல இருந்து தெரிஞ்சவங்க கூட்டிட்டு போக வராங்கன்னு சொன்னா.."

"சரிம்மா.. ரொம்ப தேங்க்ஸ்.."

"அண்ணா மதிக்கு எதுவும்?"

"ஒன்னும் ஆகாது.." என்றான் அன்பு தீவிரத்துடன். பின் வார்டனிடம் "ரொம்ப நன்றி மேடம்.. நாங்க கிளம்புறோம்"

"ஓகே சார்.. மதி வந்ததும் எங்களுக்கும் தகவல் சொல்லிடுங்க"

"ஷுயர் மேடம்.." என்றவர்கள் வெளியே செல்ல "அண்ணா ஒரு நிமிஷம்.."

"மதி வந்ததும் எனக்கும் கொஞ்சம் சொல்றிங்களா?"

"கண்டிப்பா.. மதியே உன்கிட்ட பேசுவா..அப்புறம்..உனக்கு எப்படி எங்களை அடையாளம் தெரியும்?"

"அது மனோ அண்ணா ரிஸப்ஷன்ல எடுத்த போட்டோவ மதி பார்த்துட்டு இருந்தா.. நான் யாருன்னு கேட்டேன்.. அப்போ தான் அவ சொன்னா.."

"ஒரு தடவை பார்த்ததும் எங்களை நியாபகம் வச்சிருக்கீங்களே" என்றான் மனோ கனிமொழியிடம்.

"என்னது ஒரு தடவையா? ஒரு நாளைக்கு மதி ஒரு பத்து தடவையாவது அந்த போட்டோவ பார்த்துடுவா.. அப்படி என்ன தான் போன்ல பாக்குறான்னு பார்த்தா அந்த போட்டோவா தான் இருக்கும்.. அதுனால எனக்கும் உங்க முகம் பதிஞ்சு போச்சு.." கனி சொல்லி கொண்டிருக்க இங்கே அன்புவின் மனது சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தது.

"ஓ சரி மா.. ரொம்ப தேங்க்ஸ்.." என்றவர்கள் கிளம்ப அடுத்து "என்ன டா செய்யலாம் அன்பு?"

"முதல்ல போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்திடலாம் மனோ.. அடுத்து என்னனு பார்க்கலாம்"

"நீ சொல்றதும் சரி தான்.. என்னோட ஜூனியர் ஒருத்தன் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கான்.. அவன்கிட்டயும் பேசி பாக்குறேன்" என்றவன் கைபேசியில் அழைத்து பேச அதற்குள் அன்பு காவல் நிலையம் நோக்கி சென்றான். காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வர, மனோவின் ஜூனியர் விவேக் வெளியே அவர்களுக்காக காத்திருந்தான்.

"என்ன சொல்றாங்க அண்ணா?"

"தேடுறோம்னு சொல்றாங்க விவேக்.. நீ எதுவும் எங்களுக்கு உதவி பண்ண முடியுமா?"

"அவங்க ரெண்டு பேரோட மொபைல் நம்பர் கொடுங்க.. நான் டிபார்ட்மெண்ட்ல சொல்லி டிராக் பண்ண சொல்றேன்" என மதியழகிக்காக இவர்களின் தேடல் தொடர மயக்கத்தில் இருந்த மதியழகி கண் விழித்தாள்.



அன்பு தொடரும்...
 
Last edited:

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு சொந்தக்காரன
நம்பினா இப்படி இருக்கு
 

தரணி

Well-Known Member
அருமை.... ஒரே ஒரு விஷயம் சொல்லவா.... நீங்க மதி விஷயமும் மனோ விஷயமும் சொல்லும் போது இடையில் கொஞ்சம் gap பண்ணுங்க... மதி காலேஜ் பத்தி சொல்லிட்டு இருக்கும் போதே மனோ காலேஜ் tour பத்தி சொன்னவோடனே கொஞ்சம் confuse ஆகிடுச்சு....

எப்படி ரெண்டு பேரும் வேற வேற ஊர் தானே னு அப்புறம் தான் clear ஆச்சு...

பிலீஸ் தப்பா எடுக்க வேண்டாம்
 

Dharanika

Active Member
அருமை.... ஒரே ஒரு விஷயம் சொல்லவா.... நீங்க மதி விஷயமும் மனோ விஷயமும் சொல்லும் போது இடையில் கொஞ்சம் gap பண்ணுங்க... மதி காலேஜ் பத்தி சொல்லிட்டு இருக்கும் போதே மனோ காலேஜ் tour பத்தி சொன்னவோடனே கொஞ்சம் confuse ஆகிடுச்சு....

எப்படி ரெண்டு பேரும் வேற வேற ஊர் தானே னு அப்புறம் தான் clear ஆச்சு...

பிலீஸ் தப்பா எடுக்க வேண்டாம்
ரொம்ப நன்றி மா.. தவறை சுட்டிக்காட்டியதற்கு... மறுபடியும் படிக்கும் போது தவறு தெரியுது.. இப்போ எடிட் பண்ணிட்டேன். உங்க கருத்துக்கு நன்றி ❤️❤️
 

Dharanika

Active Member
நல்லா இருக்கு சொந்தக்காரன
நம்பினா இப்படி இருக்கு
நன்றி மா உங்க கருத்துக்கு ❤️❤️ பார்க்கலாம் அடுத்து என நடக்குதுன்னு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top