என்றென்றும் அன்புடன் அழகி - 11

Advertisement

Dharanika

Active Member
அன்புவிற்கு அனுப்பிய தகவலை "அவன் பார்த்தானா? இல்லையா?" என குழம்பியவள் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என யோசித்து கொண்டிருக்க அவள் அசையாமல் இருப்பதை பார்த்து "அரசு, அவளோட கட்டை அவிழ்த்து விடு.. நீயும் சீக்கிரம் கிளம்பு.. கார் இப்போ வந்துடும்.. லேட் பண்ணா பக்கத்துல ஆளுங்க நடமாட்டம் அதிகமா ஆகிடும்.. அப்புறம் ஏதாவது பிரச்சனையாகிட போகுது.. குமரவேல் பேசி கொண்டிருக்கும் போதே கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தார் இன்ஸ்பெக்டர். அவரின் பின்னே இரண்டு காவலர்களுடன் அன்பு, மனோவும் வர மதியழகிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. குமரவேலுவும், அரசும் சுதாகரிப்பதற்குள் அவர்களை பிடித்திருந்தனர். மதியழகியை அந்த நிலையில் பார்த்த அன்பழகன் நொடி பொழுதில் அவள் அருகில் சென்று கட்டை அவிழ்த்து அவள் எழுவதற்கு உதவினான்.

மனோவும் அவள் பக்கத்தில் வர "ஒண்ணுமில்லையே மதி?"

"இல்லை" என மதி தலையை ஆட்ட இன்ஸ்பெக்டர் மதியிடம் என்ன நடந்தது என கேட்டு கொண்டிருந்தார். அவள் பேசி கொண்டிருக்க மதியின் நலனை உறுதிப்படுத்திக்கொள்ள அன்புவின் பார்வை அவளை வேகமாக ஆராய்ந்தது. "என்னை கல்யாணம் பண்ணிக்க கடத்திட்டு வந்துட்டாங்க" என அவள் கூற அதை கேட்ட அன்பு "யாரு பொண்டாட்டி மேல கைய வைச்ச?" என குமரவேலுவை அடிக்க, மற்றவர்கள் அவனை பிடித்து விலக்குவதற்குள் குமரவேலுவின் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது.

"என்ன சார் இது? நாங்க எதுக்கு இருக்கோம்? நீங்க அடிச்சு இவனுக்கு ஏதாவது ஆகிட்டா யாரு பதில் சொல்றது? மனோ, இவரை கூட்டிட்டு கிளம்புங்க.. நாங்க கூப்பிடும் போது ஸ்டேஷன் வர வேண்டியது இருக்கும்" என்ற இன்ஸ்பெக்டருக்கு நன்றி கூறிவிட்டு அன்புவை வெளியே கூட்டி கொண்டு செல்ல, அன்புவின் அடியை பார்த்து பயந்து ஒதுங்கி இருந்த மதியழகியையும் அழைத்து கொண்டு சென்றான்.

இருவரையும் காரில் உட்கார வைத்து விட்டு "இதோ வரேன்" என மீண்டும் இன்ஸ்பெக்டரை பார்க்க சென்றான் மனோ.

"இதை குடி" என அன்பு தண்ணீரை எடுத்து நீட்ட ஒன்றும் பேசாமல் வாங்கி கொண்டவள் குடித்து விட்டு "என்னை காப்பாத்தினத்துக்கு தேங்ஸ்" என்றாள். அன்பு எதுவோ கூற வர அதற்குள் மனோ அருகில் வர அன்புவின் பேச்சு தடைபட்டது. "வீட்டுக்கு தகவல் சொல்லிட்டேன் அன்பு... சீக்கிரம் கிளம்பலாம்"

"சரி..நீயே காரை ஒட்டு" என்றவன் மனோ அருகில் அமர்ந்து கொள்ள மதி பின் இருக்கையில் அமர்ந்து கண் மூடினாள்.

கார் திருச்சியை நெருங்கி இருக்க "மனோ.. ஒரு ஹோட்டல்ல நிறுத்து.."


