என்றென்றும் அன்புடன் அழகி - 5

Advertisement

Dharanika

Active Member
அன்பு நேற்று இரவு தங்கி இருந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தான். என்ன தான் கோபத்தில் கிளம்பி வந்தாலும் வயதானவர்கள் இவ்வளவு தூரம் தனியாக காரில் பயணம் செய்வது சரியில்லை என நினைத்து அவர்களையும் அழைத்து செல்லலாம் என முடிவு செய்திருந்தான். பயண களைப்பில் தன்னையும் அறியாமல் உறங்கியிருந்தவனை மீனாட்சியின் அழைப்பு கண்விழிக்க செய்தது. "அன்பு, எங்களுக்கு சென்னைக்கு கார் புக் பண்ணுப்பா. நானும் அப்பத்தாவும் ரெடியா இருக்கோம்"

"அம்மா, இப்போ எங்க இருக்கீங்க?"

"இப்போ தான் மதியழகி வீட்ல இருந்து கிளம்புனோம். அப்பத்தா முத்துமாரியம்மன் கோயிலுக்கு போய்ட்டு வரலாம்னு சொன்னாங்க. அதுதான் கோயிலுக்கு போய்ட்டு அப்படியே சென்னைக்கு கிளம்பலாம்னு இருக்கோம்"

"சரி இருங்க.. நானே வரேன்"

"வேண்டாம் அன்பு. நீ சென்னைக்கு கிளம்பிட்ட தானே? நீ வேற கார் புக் பண்ணு.. நாங்க வந்துடுறோம்."

"அம்மா நான் இன்னும் கிளம்பல. ஹோட்டல்ல தான் இருக்கேன். ஒரு மணிநேரத்துல வரேன்" என்றவன் மூவருக்கும் உன்னவை வாங்கி கொண்டு மீண்டும் நாச்சியாபுரம் சென்றான்.

ஒரு மணிநேரத்தில் அன்பு வந்துவிட மூவரும் சாப்பிட்டுவிட்டு சென்னைக்கு பயணப்பட்டனர். இப்பொழுது பேசினால் காயப்படுத்திவிடுவோமோ என்று மூவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே வந்தனர். அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் மாலை வரை அன்பு பயண களைப்பு தீர ஓய்வெடுத்தான். மாலை ஆறு மணி போல் மனோவிடம் இருந்து அழைப்பு வர அதை ஏற்காமல் அழைப்பை துண்டித்து தன் கோபத்தை காட்டினான்.



இன்னும் ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு செமிஸ்டர் தேர்வுகள் தொடங்க விருப்பதால் மனோவும், ஜனனியும் விடுப்பு எடுக்க முடியாமல் திங்களன்று கல்லூரிக்கு புறப்பட்டனர். என்ன தான் காதலர்கள் என்றாலும் இருவரும் கல்லூரிக்குள் அவ்வளவாக பேசி கொள்ள மாட்டார்கள். இருவரும் வேறு வேறு துறை என்பதும் ஒரு காரணம். ஜனனி கணித பேராசிரியை. மனோ உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) துறை.

திருமணம் எதிர்பாராமல் நடந்துவிட்டதால் தங்கள் உடன் பணிபுரிபவர்களுக்கு வரும் ஞாயிறன்று சின்ன வரவேற்பு போல் திட்டமிட்டருந்தனர். ஆகையால் அதுவரை இருவரும் தனித்தனியாக கல்லூரிக்கு சென்று வர முடிவு செய்திருந்தனர்.

இருவரும் தனித்தனியாக கல்லூரி சென்று தங்கள் பகுதிக்கு சென்றனர். மனோவிற்கு காலை எதுவும் வகுப்பு இல்லாததால் தன் இருக்கையில் அமர்ந்து அடுத்த வகுப்புக்கான குறிப்பு எடுத்து கொண்டு இருக்க, அன்புவும் வந்து சேர்ந்தான். மனோவின் இருக்கைக்கு அடுத்த இருக்கை அன்புவுடையது. அன்புவும், மனோவும் ஒரே துறையில் பேராசிரியர்களாக கடந்த மூன்று வருடமாக பணியாற்றுகின்றனர். இருவரும் ஒத்த வயதுடையவராக இருக்க ஆரம்பத்தில் "சார்" என அழைத்து கொண்டவர்கள் பின்னர் பெயர் சொல்லி கூப்பிடும் அளவு நெருங்கியிருந்தனர். வெளியில் சந்தித்து கொள்ளும் போது "டா" போடும் அளவு அவர்களின் நட்பும் வளர்ந்திருந்தது.

தன் முகத்தை பார்க்காது தன்னை கடந்து செல்பவனின் கோபத்தை எப்படி போக்குவது என தெரியாமல் உட்கார்ந்திருந்தான் மனோ. மதியம் உணவு இடைவெளியில் உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் திருமணம் எதிர்பாராதவிதமாக நடந்து விட்டதால் வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருக்கும் வரவேற்புக்கு அழைப்புவிடுத்தான். உடன்பணிபுரிவர்களுக்கு இவர்களின் காதல் தெரியும்பென்பதால் அனைவரும் வாழ்த்து கூறினர். மனோ அடுத்து அன்புவை நோக்கி செல்ல அனைவரின் முன்பும் தன் கோபத்தை காட்ட முடியாமல் எதுவும் பேசாமல் வாழ்த்து மட்டும் கூறினான்.