காரை நிறுத்தியவன் மனோவிற்கு எதுவம் வேண்டுமா என கேட்டு கொண்டு ஹோட்டலில் மதிக்கு உணவை வாங்கினான். அதற்குள் மதி எழுந்து கொள்ள வாங்கி வந்த உணவை அவளிடம் நீட்ட, அதை வாங்கி கொண்டவள் வேகமாக சாப்பிட அவளின் பசியை உணர்ந்து அவளை கேட்காமல் அவளுக்கு வேண்டியதை செய்தவனை பார்த்த மனோவின் மனம் இருவரும் விரைவில் ஒன்றாக வாழ கடவுளிடம் வேண்டுகோள் வைத்தது.

மூவரும் நாச்சியாபுரம் வந்தடைய காலை எட்டு மணியாகியது. காரை விட்டு இறங்கி வந்த மதியை அவளது அன்னை சாந்தி கட்டி பிடித்து ஓவென அழ "சாந்தி, புள்ளையே பயந்து போய் வந்திருக்கு.. நீ வேற அழுது இன்னும் பயப்படப்போகுது. முதல்ல குளிக்க சொல்லு.." என்றார் வள்ளியம்மை. மதி குளித்து வருவதற்குள் நடந்தவை அனைத்தையும் அனைவரிடமும் கூறியிருந்தான் மனோ. வீட்டிற்கு வந்ததில் இருந்து அன்பு ஏதோ யோசனையிலே இருக்க, மதி குளித்து விட்டு தன் தாத்தாவை பார்க்க சென்றாள். அவளின் வருகைக்காக காத்திருந்த பரசிவம் அவளை பார்த்ததும் பக்கத்தில் உட்காருமாறு தலையசைக்க அவரின் பக்கத்தில் உட்கார்ந்து கையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள். மதி நேற்றைய சம்பவத்தில் இருந்து இன்னும் முழுமையாக வெளிவராததால் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க, பரமசிவத்தை பார்க்க வந்த உறவினர் அனைவரும் சாந்தியிடம் "இதுக்கு தான் சொல்றது.. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணோமா.. புருஷன் வீட்டுக்கு அனுப்பினோமான்னு இருக்கனும்.. அது ஆசை பட்டுச்சுன்னு படிக்க அனுப்பினா இப்படி தான்" என ஆளாளுக்கு பேச அங்கே ஒரு கனமான சூழ்நிலை உருவாகியது. இதற்கிடையில் பரசிவத்திற்கு மூச்சு திணறல் அதிகமாக அவரின் உயிர் பிரிந்தது.

அன்று மாலையே பரசிவத்தின் உடல் தகனம் செய்யப்பட அன்புவின் குடும்பம் அன்று இரவே சென்னைக்கு கிளம்பியது. மனோ, ஜனனி இருவரும் அங்கேயே தங்கிவிட்டனர். மிகுந்த யோசனைக்கு பின் அன்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தான். மனோவிற்கு அழைத்து தன் யோசனையை கூறி ஆலோசித்துவிட்டு வள்ளியம்மை மற்றும் மீனாட்சியுடன் பேசினான்.

"அம்மா, மதிய சென்னைல படிக்க வைக்கலாம்னு இருக்கேன்.. அவ இனியும் அங்கே இருக்க வேண்டாம்.. அவளுக்கு பாதுகாப்பு இருக்காது.."

"நானும் இதைத்தான் சொல்லணும்னு நினைச்சேன் அன்பு.. அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடலாம்.."

"ஆச்சி.. இங்க படிக்க வைக்கலாம்னு தான் சொன்னேன்.. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு சொல்லல.."

"இன்னும் எத்தனை நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருக்க போறீங்க?"

"முதல்ல அவ படிப்பை முடிக்கட்டும் மா.. அப்புறமா இதை பத்தி பேசலாம்.. மனோகிட்ட சொல்லிட்டேன்.. அவன் பார்த்துப்பான்.." என கூறிவிட்டு வெளியே புறப்பட்டு சென்றான்.

"என்னத்த இவன் இப்படி சொல்லிட்டு போறான்?"

"விடு மீனாட்சி.. சீக்கிரம் மாறிடுவான்.." என்றவர் மனோவுடன் பேச ஆரம்பித்தார்.

"சொல்லுங்க ஆச்சி.. நான் என்ன பண்ணனும்" என்றான் மனோ வள்ளியம்மையின் அழைப்பை ஏற்றவுடன்.

"மனோ.. என் தங்கம்.. என் மனசை புரிஞ்சு நடக்குறதுல உன்னைய மிஞ்ச ஆளே இல்லை.."

"ஆச்சி.. போதும் போதும்.. என்ன காரியம் நடக்கணும் உங்களுக்கு ?"

"மதி வீட்ல பேசிட்டியா? காலேசு போறத பத்தி?"

"இன்னும் இல்ல ஆச்சி.. இனிமே தான் பேச போறேன்.."

"சரி.. எந்த காலேசுல சேக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சா?"

"**** காலேஜ்ல விசாரிச்சிருக்கேன் ஆச்சி.. கிடைச்சிடும்னு நினைக்குறேன்"

"டேய்..டேய்.. மூளைன்னு ஒன்னு இருக்க உனக்கு? யாரு உனக்கெல்லாம் வாத்தியாரு வேலை கொடுத்தா? இவனெல்லாம் படிப்பு சொல்லிகுடுத்து விளங்கிடும்.."

"ஆச்சி.. இப்போ தானே தங்கமன்னு சொன்னிங்க.. அதுக்குள்ளே பொசுக்குன்னு மூளை இருக்கானு கேக்குறீங்க?"

"பின்னே என்ன டா.. நானே ஏதாவது வாய்ப்பு கிடைக்குமான்னு பார்த்துட்டு இருக்கேன்.. இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க.. நீ என்னடானா அன்பே வழிய வந்து ஒரு வாய்ப்பை கொடுத்தா இப்படி சொதப்புற?

"சரி ஆச்சி.. இப்போ என்ன பண்ணனும்னு நீங்களே சொல்லுங்க"

"ஒழுங்கா உங்க காலேசுல மதிய சேர்த்து விடு"

"அய்யயோ..இந்த ஆட்டத்துக்கு நா வரல..உங்க பேரன்கிட்ட யாரு திட்டு வாங்குவா?"

"அவன் இரண்டு அடி அடிச்சா கூட வாங்கிக்கோ.. நான் சொன்னதை ஒழுங்கா செய்"

"ஹலோ.. ஹலோ..ச்சே.. கட் பண்ணிட்டாங்க..இவங்க ரெண்டு பேருக்கு இடைல மாட்டிகிட்டு நான் படறபாடு இருக்கே.. ஷப்பா!! முடியல" என அவன் புலம்பி கொண்டிருக்க "என்ன மனோ.. தனியா பேசிட்டு இருக்கீங்க?" கேட்ட ஜனனியிடம் அனைத்தும் சொல்லி முடித்தான்.

"பாட்டி சொல்றதும் சரி தான் மனோ"

"அதுக்காக பின் விளைவு எப்படி இருக்கும்னு தெரிஞ்சே காலை விட சொல்றியா?"

"இவங்க இரண்டு பேரும் சேரணும்னா நாம கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தான் ஆகணும்"

"ம்ம்.. சரி.. நம்ம காலேஜ் மேனேஜ்மென்ட்ல பேசுறேன்"

தாமதிக்காமல் மனோ கல்லூரி நிர்வாகத்திடம் பேசி மதியை மூன்றாம் வருடத்தில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தான். பின் சாந்தியிடமும், மதியிடமும் கூற மதி, "மாமா.. இனிமே நான் பத்திரமா இருப்பேன்.. நான் இங்கேயே படிக்கிறேன்..இன்னும் ஒரு வருஷம் தானே இருக்கு"

"இங்க பாரு மதி.. இப்போ நடந்ததே போதும்.. உன்ன தூரத்துல படிக்க அனுப்பிட்டு நா இங்கே பயந்துட்டு இருக்க முடியாது.. மனோ சொல்ற காலேசுல படிக்கறதா இருந்தா படி.. இல்லைனா நீ வீட்லயே இரு" என கூற மதி அதற்குமேல் வாயை திறக்கவில்லை.

ஏற்கனவே அன்பு, மதியின் கல்லூரி கட்டணத்தை மனோவிற்கு அனுப்பி இருந்தான். வேலை துரிதமாக நடக்க அடுத்த இரண்டு நாளில் மனோ, ஜனனியுடன் மதியும் சென்னைக்கு கிளம்பியிருந்தாள்.


அன்பு தொடரும்...
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Yedo Anbu Chennai kooti pora nee veet kootti pogamatta ?? Hmmm...unn account start aagithu veegam prathi balan kittom, ready aagiko thambi.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top