அன்று முழுவதும் மனோ அன்புவிடம் பேச முயற்சி செய்ய அவனின் முயற்சி புரிந்து அன்பு இல்லாத வேலையை இருப்பது போல் காட்டி கொண்டான். மாலை வீட்டுக்கு கிளம்ப தன் பைக்கை எடுத்தவன் பின்னால் வந்தமர்ந்தான் மனோ. அவனை எதிர்பார்க்காத அன்பு தடுமாறி காலை கீழே ஊன்றி திரும்பி அவனை முறைக்க, "மச்சான்.. சே.. இனிமே நீ மச்சான் இல்ல.. உன்னைவிட ஒரு ஆறு மாசம் நான் பெரியவன்.. சோ இனிமே நீ எனக்கு தம்பி முறை வரும்.. தம்பி..முறைச்சது போதும்.. வழக்கமா போற காபி ஷாப்க்கு வண்டிய விடு" என்றவனை முடிந்த மட்டும் முறைத்துவிட்டு வண்டியை பறக்க விட்டான். "அடேய் கல்யாணமாகி இன்னும் ரெண்டு நாள் கூட ஆகல டா.. அதுக்குள்ளே என்னோட சாவுக்கு நாள் குறிக்கிறானே.. ஏண்டா டேய்.. கல்யாணம் பண்ணது ஒரு குத்தமா டா.. அதுவும் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணது ஒரு குத்தம்னு இப்படி என்னை பழிவாங்குறியே டா. இதுக்கு எங்க ஆச்சி அழகம்மையே பரவாயில்லை போல."

மனோ பேசியது எதையும் காதில் வாங்காமல் காபி ஷாப்பில் வண்டியை நிறுத்தினான் அன்பு. ஓரமாக இருந்த நாற்காலில் இருவரும் அமர, மனோ எப்படி பேச்சை தொடங்குவது என யோசித்து கொண்டிருந்தான். "இப்படி பேசாம உட்கார்ந்திருக்க தான் இங்க கூட்டிட்டு வந்தனா நான் கிளம்புறேன்" என எழுந்தவனின் கரத்தை பிடித்து உட்காரவைத்தான் மனோ.

"ஏன்டா என்னை இப்படி படுத்துற? இந்த கல்யாணம் இப்படி நடக்கணும்னு நான் நினைக்கலடா. வெரி சாரி டா. உன்னை எப்படி பேஸ் பண்றதுனு எனக்கு தெரியல. எங்க கல்யாணத்தால நீயும் வருத்தப்படற மாதிரி ஆயிடுச்சு."

"ஏன் மனோ.. உங்க காதல் விஷயம் உங்க வீட்டுக்கு தெரியுமா? தெரியாத?"

“தெரியாது” என மனோ தலையாட்ட "வீட்ல சொல்ல தைரியம் இல்லாதவங்க எதுக்கு டா காதலிக்குறிங்க? உங்க கோழைத்தனத்தால உங்க கூட இருக்கறவங்க கஷ்டப்படணுமா? தைரியம் இல்லனா எதுக்கு டா உங்களுக்கு காதல்? என்னை விடு.. பாவம் அந்த பொண்ணு.. பார்க்க சின்ன பொண்ணா வேற இருக்கா.. அவளுக்கு இப்போ இந்த கல்யாணம் அவசியமாடா? அட்லீஸ்ட் அந்த பொண்ணுக்கிட்டயாவது உண்மைய சொல்லிருக்கலாம்ல?"

" அடேய் இவ்ளோக்கும் காரணம் நீ சின்னபொண்ணுனு சொல்ற மதி தான் டா” என மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் பின் “ஆஹா.. அன்புக்கு இப்போ தான் மதி மேல ஒரு எண்ணம் வந்திருக்கு. நாம உண்மைய சொல்லி அவ மேலையும் கோபமாகிட்டானா இவனை சமாதானம் பண்றது கஷ்டம்" என மனதில் நினைத்தவன் தன் அழகம்மை ஆச்சி பற்றியும் அவரின் எண்ணத்தையும் அன்புவிடம் சொல்லி முடித்தான்.

அனைத்தையும் கேட்டவன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க "அன்பு.. ப்ளீஸ்.. என்னால ஜனனியை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிருக்க முடியாது.. இப்போ அவசரமா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணாம இருந்திருந்தா நானே எங்க காதலை வீட்ல சொல்லிருப்பேன்.." என்ன தான் மனோ காரணம் சொன்னாலும் அன்புவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்புவின் மனதில் உள்ள காயமும் அதற்கு ஒரு காரணம். அதை அறிந்த மனோவும் அதற்கு மேல் எதுவும் கூறாமல் இருவருக்கும் காபியை கூற, அன்பு அமைதியாக பருகினான். அன்பு காபி அருந்திவிட்டு "சரி வா.. உன்னை வீட்ல விட்டுட்டு கிளம்புறேன்" என கூற தன் நண்பனின் கோபம் குறைந்ததை உணர்ந்து மனதிற்குள் நிம்மதியுடன் சென்றான்.

அன்பு தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top